தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எண்ணாகமம்

எண்ணாகமம் அதிகாரம் 23

1 அப்போது பாலாம் பாலாக்கை நோக்கி: நீர் இங்கே ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக் கிடாய்களையும் எனக்கு ஆயத்தப்படுத்தி வைப்பீர் என்றான். 2 பாலாம் சொன்னபடியே அவன் செய்தான். ஒவ்வொரு பீடத்தின் மேலும் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கிடாயையும் வைத்தார்கள். 3 அப்பொழுது பாலாம் பாலாக்கை நோக்கி: ஒருவேளை ஆண்டவர் என்னைச் சந்திக்க வருவாரோவென்று நான் போய் அறிந்து, அவர் கட்டளையிட்டிருப்பதெல்லாம் உமக்குச் சொல்வேன். அதுவரை நீர் சற்றுநேரம் உமது தகனப் பலியண்டையில் நிற்கக்கடவீர் என்றான். 4 சீக்கிரமாய் விலகிப் போனவுடனே கடவுள் அவனுக்கு எதிரில் வந்து நின்றார். பாலாம் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஓர் இளங்காளையும், ஆட்டுக்கிடாயும் வைத்துள்ளேன் என்றுசொல்ல, 5 ஆண்டவர் அவனுடைய வாயிலே ஒரு வார்த்தையை வைத்து: நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இதனைச் சொல்லக்கடவாய் என்று அனுப்பினார். 6 பாலாம் திரும்பிப்போய்ப் பர்ர்த்தபோது, பாலாக் மோவாபியரின் எல்லாப் பிரவுக்களோடு தன் தகனப் பலியண்டை நின்று கொண்டிருக்கக் கண்டான். 7 பின் தன் மறைபொருளை உரைக்கத்தொடங்கி: மோவாபியரின் அரசனாகிய பாலாக் என்னை அராமினின்றும் கீழ்த்திசை மலைகளிலிருந்தும் வரவழைத்து: நீ வந்து யாக்கோபைச் சபிக்கவும் இஸ்ராயேலரை வெறுத்துப் பேசவும் வேண்டும் என்றான். 8 கடவுள் எவனைச் சபிக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி சபிக்கக்கூடும்? ஆண்டவர் எவனை வெறுக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி வெறுத்துப் பேசக்கூடும்? 9 பாறை உச்சிகளிலிருந்து நான் அவனைக் காண்பேன். குன்றுகளிலிருந்து நான் அவனைப்பார்ப்பேன். அந்த மக்கள் தனிப்பட வாழ்ந்திருந்து, மற்ற இனங்களோடு கலவாமல் இருக்கும். 10 தூசிப் பெருக்கம் போன்ற யாக்கோபின் மக்களை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ராயேலரின் வம்சங்களைக் கணக்கிடத்தக்கவன் யார்? ஆ! நீதிமானின் மரணத்துக்கு என் மரணம் சரியொத்ததாகக்கடவது. என் முடிவு அவர்களுடைய முடிவுபோல் ஆகக்கடவது என்று சொன்னான். 11 அதைக் கேட்ட பாலாக் (அரசன்) பாலாமை நோக்கி: நீர் என்ன செய்கிறீர்? என் பகைவர்களைச் சபிக்கும்படி உம்மை வரவழைத்தேன். நீரோ ஆவர்களை ஆசீர்வதிக்கிறீரே என, 12 அவன்: ஆண்டவர் கட்டளையிட்டதையன்றி நான் வேறாக உரைப்பதாகுமோ என்று பதில் கூறினான். 13 பாலாக்: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னுடன் வாரும். அங்கே இஸ்ராயேலர் எல்லாரையும் பாராமல், அவர்களின் ஒரு பாகத்தை மட்டும் காண்பீர். அவ்விடத்திலிருந்து நீர் அவர்களைச் சபிக்க வேண்டும் என்று சொல்லி, 14 பாலாக் அவனை உயர்ந்த இடமாகிய பஸ்கா மலைச்சிகரத்திற்குக் கூட்டிக்கொண்டுபோக, பாலாம் அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்திலும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக்கிடாயையும் வைத்தான். 15 பிறகு பாலாக்கை நோக்கி: நீர் இங்கே உம்முடைய தகனப்பலியண்டை நில்லும். நான் போய் ஆண்டவரைச் சந்தித்து வருவேன் என்றான். 16 ஆண்டவர் பாலாமைச் சந்தித்து, அவன் வாயில் ஒரு வார்த்தையை வைத்து: நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இந்த வார்த்தையைச் சொல்வாய் என்று அனுப்பினார். 17 அவன் திரும்பி வந்து பார்த்தான். பாலாக்கும் அவனோடிருந்த மோவாபியரின் பிரபுக்களும் தகனப்பலியண்டை நின்றுகொண்டிருந்தார்கள். பாலாக் அவனை நோக்கி: ஆண்டவர் என்ன சொன்னார் என்று வினவ, 18 பாலாம் மறைபொருளை உரைத்து: பாலாக்கே, எழுந்திரும். சேப்போரின் மைந்தரே, நன்றாய்க் கேளும். 19 கடவுள் மனிதனைப்போல் பொய் சொல்பவரும் அல்லர். மனிதனுக்குப் பிறந்தவனைப் போல் மாறுபடுகிறவரும் அல்லர். தாம் சொல்லியதைச் செய்யமால் இருப்பாரோ? பேசியதை நிறைவேற்றாமல் இருப்பாரோ? 20 நான் ஆசீர் அளிக்கக் கொண்டுவரப்பட்டேன். அந்த ஆசீரை மாற்ற என்னால் இயலாது. 21 யாகோபிலே பொய்த் தேவர்களும் இல்லை. இஸ்ராயேலரிடையே விக்கிரகங்களும் இல்லை. அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் அவனோடு இருக்கிறார். அரசனின் வெற்றி ஆர்ப்பரிப்பு அவனுக்குளே இருக்கிறது. 22 கடவுள் அவனை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவனது வலிமையோ காண்டாமிருகத்தின் வலிமை போன்றது. 23 யாக்கோபில் மந்திரவாதிகளும் இல்லை. இஸ்ராயேலில் குறி சொல்பவரும் இல்லை. யாக்கோபிடமும் இஸ்ராயேலரிடமும் கடவுள் இன்னின்ன காரியங்களைச் செய்தார் என்று பிறகு சொல்லப்படும். 24 இதோ மக்கள் பெண் சிங்கமென எழும்புவர். தாடி சிங்கமென நிமிர்ந்து நிற்பர். தான் பிடித்த இரையை உண்டு, வெட்டுண்டவர்களின் செந்நீரைப் பருகுமட்டும், அது படுத்துக்கொள்ள மாட்டாது என்று சொன்னான். 25 பாலாக் (அரசன்) பாலாமை நோக்கி: அவர்களை நீர் சபிக்கவும் வேண்டாம்; ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என, 26 அவன்: கடவுள் எனக்குக் கட்டளையிட்டிருப்பதெல்லாம் நான் செய்வேன் என்று உனக்குச் சொன்னேனன்றோ என்றான். 27 பாலாக் அவனை நோக்கி: வேறொரு இடத்திற்கு உம்மைக் கூட்டிக்கொண்டு போகிறேன், வாரும். ஒருவேளை அங்கேயாவது நீர்அவர்களைச் சபிக்கிறது கடவுளுக்கு விருப்பமாய் இருக்கலாம் என்று சொல்லி, 28 பாலைவனத்திற்கு எதிரேயுள்ள போகோர் மலையின் சிகரத்திற்கு அவனைக் கூட்டிக்கொண்டு போனான். 29 பாலாம்: இங்கே ஏழு பலிபீடங்களைக்கட்டி, எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கிடாய்களையும் ஆயத்தம் செய்வீர் என்று சொன்னான். 30 பாலாம் சொன்னபடியே பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்திலும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக்கிடாயையும் வைத்தான்.
1. அப்போது பாலாம் பாலாக்கை நோக்கி: நீர் இங்கே ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக் கிடாய்களையும் எனக்கு ஆயத்தப்படுத்தி வைப்பீர் என்றான். 2. பாலாம் சொன்னபடியே அவன் செய்தான். ஒவ்வொரு பீடத்தின் மேலும் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கிடாயையும் வைத்தார்கள். 3. அப்பொழுது பாலாம் பாலாக்கை நோக்கி: ஒருவேளை ஆண்டவர் என்னைச் சந்திக்க வருவாரோவென்று நான் போய் அறிந்து, அவர் கட்டளையிட்டிருப்பதெல்லாம் உமக்குச் சொல்வேன். அதுவரை நீர் சற்றுநேரம் உமது தகனப் பலியண்டையில் நிற்கக்கடவீர் என்றான். 4. சீக்கிரமாய் விலகிப் போனவுடனே கடவுள் அவனுக்கு எதிரில் வந்து நின்றார். பாலாம் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஓர் இளங்காளையும், ஆட்டுக்கிடாயும் வைத்துள்ளேன் என்றுசொல்ல, 5. ஆண்டவர் அவனுடைய வாயிலே ஒரு வார்த்தையை வைத்து: நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இதனைச் சொல்லக்கடவாய் என்று அனுப்பினார். 6. பாலாம் திரும்பிப்போய்ப் பர்ர்த்தபோது, பாலாக் மோவாபியரின் எல்லாப் பிரவுக்களோடு தன் தகனப் பலியண்டை நின்று கொண்டிருக்கக் கண்டான். 7. பின் தன் மறைபொருளை உரைக்கத்தொடங்கி: மோவாபியரின் அரசனாகிய பாலாக் என்னை அராமினின்றும் கீழ்த்திசை மலைகளிலிருந்தும் வரவழைத்து: நீ வந்து யாக்கோபைச் சபிக்கவும் இஸ்ராயேலரை வெறுத்துப் பேசவும் வேண்டும் என்றான். 8. கடவுள் எவனைச் சபிக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி சபிக்கக்கூடும்? ஆண்டவர் எவனை வெறுக்காதிருக்கிறாரோ அவனை நான் எப்படி வெறுத்துப் பேசக்கூடும்? 9. பாறை உச்சிகளிலிருந்து நான் அவனைக் காண்பேன். குன்றுகளிலிருந்து நான் அவனைப்பார்ப்பேன். அந்த மக்கள் தனிப்பட வாழ்ந்திருந்து, மற்ற இனங்களோடு கலவாமல் இருக்கும். 10. தூசிப் பெருக்கம் போன்ற யாக்கோபின் மக்களை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ராயேலரின் வம்சங்களைக் கணக்கிடத்தக்கவன் யார்? ஆ! நீதிமானின் மரணத்துக்கு என் மரணம் சரியொத்ததாகக்கடவது. என் முடிவு அவர்களுடைய முடிவுபோல் ஆகக்கடவது என்று சொன்னான். 11. அதைக் கேட்ட பாலாக் (அரசன்) பாலாமை நோக்கி: நீர் என்ன செய்கிறீர்? என் பகைவர்களைச் சபிக்கும்படி உம்மை வரவழைத்தேன். நீரோ ஆவர்களை ஆசீர்வதிக்கிறீரே என, 12. அவன்: ஆண்டவர் கட்டளையிட்டதையன்றி நான் வேறாக உரைப்பதாகுமோ என்று பதில் கூறினான். 13. பாலாக்: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னுடன் வாரும். அங்கே இஸ்ராயேலர் எல்லாரையும் பாராமல், அவர்களின் ஒரு பாகத்தை மட்டும் காண்பீர். அவ்விடத்திலிருந்து நீர் அவர்களைச் சபிக்க வேண்டும் என்று சொல்லி, 14. பாலாக் அவனை உயர்ந்த இடமாகிய பஸ்கா மலைச்சிகரத்திற்குக் கூட்டிக்கொண்டுபோக, பாலாம் அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்திலும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக்கிடாயையும் வைத்தான். 15. பிறகு பாலாக்கை நோக்கி: நீர் இங்கே உம்முடைய தகனப்பலியண்டை நில்லும். நான் போய் ஆண்டவரைச் சந்தித்து வருவேன் என்றான். 16. ஆண்டவர் பாலாமைச் சந்தித்து, அவன் வாயில் ஒரு வார்த்தையை வைத்து: நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இந்த வார்த்தையைச் சொல்வாய் என்று அனுப்பினார். 17. அவன் திரும்பி வந்து பார்த்தான். பாலாக்கும் அவனோடிருந்த மோவாபியரின் பிரபுக்களும் தகனப்பலியண்டை நின்றுகொண்டிருந்தார்கள். பாலாக் அவனை நோக்கி: ஆண்டவர் என்ன சொன்னார் என்று வினவ, 18. பாலாம் மறைபொருளை உரைத்து: பாலாக்கே, எழுந்திரும். சேப்போரின் மைந்தரே, நன்றாய்க் கேளும். 19. கடவுள் மனிதனைப்போல் பொய் சொல்பவரும் அல்லர். மனிதனுக்குப் பிறந்தவனைப் போல் மாறுபடுகிறவரும் அல்லர். தாம் சொல்லியதைச் செய்யமால் இருப்பாரோ? பேசியதை நிறைவேற்றாமல் இருப்பாரோ? 20. நான் ஆசீர் அளிக்கக் கொண்டுவரப்பட்டேன். அந்த ஆசீரை மாற்ற என்னால் இயலாது. 21. யாகோபிலே பொய்த் தேவர்களும் இல்லை. இஸ்ராயேலரிடையே விக்கிரகங்களும் இல்லை. அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் அவனோடு இருக்கிறார். அரசனின் வெற்றி ஆர்ப்பரிப்பு அவனுக்குளே இருக்கிறது. 22. கடவுள் அவனை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவனது வலிமையோ காண்டாமிருகத்தின் வலிமை போன்றது. 23. யாக்கோபில் மந்திரவாதிகளும் இல்லை. இஸ்ராயேலில் குறி சொல்பவரும் இல்லை. யாக்கோபிடமும் இஸ்ராயேலரிடமும் கடவுள் இன்னின்ன காரியங்களைச் செய்தார் என்று பிறகு சொல்லப்படும். 24. இதோ மக்கள் பெண் சிங்கமென எழும்புவர். தாடி சிங்கமென நிமிர்ந்து நிற்பர். தான் பிடித்த இரையை உண்டு, வெட்டுண்டவர்களின் செந்நீரைப் பருகுமட்டும், அது படுத்துக்கொள்ள மாட்டாது என்று சொன்னான். 25. பாலாக் (அரசன்) பாலாமை நோக்கி: அவர்களை நீர் சபிக்கவும் வேண்டாம்; ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என, 26. அவன்: கடவுள் எனக்குக் கட்டளையிட்டிருப்பதெல்லாம் நான் செய்வேன் என்று உனக்குச் சொன்னேனன்றோ என்றான். 27. பாலாக் அவனை நோக்கி: வேறொரு இடத்திற்கு உம்மைக் கூட்டிக்கொண்டு போகிறேன், வாரும். ஒருவேளை அங்கேயாவது நீர்அவர்களைச் சபிக்கிறது கடவுளுக்கு விருப்பமாய் இருக்கலாம் என்று சொல்லி, 28. பாலைவனத்திற்கு எதிரேயுள்ள போகோர் மலையின் சிகரத்திற்கு அவனைக் கூட்டிக்கொண்டு போனான். 29. பாலாம்: இங்கே ஏழு பலிபீடங்களைக்கட்டி, எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கிடாய்களையும் ஆயத்தம் செய்வீர் என்று சொன்னான். 30. பாலாம் சொன்னபடியே பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்திலும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக்கிடாயையும் வைத்தான்.
  • எண்ணாகமம் அதிகாரம் 1  
  • எண்ணாகமம் அதிகாரம் 2  
  • எண்ணாகமம் அதிகாரம் 3  
  • எண்ணாகமம் அதிகாரம் 4  
  • எண்ணாகமம் அதிகாரம் 5  
  • எண்ணாகமம் அதிகாரம் 6  
  • எண்ணாகமம் அதிகாரம் 7  
  • எண்ணாகமம் அதிகாரம் 8  
  • எண்ணாகமம் அதிகாரம் 9  
  • எண்ணாகமம் அதிகாரம் 10  
  • எண்ணாகமம் அதிகாரம் 11  
  • எண்ணாகமம் அதிகாரம் 12  
  • எண்ணாகமம் அதிகாரம் 13  
  • எண்ணாகமம் அதிகாரம் 14  
  • எண்ணாகமம் அதிகாரம் 15  
  • எண்ணாகமம் அதிகாரம் 16  
  • எண்ணாகமம் அதிகாரம் 17  
  • எண்ணாகமம் அதிகாரம் 18  
  • எண்ணாகமம் அதிகாரம் 19  
  • எண்ணாகமம் அதிகாரம் 20  
  • எண்ணாகமம் அதிகாரம் 21  
  • எண்ணாகமம் அதிகாரம் 22  
  • எண்ணாகமம் அதிகாரம் 23  
  • எண்ணாகமம் அதிகாரம் 24  
  • எண்ணாகமம் அதிகாரம் 25  
  • எண்ணாகமம் அதிகாரம் 26  
  • எண்ணாகமம் அதிகாரம் 27  
  • எண்ணாகமம் அதிகாரம் 28  
  • எண்ணாகமம் அதிகாரம் 29  
  • எண்ணாகமம் அதிகாரம் 30  
  • எண்ணாகமம் அதிகாரம் 31  
  • எண்ணாகமம் அதிகாரம் 32  
  • எண்ணாகமம் அதிகாரம் 33  
  • எண்ணாகமம் அதிகாரம் 34  
  • எண்ணாகமம் அதிகாரம் 35  
  • எண்ணாகமம் அதிகாரம் 36  
×

Alert

×

Tamil Letters Keypad References