தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஓசியா
1. {இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு} [PS] [QS][SS] இஸ்ரயேல் மக்களே,[SE][SS] ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;[SE][SS] நாட்டில் குடியிருப்பவர்களோடு[SE][SS] ஆண்டவருக்கு[SE][SS] வழக்கு ஒன்று உண்டு;[SE][SS] நாட்டில் உண்மையும் இல்லை,[SE][SS] இரக்கமும் இல்லை;[SE][SS] கடவுளை அறியும் அறிவும் இல்லை.[SE][QE]
2. [QS][SS] பொய்யாணை, பொய்யுரை, கொலை,[SE][SS] களவு, விபசாரம் ஆகியன[SE][SS] பெருகிவிட்டன.[SE][SS] எல்லாக் கட்டுப்பாடுகளையும்[SE][SS] தகர்த்தெறிகின்றனர்;[SE][SS] இரத்தப் பழிமேல் இரத்தப்பழி[SE][SS] குவிகின்றது.[SE][QE]
3. [QS][SS] ஆதலால் நாடு புலம்புகின்றது;[SE][SS] அதில் குடியிருப்பன எல்லாம்[SE][SS] நலிந்து போகின்றன;[SE][SS] காட்டு விலங்குகளும்,[SE][SS] வானத்துப் பறவைகளும்,[SE][SS] கடல்வாழ் மீன்களும்கூட[SE][SS] அழிந்து போகின்றன.[SE][QE]
4. [QS][SS] ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்;[SE][SS] எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்;[SE][SS] *உன் மக்கள் குருவோடு[SE][SS] வழக்காடுகிறவர்களைப்[SE][SS] போலிருக்கிறார்கள்.* [* "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடு தான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.[QE]. ] [SE][QE]
5. [QS][SS] பகலிலே நீ இடறி விழுவாய்;[SE][SS] இரவிலே இறைவாக்கினனும்[SE][SS] உன்னோடு இடறி விழுவான்;[SE][SS] உன் தாயை நான் அழித்துவிடுவேன்.[SE][QE]
6. [QS][SS] அறிவின்மையால் என் மக்கள்[SE][SS] அழிகின்றார்கள்;[SE][SS] நீ அறிவைப் புறக்கணித்தாய்;[SE][SS] நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி[SE][SS] உன்னை புறக்கணிப்பேன்.[SE][SS] நீ உன் கடவுளின்[SE][SS] திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்;[SE][SS] நானும் உன் மக்களை[SE][SS] மறந்து விடுவேன்.[SE][QE]
7. [QS][SS] எவ்வளவுக்கு அவர்கள்[SE][SS] பலுகினார்களோ அவ்வளவுக்கு[SE][SS] அவர்கள் எனக்கு எதிராயப்[SE][SS] பாவம் செய்தார்கள்;[SE][SS] அவர்கள் மேன்மையை[SE][SS] இகழ்ச்சியாக மாற்றுவேன்.[SE][QE]
8. [QS][SS] என் மக்களின் பாவங்களால்[SE][SS] இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்;[SE][SS] அவர்கள் தீச்செயல் செய்யும்படி[SE][SS] இவர்கள் ஏங்குகின்றார்கள்.[SE][QE]
9. [QS][SS] குருவுக்கு நேரிடுவது[SE][SS] மக்களுக்கும் நேரிடும்;[SE][SS] அவர்களுடைய தீய வழிகளுக்காகத்[SE][SS] தண்டனை வழங்குவேன்;[SE][SS] அவர்களுடைய செயல்களுக்கேற்ற[SE][SS] பதிலை அளிப்பேன்.[SE][QE]
10. [QS][SS] அவர்கள் உண்டாலும்[SE][SS] நிறைவடைய மாட்டார்கள்;[SE][SS] வேசித்தனம் செய்தாலும்[SE][SS] பலுகமாட்டார்கள்;[SE][SS] ஏனெனில்,[SE][SS] வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக[SE][SS] ஆண்டவரைக் கைவிட்டார்கள்.[SE][PE][QE]
11. {இஸ்ரயேலில் சிலைவழிபாடும் குடிவெறியும்} [PS] [QS][SS] மதுவும், திராட்சை இரசமும்[SE][SS] அறிவைக் கெடுக்கும்.[SE][QE]
12. [QS][SS] என் மக்கள் மரக்கட்டையிடம்[SE][SS] குறி கேட்கின்றனர்;[SE][SS] அவர்களது கோல்[SE][SS] மறைமொழிகள் கூறுகின்றது![SE][SS] விபசாரப் புத்தி அவர்களை[SE][SS] நெறிதவறச் செய்தது;[SE][SS] விபசாரம் செய்வதற்காக அவர்கள்[SE][SS] தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.[SE][QE]
13. [QS][SS] மலையுச்சிகளில் அவர்கள்[SE][SS] பலியிடுகின்றார்கள்;[SE][SS] குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும்[SE][SS] கருவாலி, புன்னை, தேவதாரு[SE][SS] ஆகிய மரங்களின் கீழும்[SE][SS] நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்;[SE][SS] ஆதலால் உங்கள் புதல்வியர்[SE][SS] வேசித்தனம் செய்கின்றார்கள்;[SE][SS] உங்கள் மருமக்கள்[SE][SS] விபசாரம் புரிகின்றார்கள்.[SE][QE]
14. [QS][SS] உங்கள் புதல்வியர்[SE][SS] விபசாரம் செய்தாலும்,[SE][SS] உங்கள் மருமக்கள்[SE][SS] விபசாரம் புரிந்தாலும்,[SE][SS] நான் அவர்களைத்[SE][SS] தண்டிக்கமாட்டேன்;[SE][SS] ஏனெனில், ஆண்கள்[SE][SS] விலைமாதரோடு போகின்றார்கள்;[SE][SS] தேவதாசிகளோடு சேர்ந்து[SE][SS] பலி செலுத்துகின்றார்கள்;[SE][SS] அறிவற்ற அம்மக்கள்[SE][SS] அழிந்து போவார்கள்.[SE][PE][QE]
15. {யூதாவுக்கு எச்சரிக்கை} [PS] [QS][SS] இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும்,[SE][SS] யூதா நாடாகிலும்[SE][SS] குற்றமற்றதாய் இருக்கட்டும்;[SE][SS] கில்காலுக்குள் நுழையாதீர்கள்;[SE][SS] பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்;[SE][SS] “ஆண்டவர்மேல் ஆணை” என்று[SE][SS] ஆணையிடாதீர்கள்.[SE][QE]
16. [QS][SS] கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல[SE][SS] இஸ்ரயேல் மக்கள்[SE][SS] பிடிவாதமாயிருக்கின்றார்கள்;[SE][SS] ஆண்டவர் அவர்களைப்[SE][SS] பரந்த புல்வெளியில்[SE][SS] ஆட்டுக் குட்டியைப் போல்[SE][SS] மேய்க்க முடியுமா?[SE][QE]
17. [QS][SS] எப்ராயிம் சிலைகளோடு[SE][SS] சேர்ந்து கொண்டான்.[SE][SS] அவனை விட்டுவிடு.[SE][QE]
18. [QS][SS] குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள்[SE][SS] வேசித்தனத்தில்[SE][SS] ஆழ்ந்திருக்கின்றார்கள்;[SE][SS] தங்களது மேன்மையைக் காட்டிலும்[SE][SS] இகழ்ச்சியையே அவர்கள்[SE][SS] மிகுதியாய் விரும்புகின்றார்கள்.[SE][QE]
19. [QS][SS] காற்று அவர்களைத் தன்[SE][SS] இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்;[SE][SS] அவர்கள் தங்கள் பலிகளால்[SE][SS] நாணமடைவார்கள்.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு 1 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு ஒன்று உண்டு; நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; கடவுளை அறியும் அறிவும் இல்லை. 2 பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு, விபசாரம் ஆகியன பெருகிவிட்டன. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்; இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது. 3 ஆதலால் நாடு புலம்புகின்றது; அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன; காட்டு விலங்குகளும், வானத்துப் பறவைகளும், கடல்வாழ் மீன்களும்கூட அழிந்து போகின்றன. 4 ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்; எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்; *உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்.* [* "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடு தான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.. ] 5 பகலிலே நீ இடறி விழுவாய்; இரவிலே இறைவாக்கினனும் உன்னோடு இடறி விழுவான்; உன் தாயை நான் அழித்துவிடுவேன். 6 அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தாய்; நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி உன்னை புறக்கணிப்பேன். நீ உன் கடவுளின் திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்; நானும் உன் மக்களை மறந்து விடுவேன். 7 எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்; அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன். 8 என் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்; அவர்கள் தீச்செயல் செய்யும்படி இவர்கள் ஏங்குகின்றார்கள். 9 குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்; அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்; அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன். 10 அவர்கள் உண்டாலும் நிறைவடைய மாட்டார்கள்; வேசித்தனம் செய்தாலும் பலுகமாட்டார்கள்; ஏனெனில், வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரைக் கைவிட்டார்கள். இஸ்ரயேலில் சிலைவழிபாடும் குடிவெறியும் 11 மதுவும், திராட்சை இரசமும் அறிவைக் கெடுக்கும். 12 என் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர்; அவர்களது கோல் மறைமொழிகள் கூறுகின்றது! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது; விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர். 13 மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்; குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்; ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்; உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள். 14 உங்கள் புதல்வியர் விபசாரம் செய்தாலும், உங்கள் மருமக்கள் விபசாரம் புரிந்தாலும், நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்; ஏனெனில், ஆண்கள் விலைமாதரோடு போகின்றார்கள்; தேவதாசிகளோடு சேர்ந்து பலி செலுத்துகின்றார்கள்; அறிவற்ற அம்மக்கள் அழிந்து போவார்கள். யூதாவுக்கு எச்சரிக்கை 15 இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்; கில்காலுக்குள் நுழையாதீர்கள்; பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்; “ஆண்டவர்மேல் ஆணை” என்று ஆணையிடாதீர்கள். 16 கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்; ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா? 17 எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான். அவனை விட்டுவிடு. 18 குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள்; தங்களது மேன்மையைக் காட்டிலும் இகழ்ச்சியையே அவர்கள் மிகுதியாய் விரும்புகின்றார்கள். 19 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்; அவர்கள் தங்கள் பலிகளால் நாணமடைவார்கள்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References