தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எரேமியா

எரேமியா அதிகாரம் 46

எகிப்துக்கு எதிராக 1 மக்களினத்தாரைக் குறித்து இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு: 2 எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்: [* எசா 19:1-25; எசே 29:1-32:3 2 ] 3 பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்; போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 4 குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்; படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்; தலைக் கவசங்களுடன் அணிவகுத்து நில்லுங்கள்; ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள். மார்புக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 5 நான் காண்பது என்ன? அவர்கள் திகிலடைந்து புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்; அவர்களுடைய படைவீரர்கள் முறியடிக்கப் படுகிறார்கள்; திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்; * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 6 ஓட்டத்தில் வல்லவர் ஓடிப்போக முடியாது; படைவீரரும் தப்பியோட இயலாது; வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில் அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 7 நைல்நதி போல் பொங்கி எழுந்து, அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வரும் இவன் யார்? * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 8 நைல்நதிபோல் பொங்கி எழுந்து அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வருகின்றது எகிப்து. நான் பொங்கி எழுந்து, மண்ணுலகை மூடிக்கொள்வேன்; நகரையும் அதன் குடிகளையும் அழித்தொழிப்பேன் என்று அவன் சொல்லிக்கொள்கிறான். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 9 குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்; தேர்களே, விரைந்து ஓடுங்கள்; படைவீரர்களே, முன்னேறிச் செல்லுங்கள். எத்தியோப்பியரும் லீபியரும் கேடயம் ஏந்தட்டும்! லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றட்டும்! * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 10 அந்த நாள், படைகளின் ஆண்டவராகிய தலைவரின் நாள்; ஆண்டவர் தம் எதிரிகளைப் பழிவாங்கும் நாள், வாள் உண்டு நிறைவுகொள்ளும்; குருதி குடித்து வெறிகொள்ளும். வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில் படைகளின் ஆண்டவராகிய தலைவருக்குப் பலியிடப்படும். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 11 கன்னிப் பெண் எகிப்தே! கிலயாதுக்குச் சென்று, பொன் மெழுகு கொண்டுவா, பல்வகை மருந்துகளை நீ பயன்படுத்துவது வீணே! உன் காயங்கள் ஆறவே ஆறா. * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 12 மக்களினத்தார் உன் இழிவுபற்றிக் கேள்வியுற்றனர்; உன் அழுகுரல் மண்ணுலகை நிறைந்தது; படைவீரன் படைவீரனோடு இடறிக்கொள்ள இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 13 பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி, ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 14 எகிப்தில் அறிவியுங்கள்; மிக்தோலில் பறைசாற்றுங்கள்; மெம்பிசிலும் தகபனகேசிலும் முரசறையுங்கள்; அணிவகுத்து நில்; தயாராய் இரு! உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 15 உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்? அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்? ஆண்டவர் அவனைத் தள்ளிவிட்டதால் அன்றோ! * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 16 அவர் பலரை இடறிவிழச் செய்தார். ‘எழுந்திருங்கள், கொடுங்கோலன் வாளினின்று தப்பிப்போம்; நம் சொந்த மக்களிடம் நம் தாய் நாட்டுக்கே திரும்பிச் செல்வோம்’ என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 17 ‘வாய்ப்பை நழுவவிடும் வாயாடி’ என்று எகிப்திய மன்னன் பார்வோனுக்குப் பெயர் சூட்டுங்கள். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 18 படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறுகிறார்: வாழும் என் மேல் ஆணை! மலைகளுக்குள் தாபோர் போலவும் கடலோரத்துக் கர்மேல் போலவும் ஒருவன் ஆற்றலுடன் வருவான். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 19 மகள் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென மூட்டை கட்டிக்கொள்; மெம்பிசு அழிந்துபோகும்; குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 20 எகிப்து ஓர் அழகான இளம்பசு! வடக்கினின்று உண்ணி ஒன்று அவள்மீது வந்து அமர்ந்துள்ளது. * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 21 அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர் கொழுத்த கன்று போன்றவர்கள்; அவர்களும் புறமுதுகுகாட்டி ஒருமிக்க ஓடிவிட்டார்கள். அவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்களுடைய அழிவின் நாள், அவர்களது தண்டனையின் காலம் அவர்கள்மேல் வந்துற்றது. * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 22 நழுவிச் செல்லும் பாம்பு போன்று அவள் சீறுகின்றாள்; அவள் எதிரிகள் வலிமையோடு அணிவகுத்து வருகின்றார்கள்; மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு அவளை எதிர்த்து வருகின்றார்கள். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 23 அவளது காடு ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது. அவர்கள் அதை வெட்டுவார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட மிகுதியானவர்கள். அவர்களைக் கணக்கிட முடியாது. * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 24 மகள் எகிப்து இகழ்ச்சிக்கு உள்ளாவாள்; வடக்கு நாட்டு மக்களிடம் அவள் கையளிக்கப்படுவாள். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 25 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ, நோ நகரத்து ஆமோனையும், பார்வோனையும் எகிப்தையும் அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும், பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும் நான் தண்டிக்கப் போகிறேன். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 26 அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர். * எசா 19:1-25; எசே 29:1-32: 32. 27 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ரயேலே, கலங்காதே! தொலை நாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன்; யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர். [* எரே 30:10-11.. ] 28 என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர். நான் உன்னோடு இருக்கிறேன்; எந்த மக்களினத்தாரிடையே உன்னைத் துரத்தியடித்தேனோ, அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்; உன்னையோ முற்றிலும் அழிக்க மாட்டேன்; உன்னை நீதியோடு தண்டிப்பேன்; உன்னை எவ்வகையிலேனும் தண்டியாது விடேன். [* எரே 30:10-11.. ]
1. {எகிப்துக்கு எதிராக} மக்களினத்தாரைக் குறித்து இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு: 2. எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்: [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 3. பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்; போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 4. குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்; படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்; தலைக் கவசங்களுடன் அணிவகுத்து நில்லுங்கள்; ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள். மார்புக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 5. நான் காண்பது என்ன? அவர்கள் திகிலடைந்து புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்; அவர்களுடைய படைவீரர்கள் முறியடிக்கப் படுகிறார்கள்; திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்; [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 6. ஓட்டத்தில் வல்லவர் ஓடிப்போக முடியாது; படைவீரரும் தப்பியோட இயலாது; வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில் அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 7. நைல்நதி போல் பொங்கி எழுந்து, அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வரும் இவன் யார்? [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 8. நைல்நதிபோல் பொங்கி எழுந்து அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வருகின்றது எகிப்து. நான் பொங்கி எழுந்து, மண்ணுலகை மூடிக்கொள்வேன்; நகரையும் அதன் குடிகளையும் அழித்தொழிப்பேன் என்று அவன் சொல்லிக்கொள்கிறான். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 9. குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்; தேர்களே, விரைந்து ஓடுங்கள்; படைவீரர்களே, முன்னேறிச் செல்லுங்கள். எத்தியோப்பியரும் லீபியரும் கேடயம் ஏந்தட்டும்! லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றட்டும்! [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 10. அந்த நாள், படைகளின் ஆண்டவராகிய தலைவரின் நாள்; ஆண்டவர் தம் எதிரிகளைப் பழிவாங்கும் நாள், வாள் உண்டு நிறைவுகொள்ளும்; குருதி குடித்து வெறிகொள்ளும். வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில் படைகளின் ஆண்டவராகிய தலைவருக்குப் பலியிடப்படும். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 11. கன்னிப் பெண் எகிப்தே! கிலயாதுக்குச் சென்று, பொன் மெழுகு கொண்டுவா, பல்வகை மருந்துகளை நீ பயன்படுத்துவது வீணே! உன் காயங்கள் ஆறவே ஆறா. [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 12. மக்களினத்தார் உன் இழிவுபற்றிக் கேள்வியுற்றனர்; உன் அழுகுரல் மண்ணுலகை நிறைந்தது; படைவீரன் படைவீரனோடு இடறிக்கொள்ள இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 13. பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி, ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 14. எகிப்தில் அறிவியுங்கள்; மிக்தோலில் பறைசாற்றுங்கள்; மெம்பிசிலும் தகபனகேசிலும் முரசறையுங்கள்; அணிவகுத்து நில்; தயாராய் இரு! உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 15. உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்? அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்? ஆண்டவர் அவனைத் தள்ளிவிட்டதால் அன்றோ! [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 16. அவர் பலரை இடறிவிழச் செய்தார். ‘எழுந்திருங்கள், கொடுங்கோலன் வாளினின்று தப்பிப்போம்; நம் சொந்த மக்களிடம் நம் தாய் நாட்டுக்கே திரும்பிச் செல்வோம்’ என்று ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 17. ‘வாய்ப்பை நழுவவிடும் வாயாடி’ என்று எகிப்திய மன்னன் பார்வோனுக்குப் பெயர் சூட்டுங்கள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 18. படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறுகிறார்: வாழும் என் மேல் ஆணை! மலைகளுக்குள் தாபோர் போலவும் கடலோரத்துக் கர்மேல் போலவும் ஒருவன் ஆற்றலுடன் வருவான். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 19. மகள் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென மூட்டை கட்டிக்கொள்; மெம்பிசு அழிந்துபோகும்; குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 20. எகிப்து ஓர் அழகான இளம்பசு! வடக்கினின்று உண்ணி ஒன்று அவள்மீது வந்து அமர்ந்துள்ளது. [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 21. அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர் கொழுத்த கன்று போன்றவர்கள்; அவர்களும் புறமுதுகுகாட்டி ஒருமிக்க ஓடிவிட்டார்கள். அவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்களுடைய அழிவின் நாள், அவர்களது தண்டனையின் காலம் அவர்கள்மேல் வந்துற்றது. [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 22. நழுவிச் செல்லும் பாம்பு போன்று அவள் சீறுகின்றாள்; அவள் எதிரிகள் வலிமையோடு அணிவகுத்து வருகின்றார்கள்; மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு அவளை எதிர்த்து வருகின்றார்கள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 23. அவளது காடு ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது. அவர்கள் அதை வெட்டுவார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட மிகுதியானவர்கள். அவர்களைக் கணக்கிட முடியாது. [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 24. மகள் எகிப்து இகழ்ச்சிக்கு உள்ளாவாள்; வடக்கு நாட்டு மக்களிடம் அவள் கையளிக்கப்படுவாள். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 25. இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ, நோ நகரத்து ஆமோனையும், பார்வோனையும் எகிப்தையும் அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும், பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும் நான் தண்டிக்கப் போகிறேன். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 26. அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர். [* எசா 19:1-25; எசே 29:1-32:32. ] 27. என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ரயேலே, கலங்காதே! தொலை நாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன்; யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர். [* எரே 30:10-11.. ] 28. என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர். நான் உன்னோடு இருக்கிறேன்; எந்த மக்களினத்தாரிடையே உன்னைத் துரத்தியடித்தேனோ, அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்; உன்னையோ முற்றிலும் அழிக்க மாட்டேன்; உன்னை நீதியோடு தண்டிப்பேன்; உன்னை எவ்வகையிலேனும் தண்டியாது விடேன். [* எரே 30:10-11.. ]
  • எரேமியா அதிகாரம் 1  
  • எரேமியா அதிகாரம் 2  
  • எரேமியா அதிகாரம் 3  
  • எரேமியா அதிகாரம் 4  
  • எரேமியா அதிகாரம் 5  
  • எரேமியா அதிகாரம் 6  
  • எரேமியா அதிகாரம் 7  
  • எரேமியா அதிகாரம் 8  
  • எரேமியா அதிகாரம் 9  
  • எரேமியா அதிகாரம் 10  
  • எரேமியா அதிகாரம் 11  
  • எரேமியா அதிகாரம் 12  
  • எரேமியா அதிகாரம் 13  
  • எரேமியா அதிகாரம் 14  
  • எரேமியா அதிகாரம் 15  
  • எரேமியா அதிகாரம் 16  
  • எரேமியா அதிகாரம் 17  
  • எரேமியா அதிகாரம் 18  
  • எரேமியா அதிகாரம் 19  
  • எரேமியா அதிகாரம் 20  
  • எரேமியா அதிகாரம் 21  
  • எரேமியா அதிகாரம் 22  
  • எரேமியா அதிகாரம் 23  
  • எரேமியா அதிகாரம் 24  
  • எரேமியா அதிகாரம் 25  
  • எரேமியா அதிகாரம் 26  
  • எரேமியா அதிகாரம் 27  
  • எரேமியா அதிகாரம் 28  
  • எரேமியா அதிகாரம் 29  
  • எரேமியா அதிகாரம் 30  
  • எரேமியா அதிகாரம் 31  
  • எரேமியா அதிகாரம் 32  
  • எரேமியா அதிகாரம் 33  
  • எரேமியா அதிகாரம் 34  
  • எரேமியா அதிகாரம் 35  
  • எரேமியா அதிகாரம் 36  
  • எரேமியா அதிகாரம் 37  
  • எரேமியா அதிகாரம் 38  
  • எரேமியா அதிகாரம் 39  
  • எரேமியா அதிகாரம் 40  
  • எரேமியா அதிகாரம் 41  
  • எரேமியா அதிகாரம் 42  
  • எரேமியா அதிகாரம் 43  
  • எரேமியா அதிகாரம் 44  
  • எரேமியா அதிகாரம் 45  
  • எரேமியா அதிகாரம் 46  
  • எரேமியா அதிகாரம் 47  
  • எரேமியா அதிகாரம் 48  
  • எரேமியா அதிகாரம் 49  
  • எரேமியா அதிகாரம் 50  
  • எரேமியா அதிகாரம் 51  
  • எரேமியா அதிகாரம் 52  
×

Alert

×

Tamil Letters Keypad References