1. {எருசலேமின் வருங்கால மேன்மை} [PS] [QS][SS] எழு! ஒளிவீசு! உன் ஒளி[SE][SS] தோன்றியுள்ளது.[SE][SS] ஆண்டவரின் மாட்சி[SE][SS] உன்மேல் உதித்துள்ளது![SE][QE]
2. [QS][SS] இதோ! இருள் பூவுலகை மூடும்;[SE][SS] காரிருள் மக்களினங்களைக் கவ்வும்;[SE][SS] ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்;[SE][SS] அவரது மாட்சி உன்மீது தோன்றும்![SE][QE]
3. [QS][SS] பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்;[SE][SS] மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி[SE][SS] நடைபோடுவர்.[SE][QE]
4. [QS][SS] உன் கண்களை உயர்த்தி[SE][SS] உன்னைச் சுற்றிலும் பார்;[SE][SS] அவர்கள் அனைவரும் ஒருங்கே[SE][SS] திரண்டு உன்னிடம் வருகின்றனர்;[SE][SS] தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்;[SE][SS] உன் புதல்வியர்[SE][SS] தோளில் தூக்கி வரப்படுவர்.[SE][QE]
5. [QS][SS] அப்பொழுது, நீ அதைக் கண்டு[SE][SS] அகமகிழ்வாய்;[SE][SS] உன் இதயம் வியந்து விம்மும்;[SE][SS] கடலின் திரள் செல்வம்[SE][SS] உன்னிடம் கொணரப்படும்;[SE][SS] பிற இனத்தாரின் சொத்துகள்[SE][SS] உன்னை வந்தடையும்.[SE][QE]
6. [QS][SS] ஒட்டகங்களின் பெருந்திரள்[SE][SS] உன்னை நிரப்பும்;[SE][SS] மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின்[SE][SS] இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்;[SE][SS] இளம் நாட்டினர் யாவரும்[SE][SS] பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர்.[SE][SS] அவர்கள் ஆண்டவரின் புகழை[SE][SS] எடுத்துரைப்பர்.[SE][QE]
7. [QS][SS] கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும்[SE][SS] உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்;[SE][SS] நெபயோத்தின் கிடாய்கள்[SE][SS] உனக்குப் பணிவிடைசெய்யும்;[SE][SS] எனக்கு உகந்தவையாக அவை[SE][SS] என் பீடத்திற்கு வரும்;[SE][SS] இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப்[SE][SS] பெருமைப்படுத்துவேன்.[SE][QE]
8. [QS][SS] மேகங்கள் போலும்[SE][SS] பலகணி நோக்கிப் பறந்து செல்லும்[SE][SS] புறாக்கள் போலும்[SE][SS] விரைந்து செல்லும் இவர்கள் யார்?[SE][QE]
9. [QS][SS] தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்;[SE][SS] இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான[SE][SS] ஆண்டவரின் பெயரை முன்னிட்டு,[SE][SS] உன் பிள்ளைகளைத்[SE][SS] தொலையிலிருந்து ஏற்றி வரவும்,[SE][SS] வெள்ளியையும், பொன்னையும்[SE][SS] அவர்களுடன் எடுத்து வரவும்,[SE][SS] தர்சீசின் வணிகக் கப்பல்கள்[SE][SS] முன்னணியில் நிற்கும்;[SE][SS] ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர்[SE][SS] உனக்கு மேன்மை அளித்துள்ளார்.[SE][QE]
10. [QS][SS] அன்னிய நாட்டவர்[SE][SS] உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்;[SE][SS] அவர்களின் மன்னர்[SE][SS] உனக்குப் பணிவிடை செய்வர்;[SE][SS] ஏனெனில், சினமுற்று[SE][SS] நான் உன்னை நொறுக்கினேன்;[SE][SS] நான் கனிவுற்று[SE][SS] உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.[SE][QE]
11. [QS][SS] உன் வாயில்கள்[SE][SS] எப்போதும் திறந்திருக்கும்;[SE][SS] இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்;[SE][SS] பிற இனத்தாரின் செல்வம்[SE][SS] உன்னிடம் கொண்டு வரப்படவும்,[SE][SS] அவர்களின் மன்னர்[SE][SS] ஊர்வலமாய் அழைத்து வரப்படவும்,[SE][SS] அவை திறந்திருக்கும். [* திவெ 21:25-26. ] [SE][QE]
12. [QS][SS] உனக்குப் பணிபுரியாத[SE][SS] வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்;[SE][SS] அவை முற்றிலும் பாழடைந்து போகும்.[SE][QE]
13. [QS][SS] லெபனோனின் மேன்மை[SE][SS] உன்னை வந்து சேரும்;[SE][SS] என் திருத்தூயகத்தைச்[SE][SS] சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத்[SE][SS] தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம்[SE][SS] ஆகியவை கொண்டு வரப்படும்;[SE][SS] என் பாதங்களைத் தாங்கும்[SE][SS] தலத்தை மேன்மைப்படுத்துவேன்.[SE][QE]
14. [QS][SS] உன்னை ஒடுக்கியவரின் புதல்வர்[SE][SS] உன்னிடம் தலைவணங்கி வருவர்;[SE][SS] உன்னை அவமதித்தவர் அனைவரும்[SE][SS] உன் காலடியில் பணிந்து வீழ்வர்;[SE][SS] ‘ஆண்டவரின் நகர்’ என்றும்,[SE][SS] ‘இஸ்ரயேலின் தூயவரது சியோன்’ என்றும் உன்னை அவர்கள் அழைப்பர். [* திவெ 3:9. ] [SE][QE]
15. [QS][SS] நீ கைநெகிழப்பட்டு[SE][SS] வெறுத்து ஒதுக்கப்பட்டாய்;[SE][SS] உன் வழியே எவரும்[SE][SS] பயணம் செய்யவில்லை;[SE][SS] நானோ உன்னை என்றென்றும்[SE][SS] பெருமைப்படுத்துவேன்;[SE][SS] தலைமுறைதோறும்[SE][SS] மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.[SE][QE]
16. [QS][SS] நீ பிற இனத்தாரின்[SE][SS] பாலைப் பருகுவாய்;[SE][SS] மன்னர்களின் மார்பிலிருந்து[SE][SS] பாலை உறிஞ்சுவாய்;[SE][SS] ஆண்டவராகிய நானே[SE][SS] உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும்[SE][SS] யாக்கோபின் வல்லவரே[SE][SS] உன்னை மீட்பவர் என்றும்[SE][SS] நீ அறிந்து கொள்வாய்.[SE][QE]
17. [QS][SS] வெண்கலத்திற்குப் பதிலாய்ப்[SE][SS] பொன்னையும்[SE][SS] இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும்[SE][SS] மரத்திற்குப் பதிலாய்[SE][SS] வெண்கலத்தையும்[SE][SS] கற்களுக்குப் பதிலாய்[SE][SS] இரும்பையும் கொண்டு வருவேன்;[SE][SS] உங்கள் கண்காணியாய்ச்[SE][SS] சமாதானத்தையும்[SE][SS] உங்களை வேலைவாங்குமாறு[SE][SS] நேர்மையையும் நியமிப்பேன்.[SE][QE]
18. [QS][SS] உன் நாட்டில் வன்முறை பற்றியும்[SE][SS] உன் எல்லைப் பகுதிகளுக்குள்[SE][SS] பாழாக்கலும் அழித்தலும் பற்றியும்[SE][SS] இனி எந்தப் பேச்சும் எழாது;[SE][SS] உன் மதில்களை ‘விடுதலை’ என்றும்[SE][SS] உன் வாயில்களைப் ‘புகழ்ச்சி’ என்றும்[SE][SS] அழைப்பாய்.[SE][QE]
19. [QS][SS] கதிரவன் உனக்கு இனிப்[SE][SS] பகலில் ஒளிதர வேண்டாம்![SE][SS] பால்நிலவும் உனக்கு[SE][SS] ஒளிவீச வேண்டாம்![SE][SS] ஆண்டவரே இனி உனக்கு[SE][SS] முடிவிலாப் பேரொளி![SE][SS] உன் கடவுளே இனி உனக்கு மேன்மை! [* திவெ 21:23; 22:5.[QE]. ] [SE][QE]
20. [QS][SS] உன் கதிரவன் ஒருபோதும் மறையான்;[SE][SS] உன் நிலா இனித் தேய்ந்து போகாள்;[SE][SS] ஆண்டவரே உனக்கு[SE][SS] என்றுமுள ஒளியாக இருப்பார்;[SE][SS] உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.[SE][QE]
21. [QS][SS] உன் மக்கள் அனைவரும்[SE][SS] நேர்மையாளராய் இருப்பர்;[SE][SS] அவர்கள் நாட்டை என்றென்றும்[SE][SS] உரிமையாக்கிக் கொள்வர்;[SE][SS] நான் மாட்சியடையுமாறு[SE][SS] நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்;[SE][SS] என் கைவேலைப்பாடும் அவர்களே.[SE][QE]
22. [QS][SS] அவர்களுள் சிறியவர்[SE][SS] ஓராயிரமாய்ப் பெருகுவர்;[SE][SS] அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்;[SE][SS] நானே ஆண்டவர்;[SE][SS] ஏற்ற காலத்தில் இதை நான்[SE][SS] விரைவாய்ச் செய்து முடிப்பேன்.[SE][PE]