தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோபு

பதிவுகள்

யோபு அதிகாரம் 36

1 எலியூ இன்னும் தொடர்ந்து பேசினான்: 2 கடவுள் சார்பில் நான் சொல்ல வேண்டியது இன்னும் கொஞ்சம் உள்ளது; ஆகவே சற்றுப்பொறுத்திருந்து கேளும், அதையும் உமக்கு வெளிப்படுத்துவேன். 3 என் அறிவின் திறனை வெகு தொலைவினின்று பெறுவேன்; என்னை உண்டாக்கினவர் சரி என்பதையே எண்பிப்பேன்; 4 என் சொற்கள் பொய்யற்றவை என்பது உறுதி, உங்கள் நடுவில் பேசுபவன் அறிவு நிறைந்தவன். 5 கடவுள் தான் பெரியவர், யாரையும் அவர் புறக்கணிப்பதில்லை; அறிவாற்றலில் அவர் வல்லவர். 6 கொடியவர்களை அவர் உயிரோடு விட்டு வைக்க மாட்டார், துன்புறுத்தப் படுகிறவர்களுக்கு நீதி வழங்குகிறார். 7 நீதிமான்கள் மேலிருந்து தம் பார்வையே அகற்றுகிறார் அல்லர், அரசர்களை அரியணையில் என்றென்றைக்கும் அமர்த்துகிறார், அவர்களும் உயர்வு பெறுகிறார்கள். 8 ஆனால் அவர்கள் விலங்கிடப்படுவார்களாயின், அல்லது துன்பத்தின் கட்டுகளில் சிக்குண்டார்களானால், 9 அவர்களுடைய செயல்களையும் மீறுதல்களையும் எடுத்துக்காட்டி, அவர்களுடைய இறுமாப்பான நடத்தையைத் தெரியப்படுத்துகிறார். 10 அறிவுரைகளுக்கு அவர்களுடைய செவிகளைத் திறக்கிறார்; அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பக் கட்டளையிடுகிறார். 11 அவர்கள் அதற்குச் செவிமடுத்து அவருக்கு ஊழியம் செய்தால், வளமான வாழ்வில் தங்கள் நாட்களையும், இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பார்கள். 12 ஆனால் அவர்கள் செவிமடுக்காமற் போனால், வாளுக்கு இரையாகி மடிவார்கள், அறிவில்லாதவர்களாய்ச் சாவார்கள். 13 பொல்லாத உள்ளத்தினர் தங்கள் சினத்தைப் பேணுகின்றார்கள், அவர்களை அவர் விலங்கிடும் போது, அவர்கள் உதவி கேட்பதில்லை; 14 ஆதலால் அவர்கள் இளமையிலேயே இறந்து போகிறார்கள், அவர்கள் வாழ்க்கை மானக்கேட்டில் முடிகிறது. 15 துன்புறுகிறவர்களை அவர்கள் துன்பத்தாலேயே மீட்கிறார், இடுக்கண் அனுப்பி அவர்களது செவியைத் திறக்கிறார். 16 இப்பொழுது உம்மையும் வேதனையிலிருந்து இழுத்து விடப்போகிறார்; வளமான வாழ்வைத் தாராளமாய்த் துய்த்தீர்; உமது பந்தியில் கொழுமையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. 17 ஆனால் முன்பு பொல்லாதவர் மீது நீர் தீர்ப்புச் செலுத்தவில்லை, திக்கற்றவனுக்கு உரிமை தராமல் வஞ்சித்தீர். 18 இனிமேல் கையூட்டுகள் பெற்றுச் சீர்குலையாமல், செல்வப் பெருக்கினால் வழி தவறிப் போகாமல் எச்சரிக்கையாயிரும். 19 பணமில்லாதவனையும் பணம் படைத்தவனையும், வலுவில்லாதவனையும் வலுவுள்ளவனையும் ஒருங்கே விசாரணைக்குக் கொண்டு வாரும். 20 குடும்பத்தைச் சேராதவர்களை நசுக்கி, உம் உறவினரை அவர்களிடத்தில் வைக்காதீர். 21 அக்கிரமத்திற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும், ஏனெனில் உம் கேட்டுக்கு அதுவே காரணம். 22 இதோ, கடவுள் தம் வல்லமையில் மேன்மையானவர், ஆசிரியர்களுள் அவருக்கு நிகரானவர் யார்? 23 அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தவன் யார்? அல்லது, 'நீர் செய்தது தவறு' என்று அவரிடம் சொல்லக்கூடியவன் யார்? 24 மனிதர்கள் போற்றிப் பாடியுள்ள அவரது செயலை மேன்மைப்படுத்தக் கருத்தாயிரும். 25 மனிதர் அனைவரும் அதைப் பார்த்துள்ளனர், மனிதன் அதைத் தொலைவிலிருந்து தான் காண்கிறான். 26 இதோ கடவுள் பெரியவர், தம் அறிவுக்கு எட்டாதவர்; அவர் ஆண்டுகளின் கணக்கு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. 27 நீர்த் துளிகளை அவர் முகந்து கொள்ளுகிறார், பனியை மழையாக வடித்தெடுக்கிறார்; 28 வானம் அவற்றைப் பொழிகிறது, மாரியாய் மனிதன் மேல் பெய்கின்றது. 29 மேகங்கள் பரவி விரிவதையும், அவரது கூடாரத்தின் முழக்கங்களையும் யார் ஆய்ந்தறிவார்? 30 இதோ, தம்மைச் சுற்றி மின்னலைப் பரப்புகிறார். கடலின் அடிப்படைகளை மூடி மறைக்கிறார். 31 ஏனெனில் இவற்றால் தான் மக்களினங்களை அவர் தீர்ப்பிடுகிறார், ஏராளமாய் உணவுப் பொருளை விளைவிக்கிறார். 32 மின்னலைத் தம் கைக்குள் சேர்த்து வைக்கிறார், குறிப்பிட்ட இலக்கை அழிக்கும்படி ஆணை தருகிறார். 33 அக்கிரமத்திற்கு எதிராகக் கடுஞ்சினத்துடன் வெகுண்டெழுபவரைப் பற்றி இடிமுழக்கம் அறிவிக்கிறது.
1 எலியூ இன்னும் தொடர்ந்து பேசினான்: .::. 2 கடவுள் சார்பில் நான் சொல்ல வேண்டியது இன்னும் கொஞ்சம் உள்ளது; ஆகவே சற்றுப்பொறுத்திருந்து கேளும், அதையும் உமக்கு வெளிப்படுத்துவேன். .::. 3 என் அறிவின் திறனை வெகு தொலைவினின்று பெறுவேன்; என்னை உண்டாக்கினவர் சரி என்பதையே எண்பிப்பேன்; .::. 4 என் சொற்கள் பொய்யற்றவை என்பது உறுதி, உங்கள் நடுவில் பேசுபவன் அறிவு நிறைந்தவன். .::. 5 கடவுள் தான் பெரியவர், யாரையும் அவர் புறக்கணிப்பதில்லை; அறிவாற்றலில் அவர் வல்லவர். .::. 6 கொடியவர்களை அவர் உயிரோடு விட்டு வைக்க மாட்டார், துன்புறுத்தப் படுகிறவர்களுக்கு நீதி வழங்குகிறார். .::. 7 நீதிமான்கள் மேலிருந்து தம் பார்வையே அகற்றுகிறார் அல்லர், அரசர்களை அரியணையில் என்றென்றைக்கும் அமர்த்துகிறார், அவர்களும் உயர்வு பெறுகிறார்கள். .::. 8 ஆனால் அவர்கள் விலங்கிடப்படுவார்களாயின், அல்லது துன்பத்தின் கட்டுகளில் சிக்குண்டார்களானால், .::. 9 அவர்களுடைய செயல்களையும் மீறுதல்களையும் எடுத்துக்காட்டி, அவர்களுடைய இறுமாப்பான நடத்தையைத் தெரியப்படுத்துகிறார். .::. 10 அறிவுரைகளுக்கு அவர்களுடைய செவிகளைத் திறக்கிறார்; அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பக் கட்டளையிடுகிறார். .::. 11 அவர்கள் அதற்குச் செவிமடுத்து அவருக்கு ஊழியம் செய்தால், வளமான வாழ்வில் தங்கள் நாட்களையும், இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பார்கள். .::. 12 ஆனால் அவர்கள் செவிமடுக்காமற் போனால், வாளுக்கு இரையாகி மடிவார்கள், அறிவில்லாதவர்களாய்ச் சாவார்கள். .::. 13 பொல்லாத உள்ளத்தினர் தங்கள் சினத்தைப் பேணுகின்றார்கள், அவர்களை அவர் விலங்கிடும் போது, அவர்கள் உதவி கேட்பதில்லை; .::. 14 ஆதலால் அவர்கள் இளமையிலேயே இறந்து போகிறார்கள், அவர்கள் வாழ்க்கை மானக்கேட்டில் முடிகிறது. .::. 15 துன்புறுகிறவர்களை அவர்கள் துன்பத்தாலேயே மீட்கிறார், இடுக்கண் அனுப்பி அவர்களது செவியைத் திறக்கிறார். .::. 16 இப்பொழுது உம்மையும் வேதனையிலிருந்து இழுத்து விடப்போகிறார்; வளமான வாழ்வைத் தாராளமாய்த் துய்த்தீர்; உமது பந்தியில் கொழுமையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. .::. 17 ஆனால் முன்பு பொல்லாதவர் மீது நீர் தீர்ப்புச் செலுத்தவில்லை, திக்கற்றவனுக்கு உரிமை தராமல் வஞ்சித்தீர். .::. 18 இனிமேல் கையூட்டுகள் பெற்றுச் சீர்குலையாமல், செல்வப் பெருக்கினால் வழி தவறிப் போகாமல் எச்சரிக்கையாயிரும். .::. 19 பணமில்லாதவனையும் பணம் படைத்தவனையும், வலுவில்லாதவனையும் வலுவுள்ளவனையும் ஒருங்கே விசாரணைக்குக் கொண்டு வாரும். .::. 20 குடும்பத்தைச் சேராதவர்களை நசுக்கி, உம் உறவினரை அவர்களிடத்தில் வைக்காதீர். .::. 21 அக்கிரமத்திற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும், ஏனெனில் உம் கேட்டுக்கு அதுவே காரணம். .::. 22 இதோ, கடவுள் தம் வல்லமையில் மேன்மையானவர், ஆசிரியர்களுள் அவருக்கு நிகரானவர் யார்? .::. 23 அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தவன் யார்? அல்லது, 'நீர் செய்தது தவறு' என்று அவரிடம் சொல்லக்கூடியவன் யார்? .::. 24 மனிதர்கள் போற்றிப் பாடியுள்ள அவரது செயலை மேன்மைப்படுத்தக் கருத்தாயிரும். .::. 25 மனிதர் அனைவரும் அதைப் பார்த்துள்ளனர், மனிதன் அதைத் தொலைவிலிருந்து தான் காண்கிறான். .::. 26 இதோ கடவுள் பெரியவர், தம் அறிவுக்கு எட்டாதவர்; அவர் ஆண்டுகளின் கணக்கு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. .::. 27 நீர்த் துளிகளை அவர் முகந்து கொள்ளுகிறார், பனியை மழையாக வடித்தெடுக்கிறார்; .::. 28 வானம் அவற்றைப் பொழிகிறது, மாரியாய் மனிதன் மேல் பெய்கின்றது. .::. 29 மேகங்கள் பரவி விரிவதையும், அவரது கூடாரத்தின் முழக்கங்களையும் யார் ஆய்ந்தறிவார்? .::. 30 இதோ, தம்மைச் சுற்றி மின்னலைப் பரப்புகிறார். கடலின் அடிப்படைகளை மூடி மறைக்கிறார். .::. 31 ஏனெனில் இவற்றால் தான் மக்களினங்களை அவர் தீர்ப்பிடுகிறார், ஏராளமாய் உணவுப் பொருளை விளைவிக்கிறார். .::. 32 மின்னலைத் தம் கைக்குள் சேர்த்து வைக்கிறார், குறிப்பிட்ட இலக்கை அழிக்கும்படி ஆணை தருகிறார். .::. 33 அக்கிரமத்திற்கு எதிராகக் கடுஞ்சினத்துடன் வெகுண்டெழுபவரைப் பற்றி இடிமுழக்கம் அறிவிக்கிறது.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
×

Alert

×

Tamil Letters Keypad References