தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எசேக்கியேல்

எசேக்கியேல் அதிகாரம் 25

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 2 மனிதா, அம்மோனியருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி இறைவாக்குக் கூறு: 3 அவர்களுக்குச் சொல்: அம்மோன் மக்களே, ஆண்டவராகிய இறைவன் சொல்வதைக் கேளுங்கள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது பரிசுத்த இடம் பங்கப்படுத்தப்பட்ட போதும், இஸ்ராயேல் நாடு பாழாக்கப்பட்ட போதும், யூதா மக்கள் சிறைப்பட்ட போதும், நீங்கள், 'ஆம், அது சரியே!' என்று சொல்லி அக்களித்தீர்கள் . 4 ஆகையால் உங்களைக் கீழ்த்திசையாரின் கையில் ஒப்படைப்போம்; அவர்கள் உங்கள் நடுவில் தங்கள் பாளையங்களை அமைத்துக் கூடாரங்களை அடிப்பார்கள்; உங்கள் கனிகளை உண்டு, பாலைப் பருகுவார்கள். 5 இராபா நகரை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனியரின் நகரங்களை மந்தைகளை மடக்கும் கிடைகளாகவும் ஆக்குவோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள். 6 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் கால்தட்டி மனப்பூர்வமாய் மகிழ்ச்சியடைந்தீர்களே! 7 ஆகையால் நமது கரத்தை உங்கள் மீது நீட்டிப் புறவினத்தார்க்கு உங்களைக் கொள்ளைப் பொருளாகக் கையளிப்போம்; உங்களை உலகத்தில் இல்லாதபடி கொன்று பூண்டோடு அழிப்போம்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள். 8 "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மோவாபும் செயீரும், 'இதோ யூதா வீட்டாரும் மற்ற நாட்டாரைப் போன்றவர்கள் தான்' என்று சொல்லியபடியால், 9 மோவாப் நாட்டின் மலைப் பகுதியைத் திறப்போம்; அதன் மகிமையாயுள்ள எல்லைப் புறத்து பட்டணங்களாகிய பேத்தியேசிமோத், பேயேல்மியோன், காரியாத்தாயீம் ஆகியவற்றையும் அழிப்போம். 10 அம்மோனியரைச் செய்தது போலவே, மோவாப் நாட்டினரையும் கீழ்த்திசையார் கைகளில் உரிமையாக ஒப்படைப்போம்; அவர்களுடைய பெயர் மக்கள் நடுவிலிருந்து அற்றுப் போகும். 11 மோவாப் மீது நீதி செலுத்தும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். 12 "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதுமேயர் யூதா வீட்டாரைப் பழி வாங்கக் கருதி அவர்கள் மேல் தங்கள் பகையைத் தீர்த்துக் கொண்ட பெரும் பாதகத்தைக் குறித்து, 13 ஆண்டவராகிய இறைவன் தீர்ப்புக் கூறிச் சொல்லுகிறார்: இதோ இதுமேயா நாட்டுக்கு எதிராக நமது கரத்தை நீட்டுவோம்; அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழித்துக் காடாக்குவோம்; வடக்கில் உள்ள தேமான் முதல் தேதான் வரையுள்ள எல்லா மக்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர். 14 நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கெண்டே இதுமேயரைப் பழிவாங்கி அழிப்போம்; அவர்கள் இதுமேயாவில் நமது கோபத்தின்படியும் ஆத்திரத்தின்படியும் செய்து, இதுமேயரைத் தண்டிப்பார்கள்; அப்போது நாம் பழிதீர்ப்பதை இதுமேயா நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். 15 "ஆண்டவராகிய இறைவன் மீண்டும் கூறுகிறார்: பிலிஸ்தியர் தங்கள் பழைய பகைமையை மனத்தில் கொண்டு இஸ்ராயேலரை அழிக்கத்தேடி தங்களால் இயன்றவாறெல்லாம் பழிவாங்கினபடியால், 16 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அவர்கள் மீது நமது கரத்தை நீட்டி, கெரெதைத்தியர்களைக் கொன்று, கடற்கரை ஊர்களில் உள்ளவர்களையும் அழிப்போம்; 17 கடுமையான தண்டனைகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆத்திரத்தோடு அவர்களைப் பழிவாங்கி நீதிசெலுத்துவோம்; அவ்வாறு அவர்களைப் பழிவாங்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். "
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 2. மனிதா, அம்மோனியருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி இறைவாக்குக் கூறு: 3. அவர்களுக்குச் சொல்: அம்மோன் மக்களே, ஆண்டவராகிய இறைவன் சொல்வதைக் கேளுங்கள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது பரிசுத்த இடம் பங்கப்படுத்தப்பட்ட போதும், இஸ்ராயேல் நாடு பாழாக்கப்பட்ட போதும், யூதா மக்கள் சிறைப்பட்ட போதும், நீங்கள், 'ஆம், அது சரியே!' என்று சொல்லி அக்களித்தீர்கள் . 4. ஆகையால் உங்களைக் கீழ்த்திசையாரின் கையில் ஒப்படைப்போம்; அவர்கள் உங்கள் நடுவில் தங்கள் பாளையங்களை அமைத்துக் கூடாரங்களை அடிப்பார்கள்; உங்கள் கனிகளை உண்டு, பாலைப் பருகுவார்கள். 5. இராபா நகரை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனியரின் நகரங்களை மந்தைகளை மடக்கும் கிடைகளாகவும் ஆக்குவோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள். 6. ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் கால்தட்டி மனப்பூர்வமாய் மகிழ்ச்சியடைந்தீர்களே! 7. ஆகையால் நமது கரத்தை உங்கள் மீது நீட்டிப் புறவினத்தார்க்கு உங்களைக் கொள்ளைப் பொருளாகக் கையளிப்போம்; உங்களை உலகத்தில் இல்லாதபடி கொன்று பூண்டோடு அழிப்போம்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள். 8. "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மோவாபும் செயீரும், 'இதோ யூதா வீட்டாரும் மற்ற நாட்டாரைப் போன்றவர்கள் தான்' என்று சொல்லியபடியால், 9. மோவாப் நாட்டின் மலைப் பகுதியைத் திறப்போம்; அதன் மகிமையாயுள்ள எல்லைப் புறத்து பட்டணங்களாகிய பேத்தியேசிமோத், பேயேல்மியோன், காரியாத்தாயீம் ஆகியவற்றையும் அழிப்போம். 10. அம்மோனியரைச் செய்தது போலவே, மோவாப் நாட்டினரையும் கீழ்த்திசையார் கைகளில் உரிமையாக ஒப்படைப்போம்; அவர்களுடைய பெயர் மக்கள் நடுவிலிருந்து அற்றுப் போகும். 11. மோவாப் மீது நீதி செலுத்தும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். 12. "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதுமேயர் யூதா வீட்டாரைப் பழி வாங்கக் கருதி அவர்கள் மேல் தங்கள் பகையைத் தீர்த்துக் கொண்ட பெரும் பாதகத்தைக் குறித்து, 13. ஆண்டவராகிய இறைவன் தீர்ப்புக் கூறிச் சொல்லுகிறார்: இதோ இதுமேயா நாட்டுக்கு எதிராக நமது கரத்தை நீட்டுவோம்; அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழித்துக் காடாக்குவோம்; வடக்கில் உள்ள தேமான் முதல் தேதான் வரையுள்ள எல்லா மக்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர். 14. நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கெண்டே இதுமேயரைப் பழிவாங்கி அழிப்போம்; அவர்கள் இதுமேயாவில் நமது கோபத்தின்படியும் ஆத்திரத்தின்படியும் செய்து, இதுமேயரைத் தண்டிப்பார்கள்; அப்போது நாம் பழிதீர்ப்பதை இதுமேயா நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். 15. "ஆண்டவராகிய இறைவன் மீண்டும் கூறுகிறார்: பிலிஸ்தியர் தங்கள் பழைய பகைமையை மனத்தில் கொண்டு இஸ்ராயேலரை அழிக்கத்தேடி தங்களால் இயன்றவாறெல்லாம் பழிவாங்கினபடியால், 16. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அவர்கள் மீது நமது கரத்தை நீட்டி, கெரெதைத்தியர்களைக் கொன்று, கடற்கரை ஊர்களில் உள்ளவர்களையும் அழிப்போம்; 17. கடுமையான தண்டனைகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆத்திரத்தோடு அவர்களைப் பழிவாங்கி நீதிசெலுத்துவோம்; அவ்வாறு அவர்களைப் பழிவாங்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். "
  • எசேக்கியேல் அதிகாரம் 1  
  • எசேக்கியேல் அதிகாரம் 2  
  • எசேக்கியேல் அதிகாரம் 3  
  • எசேக்கியேல் அதிகாரம் 4  
  • எசேக்கியேல் அதிகாரம் 5  
  • எசேக்கியேல் அதிகாரம் 6  
  • எசேக்கியேல் அதிகாரம் 7  
  • எசேக்கியேல் அதிகாரம் 8  
  • எசேக்கியேல் அதிகாரம் 9  
  • எசேக்கியேல் அதிகாரம் 10  
  • எசேக்கியேல் அதிகாரம் 11  
  • எசேக்கியேல் அதிகாரம் 12  
  • எசேக்கியேல் அதிகாரம் 13  
  • எசேக்கியேல் அதிகாரம் 14  
  • எசேக்கியேல் அதிகாரம் 15  
  • எசேக்கியேல் அதிகாரம் 16  
  • எசேக்கியேல் அதிகாரம் 17  
  • எசேக்கியேல் அதிகாரம் 18  
  • எசேக்கியேல் அதிகாரம் 19  
  • எசேக்கியேல் அதிகாரம் 20  
  • எசேக்கியேல் அதிகாரம் 21  
  • எசேக்கியேல் அதிகாரம் 22  
  • எசேக்கியேல் அதிகாரம் 23  
  • எசேக்கியேல் அதிகாரம் 24  
  • எசேக்கியேல் அதிகாரம் 25  
  • எசேக்கியேல் அதிகாரம் 26  
  • எசேக்கியேல் அதிகாரம் 27  
  • எசேக்கியேல் அதிகாரம் 28  
  • எசேக்கியேல் அதிகாரம் 29  
  • எசேக்கியேல் அதிகாரம் 30  
  • எசேக்கியேல் அதிகாரம் 31  
  • எசேக்கியேல் அதிகாரம் 32  
  • எசேக்கியேல் அதிகாரம் 33  
  • எசேக்கியேல் அதிகாரம் 34  
  • எசேக்கியேல் அதிகாரம் 35  
  • எசேக்கியேல் அதிகாரம் 36  
  • எசேக்கியேல் அதிகாரம் 37  
  • எசேக்கியேல் அதிகாரம் 38  
  • எசேக்கியேல் அதிகாரம் 39  
  • எசேக்கியேல் அதிகாரம் 40  
  • எசேக்கியேல் அதிகாரம் 41  
  • எசேக்கியேல் அதிகாரம் 42  
  • எசேக்கியேல் அதிகாரம் 43  
  • எசேக்கியேல் அதிகாரம் 44  
  • எசேக்கியேல் அதிகாரம் 45  
  • எசேக்கியேல் அதிகாரம் 46  
  • எசேக்கியேல் அதிகாரம் 47  
  • எசேக்கியேல் அதிகாரம் 48  
×

Alert

×

Tamil Letters Keypad References