1. {ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பா} [PS] [QS][SS] ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான்[SE][SS] உம்மை மேன்மைப்படுத்துவேன்;[SE][SS] உன் பெயரைப் போற்றுவேன்;[SE][SS] நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்;[SE][SS] நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத்[SE][SS] திண்ணமாகவும் உறுதியாகவும்[SE][SS] நிறைவேற்றியுள்ளீர்.[SE][QE]
2. [QS][SS] ஏனெனில், நீ நகரத்தைக்[SE][SS] கற்குவியலாக்கினீர்;[SE][SS] அரண்சூழ்ந்த பட்டணத்தைப்[SE][SS] பாழடையச் செய்தீர்;[SE][SS] அயல் நாட்டினரின் கோட்டை அது;[SE][SS] இனி நகராய் இராது;[SE][SS] என்றுமே கட்டி எழுப்பப்படாது.[SE][QE]
3. [QS][SS] ஆதலால் வலிமைமிகு மக்களினம்[SE][SS] உம்மைப் பெருமைப்படுத்தும்;[SE][SS] முரடரான வேற்றின நகரத்தினர்[SE][SS] உமக்கு அஞ்சுவர்.[SE][QE]
4. [QS][SS] ஏழைகளுக்கு நீர்[SE][SS] அரணாய் இருக்கின்றீர்;[SE][SS] வறியவனுக்கு அவன் துன்பத்தில்[SE][SS] உறைவிடம் நீரே;[SE][SS] புயற்காற்றில் புகலிடமாகவும்,[SE][SS] கடும் வெப்பத்தில்[SE][SS] குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்;[SE][SS] ஏனெனில் முரடர்களின் சீற்றம்[SE][SS] மதிற்சுவரை மோதித் தாக்கும்[SE][SS] பெரும் புயல் போலும்,[SE][QE]
5. [QS][SS] வறண்ட நிலத்தில்[SE][SS] வெப்பம் போலும் இருக்கும்.[SE][SS] கார்மேக நிழல்[SE][SS] வெயிலைத் தணிப்பது போல்[SE][SS] அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை[SE][SS] நீர் அடங்கச் செய்கின்றீர்;[SE][SS] முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.[SE][PE][QE]
6. {ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்து} [PS] [QS][SS] படைகளின் ஆண்டவர் இந்த மலையில்[SE][SS] மக்களினங்கள் அனைவருக்கும்[SE][SS] சிறந்ததொரு விருந்தை[SE][SS] ஏற்பாடு செய்வார்;[SE][SS] அதில் சுவைமிக்க பண்டங்களும்,[SE][SS] பழரசப் பானமும்,[SE][SS] கொழுப்பான இறைச்சித் துண்டுகளும்,[SE][SS] வடிகட்டிப் பக்குவப்படுத்திய[SE][SS] திராட்சை இரசமும் பரிமாறப்படும்.[SE][QE]
7. [QS][SS] மக்களினங்கள் அனைவரின்[SE][SS] முகத்தை மூடியுள்ள முக்காட்டை[SE][SS] இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்;[SE][SS] பிற இனத்தார் அனைவரின்[SE][SS] துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.[SE][QE]
8. [QS][SS] என்றுமே இல்லாதவாறு[SE][SS] சாவை ஒழித்துவிடுவார்;[SE][SS] என் தலைவராகிய ஆண்டவர்[SE][SS] எல்லா முகங்களிலிருந்தும்[SE][SS] கண்ணீரைத் துடைத்து விடுவார்;[SE][SS] தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை[SE][SS] இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்;[SE][SS] ஏனெனில், ஆண்டவரே[SE][SS] இதை உரைத்தார். [* 1 கொரி 15:54; திவெ 7:17; 21:4. ] [SE][QE]
9. [QS][SS] அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்;[SE][SS] இவரே நம் கடவுள்;[SE][SS] இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்;[SE][SS] இவர் நம்மை விடுவிப்பார்;[SE][SS] இவரே ஆண்டவர்;[SE][SS] இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;[SE][SS] இவர் தரும் மீட்பில்[SE][SS] நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”[SE][PE][QE]
10. {மோவாபுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] ஆண்டவரின் ஆற்றல்[SE][SS] இம் மலையில் தங்கியிருக்கும்;[SE][SS] எருக்குழி நீரில்[SE][SS] வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல்,[SE][SS] மோவாபு அவரால் மிதிக்கப்படுவான். [* எசா 15:1-16:14; எரே 48:1-47; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] நீந்துபவன் நீந்துவதற்காகத்[SE][SS] தன் கைகளை விரிப்பதுபோல்,[SE][SS] மோவாபு தன் கைகளை விரிப்பான்;[SE][SS] ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும்[SE][SS] கைவினைச் செயல்களையும்[SE][SS] விழச் செய்வார்.[SE][QE]
12. [QS][SS] வானளாவ உயர்ந்துநிற்கும்[SE][SS] உன் அரண்களை அவர் விழத் தள்ளி,[SE][SS] தரைமட்டமாக்குவார்;[SE][SS] அவை புழுதியோடு புழுதியாகி[SE][SS] மண்ணோடு மண்ணாகும்.[SE][PE]