Tamil சத்தியவேதம்
ஆமோஸ் மொத்தம் 9 அதிகாரங்கள்
ஆமோஸ் அதிகாரம் 3
1 இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக — ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக — ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்;
2 “உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்; ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.
ஆமோஸ் அதிகாரம் 3
இறைவாக்கினரின் அழைப்பு 3 தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ?
4 இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ?
ஆமோஸ் அதிகாரம் 3
5 வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ? ஒன்றுமே சிக்காதிருக்கும்போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ?
6 நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ? ஆண்டவர் அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?
ஆமோஸ் அதிகாரம் 3
7 தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை.
8 சிங்கம் கர்ச்சனை செய்கின்றது; அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?
ஆமோஸ் அதிகாரம் 3
சமாரியாவின் அழிவு 9 “அசீரியாவின் கோட்டைகள் மேலும் எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும் நின்றுகொண்டு இவ்வாறு பறைசாற்று; சமாரியாவின் மலைகள்மேல் வந்து கூடுங்கள்; அங்கு ஏற்படும் குழப்பங்களையும் நடக்கும் கொடுமைகளையும் பாருங்கள்.
ஆமோஸ் அதிகாரம் 3
10 நலமானதைச் செய்ய அவர்களுக்குத் தெரிவ தில்லை” என்கிறார் ஆண்டவர். “அவர்கள் தங்கள் கோட்டைகளை வன்முறைகளாலும் கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.”
11 ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழ்ந்து கொள்வான்; அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்; உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும்.
ஆமோஸ் அதிகாரம் 3
12 ஆண்டவர் கூறுவது இதுவே: “சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ பிடுங்கி எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து, பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும் சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்படுவதும் இருக்கும்.”
ஆமோஸ் அதிகாரம் 3
13 “கேளுங்கள்; யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சான்று பகருங்கள்,” என்கிறார் தலைவரும் படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.
14 “இஸ்ரயேலை அதன் குற்றங்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பெத்தேலில் உள்ள பலிபீடங்களை அழிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையில் விழும். [* 2 அர 23:15.. ]
ஆமோஸ் அதிகாரம் 3
15 குளிர்கால வேனிற்கால மாளிகைகளை இடித்துத் தள்ளுவேன்; தந்தத்தாலான வீடுகள் அழிந்து போகும்; மாபெரும் இல்லங்களும் பாழாய்ப் போகும்,” என்கிறார் ஆண்டவர்.