தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நியாயாதிபதிகள்

நியாயாதிபதிகள் அதிகாரம் 17

1 அக்காலத்தில் எபிராயிம் மலையினின்று வந்த மிக்காசு என்ற ஒருவன் இருந்தான். 2 அவன் தன் தாயிடம், "நீர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளை உமக்கு ஒதுக்கிவைத்து என் காதில் விழும்படி அவற்றின்மேல் ஆணையிட்டீரே; இதோ! அவற்றை நானே வைத்திருக்கின்றேன். அவை என் கையில் இருக்கின்றன" என்றான். அதற்கு அவள், "கடவுள் என் மகனை ஆசீர்வதிப்பாராக!" என்றாள். 3 அவன் அவற்றைத் தன் தாயிடம் திரும்பக் கொடுக்க, அவள் அவனை நோக்கி. "என் மகன் இப்பணத்தை என் கைகளினின்று பெற்றுக்கொண்டு, செதுக்கப்பெற்ற ஒரு சிலையையும், அச்சில் வார்க்கப்பட்ட ஒரு சிலையையும் செய்யும்படி நான் அதை ஆண்டவருக்கு என்று ஒதுக்கி வைத்தேன். இப்பொழுது அதை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லியிருந்தாள். 4 எனவே, அவற்றை அவன் தன் தாயிடம் திரும்பிக் கொடுத்தான். அப்போது அவள் அதிலிருந்து இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்துத் தட்டானிடம் கொடுத்து, மிக்காசின் வீட்டிற்கெனச் செதுக்கப் பெற்ற சிலை ஒன்றையும், அச்சில் வார்க்கப்பட்ட சிலை ஒன்றையும் செய்யச் சொன்னாள். 5 மிக்காசு தன் வீட்டில் அத்தேவதைக்கு ஒரு சிறு கோவில் அமைத்தான். ஒரு 'எபோதையும்' 'தெரரீம்களையும்', அதாவது குருவுக்குரிய உடைகளையும் சிலைகளையும் செய்தான். பிறகு தன் புதல்வரில் ஒருவன் கையில் எண்ணெய் ஊற்றி அவனைக் குருவாக்கினான். 6 அக்காலத்தில் இஸ்ராயேலை ஆள அரசன் இல்லாததால், தனக்குச் சரி என்று பட்டதை ஒவ்வொருவனும் செய்து வந்தான். 7 யூதாவின் கோத்திரத்தைச் சார்ந்த மற்றொரு இளைஞன் யூதா நாட்டுப் பெத்லகேமில் இருந்தான். அவன் ஒரு லேவியன்; அவன் அங்கு வாழ்ந்து வந்தான். 8 அவன் தனக்கு வசதிப்படும் இடங்களுக்கு எல்லாம் போய்ப் பிழைக்கலாம் என்று பெத்லேகேமை விட்டுப் புறப்பட்டான். அவன் எபிராயிம் மலைக்கு வந்து பாதையை விட்டு விலகி மிக்காசின் வீட்டை அடைந்தான். 9 அவன் எங்கிருந்து வந்தான் என்று அவனைக் கேட்க, அவன், "நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வருகிறேன்; நான் ஒரு லேவியன். எவ்விடத்தில் தங்குவது எனக்கு வசதியாயும் பயனுள்ளதாயும் இருக்குமோ, அவ்விடத்திற்குப் போவேன்" என்றான். 10 அப்போது மிக்காசு, "நீ என்னுடன் இரு. எனக்குத் தந்தையும் குருவுமாய் இரு. ஆண்டு ஒன்றுக்குப் பத்து வெள்ளிக்காசுகளையும், இரண்டு ஆடைகளையும், உணவிற்கு வேண்டியவற்றையும் உனக்குக் கொடுப்பேன்" என்றான். 11 அவன் அம் மனிதனுடன் தங்கியிருக்கச் சம்மதித்து அவன் புதல்வரில் ஒருவனைப் போல் தங்கியிருந்தான். 12 மிக்காசும் அந்த இளைஞனைத் தன் குருவாகக் கொண்டு தன்னுடன் வாழச் செய்தான். 13 லேவிய இனத்தான் எனக்குக் குருவாய் இருக்கிறபடியால், ஆண்டவர் எனக்கு நன்மை செய்வார் என்று அறிவேன்" என்று அவன் தனக்குள் கூறிக்கொள்வதுண்டு.
1 அக்காலத்தில் எபிராயிம் மலையினின்று வந்த மிக்காசு என்ற ஒருவன் இருந்தான். .::. 2 அவன் தன் தாயிடம், "நீர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளை உமக்கு ஒதுக்கிவைத்து என் காதில் விழும்படி அவற்றின்மேல் ஆணையிட்டீரே; இதோ! அவற்றை நானே வைத்திருக்கின்றேன். அவை என் கையில் இருக்கின்றன" என்றான். அதற்கு அவள், "கடவுள் என் மகனை ஆசீர்வதிப்பாராக!" என்றாள். .::. 3 அவன் அவற்றைத் தன் தாயிடம் திரும்பக் கொடுக்க, அவள் அவனை நோக்கி. "என் மகன் இப்பணத்தை என் கைகளினின்று பெற்றுக்கொண்டு, செதுக்கப்பெற்ற ஒரு சிலையையும், அச்சில் வார்க்கப்பட்ட ஒரு சிலையையும் செய்யும்படி நான் அதை ஆண்டவருக்கு என்று ஒதுக்கி வைத்தேன். இப்பொழுது அதை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லியிருந்தாள். .::. 4 எனவே, அவற்றை அவன் தன் தாயிடம் திரும்பிக் கொடுத்தான். அப்போது அவள் அதிலிருந்து இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்துத் தட்டானிடம் கொடுத்து, மிக்காசின் வீட்டிற்கெனச் செதுக்கப் பெற்ற சிலை ஒன்றையும், அச்சில் வார்க்கப்பட்ட சிலை ஒன்றையும் செய்யச் சொன்னாள். .::. 5 மிக்காசு தன் வீட்டில் அத்தேவதைக்கு ஒரு சிறு கோவில் அமைத்தான். ஒரு 'எபோதையும்' 'தெரரீம்களையும்', அதாவது குருவுக்குரிய உடைகளையும் சிலைகளையும் செய்தான். பிறகு தன் புதல்வரில் ஒருவன் கையில் எண்ணெய் ஊற்றி அவனைக் குருவாக்கினான். .::. 6 அக்காலத்தில் இஸ்ராயேலை ஆள அரசன் இல்லாததால், தனக்குச் சரி என்று பட்டதை ஒவ்வொருவனும் செய்து வந்தான். .::. 7 யூதாவின் கோத்திரத்தைச் சார்ந்த மற்றொரு இளைஞன் யூதா நாட்டுப் பெத்லகேமில் இருந்தான். அவன் ஒரு லேவியன்; அவன் அங்கு வாழ்ந்து வந்தான். .::. 8 அவன் தனக்கு வசதிப்படும் இடங்களுக்கு எல்லாம் போய்ப் பிழைக்கலாம் என்று பெத்லேகேமை விட்டுப் புறப்பட்டான். அவன் எபிராயிம் மலைக்கு வந்து பாதையை விட்டு விலகி மிக்காசின் வீட்டை அடைந்தான். .::. 9 அவன் எங்கிருந்து வந்தான் என்று அவனைக் கேட்க, அவன், "நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வருகிறேன்; நான் ஒரு லேவியன். எவ்விடத்தில் தங்குவது எனக்கு வசதியாயும் பயனுள்ளதாயும் இருக்குமோ, அவ்விடத்திற்குப் போவேன்" என்றான். .::. 10 அப்போது மிக்காசு, "நீ என்னுடன் இரு. எனக்குத் தந்தையும் குருவுமாய் இரு. ஆண்டு ஒன்றுக்குப் பத்து வெள்ளிக்காசுகளையும், இரண்டு ஆடைகளையும், உணவிற்கு வேண்டியவற்றையும் உனக்குக் கொடுப்பேன்" என்றான். .::. 11 அவன் அம் மனிதனுடன் தங்கியிருக்கச் சம்மதித்து அவன் புதல்வரில் ஒருவனைப் போல் தங்கியிருந்தான். .::. 12 மிக்காசும் அந்த இளைஞனைத் தன் குருவாகக் கொண்டு தன்னுடன் வாழச் செய்தான். .::. 13 லேவிய இனத்தான் எனக்குக் குருவாய் இருக்கிறபடியால், ஆண்டவர் எனக்கு நன்மை செய்வார் என்று அறிவேன்" என்று அவன் தனக்குள் கூறிக்கொள்வதுண்டு.
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 1  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 2  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 3  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 4  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 5  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 6  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 7  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 8  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 9  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 10  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 11  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 12  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 13  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 14  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 15  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 16  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 17  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 18  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 19  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 20  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 21  
×

Alert

×

Tamil Letters Keypad References