தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோபு

பதிவுகள்

யோபு அதிகாரம் 5

1 இப்பொழுது கூவிப்பாரும், உமக்குப் பதிலுரைப்பார் உண்டோ? பரிசுத்தர்களில் யாரிடம் நீர் திரும்புவீர்? 2 மெய்யாகவே, ஆத்திரம் அறிவிலியைக் கொல்லுகிறது. 3 பொறாமை அற்பனை அழிக்கிறது. அறிவிலி வேரூன்றுவதைக் கண்டேன், ஆனால் உடனே அவன் இருப்பிடத்தைச் சபித்தேன். 4 பாதுகாப்பு அவன் மக்களுக்கு மிகத் தொலைவு, ஊர்ச் சபையில் அவர்கள் நசுக்கப்படுகின்றனர், அவர்களை விடுவிக்கிறவன் எவனுமில்லை. 5 பசித்தவர்கள் அவர்களது விளைச்சலை அறுத்துத் தின்பார்கள், கடவுள் அவர்கள் வாயினின்று பறித்து விடுவார், பேராசை பிடித்தவர்கள் அவர்கள் செல்வத்திற்குக் காத்திருப்பர். 6 ஏனெனில் வேதனை புழுதியிலிருந்து கிளம்புவதில்லை, துன்பம் நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை; 7 ஆனால் பறப்பதற்கென்றே பிறக்கும் பறவை போலவே துன்புறுவதற்கென்றே பிறந்தவன் மனிதன். 8 என்னைப் பொறுத்த மட்டில், நான் கடவுளைத் தேடுவேன், கடவுளிடமே என் வழக்கை விட்டு விடுவேன். 9 மாபெரும் செயல்களையும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவற்றையும் கணக்கற்ற விந்தைகளையும் செய்கிறவர் அவரே. 10 நிலத்தின் மேல் மழை பெய்யச் செய்கிறார், வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார். 11 தாழ்ந்தவர்களை மேன்மையில் வைக்கிறவர் அவர், அழுகிறவர்களை நன்னிலைக்கு உயர்த்துகிறவர் அவர். 12 வஞ்சகரின் திட்டங்களைச் சிதறடிக்கிறார், அவர்கள் கைகள் வெற்றி பெறாதபடி செய்கிறார். 13 ஞானிகளை அவர்களின் ஞானத்தினாலேயே பிடிக்கிறார், பொல்லாதவர்களின் சூழ்ச்சிகளைத் தலைகீழாய் வீழ்த்துகிறார். 14 பட்டப்பகலில் அவர்கள் காரிருளால் சூழப்படுவர், இரவில் தடவுவதுபோல் நண்பகலில் தடவித் திரிவர். 15 அவர்கள் வாயினின்று ஏழையை அவரே மீட்கிறார், கொடியவர்களின் கையினின்று எளியவனைக் காக்கிறார். 16 இவ்வாறு, ஏழைகளுக்கும் நம்பிக்கையுண்டு, அநீதியோ தன் வாயைப் பொத்திக்கொள்ளும். 17 கடவுளால் திருத்தப் பெறுகிறவன் உண்மையில் பேறுபெற்றவன்! ஆதலால் எல்லாம் வல்லவரின் திருத்தத்தைப் புறக்கணியாதீர். 18 ஏனெனில், காயப்படுத்துகிறவர் அவரே, காயத்தைக் கட்டுபவரும் அவரே. அடிப்பவர் அவரே, ஆற்றுவதும் அவர் கைகளே. 19 ஆறு வகைத் துன்பங்களினின்று அவர் உம்மை விடுவிப்பார், ஏழாவதிலும் எத்தீமையும் உம்மைத் தொடாது. 20 பஞ்சத்தில் உம்மை அவர் சாவினின்று மீட்பார், போர்க்காலத்தில் வாளுக்கு இரையாகாமல் காப்பார். 21 நாவின் சாட்டையடிக்கு மறைக்கப்படுவீர், அழிவு வரும் போது அதற்கு அஞ்சமாட்டீர். 22 அழிவிலும் பஞ்சத்திலும் சிரித்துக் கொண்டிருப்பீர், பூமியின் மிருகங்களுக்கு அஞ்சவே மாட்டீர். 23 வயல் வெளிக் கற்களோடு ஒப்பந்தம் செய்திருப்பீர். கொடிய மிருகங்களுடன் சமாதானமாய் வாழ்வீர். 24 உம் கூடாரம் தீங்கின்றி இருப்பதை அறிந்துகொள்வீர், உம் கிடையைப் பார்க்க வரும் போது எதுவும் குறையாதிருப்பதைக் காண்பீர். 25 உமது சந்ததி பலுகிப் பெருகுவதையும், உமது வித்து தரையின் புல்லைப்போல் வளருவதையும் அறிவீர். 26 தக்கபருவத்தில் அரிக்கட்டுகள் களத்திற்குப் போவது போல், முதிர்ந்த வயதில் உம் கல்லறைக்குச் செல்வீர். 27 இதெல்லாம் எங்களது ஆராய்ச்சியின் முடிவு; இது உண்மை, செவிமடுத்து உம் நன்மைக்கென அறிந்துகொள்ளும்."
1. இப்பொழுது கூவிப்பாரும், உமக்குப் பதிலுரைப்பார் உண்டோ? பரிசுத்தர்களில் யாரிடம் நீர் திரும்புவீர்? 2. மெய்யாகவே, ஆத்திரம் அறிவிலியைக் கொல்லுகிறது. 3. பொறாமை அற்பனை அழிக்கிறது. அறிவிலி வேரூன்றுவதைக் கண்டேன், ஆனால் உடனே அவன் இருப்பிடத்தைச் சபித்தேன். 4. பாதுகாப்பு அவன் மக்களுக்கு மிகத் தொலைவு, ஊர்ச் சபையில் அவர்கள் நசுக்கப்படுகின்றனர், அவர்களை விடுவிக்கிறவன் எவனுமில்லை. 5. பசித்தவர்கள் அவர்களது விளைச்சலை அறுத்துத் தின்பார்கள், கடவுள் அவர்கள் வாயினின்று பறித்து விடுவார், பேராசை பிடித்தவர்கள் அவர்கள் செல்வத்திற்குக் காத்திருப்பர். 6. ஏனெனில் வேதனை புழுதியிலிருந்து கிளம்புவதில்லை, துன்பம் நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை; 7. ஆனால் பறப்பதற்கென்றே பிறக்கும் பறவை போலவே துன்புறுவதற்கென்றே பிறந்தவன் மனிதன். 8. என்னைப் பொறுத்த மட்டில், நான் கடவுளைத் தேடுவேன், கடவுளிடமே என் வழக்கை விட்டு விடுவேன். 9. மாபெரும் செயல்களையும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவற்றையும் கணக்கற்ற விந்தைகளையும் செய்கிறவர் அவரே. 10. நிலத்தின் மேல் மழை பெய்யச் செய்கிறார், வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார். 11. தாழ்ந்தவர்களை மேன்மையில் வைக்கிறவர் அவர், அழுகிறவர்களை நன்னிலைக்கு உயர்த்துகிறவர் அவர். 12. வஞ்சகரின் திட்டங்களைச் சிதறடிக்கிறார், அவர்கள் கைகள் வெற்றி பெறாதபடி செய்கிறார். 13. ஞானிகளை அவர்களின் ஞானத்தினாலேயே பிடிக்கிறார், பொல்லாதவர்களின் சூழ்ச்சிகளைத் தலைகீழாய் வீழ்த்துகிறார். 14. பட்டப்பகலில் அவர்கள் காரிருளால் சூழப்படுவர், இரவில் தடவுவதுபோல் நண்பகலில் தடவித் திரிவர். 15. அவர்கள் வாயினின்று ஏழையை அவரே மீட்கிறார், கொடியவர்களின் கையினின்று எளியவனைக் காக்கிறார். 16. இவ்வாறு, ஏழைகளுக்கும் நம்பிக்கையுண்டு, அநீதியோ தன் வாயைப் பொத்திக்கொள்ளும். 17. கடவுளால் திருத்தப் பெறுகிறவன் உண்மையில் பேறுபெற்றவன்! ஆதலால் எல்லாம் வல்லவரின் திருத்தத்தைப் புறக்கணியாதீர். 18. ஏனெனில், காயப்படுத்துகிறவர் அவரே, காயத்தைக் கட்டுபவரும் அவரே. அடிப்பவர் அவரே, ஆற்றுவதும் அவர் கைகளே. 19. ஆறு வகைத் துன்பங்களினின்று அவர் உம்மை விடுவிப்பார், ஏழாவதிலும் எத்தீமையும் உம்மைத் தொடாது. 20. பஞ்சத்தில் உம்மை அவர் சாவினின்று மீட்பார், போர்க்காலத்தில் வாளுக்கு இரையாகாமல் காப்பார். 21. நாவின் சாட்டையடிக்கு மறைக்கப்படுவீர், அழிவு வரும் போது அதற்கு அஞ்சமாட்டீர். 22. அழிவிலும் பஞ்சத்திலும் சிரித்துக் கொண்டிருப்பீர், பூமியின் மிருகங்களுக்கு அஞ்சவே மாட்டீர். 23. வயல் வெளிக் கற்களோடு ஒப்பந்தம் செய்திருப்பீர். கொடிய மிருகங்களுடன் சமாதானமாய் வாழ்வீர். 24. உம் கூடாரம் தீங்கின்றி இருப்பதை அறிந்துகொள்வீர், உம் கிடையைப் பார்க்க வரும் போது எதுவும் குறையாதிருப்பதைக் காண்பீர். 25. உமது சந்ததி பலுகிப் பெருகுவதையும், உமது வித்து தரையின் புல்லைப்போல் வளருவதையும் அறிவீர். 26. தக்கபருவத்தில் அரிக்கட்டுகள் களத்திற்குப் போவது போல், முதிர்ந்த வயதில் உம் கல்லறைக்குச் செல்வீர். 27. இதெல்லாம் எங்களது ஆராய்ச்சியின் முடிவு; இது உண்மை, செவிமடுத்து உம் நன்மைக்கென அறிந்துகொள்ளும்."
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
×

Alert

×

Tamil Letters Keypad References