தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 சாமுவேல்
1. {தாவீதின் வெற்றிப் பாடல்[BR](திபா 18)} [PS] ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது:
2. [QS][SS] “ஆண்டவர் என் காற்பாறை;[SE][SS] என் கோட்டை; என் மீட்பர்;[SE][QE]
3. [QS][SS] என் கடவுள்; நான் புகலிடம்[SE][SS] தேடும் மலை அவரே; என் கேடயம்;[SE][SS] எனக்கு மீட்பளிக்கும் வல்லமை;[SE][SS] என் அரண்; என் தஞ்சம்;[SE][SS] என் மீட்பர். கொடுமையினின்று[SE][SS] என்னை விடுவிப்பவரும் அவரே.[SE][QE]
4. [QS][SS] போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி[SE][SS] நான் மன்றாடினேன்.[SE][SS] என் எதிரிகளிடமிருந்து நான்[SE][SS] மீட்கப்பட்டேன்.[SE][QE]
5. [QS][SS] ஏனெனில், சாவின் அலைகள்[SE][SS] என்னைச் சூழ்ந்து கொண்டன;[SE][SS] அழிவின் சுழல்கள் என்னை[SE][SS] மூழ்கடித்தன.[SE][QE]
6. [QS][SS] பாதாளக் கயிறுகள் எனனைச்[SE][SS] சுற்றி இறுக்கின;[SE][SS] சாவின் கண்ணிகள் என்னைச்[SE][SS] சிக்க வைத்தன.[SE][QE]
7. [QS][SS] என் நெருக்கடி வேளையில் நான்[SE][SS] ஆண்டவரிடம் மன்றாடினேன்;[SE][SS] என் கடவுளை நோக்கிக் கதறினேன்;[SE][SS] தமது கோவிலினின்று அவர்[SE][SS] என்குரலைக் கேட்டார்; என் கதறல்[SE][SS] அவர் செவிகளுக்கு எட்டியது.[SE][QE]
8. [QS][SS] அப்பொழுது, மண்ணுலகம்[SE][SS] அசைந்து அதிர்ந்தது;[SE][SS] வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக்[SE][SS] கிடுகிடுத்தன;[SE][SS] அவர்தம் கடுஞ்சினத்தால்[SE][SS] அவை நடுநடுங்கின.[SE][QE]
9. [QS][SS] அவரது நாசியினின்று புகை[SE][SS] கிளம்பிற்று;[SE][SS] அவரது வாயினின்று எரித்தழிக்கும்[SE][SS] தீ மூண்டது;[SE][SS] அவரிடமிருந்து நெருப்புக் கனல்[SE][SS] வெளிப்பட்டது.[SE][QE]
10. [QS][SS] வானைத் தாழ்த்தி அவர்[SE][SS] கீழிறங்கினார்;[SE][SS] கார் முகில் அவரது காலடியில்[SE][SS] இருந்தது.[SE][QE]
11. [QS][SS] கெருபுமீது அவர் ஏறிப்[SE][SS] பறந்து வந்தார்;[SE][SS] காற்றை இறக்கைகளாகக்[SE][SS] கொண்டு விரைந்து வந்தார்.[SE][QE]
12. [QS][SS] காரிருளை அவர் மூடுதிரை[SE][SS] ஆக்கிக் கொண்டார்;[SE][SS] நீர் கொண்ட முகிலைக்[SE][SS] கூடாரமாக்கிக் கொண்டார்.[SE][QE]
13. [QS][SS] அவர் தம் திருமுன்னின் பேரொளியி[SE][SS] னின்று நெருப்புக் கனல் தெறித்தது.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவர் வானங்களில் இடியென[SE][SS] முழங்கினார்; உன்னதர் தம் குரலை[SE][SS] அதிரச் செய்தார்.[SE][QE]
15. [QS][SS] தம் அம்புகளை எய்து அவர்[SE][SS] அவர்களைச் சிதறடித்தார்;[SE][SS] மின்னல்களால் அவர்களைக்[SE][SS] கலங்கடித்தார்.[SE][QE]
16. [QS][SS] ஆண்டவரின் கடிந்துரையாலும்[SE][SS] அவரது மூச்சுக் காற்றின்[SE][SS] வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு[SE][SS] தென்பட்டது; நிலவுலகின்[SE][SS] அடித்தளம் காணப்பட்டது.[SE][QE]
17. [QS][SS] உயரத்தினின்று அவர் என்னை[SE][SS] எட்டிப் பிடித்துக் கொண்டார்;[SE][SS] வெள்ளப் பெருக்கினின்று[SE][SS] என்னைக் காப்பாற்றினார்.[SE][QE]
18. [QS][SS] என் வலிமைமிகு எதிரியிடமிருந்து[SE][SS] அவர் என்னை விடுவித்தார்.[SE][SS] என்னைவிட வலிமைமிகு[SE][SS] பகைவரிடமிருந்து என்னைப்[SE][SS] பாதுகாத்தார்.[SE][QE]
19. [QS][SS] எனக்கு இடுக்கண் வந்த நாளில்[SE][SS] அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;[SE][SS] ஆண்டவரோ எனக்கு ஊன்று[SE][SS] கோலாய் இருந்தார்.[SE][QE]
20. [QS][SS] நெருக்கடியற்ற இடத்திற்கு அவர்[SE][SS] என்னைக் கொணர்ந்தார்;[SE][SS] நான் அவர் மனத்திற்கு[SE][SS] உகந்தவனாய் இருந்ததால்[SE][SS] அவர் என்னை விடுவித்தார்.[SE][QE]
21. [QS][SS] ஆண்டவர் எனது நேர்மைக்கு[SE][SS] உரிய பயனை எனக்களித்தார்;[SE][SS] என் மாசற்ற செயலுக்கு ஏற்பக்[SE][SS] கைம்மாறு செய்தார்.[SE][QE]
22. [QS][SS] ஏனெனில், நான் ஆண்டவர்[SE][SS] காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;[SE][SS] பொல்லாங்குசெய்து என் கடவுளை[SE][SS] விட்டு அகலவில்லை.[SE][QE]
23. [QS][SS] அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்[SE][SS] என் கண்முன் வைத்திருந்தேன்;[SE][SS] அவர்தம் விதிமுறைகளை[SE][SS] நான் ஒதுக்கித் தள்ளவில்லை.[SE][QE]
24. [QS][SS] அவர் முன்னிலையில் நான்[SE][SS] மாசற்றவனாய் இருந்தேன்;[SE][SS] தீங்கு செய்யா வண்ணம் என்னைக்[SE][SS] காத்துக் கொண்டேன்.[SE][QE]
25. [QS][SS] ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய[SE][SS] பயனை அளித்தார்;[SE][SS] அவர்தம் பார்வையில் நான்[SE][SS] குற்றமற்றவனாய் இருந்தேன்.[SE][QE]
26. [QS][SS] மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்[SE][SS] மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்[SE][SS] நீர் விளங்குகின்றீர்![SE][QE]
27. [QS][SS] தூயோர்க்குத் தூயவராகவும்[SE][SS] வஞ்சகர்க்கு விவேகியாகவும்[SE][SS] உம்மை நீர் காட்டுகின்றீர்.[SE][QE]
28. [QS][SS] எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்;[SE][SS] செருக்குற்றோரை ஏளனத்துடன்[SE][SS] நீர் பார்க்கின்றீர்.[SE][QE]
29. [QS][SS] ஆண்டவரே! நீரே என்[SE][SS] ஒளி விளக்கு![SE][SS] ஆண்டவர் என் இருளை[SE][SS] ஒளிமயமாக்குகின்றார்.[SE][QE]
30. [QS][SS] உம் துணையுடன் நான்[SE][SS] எப்படையையும் நசுக்குவேன்;[SE][SS] என் கடவுளின் துணையால்[SE][SS] எம்மதிலையும் தாண்டுவேன்.[SE][QE]
31. [QS][SS] இந்த இறைவனின் வழி[SE][SS] நிறைவானது; ஆண்டவரின் வாக்கு[SE][SS] நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம்[SE][SS] புகும் அனைவர்க்கும் அவரே[SE][SS] கேடயமாய் இருக்கின்றார்.[SE][QE]
32. [QS][SS] ஏனெனில், ஆண்டவரைத் தவிர[SE][SS] வேறு இறைவன் யார்?[SE][SS] நம் கடவுளைத் தவிர நமக்கு[SE][SS] வேறு கற்பாறை ஏது?[SE][QE]
33. [QS][SS] இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு[SE][SS] கோட்டையாய் உள்ளார்;[SE][SS] என் வழியை பாதுகாப்பானதாய்ச்[SE][SS] செய்தவரும் அவரே.[SE][QE]
34. [QS][SS] அவர் என் கால்களை மான்களின்[SE][SS] கால்களைப்போல் ஆக்குகின்றார்;[SE][SS] உயர்ந்த இடத்தில் என்னை[SE][SS] நிலை நிறுத்துகின்றார்.[SE][QE]
35. [QS][SS] போருக்கு என்னை அவர்[SE][SS] பழக்குகின்றார்; எனவே, வெண்கல[SE][SS] வில்லையும் என் புயங்கள் வளைக்கும்! [* அப 3:19 ] [SE][QE]
36. [QS][SS] பாதுகாக்கும் உம் கேடயத்தை[SE][SS] நீர் எனக்கு வழங்கினீர்;[SE][SS] உமது துணையால் என்னைப்[SE][SS] பெருமைப்படுத்தினீர்.[SE][QE]
37. [QS][SS] நான் நடக்கும் வழியை[SE][SS] அகலமாக்கினீர்;[SE][SS] என் கால்கள் தடுமாறவில்லை.[SE][QE]
38. [QS][SS] என் எதிரிகளைத் துரத்திச் சென்று[SE][SS] அழித்தேன்; அவர்களை[SE][SS] அழித்தொழிக்கும் வரை[SE][SS] நான் திரும்பவில்லை.[SE][QE]
39. [QS][SS] நான் அவர்களைக் கொன்று[SE][SS] அழித்தேன்; அவர்கள்[SE][SS] எழுந்திருக்கவில்லை; அவர்கள் என்[SE][SS] காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.[SE][QE]
40. [QS][SS] போரிடும் ஆற்றலை எனக்கு[SE][SS] அரைக் கச்சையாக அளித்தீர்;[SE][SS] என்னை எதிர்த்தவர்களை எனக்கு[SE][SS] அடிப்பணியச் செய்தீர்.[SE][QE]
41. [QS][SS] என் எதிரிகளைப் புறமுதுகிடச்[SE][SS] செய்தீர்: என்னை வெறுத்தோரை[SE][SS] நான் அழித்துவிட்டேன்.[SE][QE]
42. [QS][SS] உதவி வேண்டி அவர்கள்[SE][SS] கதறினார்கள்;[SE][SS] ஆனால், அவர்களுக்கு உதவுவார்[SE][SS] யாருமில்லை;[SE][SS] அவர்கள் ஆண்டவரை நோக்கி[SE][SS] மன்றாடினார்கள்;[SE][SS] ஆனால், அவர்களுக்கு அவர்[SE][SS] பதிலளிக்கவில்லை.[SE][QE]
43. [QS][SS] எனவே, நான் அவர்களை மண்ணின்[SE][SS] புழுதியென நசுக்கினேன்;[SE][SS] அவர்களைத் தெருச் சேறென[SE][SS] மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.[SE][QE]
44. [QS][SS] என் மக்களின் கலகத்தினின்று[SE][SS] என்னை விடுவித்தீர்;[SE][SS] பிற இனங்களுக்கு என்னைத்[SE][SS] தலைவனாக்கினீர்;[SE][SS] முன்பின் அறியாத மக்களும் எனக்குப்[SE][SS] பணிவிடை செய்தனர்.[SE][QE]
45. [QS][SS] வேற்று நாட்டவர் என்னிடம்[SE][SS] கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள்[SE][SS] என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன்[SE][SS] எனக்குக் கீழ்ப்படிந்தனர்.[SE][QE]
46. [QS][SS] வேற்று நாட்டவர் உள்ளம்[SE][SS] தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து[SE][SS] நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர்.[SE][QE]
47. [QS][SS] ஆண்டவர் உண்மையாகவே[SE][SS] வாழ்கின்றார்; என் கற்பாறையாம்[SE][SS] அவர் போற்றப் பெறுவாராக![SE][SS] என் மீட்பின் கற்பாறையாம்[SE][SS] கடவுள் மாட்சியுறுவாராக![SE][QE]
48. [QS][SS] எனக்காகப் பழிவாங்கும் இறைவன்[SE][SS] அவர்; மக்களினங்களை எனக்குக்[SE][SS] கீழ்ப்படுத்தியவரும் அவரே![SE][QE]
49. [QS][SS] என் பகைவரிடமிருந்து என்னை[SE][SS] அழைத்துவந்தவர் அவரே![SE][SS] என் எதிரிகளுக்கு மேலாக என்னை[SE][SS] உயர்த்தினீர்! என்னைக்[SE][SS] கொடுமைப்படுத்தியவரிடமிருந்து[SE][SS] நீர் என்னைக் காத்தீர்![SE][QE]
50. [QS][SS] ஆகவே, ஆண்டவரே![SE][SS] பிற இனத்தாரிடையே உம்மைப்[SE][SS] போற்றுவேன்; உம் பெயருக்குப்[SE][SS] புகழ் மாலை சாற்றுவேன்.[SE][QE]
51. [QS][SS] தாம் ஏற்படுத்திய அரசருக்கு[SE][SS] மாபெரும் வெற்றியை அவளிப்பவர்[SE][SS] அவர்! தாம் திருப்பொழிவுசெய்த[SE][SS] தாவீதுக்கும் அவர்தம்[SE][SS] மரபினருக்கும் என்றென்றும்[SE][SS] பேரன்பு காட்டுபவரும் அவரே!” [* உரோ 15:9 ] [SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 24
2 சாமுவேல் 22:31
தாவீதின் வெற்றிப் பாடல்
(திபா 18)

1 ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது: 2 “ஆண்டவர் என் காற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; 3 என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர். கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே. 4 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். 5 ஏனெனில், சாவின் அலைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. 6 பாதாளக் கயிறுகள் எனனைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. 7 என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என்குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. 8 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின. 9 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்புக் கனல் வெளிப்பட்டது. 10 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது. 11 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார். 12 காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்; நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார். 13 அவர் தம் திருமுன்னின் பேரொளியி னின்று நெருப்புக் கனல் தெறித்தது. 14 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார். 15 தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களால் அவர்களைக் கலங்கடித்தார். 16 ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது. 17 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்; வெள்ளப் பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார். 18 என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவித்தார். என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார். 19 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்டவரோ எனக்கு ஊன்று கோலாய் இருந்தார். 20 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்; நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னை விடுவித்தார். 21 ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார். 22 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்குசெய்து என் கடவுளை விட்டு அகலவில்லை. 23 அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை. 24 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன். 25 ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்; அவர்தம் பார்வையில் நான் குற்றமற்றவனாய் இருந்தேன். 26 மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்! 27 தூயோர்க்குத் தூயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர். 28 எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர். 29 ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார். 30 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன். 31 இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார். 32 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது? 33 இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே. 34 அவர் என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார். 35 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே, வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்! * அப 3:19 36 பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்; உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர். 37 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை. 38 என் எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரை நான் திரும்பவில்லை. 39 நான் அவர்களைக் கொன்று அழித்தேன்; அவர்கள் எழுந்திருக்கவில்லை; அவர்கள் என் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள். 40 போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர். 41 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன். 42 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. 43 எனவே, நான் அவர்களை மண்ணின் புழுதியென நசுக்கினேன்; அவர்களைத் தெருச் சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன். 44 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவனாக்கினீர்; முன்பின் அறியாத மக்களும் எனக்குப் பணிவிடை செய்தனர். 45 வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்ப்படிந்தனர். 46 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர். 47 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்; என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக! 48 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக் கீழ்ப்படுத்தியவரும் அவரே! 49 என் பகைவரிடமிருந்து என்னை அழைத்துவந்தவர் அவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்! 50 ஆகவே, ஆண்டவரே! பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன். 51 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அவளிப்பவர் அவர்! தாம் திருப்பொழிவுசெய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!” * உரோ 15:9
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References