தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நீதிமொழிகள்

நீதிமொழிகள் அதிகாரம் 17

1 சுவையான கறி வகைகளோடு நிறைய உண்டு சண்டைபோடும் வீட்டைவிடச் சமாதானத்தோடு ஒருபிடி வெறுஞ்சோறு உண்பது அதிக நலம். 2 ஞானமுள்ள ஊழியன் மதியீனப் பிள்ளைக்கு மேலானவன். அன்றியும், அவன் சகோதரருக்குள் சொத்தில் ஒரு பங்கும் பெறுவான். 3 வெள்ளி நெருப்பிலும், பொன் உலையிலும் பரிசோதிக்கப்படுவதுபோல் ஆண்டவரும் இதயங்களைச் சோதித்தறிகிறார். 4 தீயவன் வசைநாவுக்குக் கீழ்ப்படிகிறான். வஞ்சகன் பொய்யான உதடுகளுக்குப் பணிகிறான். 5 ஏழையைப் புறக்கணிக்கின்றவன் அவனைப் படைத்தவரையே பழிக்கிறான். பிறரின் அழிவில் மகிழ்கிறவனோ தண்டனை அடையாமல் இரான். 6 பேரப் பிள்ளைகளே முதியோரின் முடியாம். புதல்வருடைய மகிமையோ அவர்கள் தந்தையரேயாம். 7 அலங்கார வார்த்தைகள் அறிவீனனுக்கும், பொய்யான உதடுகள் அரசனுக்கும் பொருந்துவன அல்ல. 8 எதிர்பார்த்துக்கொண்டிருப்பவனின் நம்பிக்கை மிகச் சிறந்த மாணிக்கமாம். அவன் எங்கே திரும்பினாலும் விவேகமாய்க் கண்டுபிடிப்பான். 9 குற்றத்தை மறைக்கிறவன் நட்பைத் தேடுகிறான். கோள் சொல்கிறவனோ இணைந்திருப்பவர்களைப் பிரிக்கிறான். 10 விவேகிக்குச் (செய்யப்பட்ட) ஒரு கண்டனம் மதிகெட்டவனுக்குச் (செய்யப்பட்ட) நூறு காயங்களைவிட அதிகம் பயன்படும். 11 தீயவன் எப்போதும் சண்டையைத் தேடுகிறான். அவனுக்கு விரோதமாய்க் கொடிய தூதன் அனுப்பப்படுவான். 12 தன் மதியீனத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற மடையனைப் பார்ப்பதைவிடத் தன் குட்டிகளை இழந்த பெண் கரடியைப் பார்ப்பது அதிக நல்லது. 13 நன்மைக்குத் தீமை செய்கிறவன் விட்டினின்று தீமை ஒழியவே ஒழியாது. 14 சச்சரவுக்குக் காரணமானவன் தண்ணீரைத் திறந்து விடுகிறவன் போலாம். அவன் நிந்தைப்படுமுன்பே நியாயத்தைக் கை நெகிழ்கிறான். 15 குற்றவாளியைக் குற்றமற்றவனென்றும், குற்றமில்லாதவனைக் குற்றவாளியென்றும் தீர்ப்பிடுகிறவர்கள் கடவுளின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். 16 ஞானத்தை விலைக்கு வாங்கக் கூடாதிருக்கையில், மதியீனனுக்குச் செல்வமிருந்தும் பயன் என்ன? தன் வீட்டை உயரமாய்க் கட்டுகிறவன் அழிவைத் தேடுகிறான். ஞானத்தைக் கற்றுக் கொள்ள மாட்டாதவன் (தன் அறியாமையினால்) தீமைக்கு ஆளாவான். 17 நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான். 18 மதிகெட்ட மனிதன் தன் நண்பனுக்குப் பிணையாளியான பின்பு கைதட்டி மகிழ்வான். 19 பிரிவினைகளைச் சிந்திக்கிறவன் சச்சரவை நேசிக்கிறான். தன் வாயிலை உயர்த்துகிறவனும் அழிவையே தேடுகிறான். 20 தீய இதயமுள்ளோன் நன்மையைக் காணான். இரு பொருளுள்ள வார்த்தைகளைப் பேசுகிறவன் தீமையில் சிக்கிக்கொள்வான். 21 மதியீனன் தனக்கு நிந்தையாகவே பிறந்திருக்கிறான். அன்றியும், மதியீனனைப்பற்றி அவன் தந்தையுமே மகிழ்ச்சி அடையான். 22 மகிழ்கிற மனம் உடலை மலரச்செய்கின்றது. துயரமான மனம் எலும்புகளையுமே வற்றச் செய்கிறது. 23 நீதி நெறிகளைக் கெடுக்கத் தீயவன் இரகசியமாய் வெகுமதிகளை வாங்குகிறான். 24 விவேகியின் முகத்தில் ஞானம் ஒளிர்கின்றது. மதியீனனின் கண்கள் பூமியின் கோடிகளில் (திரிகின்றன). 25 மதிகெட்ட மகன் தன் தந்தைக்குக் கோபமும் தன்னைப் பெற்ற தாய்க்குத் துன்பமுமாக ஆவான். 26 நீதிமானுக்கு நட்டம் வருவித்தலும், நேர்மையானவைகளைத் தீர்ப்புச்செய்கிற அரசனை அடித்தலும் நன்றன்று. 27 மிதமிஞ்சின வார்த்தைகளைச் சொல்லாதவன் அறிஞனும் விவேகியும் ஆவான். கற்றவன் விலைமதிக்க முடியாத மனமுடையோனாம். 28 மதியீனனுங்கூட மௌனமாயிருப்பானாயின் ஞானியாகவும், தன் உதடுகளை மூடுவானாயின் அறிவுடையோனாகவும் மதிக்கப்படுவான்.
1 சுவையான கறி வகைகளோடு நிறைய உண்டு சண்டைபோடும் வீட்டைவிடச் சமாதானத்தோடு ஒருபிடி வெறுஞ்சோறு உண்பது அதிக நலம். .::. 2 ஞானமுள்ள ஊழியன் மதியீனப் பிள்ளைக்கு மேலானவன். அன்றியும், அவன் சகோதரருக்குள் சொத்தில் ஒரு பங்கும் பெறுவான். .::. 3 வெள்ளி நெருப்பிலும், பொன் உலையிலும் பரிசோதிக்கப்படுவதுபோல் ஆண்டவரும் இதயங்களைச் சோதித்தறிகிறார். .::. 4 தீயவன் வசைநாவுக்குக் கீழ்ப்படிகிறான். வஞ்சகன் பொய்யான உதடுகளுக்குப் பணிகிறான். .::. 5 ஏழையைப் புறக்கணிக்கின்றவன் அவனைப் படைத்தவரையே பழிக்கிறான். பிறரின் அழிவில் மகிழ்கிறவனோ தண்டனை அடையாமல் இரான். .::. 6 பேரப் பிள்ளைகளே முதியோரின் முடியாம். புதல்வருடைய மகிமையோ அவர்கள் தந்தையரேயாம். .::. 7 அலங்கார வார்த்தைகள் அறிவீனனுக்கும், பொய்யான உதடுகள் அரசனுக்கும் பொருந்துவன அல்ல. .::. 8 எதிர்பார்த்துக்கொண்டிருப்பவனின் நம்பிக்கை மிகச் சிறந்த மாணிக்கமாம். அவன் எங்கே திரும்பினாலும் விவேகமாய்க் கண்டுபிடிப்பான். .::. 9 குற்றத்தை மறைக்கிறவன் நட்பைத் தேடுகிறான். கோள் சொல்கிறவனோ இணைந்திருப்பவர்களைப் பிரிக்கிறான். .::. 10 விவேகிக்குச் (செய்யப்பட்ட) ஒரு கண்டனம் மதிகெட்டவனுக்குச் (செய்யப்பட்ட) நூறு காயங்களைவிட அதிகம் பயன்படும். .::. 11 தீயவன் எப்போதும் சண்டையைத் தேடுகிறான். அவனுக்கு விரோதமாய்க் கொடிய தூதன் அனுப்பப்படுவான். .::. 12 தன் மதியீனத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற மடையனைப் பார்ப்பதைவிடத் தன் குட்டிகளை இழந்த பெண் கரடியைப் பார்ப்பது அதிக நல்லது. .::. 13 நன்மைக்குத் தீமை செய்கிறவன் விட்டினின்று தீமை ஒழியவே ஒழியாது. .::. 14 சச்சரவுக்குக் காரணமானவன் தண்ணீரைத் திறந்து விடுகிறவன் போலாம். அவன் நிந்தைப்படுமுன்பே நியாயத்தைக் கை நெகிழ்கிறான். .::. 15 குற்றவாளியைக் குற்றமற்றவனென்றும், குற்றமில்லாதவனைக் குற்றவாளியென்றும் தீர்ப்பிடுகிறவர்கள் கடவுளின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். .::. 16 ஞானத்தை விலைக்கு வாங்கக் கூடாதிருக்கையில், மதியீனனுக்குச் செல்வமிருந்தும் பயன் என்ன? தன் வீட்டை உயரமாய்க் கட்டுகிறவன் அழிவைத் தேடுகிறான். ஞானத்தைக் கற்றுக் கொள்ள மாட்டாதவன் (தன் அறியாமையினால்) தீமைக்கு ஆளாவான். .::. 17 நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான். .::. 18 மதிகெட்ட மனிதன் தன் நண்பனுக்குப் பிணையாளியான பின்பு கைதட்டி மகிழ்வான். .::. 19 பிரிவினைகளைச் சிந்திக்கிறவன் சச்சரவை நேசிக்கிறான். தன் வாயிலை உயர்த்துகிறவனும் அழிவையே தேடுகிறான். .::. 20 தீய இதயமுள்ளோன் நன்மையைக் காணான். இரு பொருளுள்ள வார்த்தைகளைப் பேசுகிறவன் தீமையில் சிக்கிக்கொள்வான். .::. 21 மதியீனன் தனக்கு நிந்தையாகவே பிறந்திருக்கிறான். அன்றியும், மதியீனனைப்பற்றி அவன் தந்தையுமே மகிழ்ச்சி அடையான். .::. 22 மகிழ்கிற மனம் உடலை மலரச்செய்கின்றது. துயரமான மனம் எலும்புகளையுமே வற்றச் செய்கிறது. .::. 23 நீதி நெறிகளைக் கெடுக்கத் தீயவன் இரகசியமாய் வெகுமதிகளை வாங்குகிறான். .::. 24 விவேகியின் முகத்தில் ஞானம் ஒளிர்கின்றது. மதியீனனின் கண்கள் பூமியின் கோடிகளில் (திரிகின்றன). .::. 25 மதிகெட்ட மகன் தன் தந்தைக்குக் கோபமும் தன்னைப் பெற்ற தாய்க்குத் துன்பமுமாக ஆவான். .::. 26 நீதிமானுக்கு நட்டம் வருவித்தலும், நேர்மையானவைகளைத் தீர்ப்புச்செய்கிற அரசனை அடித்தலும் நன்றன்று. .::. 27 மிதமிஞ்சின வார்த்தைகளைச் சொல்லாதவன் அறிஞனும் விவேகியும் ஆவான். கற்றவன் விலைமதிக்க முடியாத மனமுடையோனாம். .::. 28 மதியீனனுங்கூட மௌனமாயிருப்பானாயின் ஞானியாகவும், தன் உதடுகளை மூடுவானாயின் அறிவுடையோனாகவும் மதிக்கப்படுவான்.
  • நீதிமொழிகள் அதிகாரம் 1  
  • நீதிமொழிகள் அதிகாரம் 2  
  • நீதிமொழிகள் அதிகாரம் 3  
  • நீதிமொழிகள் அதிகாரம் 4  
  • நீதிமொழிகள் அதிகாரம் 5  
  • நீதிமொழிகள் அதிகாரம் 6  
  • நீதிமொழிகள் அதிகாரம் 7  
  • நீதிமொழிகள் அதிகாரம் 8  
  • நீதிமொழிகள் அதிகாரம் 9  
  • நீதிமொழிகள் அதிகாரம் 10  
  • நீதிமொழிகள் அதிகாரம் 11  
  • நீதிமொழிகள் அதிகாரம் 12  
  • நீதிமொழிகள் அதிகாரம் 13  
  • நீதிமொழிகள் அதிகாரம் 14  
  • நீதிமொழிகள் அதிகாரம் 15  
  • நீதிமொழிகள் அதிகாரம் 16  
  • நீதிமொழிகள் அதிகாரம் 17  
  • நீதிமொழிகள் அதிகாரம் 18  
  • நீதிமொழிகள் அதிகாரம் 19  
  • நீதிமொழிகள் அதிகாரம் 20  
  • நீதிமொழிகள் அதிகாரம் 21  
  • நீதிமொழிகள் அதிகாரம் 22  
  • நீதிமொழிகள் அதிகாரம் 23  
  • நீதிமொழிகள் அதிகாரம் 24  
  • நீதிமொழிகள் அதிகாரம் 25  
  • நீதிமொழிகள் அதிகாரம் 26  
  • நீதிமொழிகள் அதிகாரம் 27  
  • நீதிமொழிகள் அதிகாரம் 28  
  • நீதிமொழிகள் அதிகாரம் 29  
  • நீதிமொழிகள் அதிகாரம் 30  
  • நீதிமொழிகள் அதிகாரம் 31  
×

Alert

×

Tamil Letters Keypad References