1. [PS] இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக — ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக — ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்;
2. [QS][SS] “உலகத்திலுள்ள எல்லா[SE][SS] மக்களினங்களுக்குள்ளும்[SE][SS] உங்களைத்தான் நான் சிறப்பாக[SE][SS] அறிந்துகோண்டேன்;[SE][SS] ஆதலால், உங்கள்[SE][SS] தீச்செயல் அனைத்திற்காகவும்[SE][SS] நான் உங்களைத் தண்டிப்பேன்.[SE][PE][QE]
3. {இறைவாக்கினரின் அழைப்பு} [PS] [QS][SS] தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல்[SE][SS] இருவர் சேர்ந்து நடப்பார்களோ?[SE][QE]
4. [QS][SS] இரை அகப்படாமல் இருக்கும்போது[SE][SS] காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ?[SE][SS] ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே[SE][SS] குகையிலிருந்து இளஞ்சிங்கம்[SE][SS] முழக்கம் செய்யுமோ?[SE][QE]
5. [QS][SS] வேடன் தரையில்[SE][SS] வலைவிரிக்காதிருக்கும்போதே[SE][SS] பறவை கண்ணியில்[SE][SS] சிக்கிக்கொள்வதுண்டோ?[SE][SS] ஒன்றுமே சிக்காதிருக்கும்போது[SE][SS] பொறி தரையைவிட்டுத்[SE][SS] துள்ளுவதுண்டோ?[SE][QE]
6. [QS][SS] நகரில் எக்காளம் ஊதப்படுமானால்,[SE][SS] மக்கள் அஞ்சி நடுங்காமல்[SE][SS] இருப்பார்களோ?[SE][SS] ஆண்டவர் அனுப்பவில்லையெனில்,[SE][SS] நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?[SE][QE]
7. [QS][SS] தம் ஊழியர்களாகிய[SE][SS] இறைவாக்கினர்களுக்குத்[SE][SS] தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல்,[SE][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] ஏதும் செய்வதில்லை.[SE][QE]
8. [QS][SS] சிங்கம் கர்ச்சனை செய்கின்றது;[SE][SS] அஞ்சி நடுங்காதவர் எவர்?[SE][SS] தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க,[SE][SS] இறைவாக்கு உரைக்காதவர் எவர்?[SE][PE][QE]
9. {சமாரியாவின் அழிவு} [PS] [QS][SS] “அசீரியாவின் கோட்டைகள் மேலும்[SE][SS] எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும்[SE][SS] நின்றுகொண்டு[SE][SS] இவ்வாறு பறைசாற்று;[SE][SS] சமாரியாவின் மலைகள்மேல்[SE][SS] வந்து கூடுங்கள்;[SE][SS] அங்கு ஏற்படும் குழப்பங்களையும்[SE][SS] நடக்கும் கொடுமைகளையும்[SE][SS] பாருங்கள்.[SE][QE]
10. [QS][SS] நலமானதைச் செய்ய[SE][SS] அவர்களுக்குத் தெரிவ தில்லை”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] “அவர்கள் தங்கள் கோட்டைகளை[SE][SS] வன்முறைகளாலும்[SE][SS] கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.”[SE][QE]
11. [QS][SS] ஆகையால், தலைவராகிய ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே:[SE][SS] “பகைவன் ஒருவன் வந்து[SE][SS] நாட்டைச் சூழ்ந்து கொள்வான்;[SE][SS] அரண்களையெல்லாம்[SE][SS] தரைமட்டமாக்குவான்;[SE][SS] உங்கள் கோட்டைகள்[SE][SS] கொள்ளையிடப்படும்.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “சிங்கத்தின் வாயிலிருந்து[SE][SS] இடையன் தன் ஆட்டின்[SE][SS] இரண்டு கால்களையோ[SE][SS] காதின் ஒருபகுதியையோ[SE][SS] பிடுங்கி எடுப்பது போல,[SE][SS] சமாரியாவில் குடியிருந்து,[SE][SS] பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும்[SE][SS] சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள்[SE][SS] விடுவிக்கப்படுவதும் இருக்கும்.”[SE][QE]
13. [QS][SS] “கேளுங்கள்;[SE][SS] யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச்[SE][SS] சான்று பகருங்கள்,”[SE][SS] என்கிறார் தலைவரும்[SE][SS] படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.[SE][QE]
14. [QS][SS] “இஸ்ரயேலை[SE][SS] அதன் குற்றங்களுக்காகத்[SE][SS] தண்டிக்கும் நாளில்,[SE][SS] பெத்தேலில் உள்ள[SE][SS] பலிபீடங்களை அழிப்பேன்;[SE][SS] பலிபீடத்தின் கொம்புகள்[SE][SS] வெட்டப்பட்டுத் தரையில் விழும். [* 2 அர 23:15.[QE]. ] [SE][QE]
15. [QS][SS] குளிர்கால வேனிற்கால மாளிகைகளை[SE][SS] இடித்துத் தள்ளுவேன்;[SE][SS] தந்தத்தாலான வீடுகள்[SE][SS] அழிந்து போகும்;[SE][SS] மாபெரும் இல்லங்களும்[SE][SS] பாழாய்ப் போகும்,”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE]