தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்

எண்ணாகமம் அதிகாரம் 26

1 குற்றவாளிகள் கொல்லப்பட்ட பின்பு ஆண்டவர் மோயீசனையும், ஆரோனின் புதல்வனும் குருவுமாகிய எலெயஸாரையும் நோக்கி: 2 நீங்கள் இஸ்ராயேல்மக்களின் சபையார் எல்லாரையும் எண்ணக்கடவீர்கள். அவர்களைத் தத்தம் வீடுகளின்படியும் குடும்பத்தின்படியும், இருபதுவயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்களில் எவரெவர் போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று கணக்கிட்டுப் பாருங்கள் என்றார். 3 அவ்வாறு மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் எரிக்கோ நகரத்திற்கு எதிரெயுள்ள யோர்தான் நதிக்கு அருகிலிருக்கும் மோவாபின் வெளிகளிலே, 4 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமாய் இருந்தவர்களோடு பேசிக்கொண்டார்கள். எண்ணிக்கையின் தொகையாவது: 5 இஸ்ராயேலின் மூத்த புதல்வன் ரூபன். அவனுடைய புதல்வர்களோ ஏனோக்கிய வம்சத் தலைவனான ஏனோக்கும், பலுய வம்சத்தலைவனான பலுவும், 6 ஏஸ்ரோனிய வம்சத்தலைவானான ஏஸ்ரோனும், கார்மிய வம்சத்தலைவனான கார்மியுமாவர். 7 இவைகளே ரூபன் கோத்திரத்தின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர். 8 பலுவின் புதல்வன் எலியாப். 9 இவன் புதல்வர்களோ நமுயேல், தாத்தான், அபிரோன் என்பவர்கள். அந்தத் தாத்தான், அபிரோன் என்பவர்களே சபையின் தலைவர்களாய் இருந்து, கொறேயுடைய குழப்பத்தின்போது மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் நின்று, ஆண்டவருக்குத் துரோகம் செய்தார்கள். 10 அப்பொழுது நிலம் தன் வாயைத் திறந்து கொறே என்பவனை விழுங்கிற்று. அவனோடு கூட நெருப்பு இருநூற்றைம்பது பேர்களை விழுங்கிய வேளையில், வேறு பலரும் இறந்தார்கள். அவ்வேளை நிகழ்ந்த ஒரு பெரிய புதுமை என்னவென்றால், 11 கொறே இறந்தும், அவன் புதல்வர்கள் இறக்கவில்லை. 12 தங்கள் வம்சப்படி சிமியோனின் புதல்வர்கள்: நமுயேலிய வம்சத்தலைவனான நமுயேலும், ஜமினிய வம்சத்தலைவனான ஜமினும், ஜக்கினிய வம்சத்தலைவனான ஜக்கினும், 13 சரேய வம்சத்தலைவனான சரேயும், சவூல் வம்சத்தலைவனான சவூலுமாவர். 14 இவ்வம்சங்களே சிமியோனின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர். 15 தங்கள் வம்சப்படி காத்தின் புதல்வர்கள்: செப்போனிய வம்சத்தலைவனான செப்போனும், அக்கிய வம்சத்தலைவனான அக்கியும், 16 சூனிய வம்சத்தலைவனான சூனியும், ஓஸ்னிய வம்சத்தலைவனான ஓஸ்னியும், ஏர் வம்சத்தலைவனான ஏரும், 17 அரோத்திய வம்சத்தலைவனான அரோத்தும், அரியேலிய வம்சத்தலைவனான அரியேலுமாவர். 18 இவைகளே காத்தின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐநூறுபேர். 19 யூதாவின் புதல்வர்கள்: ஏரும், ஓனானுமாவர். இவ்விருவரும் கானான் நாட்டில் இறந்தனர். 20 தங்கள் வம்சங்களின்படி யூதாவின் புதல்வர்கள்: சேலாய வம்சத்தலைவனான சேலாவும், பரேசிய வம்சத்தலைவனான பரேசும், சாரேய வம்சத்தலைவனான சாரேயுமாவர். 21 பரேசின் புதல்வர்கள்: ஏஸ்றோனிய வம்சத்தலைவனான ஏஸ்றோனும், ஆமூலிய வம்சத்தலைவனான ஆமூலுமாவர். 22 இவைகளே யூதாவின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐநூறு பேர். 23 தங்கள் வம்சத்தின்படி இஸக்காருடைய புதல்வர்கள்: தோலாய வம்சத்தலைவனான தோலாவும், புவாய வம்சத்தலைவனான புவாவும், 24 ஜாசுபிய வம்சத்தலைவனான ஜாசுபும், செம்ரானிய வம்சத்தலைவனான செம்ரானுமாவர். 25 இவைகளே இஸக்காரின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர். 26 தங்கள் வம்சங்களின்படி சபுலோனுடைய புதல்வர்கள்: ஸரேதிய வம்சத்தலைவனான ஸரேதும், எலோனிய வம்சத்தலைவனான எலோனும், ஜலேலிய வம்சத்தலைவனான ஜலேலுமாவர். 27 இவைகளே சபுலோனின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் அறுபதாயிரத்து ஐநூறு பேர். 28 சூசையுடைய புதல்வர்கள்: மனாஸேயும் எபிராயீமும் ஆவர். 29 மனாஸேயுக்கு மக்கீரிய வம்சத்தலைவனான மக்கீர் பிறந்தான். மக்கீருக்குக் கலாத்திய வம்சத்தலைவனான கலாத் பிறந்தான். 30 கலாத்துக்குப் பிறந்த புதல்வர்கள்: ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், ஏலேக்கிய வம்சத்தலைவனான ஏலெக்கும், 31 அஸரியேலிய வம்சத்தலைவனான அஸரியேலும், செக்கேமிய வம்சத்தலைவனான செக்கேமும், 32 செமிதாய வம்சத்தலைவனான செமிதாவும், ஏப்பேரிய வம்சத்தலைவனான ஏப்பேருமாவர். 33 ஏப்பேர் ஸல்பாதைப் பெற்றான். இவனுக்குப் புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டும் இருந்தனர். இவர்கள்: மாலா, நோவா, ஏகிலா, மேற்கா, தேற்சா என்பவர்கள். 34 இவைகளே மனாஸேயின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறு பேர். 35 தங்கள் வம்சங்களின்படி எபிராயீமுடைய புதல்வர்கள்: சுத்தலாய வம்சத்தலைவனான சுத்தலாவும், பெக்கேரிய வம்சத்தலைவனான பெக்கேரும், தேயெனிய வம்சத்தலைவனான தேயெனுமாவர். 36 சுத்தலாவின் புதல்வனோ ஏரானிய வம்சத்தலைவனான ஏரான். 37 இவைகளே எபிராயீம் புதல்வர்களின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர் முப்பத்தீராயிரத்து ஐநூறு பேர். 38 அவரவர்களுடைய குடும்பங்களின்படி சூசையுடைய புதல்வர்கள் இவர்களேயாவர். தங்கள் வம்சங்களின்படி பெஞ்சமின் புதல்வர்கள்: பெலாய வம்சத்தலைவனான பெலாவும், அஸ்பேலிய வம்சத்தலைவனான அஸ்பேலும், அகிராமிய வம்சத்தலைவனான அகிராமும், 39 சுப்பாமிய வம்சத்தலைவனான சுப்பாமும், உப்பாம் வம்சத்தலைவனான உப்பாமுமாவர். 40 பெலாவின் புதல்வர்கள்: ஏரேதும், நொயெமானும்; ஏரேதிய வம்சத் தலைவனான ஏரேதும், நொயெமானிய வம்சத்தலைவனான நொயெமானுமாவர். 41 தங்கள் குடும்பங்களின்படி பெஞ்சமினுடைய சந்ததியார்கள் இவர்களேயாம். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: நாற்பத்தையாயிரத்து அறுநூறு பேர். 42 தங்கள் குடும்பங்களின்படி தானுடைய புதல்வர்கள்: சுகாமிய வம்சத்தலைவன் சுகாம்; அவன் குடும்பங்களின்படி தானுடைய சுற்றம் அதுவேயாம். 43 அவர்கள் எல்லாரும் சுகாமியர். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர். 44 தங்கள் குடும்பங்களின்படி ஆஸேருடைய புதல்வர்கள்: ஜெம்னாய வம்சத்தலைவனான ஜெம்னாவும், ஜெசுவிய வம்சத்தலைவனான பிரியேயுமாவர். 45 பிரியேயின் புதல்வர்கள்: ஏபேரிய வம்சத்தலைவனான ஏபேரும், மெற்கியேலிய வம்சத்தலைவனான மெற்கியேலுமாவர். 46 ஆஸேருடைய புதல்வியின் பெயர் சாரா. 47 இவைகளே ஆஸேர் புதல்வர்களுடைய வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள்: ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர். 48 தங்கள் குடும்பங்களின்படி நெப்தலியுடைய புதல்வர்கள்: ஜெஸியேலிய வம்சத்தலைவனான ஜெஸியேலும், குனிய வம்சத்தலைவனான குனியும், 49 ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், செல்லெமிய வம்சத்தலைவனான செல்லேமுமாவர். 50 தத்தம் குடும்பங்களின்படி நெப்தலியின் வம்சங்கள் இவைகளேயாம். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர். 51 இஸ்ராயேல் மக்களில் எண்ணப்பட்டவர்களுடைய மொத்தத் தொகை ஆறுலட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது. 52 பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 53 ஆட்களின் கணக்குக்குத் தக்கதாகவே நாடு அவர்களுக்கு உரிமையாகப் பங்கிடப்படும். 54 அதிகம் பேருக்கு அதிகமாகவும், கொஞ்சம் பேருக்குக் கொஞ்சமாகவும், அவர்கள் இப்பொழுது எண்ணிக்கையிடப்பட்ட எண்ணிக்கைக்குத் தக்கபடியே அவரவருக்கு உரிமை கொடுக்கப்படும். 55 ஆனாலும், திருவுளச் சீட்டுப் போட்டு, சீட்டு விழுந்தபடியே கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் நாடு பங்கிடப்படும். 56 அதிகம் பேராயினும் கொஞ்சம் பேராயினும் திருவுளச் சீட்டினால் எவ்வளவு வந்ததோ அவ்வளவே அவரவர்கள் பொறுவார்கள் என்றருளினார். 57 அவரவர்களுடைய குடும்பங்களின்படி எண்ணப்பட்ட லேவியரின் புதல்வர்களுடைய எண்ணிக்கை: ஜெற்சோனிய வம்சத்தலைவனான ஜெற்சோனும், ககாதிய வம்சத்தலைவனான ககாதும், மெறாரிய வம்சத்தலைவனான மெறாரியுமாவர். 58 லேவியருடைய குடும்பங்கள்: லோப்னி குடும்பம், ஏபிரோன் குடும்பம், மொகோனி குடும்பம், மூஸி குடும்பம், கோறே குடும்பம் ஆகிய இவைகளாம். ககாது அபிராமைப் பெற்றான். 59 இவனுடைய மனைவியின் பெயர் ஜோக்கப்பேத். இவள் லேவிக்கு எகிப்திலே பிறந்த புதல்வி. அவள் தன் கணவனாகிய அம்ராமுக்கு ஆரோனையும், மோயீசனையும், இவர்களின் சகோதரியாகிய மரியாளையும், பெற்றாள். 60 ஆரோனுக்கு நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் பிறந்தனர். 61 இவர்களில் நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் ஆண்டவர் முன்னிலையில் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தமையால் இறந்தனர். 62 ஆண் குழந்தைகளில் ஒரு மாதத்துப்பிள்ளை முதல் எண்ணப்பட்டவர்களின் தொகை: இருபத்து மூவாயிரம். இவர்கள் இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கப்பட்டதுமில்லை; அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டதுமில்லை. 63 மோயீசனாலும் குருவாகிய எலெயஸாராலும் யோர்தான் கரையில் எரிக்கோ நகரத்துக்கு எதிரேயுள்ள மோவாப் வெளிகளிலே எண்ணி எழுதப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை அதுவே. 64 முன்பே மோயீசனும் ஆரோனும் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணி எழுதியவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. 65 ஏனென்றால், அவர்கள் எல்லாரும் பாலைவனத்தில் சாவார்களென்று ஆண்டவர் திருவுளம்பற்றியிருந்தார். அப்படியே, ஜெப்போனேயின் புதல்வன் காலேவையும், நூனின் புதல்வன் ஜோசுவாவையும் தவிர, அவர்களில் வேறொருவரும் மீதி இருக்கவில்லை.
1. குற்றவாளிகள் கொல்லப்பட்ட பின்பு ஆண்டவர் மோயீசனையும், ஆரோனின் புதல்வனும் குருவுமாகிய எலெயஸாரையும் நோக்கி: 2. நீங்கள் இஸ்ராயேல்மக்களின் சபையார் எல்லாரையும் எண்ணக்கடவீர்கள். அவர்களைத் தத்தம் வீடுகளின்படியும் குடும்பத்தின்படியும், இருபதுவயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்களில் எவரெவர் போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று கணக்கிட்டுப் பாருங்கள் என்றார். 3. அவ்வாறு மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் எரிக்கோ நகரத்திற்கு எதிரெயுள்ள யோர்தான் நதிக்கு அருகிலிருக்கும் மோவாபின் வெளிகளிலே, 4. ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமாய் இருந்தவர்களோடு பேசிக்கொண்டார்கள். எண்ணிக்கையின் தொகையாவது: 5. இஸ்ராயேலின் மூத்த புதல்வன் ரூபன். அவனுடைய புதல்வர்களோ ஏனோக்கிய வம்சத் தலைவனான ஏனோக்கும், பலுய வம்சத்தலைவனான பலுவும், 6. ஏஸ்ரோனிய வம்சத்தலைவானான ஏஸ்ரோனும், கார்மிய வம்சத்தலைவனான கார்மியுமாவர். 7. இவைகளே ரூபன் கோத்திரத்தின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர். 8. பலுவின் புதல்வன் எலியாப். 9. இவன் புதல்வர்களோ நமுயேல், தாத்தான், அபிரோன் என்பவர்கள். அந்தத் தாத்தான், அபிரோன் என்பவர்களே சபையின் தலைவர்களாய் இருந்து, கொறேயுடைய குழப்பத்தின்போது மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் நின்று, ஆண்டவருக்குத் துரோகம் செய்தார்கள். 10. அப்பொழுது நிலம் தன் வாயைத் திறந்து கொறே என்பவனை விழுங்கிற்று. அவனோடு கூட நெருப்பு இருநூற்றைம்பது பேர்களை விழுங்கிய வேளையில், வேறு பலரும் இறந்தார்கள். அவ்வேளை நிகழ்ந்த ஒரு பெரிய புதுமை என்னவென்றால், 11. கொறே இறந்தும், அவன் புதல்வர்கள் இறக்கவில்லை. 12. தங்கள் வம்சப்படி சிமியோனின் புதல்வர்கள்: நமுயேலிய வம்சத்தலைவனான நமுயேலும், ஜமினிய வம்சத்தலைவனான ஜமினும், ஜக்கினிய வம்சத்தலைவனான ஜக்கினும், 13. சரேய வம்சத்தலைவனான சரேயும், சவூல் வம்சத்தலைவனான சவூலுமாவர். 14. இவ்வம்சங்களே சிமியோனின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர். 15. தங்கள் வம்சப்படி காத்தின் புதல்வர்கள்: செப்போனிய வம்சத்தலைவனான செப்போனும், அக்கிய வம்சத்தலைவனான அக்கியும், 16. சூனிய வம்சத்தலைவனான சூனியும், ஓஸ்னிய வம்சத்தலைவனான ஓஸ்னியும், ஏர் வம்சத்தலைவனான ஏரும், 17. அரோத்திய வம்சத்தலைவனான அரோத்தும், அரியேலிய வம்சத்தலைவனான அரியேலுமாவர். 18. இவைகளே காத்தின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐநூறுபேர். 19. யூதாவின் புதல்வர்கள்: ஏரும், ஓனானுமாவர். இவ்விருவரும் கானான் நாட்டில் இறந்தனர். 20. தங்கள் வம்சங்களின்படி யூதாவின் புதல்வர்கள்: சேலாய வம்சத்தலைவனான சேலாவும், பரேசிய வம்சத்தலைவனான பரேசும், சாரேய வம்சத்தலைவனான சாரேயுமாவர். 21. பரேசின் புதல்வர்கள்: ஏஸ்றோனிய வம்சத்தலைவனான ஏஸ்றோனும், ஆமூலிய வம்சத்தலைவனான ஆமூலுமாவர். 22. இவைகளே யூதாவின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐநூறு பேர். 23. தங்கள் வம்சத்தின்படி இஸக்காருடைய புதல்வர்கள்: தோலாய வம்சத்தலைவனான தோலாவும், புவாய வம்சத்தலைவனான புவாவும், 24. ஜாசுபிய வம்சத்தலைவனான ஜாசுபும், செம்ரானிய வம்சத்தலைவனான செம்ரானுமாவர். 25. இவைகளே இஸக்காரின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர். 26. தங்கள் வம்சங்களின்படி சபுலோனுடைய புதல்வர்கள்: ஸரேதிய வம்சத்தலைவனான ஸரேதும், எலோனிய வம்சத்தலைவனான எலோனும், ஜலேலிய வம்சத்தலைவனான ஜலேலுமாவர். 27. இவைகளே சபுலோனின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் அறுபதாயிரத்து ஐநூறு பேர். 28. சூசையுடைய புதல்வர்கள்: மனாஸேயும் எபிராயீமும் ஆவர். 29. மனாஸேயுக்கு மக்கீரிய வம்சத்தலைவனான மக்கீர் பிறந்தான். மக்கீருக்குக் கலாத்திய வம்சத்தலைவனான கலாத் பிறந்தான். 30. கலாத்துக்குப் பிறந்த புதல்வர்கள்: ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், ஏலேக்கிய வம்சத்தலைவனான ஏலெக்கும், 31. அஸரியேலிய வம்சத்தலைவனான அஸரியேலும், செக்கேமிய வம்சத்தலைவனான செக்கேமும், 32. செமிதாய வம்சத்தலைவனான செமிதாவும், ஏப்பேரிய வம்சத்தலைவனான ஏப்பேருமாவர். 33. ஏப்பேர் ஸல்பாதைப் பெற்றான். இவனுக்குப் புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டும் இருந்தனர். இவர்கள்: மாலா, நோவா, ஏகிலா, மேற்கா, தேற்சா என்பவர்கள். 34. இவைகளே மனாஸேயின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறு பேர். 35. தங்கள் வம்சங்களின்படி எபிராயீமுடைய புதல்வர்கள்: சுத்தலாய வம்சத்தலைவனான சுத்தலாவும், பெக்கேரிய வம்சத்தலைவனான பெக்கேரும், தேயெனிய வம்சத்தலைவனான தேயெனுமாவர். 36. சுத்தலாவின் புதல்வனோ ஏரானிய வம்சத்தலைவனான ஏரான். 37. இவைகளே எபிராயீம் புதல்வர்களின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர் முப்பத்தீராயிரத்து ஐநூறு பேர். 38. அவரவர்களுடைய குடும்பங்களின்படி சூசையுடைய புதல்வர்கள் இவர்களேயாவர். தங்கள் வம்சங்களின்படி பெஞ்சமின் புதல்வர்கள்: பெலாய வம்சத்தலைவனான பெலாவும், அஸ்பேலிய வம்சத்தலைவனான அஸ்பேலும், அகிராமிய வம்சத்தலைவனான அகிராமும், 39. சுப்பாமிய வம்சத்தலைவனான சுப்பாமும், உப்பாம் வம்சத்தலைவனான உப்பாமுமாவர். 40. பெலாவின் புதல்வர்கள்: ஏரேதும், நொயெமானும்; ஏரேதிய வம்சத் தலைவனான ஏரேதும், நொயெமானிய வம்சத்தலைவனான நொயெமானுமாவர். 41. தங்கள் குடும்பங்களின்படி பெஞ்சமினுடைய சந்ததியார்கள் இவர்களேயாம். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: நாற்பத்தையாயிரத்து அறுநூறு பேர். 42. தங்கள் குடும்பங்களின்படி தானுடைய புதல்வர்கள்: சுகாமிய வம்சத்தலைவன் சுகாம்; அவன் குடும்பங்களின்படி தானுடைய சுற்றம் அதுவேயாம். 43. அவர்கள் எல்லாரும் சுகாமியர். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர். 44. தங்கள் குடும்பங்களின்படி ஆஸேருடைய புதல்வர்கள்: ஜெம்னாய வம்சத்தலைவனான ஜெம்னாவும், ஜெசுவிய வம்சத்தலைவனான பிரியேயுமாவர். 45. பிரியேயின் புதல்வர்கள்: ஏபேரிய வம்சத்தலைவனான ஏபேரும், மெற்கியேலிய வம்சத்தலைவனான மெற்கியேலுமாவர். 46. ஆஸேருடைய புதல்வியின் பெயர் சாரா. 47. இவைகளே ஆஸேர் புதல்வர்களுடைய வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள்: ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர். 48. தங்கள் குடும்பங்களின்படி நெப்தலியுடைய புதல்வர்கள்: ஜெஸியேலிய வம்சத்தலைவனான ஜெஸியேலும், குனிய வம்சத்தலைவனான குனியும், 49. ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், செல்லெமிய வம்சத்தலைவனான செல்லேமுமாவர். 50. தத்தம் குடும்பங்களின்படி நெப்தலியின் வம்சங்கள் இவைகளேயாம். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர். 51. இஸ்ராயேல் மக்களில் எண்ணப்பட்டவர்களுடைய மொத்தத் தொகை ஆறுலட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது. 52. பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 53. ஆட்களின் கணக்குக்குத் தக்கதாகவே நாடு அவர்களுக்கு உரிமையாகப் பங்கிடப்படும். 54. அதிகம் பேருக்கு அதிகமாகவும், கொஞ்சம் பேருக்குக் கொஞ்சமாகவும், அவர்கள் இப்பொழுது எண்ணிக்கையிடப்பட்ட எண்ணிக்கைக்குத் தக்கபடியே அவரவருக்கு உரிமை கொடுக்கப்படும். 55. ஆனாலும், திருவுளச் சீட்டுப் போட்டு, சீட்டு விழுந்தபடியே கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் நாடு பங்கிடப்படும். 56. அதிகம் பேராயினும் கொஞ்சம் பேராயினும் திருவுளச் சீட்டினால் எவ்வளவு வந்ததோ அவ்வளவே அவரவர்கள் பொறுவார்கள் என்றருளினார். 57. அவரவர்களுடைய குடும்பங்களின்படி எண்ணப்பட்ட லேவியரின் புதல்வர்களுடைய எண்ணிக்கை: ஜெற்சோனிய வம்சத்தலைவனான ஜெற்சோனும், ககாதிய வம்சத்தலைவனான ககாதும், மெறாரிய வம்சத்தலைவனான மெறாரியுமாவர். 58. லேவியருடைய குடும்பங்கள்: லோப்னி குடும்பம், ஏபிரோன் குடும்பம், மொகோனி குடும்பம், மூஸி குடும்பம், கோறே குடும்பம் ஆகிய இவைகளாம். ககாது அபிராமைப் பெற்றான். 59. இவனுடைய மனைவியின் பெயர் ஜோக்கப்பேத். இவள் லேவிக்கு எகிப்திலே பிறந்த புதல்வி. அவள் தன் கணவனாகிய அம்ராமுக்கு ஆரோனையும், மோயீசனையும், இவர்களின் சகோதரியாகிய மரியாளையும், பெற்றாள். 60. ஆரோனுக்கு நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் பிறந்தனர். 61. இவர்களில் நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் ஆண்டவர் முன்னிலையில் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தமையால் இறந்தனர். 62. ஆண் குழந்தைகளில் ஒரு மாதத்துப்பிள்ளை முதல் எண்ணப்பட்டவர்களின் தொகை: இருபத்து மூவாயிரம். இவர்கள் இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கப்பட்டதுமில்லை; அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டதுமில்லை. 63. மோயீசனாலும் குருவாகிய எலெயஸாராலும் யோர்தான் கரையில் எரிக்கோ நகரத்துக்கு எதிரேயுள்ள மோவாப் வெளிகளிலே எண்ணி எழுதப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை அதுவே. 64. முன்பே மோயீசனும் ஆரோனும் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணி எழுதியவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. 65. ஏனென்றால், அவர்கள் எல்லாரும் பாலைவனத்தில் சாவார்களென்று ஆண்டவர் திருவுளம்பற்றியிருந்தார். அப்படியே, ஜெப்போனேயின் புதல்வன் காலேவையும், நூனின் புதல்வன் ஜோசுவாவையும் தவிர, அவர்களில் வேறொருவரும் மீதி இருக்கவில்லை.
  • எண்ணாகமம் அதிகாரம் 1  
  • எண்ணாகமம் அதிகாரம் 2  
  • எண்ணாகமம் அதிகாரம் 3  
  • எண்ணாகமம் அதிகாரம் 4  
  • எண்ணாகமம் அதிகாரம் 5  
  • எண்ணாகமம் அதிகாரம் 6  
  • எண்ணாகமம் அதிகாரம் 7  
  • எண்ணாகமம் அதிகாரம் 8  
  • எண்ணாகமம் அதிகாரம் 9  
  • எண்ணாகமம் அதிகாரம் 10  
  • எண்ணாகமம் அதிகாரம் 11  
  • எண்ணாகமம் அதிகாரம் 12  
  • எண்ணாகமம் அதிகாரம் 13  
  • எண்ணாகமம் அதிகாரம் 14  
  • எண்ணாகமம் அதிகாரம் 15  
  • எண்ணாகமம் அதிகாரம் 16  
  • எண்ணாகமம் அதிகாரம் 17  
  • எண்ணாகமம் அதிகாரம் 18  
  • எண்ணாகமம் அதிகாரம் 19  
  • எண்ணாகமம் அதிகாரம் 20  
  • எண்ணாகமம் அதிகாரம் 21  
  • எண்ணாகமம் அதிகாரம் 22  
  • எண்ணாகமம் அதிகாரம் 23  
  • எண்ணாகமம் அதிகாரம் 24  
  • எண்ணாகமம் அதிகாரம் 25  
  • எண்ணாகமம் அதிகாரம் 26  
  • எண்ணாகமம் அதிகாரம் 27  
  • எண்ணாகமம் அதிகாரம் 28  
  • எண்ணாகமம் அதிகாரம் 29  
  • எண்ணாகமம் அதிகாரம் 30  
  • எண்ணாகமம் அதிகாரம் 31  
  • எண்ணாகமம் அதிகாரம் 32  
  • எண்ணாகமம் அதிகாரம் 33  
  • எண்ணாகமம் அதிகாரம் 34  
  • எண்ணாகமம் அதிகாரம் 35  
  • எண்ணாகமம் அதிகாரம் 36  
×

Alert

×

Tamil Letters Keypad References