தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஆதியாகமம்

ஆதியாகமம் அதிகாரம் 33

1 யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க, எசாயூ நானூறு ஆடவரோடு வருவதைக் கண்டான். உடனே லீயானுடைய பிள்ளைகளையும், இராக்கேலுடைய பிள்ளைகளையும், இரண்டு வேலைக்காரிகளுடைய பிள்ளைகளையும் வெவ்வேறாகப் பிரித்து வைத்து, 2 முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லீயாளையும் அவளுடைய பிள்ளைகளையும், இறுதியில் இராக்கேலையும் சூசையையும் நிறுத்தி, 3 தான் அவர்களுக்கு முன் நடந்து சென்று தமையனை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரை மட்டும் குனிந்து அவனை வணங்கினான். 4 அதைக் கண்டு எசாயூ தம்பிக்கு எதிர் கொண்டு ஓடி, அவனை அரவணைத்து, அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு அழுதான். 5 பின் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு: இவர்கள் யார், உன்னுடையவர்களா என்று கேட்க, அவன்: கடவுள் அடியேனுக்குத் தந்தருளின பிள்ளைகள் என்று பதில் சொன்னான். 6 அந்நேரத்தில் வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி வந்து வணங்கினர். 7 லீயாளும் அவளுடைய பிள்ளைகளும் அணுகி, அப்படியே தெண்டனிட்டு வணங்கினர். பின் கடைசியாக சூசையும் இராக்கேலும் கிட்ட வந்து வணங்கினர். 8 அப்போது எசாயூ யாக்கோபை நோக்கி: எனக்கு எதிர்கொண்டு வந்த அந்த மந்தைகள் என்ன என, யாக்கோபு: என் தலைவன் உம் கண்களில் அடியேனுக்குத் தயவு கிடைப்பதற்காகத் தான் என்று பதில் சொன்னான். 9 அவன்: தம்பி, எனக்கு வேண்டிய பொருள் உண்டு. உன்னுடையது உனக்கிருக்கட்டும் என, யாக்கோபு: 10 அப்படிச் (சொல்ல) வேண்டாமென்று (உம்மை) மன்றாடுகிறேன். ஆனால், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததாயின், இச் சொற்பமான காணிக்கையை என் கையினின்று ஏற்றுக் கொள்வீர். ஏனென்றால், நான் உம்மைக் கண்டது கடவுளைக் கண்டது போலாயிற்று. 11 நீர் எனக்குத் தயவு செய்து, எல்லா நன்மைகளுக்கும் காரணராகிய கடவுள் எனக்கு அருளி உமக்கு நான் கொண்டு வந்த ஆசீரை நீர் ஏற்றுக் கொள்வீர் (என்றான்). அவன், தன் தம்பி இவ்வாறு வற்புறுத்திக் கேட்டமையால், (அவற்றைக்) கட்டாயமாய் ஏற்றுக் கொண்டு: நாம் சேர்ந்து போகலாம், வா; 12 நானும் உனக்கு வழித்துணையாய் இருப்பேன் என்றான். அதற்கு யாக்கோபு: 13 தலைவ, சிறு குழந்தைகளும், சினை ஆடுகளும் பசுக்களும் என்னுடன் இருப்பதை நீர் அறிவீர். அவற்றை நான் அதிகமாய் வருத்தி ஓட்டுவேனாயின், மந்தையெல்லாம் ஒரே நாளில் மாய்ந்துபோமன்றோ? 14 நீர் அடியேனுக்கு முன்னே செல்வீர். நானோ, பிள்ளைகளின் நடைக்குத் தக்காற் போல், செயீருக்கு நீர் (வந்து) சேருமளவும் மெல்ல மெல்ல உம் காலடிகளைப் பார்த்து நடந்து வருகிறேன் என்றான். 15 அதற்கு எசாயூ: என்னுடனிருக்கிற ஆடவர்களில் சிலரேனும் உனக்கு வழித்துணையாக இருக்கட்டும் என்று மன்றாட அவன்: தேவையில்லை; உமது முன்னிலையில் எனக்குத் தயவு கிடைத்தாலே போதும் என்றான். 16 ஆகையால், எசாயூ அன்று தானே புறப்பட்டு, தான் வந்த வழியே செயீருக்குத் திரும்பினான். 17 யாக்கோபும் சொக்கோட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கே தனக்கென்று ஒரு வீடு கட்டினான்; தன் மந்தைகளுக்காகக் கூடாரங்களையும் அடித்தான். இதனால் அந்த இடத்திற்குச் சொக்கோட் அதாவது கூடாரம் என்று பெயரிட்டான். 18 அவன் சீரிய மெசொப்பொத்தாமியாவிலிருந்து திரும்பின பின், கானான் நாட்டைச் சேர்ந்த சிக்கிமரின் நகரமாகிய சாலேமை அடைந்து அதன் அருகில் வாழ்ந்தான். 19 அப்பொழுது, தான் கூடாரங்களை அடித்திருந்த நிலத்தின் ஒரு பாகத்தைச் சிக்கேமின் தந்தையாகிய ஏமோர் புதல்வர் கையிலே நூறு ஆட்டுக் குட்டிகளை விலைக்குக் கொடுத்து (வாங்கிக்) கொண்டான். 20 பின் அங்கே அவன் ஒரு பீடத்தைக் கட்டி, அதன் மேல் இஸ்ராயேலின் எல்லாம் வல்ல கடவுளைத் தொழுதான்.
1 யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க, எசாயூ நானூறு ஆடவரோடு வருவதைக் கண்டான். உடனே லீயானுடைய பிள்ளைகளையும், இராக்கேலுடைய பிள்ளைகளையும், இரண்டு வேலைக்காரிகளுடைய பிள்ளைகளையும் வெவ்வேறாகப் பிரித்து வைத்து, .::. 2 முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லீயாளையும் அவளுடைய பிள்ளைகளையும், இறுதியில் இராக்கேலையும் சூசையையும் நிறுத்தி, .::. 3 தான் அவர்களுக்கு முன் நடந்து சென்று தமையனை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரை மட்டும் குனிந்து அவனை வணங்கினான். .::. 4 அதைக் கண்டு எசாயூ தம்பிக்கு எதிர் கொண்டு ஓடி, அவனை அரவணைத்து, அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு அழுதான். .::. 5 பின் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு: இவர்கள் யார், உன்னுடையவர்களா என்று கேட்க, அவன்: கடவுள் அடியேனுக்குத் தந்தருளின பிள்ளைகள் என்று பதில் சொன்னான். .::. 6 அந்நேரத்தில் வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி வந்து வணங்கினர். .::. 7 லீயாளும் அவளுடைய பிள்ளைகளும் அணுகி, அப்படியே தெண்டனிட்டு வணங்கினர். பின் கடைசியாக சூசையும் இராக்கேலும் கிட்ட வந்து வணங்கினர். .::. 8 அப்போது எசாயூ யாக்கோபை நோக்கி: எனக்கு எதிர்கொண்டு வந்த அந்த மந்தைகள் என்ன என, யாக்கோபு: என் தலைவன் உம் கண்களில் அடியேனுக்குத் தயவு கிடைப்பதற்காகத் தான் என்று பதில் சொன்னான். .::. 9 அவன்: தம்பி, எனக்கு வேண்டிய பொருள் உண்டு. உன்னுடையது உனக்கிருக்கட்டும் என, யாக்கோபு: .::. 10 அப்படிச் (சொல்ல) வேண்டாமென்று (உம்மை) மன்றாடுகிறேன். ஆனால், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததாயின், இச் சொற்பமான காணிக்கையை என் கையினின்று ஏற்றுக் கொள்வீர். ஏனென்றால், நான் உம்மைக் கண்டது கடவுளைக் கண்டது போலாயிற்று. .::. 11 நீர் எனக்குத் தயவு செய்து, எல்லா நன்மைகளுக்கும் காரணராகிய கடவுள் எனக்கு அருளி உமக்கு நான் கொண்டு வந்த ஆசீரை நீர் ஏற்றுக் கொள்வீர் (என்றான்). அவன், தன் தம்பி இவ்வாறு வற்புறுத்திக் கேட்டமையால், (அவற்றைக்) கட்டாயமாய் ஏற்றுக் கொண்டு: நாம் சேர்ந்து போகலாம், வா; .::. 12 நானும் உனக்கு வழித்துணையாய் இருப்பேன் என்றான். அதற்கு யாக்கோபு: .::. 13 தலைவ, சிறு குழந்தைகளும், சினை ஆடுகளும் பசுக்களும் என்னுடன் இருப்பதை நீர் அறிவீர். அவற்றை நான் அதிகமாய் வருத்தி ஓட்டுவேனாயின், மந்தையெல்லாம் ஒரே நாளில் மாய்ந்துபோமன்றோ? .::. 14 நீர் அடியேனுக்கு முன்னே செல்வீர். நானோ, பிள்ளைகளின் நடைக்குத் தக்காற் போல், செயீருக்கு நீர் (வந்து) சேருமளவும் மெல்ல மெல்ல உம் காலடிகளைப் பார்த்து நடந்து வருகிறேன் என்றான். .::. 15 அதற்கு எசாயூ: என்னுடனிருக்கிற ஆடவர்களில் சிலரேனும் உனக்கு வழித்துணையாக இருக்கட்டும் என்று மன்றாட அவன்: தேவையில்லை; உமது முன்னிலையில் எனக்குத் தயவு கிடைத்தாலே போதும் என்றான். .::. 16 ஆகையால், எசாயூ அன்று தானே புறப்பட்டு, தான் வந்த வழியே செயீருக்குத் திரும்பினான். .::. 17 யாக்கோபும் சொக்கோட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கே தனக்கென்று ஒரு வீடு கட்டினான்; தன் மந்தைகளுக்காகக் கூடாரங்களையும் அடித்தான். இதனால் அந்த இடத்திற்குச் சொக்கோட் அதாவது கூடாரம் என்று பெயரிட்டான். .::. 18 அவன் சீரிய மெசொப்பொத்தாமியாவிலிருந்து திரும்பின பின், கானான் நாட்டைச் சேர்ந்த சிக்கிமரின் நகரமாகிய சாலேமை அடைந்து அதன் அருகில் வாழ்ந்தான். .::. 19 அப்பொழுது, தான் கூடாரங்களை அடித்திருந்த நிலத்தின் ஒரு பாகத்தைச் சிக்கேமின் தந்தையாகிய ஏமோர் புதல்வர் கையிலே நூறு ஆட்டுக் குட்டிகளை விலைக்குக் கொடுத்து (வாங்கிக்) கொண்டான். .::. 20 பின் அங்கே அவன் ஒரு பீடத்தைக் கட்டி, அதன் மேல் இஸ்ராயேலின் எல்லாம் வல்ல கடவுளைத் தொழுதான்.
  • ஆதியாகமம் அதிகாரம் 1  
  • ஆதியாகமம் அதிகாரம் 2  
  • ஆதியாகமம் அதிகாரம் 3  
  • ஆதியாகமம் அதிகாரம் 4  
  • ஆதியாகமம் அதிகாரம் 5  
  • ஆதியாகமம் அதிகாரம் 6  
  • ஆதியாகமம் அதிகாரம் 7  
  • ஆதியாகமம் அதிகாரம் 8  
  • ஆதியாகமம் அதிகாரம் 9  
  • ஆதியாகமம் அதிகாரம் 10  
  • ஆதியாகமம் அதிகாரம் 11  
  • ஆதியாகமம் அதிகாரம் 12  
  • ஆதியாகமம் அதிகாரம் 13  
  • ஆதியாகமம் அதிகாரம் 14  
  • ஆதியாகமம் அதிகாரம் 15  
  • ஆதியாகமம் அதிகாரம் 16  
  • ஆதியாகமம் அதிகாரம் 17  
  • ஆதியாகமம் அதிகாரம் 18  
  • ஆதியாகமம் அதிகாரம் 19  
  • ஆதியாகமம் அதிகாரம் 20  
  • ஆதியாகமம் அதிகாரம் 21  
  • ஆதியாகமம் அதிகாரம் 22  
  • ஆதியாகமம் அதிகாரம் 23  
  • ஆதியாகமம் அதிகாரம் 24  
  • ஆதியாகமம் அதிகாரம் 25  
  • ஆதியாகமம் அதிகாரம் 26  
  • ஆதியாகமம் அதிகாரம் 27  
  • ஆதியாகமம் அதிகாரம் 28  
  • ஆதியாகமம் அதிகாரம் 29  
  • ஆதியாகமம் அதிகாரம் 30  
  • ஆதியாகமம் அதிகாரம் 31  
  • ஆதியாகமம் அதிகாரம் 32  
  • ஆதியாகமம் அதிகாரம் 33  
  • ஆதியாகமம் அதிகாரம் 34  
  • ஆதியாகமம் அதிகாரம் 35  
  • ஆதியாகமம் அதிகாரம் 36  
  • ஆதியாகமம் அதிகாரம் 37  
  • ஆதியாகமம் அதிகாரம் 38  
  • ஆதியாகமம் அதிகாரம் 39  
  • ஆதியாகமம் அதிகாரம் 40  
  • ஆதியாகமம் அதிகாரம் 41  
  • ஆதியாகமம் அதிகாரம் 42  
  • ஆதியாகமம் அதிகாரம் 43  
  • ஆதியாகமம் அதிகாரம் 44  
  • ஆதியாகமம் அதிகாரம் 45  
  • ஆதியாகமம் அதிகாரம் 46  
  • ஆதியாகமம் அதிகாரம் 47  
  • ஆதியாகமம் அதிகாரம் 48  
  • ஆதியாகமம் அதிகாரம் 49  
  • ஆதியாகமம் அதிகாரம் 50  
×

Alert

×

Tamil Letters Keypad References