தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நியாயாதிபதிகள்

நியாயாதிபதிகள் அதிகாரம் 15

1 சில நாட்கள் சென்ற பின்னர் கோதுமை அறுவடை காலம் வந்தது. அப்போது சாம்சன் தன் மனைவியைப் பார்க்க விரும்பி ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டு வந்தான். வழக்கப்படி அவளுடைய அறையில் அவன் நுழைகையில் அவள் தந்தை அவனை உள்ளே போகவிடாது, 2 நீ அவளைப் பகைத்தாய் என்று நான் எண்ணி, உன் தோழனுக்கு அவளைக் கொடுத்து விட்டேன். ஆனால் அவளுடைய தங்கை இருக்கிறாள் அவளை விட அழகானவள். அவளுக்குப் பதிலாக இவள் உன் மனைவியாய் இருக்கட்டும்" என்றான். 3 அதற்குச் சாம்சன், "இன்று முதல் நான் பிலிஸ்தியருக்குத் தீங்கு செய்தாலும் என் மேல் குற்றம் இராது" என்று சொன்னான். 4 பிறகு அவன் புறப்பட்டுப் போய் முந்நூறு குள்ள நரிகளைப் பிடித்து, அவற்றின் வால்களை ஒன்றோடு ஒன்று இணைத்து, இரு வால்களுக்கிடையே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டினான். 5 பிறகு பந்தங்களைக் கொளுத்தி அங்கும் இங்கும் ஓடும் படி துரத்தி விட்டான். நரிகள் பிலிஸ்தியரின் பயிர்களிடையே சென்று ஏற்கனவே கட்டை வைத்திருந்த அரிக்கட்டுக்களையும் நின்ற பயிர்களையும் சுட்டெரித்தன. திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புக்களையும் கூடச் சாம்பலாக்கின. 6 இதைக் கண்ட பிலிஸ்தியர், "இப்படிச் செய்தவன் யார்?" என்று கேட்டனர். அதற்கு, "தம்னாத்தேயனின் மருமகன் சாம்சன் தான். இவன் மனைவியை மாமன் மற்றொருவனுக்குக் கொடுத்து விட்டபடியால் இப்படிச் செய்தான்" என்றனர். எனவே பிலிஸ்தியர் வந்து அப்பெண்ணையும் அவள் தந்தையையும் சுட்டெரித்தனர். 7 அதற்குச் சாம்சன், "நீங்கள் இப்படிச் செய்தும் கூட நான் மேலும் உங்களைப் பழிவாங்கியே அமைதியடைவேன்" என்றான். 8 உண்மையில் சாம்சன் அவர்களைக் கொடுமையாய் வதைக்கத் தொடங்கினான். எனவே, அவர்கள் தொடை மேல் காலை வைத்துக்கொண்டு கதிகலங்கி நின்றனர். பின்பு சாம்சன் எத்தாமுக்கு அடுத்த பாறைக் குகைக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். 9 அப்போது பிலிஸ்தியர் யூதா நாடு சென்று அங்கே பாளையமிறங்கினர். அவ்விடந்தில் அவர்கள் தோற்றத்தால் அவ்விடம் 'லேக்கி', அதாவது தாடை என்று அழைக்கப்பட்டது. 10 யூதா கோத்திரத்தார் அவர்களை நோக்கி, "நீங்கள் எமக்கு எதிராய்ப் படையெடுத்து வந்தது ஏன்?" என்றார்கள். அதற்கு அவர்கள், "சாம்சன் எமக்குச் செய்தது போல் நாங்களும் அவனுக்குச் செய்யவும், அவனைப் பிடித்துக் கட்டவுமே வந்தோம்" என்றனர். 11 அப்போது யூதாவில் மூவாயிரம் பேர் எத்தாமின் பாறைக் குகைக்கு வந்து சாம்சனை நோக்கி, பிலிஸ்தியர் நம்மை ஆண்டு வருவதை நீ அறியாயோ? ஏன் இப்படிச் செய்தாய்?" என்றனர். அதற்கு அவன், "எனக்கு அவர்கள் செய்த படி நானும் அவர்களுக்குச் செய்தேன்" என்றான். 12 அவர்கள் அவனைப் பார்த்து, "உன்னைக் கட்டிப் பிலிஸ்தியர் கையில் ஒப்படைக்க வந்துள்ளோம்" என்றனர். அதற்கு சாம்சன், "நீங்கள் என்னைக் கொல்லமாட்டீர்கள் என்று ஆணையிட்டு எனக்கு வாக்குறுதி கொடுங்கள்" என்றான். 13 அவர்கள், "நாங்கள் உன்னை இறுகக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போமேயன்றி உன்னைக் கொல்லமாட்டோம்" என்று சொல்லி, இரு புதுக் கயிறுகளால் அவனைக் கட்டி எத்தாம் பாறையிலிருந்து அவனைக் கொண்டு போயினர். 14 தாடை என்ற இடத்தை அடைந்த போது பிலிஸ்தியர் அவனுக்கு எதிராய்க் கூச்சலிட்டு வந்தனர். அப்போழுது ஆண்டவரின் ஆவி அவன் மேல் இறங்கினது; அப்போது சாம்சனைக் கட்டியிருந்த கட்டுகள் தீப்பட்ட நூல் போல் அவன் கைகளை விட்டு அறுந்து போயின. 15 உடனே அவன் தரையில் கிடந்த ஒரு கழுதையின் கீழ்த் தாடையைக் கையிலெடுத்து, அதைக் கொண்டு, ஆயிரம் பேரைக் கொன்றான். 16 பிறகு, அவன், "கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு, கழுதைக் குட்டியின் கீழ்த் தாடையைக் கொண்டு நான் அவர்களை வென்றேன். ஆயிரம் பேரைக் கொன்றேன்" என்றான். 17 இச்சொற்களை அவன் பாடி முடித்த பின், தாடையைத் தன் கையினின்று விட்டெறிந்து, அவ்விடத்திற்குத் தாடை மேடு எனும் பொருள்பட 'ராமாத்லேக்கி' என்று பெயரிட்டான். 18 மேலும், அவன் மிகுந்த தாகத்தினால் வருந்தி ஆண்டவரை நோக்கி, "உம் ஊழியன் கையால் இம்மாபெரும் மீட்பையும் வெற்றியையும் நீரே அளித்தீர். இதோ தாகத்தினால் சாகிறேன். விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் கையில் அகப்படப் போகிறேன்." என்றான். 19 எனவே, கழுதைத் தாடையின் கடைப்பல் ஒன்றை ஆண்டவர் திறக்கவே அதனின்று தண்ணீர் வெளி வந்தது; அதை அவன் குடித்துப் புத்துயிர் பெற்றான்; வலிமையுற்றான். எனவே, இன்று வரை அவ்விடம் 'மன்றாடுகிறவனின் தாடை நீரூற்று' என அழைக்கப்படுகிறது. 20 பிலிஸ்தியர் காலத்தில் சாம்சன் இஸ்ராயேலருக்கு இருபது ஆண்டுகள் நீதி வழங்கி வந்தான்.
1. சில நாட்கள் சென்ற பின்னர் கோதுமை அறுவடை காலம் வந்தது. அப்போது சாம்சன் தன் மனைவியைப் பார்க்க விரும்பி ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டு வந்தான். வழக்கப்படி அவளுடைய அறையில் அவன் நுழைகையில் அவள் தந்தை அவனை உள்ளே போகவிடாது, 2. நீ அவளைப் பகைத்தாய் என்று நான் எண்ணி, உன் தோழனுக்கு அவளைக் கொடுத்து விட்டேன். ஆனால் அவளுடைய தங்கை இருக்கிறாள் அவளை விட அழகானவள். அவளுக்குப் பதிலாக இவள் உன் மனைவியாய் இருக்கட்டும்" என்றான். 3. அதற்குச் சாம்சன், "இன்று முதல் நான் பிலிஸ்தியருக்குத் தீங்கு செய்தாலும் என் மேல் குற்றம் இராது" என்று சொன்னான். 4. பிறகு அவன் புறப்பட்டுப் போய் முந்நூறு குள்ள நரிகளைப் பிடித்து, அவற்றின் வால்களை ஒன்றோடு ஒன்று இணைத்து, இரு வால்களுக்கிடையே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டினான். 5. பிறகு பந்தங்களைக் கொளுத்தி அங்கும் இங்கும் ஓடும் படி துரத்தி விட்டான். நரிகள் பிலிஸ்தியரின் பயிர்களிடையே சென்று ஏற்கனவே கட்டை வைத்திருந்த அரிக்கட்டுக்களையும் நின்ற பயிர்களையும் சுட்டெரித்தன. திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புக்களையும் கூடச் சாம்பலாக்கின. 6. இதைக் கண்ட பிலிஸ்தியர், "இப்படிச் செய்தவன் யார்?" என்று கேட்டனர். அதற்கு, "தம்னாத்தேயனின் மருமகன் சாம்சன் தான். இவன் மனைவியை மாமன் மற்றொருவனுக்குக் கொடுத்து விட்டபடியால் இப்படிச் செய்தான்" என்றனர். எனவே பிலிஸ்தியர் வந்து அப்பெண்ணையும் அவள் தந்தையையும் சுட்டெரித்தனர். 7. அதற்குச் சாம்சன், "நீங்கள் இப்படிச் செய்தும் கூட நான் மேலும் உங்களைப் பழிவாங்கியே அமைதியடைவேன்" என்றான். 8. உண்மையில் சாம்சன் அவர்களைக் கொடுமையாய் வதைக்கத் தொடங்கினான். எனவே, அவர்கள் தொடை மேல் காலை வைத்துக்கொண்டு கதிகலங்கி நின்றனர். பின்பு சாம்சன் எத்தாமுக்கு அடுத்த பாறைக் குகைக்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். 9. அப்போது பிலிஸ்தியர் யூதா நாடு சென்று அங்கே பாளையமிறங்கினர். அவ்விடந்தில் அவர்கள் தோற்றத்தால் அவ்விடம் 'லேக்கி', அதாவது தாடை என்று அழைக்கப்பட்டது. 10. யூதா கோத்திரத்தார் அவர்களை நோக்கி, "நீங்கள் எமக்கு எதிராய்ப் படையெடுத்து வந்தது ஏன்?" என்றார்கள். அதற்கு அவர்கள், "சாம்சன் எமக்குச் செய்தது போல் நாங்களும் அவனுக்குச் செய்யவும், அவனைப் பிடித்துக் கட்டவுமே வந்தோம்" என்றனர். 11. அப்போது யூதாவில் மூவாயிரம் பேர் எத்தாமின் பாறைக் குகைக்கு வந்து சாம்சனை நோக்கி, பிலிஸ்தியர் நம்மை ஆண்டு வருவதை நீ அறியாயோ? ஏன் இப்படிச் செய்தாய்?" என்றனர். அதற்கு அவன், "எனக்கு அவர்கள் செய்த படி நானும் அவர்களுக்குச் செய்தேன்" என்றான். 12. அவர்கள் அவனைப் பார்த்து, "உன்னைக் கட்டிப் பிலிஸ்தியர் கையில் ஒப்படைக்க வந்துள்ளோம்" என்றனர். அதற்கு சாம்சன், "நீங்கள் என்னைக் கொல்லமாட்டீர்கள் என்று ஆணையிட்டு எனக்கு வாக்குறுதி கொடுங்கள்" என்றான். 13. அவர்கள், "நாங்கள் உன்னை இறுகக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போமேயன்றி உன்னைக் கொல்லமாட்டோம்" என்று சொல்லி, இரு புதுக் கயிறுகளால் அவனைக் கட்டி எத்தாம் பாறையிலிருந்து அவனைக் கொண்டு போயினர். 14. தாடை என்ற இடத்தை அடைந்த போது பிலிஸ்தியர் அவனுக்கு எதிராய்க் கூச்சலிட்டு வந்தனர். அப்போழுது ஆண்டவரின் ஆவி அவன் மேல் இறங்கினது; அப்போது சாம்சனைக் கட்டியிருந்த கட்டுகள் தீப்பட்ட நூல் போல் அவன் கைகளை விட்டு அறுந்து போயின. 15. உடனே அவன் தரையில் கிடந்த ஒரு கழுதையின் கீழ்த் தாடையைக் கையிலெடுத்து, அதைக் கொண்டு, ஆயிரம் பேரைக் கொன்றான். 16. பிறகு, அவன், "கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு, கழுதைக் குட்டியின் கீழ்த் தாடையைக் கொண்டு நான் அவர்களை வென்றேன். ஆயிரம் பேரைக் கொன்றேன்" என்றான். 17. இச்சொற்களை அவன் பாடி முடித்த பின், தாடையைத் தன் கையினின்று விட்டெறிந்து, அவ்விடத்திற்குத் தாடை மேடு எனும் பொருள்பட 'ராமாத்லேக்கி' என்று பெயரிட்டான். 18. மேலும், அவன் மிகுந்த தாகத்தினால் வருந்தி ஆண்டவரை நோக்கி, "உம் ஊழியன் கையால் இம்மாபெரும் மீட்பையும் வெற்றியையும் நீரே அளித்தீர். இதோ தாகத்தினால் சாகிறேன். விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் கையில் அகப்படப் போகிறேன்." என்றான். 19. எனவே, கழுதைத் தாடையின் கடைப்பல் ஒன்றை ஆண்டவர் திறக்கவே அதனின்று தண்ணீர் வெளி வந்தது; அதை அவன் குடித்துப் புத்துயிர் பெற்றான்; வலிமையுற்றான். எனவே, இன்று வரை அவ்விடம் 'மன்றாடுகிறவனின் தாடை நீரூற்று' என அழைக்கப்படுகிறது. 20. பிலிஸ்தியர் காலத்தில் சாம்சன் இஸ்ராயேலருக்கு இருபது ஆண்டுகள் நீதி வழங்கி வந்தான்.
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 1  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 2  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 3  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 4  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 5  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 6  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 7  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 8  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 9  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 10  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 11  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 12  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 13  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 14  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 15  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 16  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 17  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 18  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 19  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 20  
  • நியாயாதிபதிகள் அதிகாரம் 21  
×

Alert

×

Tamil Letters Keypad References