தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உபாகமம்

உபாகமம் அதிகாரம் 31

1 பின்னும் மோயீசன் போய், இஸ்ராயேலர் எல்லாருக்கும் பின்வருவனவற்றை யெல்லாம் சொன்னார். 2 அவர் அவர்களை நோக்கி: இன்று எனக்கு வயது நூற்றிருபது. இனி என்னால் போகவர இயலாது. சிறப்பாக, இந்த யோர்தானை நீ கடந்து போவதில்லை என்று ஆண்டவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். 3 உன் கடவுளாகிய ஆண்டவரே உன் முன்பாக நடந்துபோவார். அவரே உனக்கு முன்நின்று அந்த இனத்தவரையெல்லாம் அழித்கொழிக்க, நீ அவர்கள் நாட்டை உரிமையாக்கிக்கொள்வாய். ஆண்டவர் சொன்னபடியே, இங்கே இருக்கிற யோசுவா உன் முன்பாக நடப்பான். 4 ஆண்டவரோ ஏற்கெனவே அமோறையரின் அரசர்களான செகோன், ஓக் என்பவர்களுக்கும் அவர்களின் நாட்டிற்கும் தாம் செய்ததுபோல் இவர்களுக்கும் செய்து, இவர்களையும் அழிப்பார். 5 ஆகையால், ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளித்த பின், நான் உங்களுக்கு விதித்த கட்டளையின்படியே நீங்கள் அவர்களுக்குச் செய்யக்கடவீர்கள். 6 துணிவு கொண்டு மனத்தைரியமாய் இருங்கள். அவர்களைப் பார்த்து அஞ்சவும் திகைக்கவும் வேண்டாம். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை நடத்துபவர். அவர் உன்னை விட்டு நீங்கப்போவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை என்றார். 7 பிறகு மோயீசன் யோசுவாவை அழைத்து, இஸ்ராயேலர் எல்லாரும் பார்க்க அவனை நோக்கி: நீ வலிமை கொண்டு மனத்திடனாய் இரு. இவர்களுக்குக் கொடுப்போம் என்று ஆண்டவர் இவர்களுடைய மூதாதையருக்கு ஆணையிட்ட நாட்டிற்கு, நீ இந்த மக்களை அழைத்துக்கொண்டு போய்த் திருவுளச் சீட்டுப்போட்டு அதை அவர்களுக்குள்ளே பங்கிடுவாய். 8 உங்களை நடத்துபவராகிய ஆண்டவர் உன்னோடு இருப்பாரல்லது, அவர் உன்னை விட்டு நீங்கவும் உன்னைக் கைநழுவ விடவும் மாட்டாராகையால், நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றார். 9 பிறகு மோயீசன் இந்த நீதிச் சட்டத்தை எழுதி, அதை ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டகத்தைச் சுமக்கிற லேவி புதல்வரான குருக்களுக்கும் இஸ்ராயேலரிலுள்ள பெரியோர்கள் எல்லாருக்கும் ஒப்புவித்து, 10 அவர்களை நோக்கி: ஒவ்வொரு ஏழாம் ஆண்டிற்குப் பின்வரும் மன்னிப்பு ஆண்டில் கூடாரத் திருவிழாவிலே, 11 உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்தில் இஸ்ராயேலர் எல்லாரும் கூடி ஆண்டவருடைய முன்னிலைக்கு வரும்போது, நீ அவர்கள் கேட்க, அவர்களுக்கு முன்பாக இந்த நீதிச் சட்டத்தை வாசிக்கக்கடவாய். 12 ஆடவர்களும் பெண்களும் பிள்ளைகளும் உன் வாயில்களில் இருக்கும் அந்நியர்களுமாகிய மக்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடிக் கேட்டுக் கற்றுக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, இந்த நீதிச் சட்ட வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு அவற்றின்படி நடக்கத்தக்கதாகவும், 13 அவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக் கொள்ளபோகிற நாட்டில் வாழ்ந்திருக்கும் நாளெல்லாம் அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சத்தக்கதாகவும் (மக்களைக் கூட்டி அதை வாசிக்கக் கடவாய் என்றார்.) 14 பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ உன் மரணநாள் அடுத்துள்ளது. நாம் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி அவனை அழைத்துக் கொண்டு நீங்கள் இருவரும் ஆசாரக் கூடாரத்திலே வந்து நில்லுங்கள் என்றார். அப்படியே மோயீசனும் யோசுவாவும் போய் ஆசாரக் கூடாரத்தில் நின்றார்கள். 15 ஆண்டவர் கூடார நுழைவிடத்தில் தங்கிய மேகத்தூணில் தரிசனமானார். 16 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ நீ உன் மூதாதையரோடு (மரணத்) துயில்கொள்ளப் போகிறாய். இந்த மக்கள் போய்த் தங்கள் குடியேறும்படி புகவிருக்கிற நாட்டில் அவர்கள் அந்நிய தேவர்களைக் கள்ள வழியிலே பின்பற்றி, அங்கே அவர்கள் நம்மை விட்டுவிட்டு அவர்களோடு நாம் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவார்கள். 17 ஆகையால், அந்நாளில் நமது கோபம் அவர்கள்மேல் மூண்டு, நாம் அவர்களைக் கைவிட்டு நம்முடைய முகத்தை அவர்களுக்கு மறைப்போமாதலால், அவர்கள் அழிந்து போவார்கள். பல தீங்குகளும் இன்னல்களும் அவர்களைத் தொடரும். அந்நாளிலே அவர்கள்: கடவுள் எங்களோடு இராததனாலன்றோ இத்தனைத் தீங்குகள் எங்களைப் பீடித்தன என்பார்கள். 18 அவர்கள் அந்நிய தேவர்களைப் பின்பற்றிக் கட்டிக்கொண்ட எல்லா அக்கிரமங்களின் பொருட்டு, நாம் அந்நாளிலே நமது முகத்தை ஒளித்து மறைப்போம். 19 இப்பொழுது நீங்கள் பின்வரும் சங்கீதத்தை எழுதிக்கொண்டு, அதை இஸ்ராயேல் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். அவர்கள் அதை மனப்பாடமாய்க் கற்றுக்கொண்டு தங்கள் வாயால் பாடட்டும், இந்தச் சங்கீதமே இஸ்ராயேல் மக்களுக்குள் நமக்குச் சாட்சியாமாய் இருக்கக்கடவது. 20 உள்ளபடி அவர்கள் மூதாதையருக்கு நாம் ஆணையிட்டுக் கொடுத்த பாலும் தேனும் பொழியும் நாட்டிலே அவர்களைப் புகச் செய்த பிற்பாடு, அவர்கள் உண்டு குடித்து நிறைவு கொண்டு கொழுத்துப் போயிருக்கும்போது, அவர்கள் அந்நியதேவர்களிடமாய்த் திரும்பி அவர்களைத் தொழுது, நம்மை நிந்தித்து, நமது உடன்படிக்கையை வீணாக்குவார்கள். 21 ஆதலால், பல தீமைகளும் இன்னல்களும் அவர்களைத் தொடர்ந்து வதைத்த பிற்பாடு, அவர்களுடைய சந்ததியாரின் வாயில் மறந்து போகாதிருக்கும் இந்தச் சங்கீதமே அவர்களுக்குச் சாட்சி மொழியாய் இருக்கும். ஏனென்றால், நாம் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் அவர்களை உட்படுத்துவதற்குமுன், இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கிற எண்ணங்கள் இன்னதென்றும், அவர்கள் செய்யப் போகிறது இன்னதென்றும் நமக்கு நன்றாய்த் தெரியும் என்றருளினார். 22 ஆகையால் மோயீசன் சங்கீதத்தை எழுதி இஸ்ராயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார். 23 பிறகு ஆண்டவர் நூனின் புதல்வனாகிய யோசுவாவை நோக்கி: நீ வீரம் கொண்டு மனத்துணிவுடன் இரு. ஏனென்றால் நீதான் இஸ்ராயேல் மக்களுக்கு நாம் கொடுப்போம் என்று சொல்லிய நாட்டிற்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவாய்; நாம் உன்னுடன் இருப்போம் என்றார். 24 மோயீசனோ இந்தத் திருச்சட்டத்தின் வாக்கியங்களை ஒரு நூலில் எழுதி முடித்தபின்பு, 25 ஆண்டவருடைய உடன்படிக்கையின் பெட்டகத்தைச் சுமக்கிற லேவியர்களை நோக்கி: 26 நீங்கள் இந்த நீதி நூலை வாங்கிக் கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய பெட்டகத்தின் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அங்கே உனக்கு எதிரான சாட்சியாய் இருக்கும். 27 ஏனென்றால், நான் உன் பிடிவாத குணத்தையும் உன் வணங்காக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன். இன்று நான் உயிரோடிருந்து உங்களோடு அலைந்து திரியும்போது நீங்கள் ஆண்டவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தீர்களே; நான் இறந்த பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம் செய்வீர்கள்! 28 உங்கள் கோத்திரங்களின்படியே எல்லாப் பெரியோர்களையும் அறிஞர்களையும் கூட்டிவாருங்கள், நான் அவர்கள் கேட்க இவ்வாக்கியங்களை எடுத்துரைத்து, அவர்களுக்கு விரோதமாய் விண்ணையும் மண்ணையும் சாட்சியாய் வைப்பேன். 29 ஏனென்றால், என் இறப்பிற்குப் பிற்பாடு நீங்கள் விரைவில் அக்கிரமமாய் நடப்பீர்களென்றும், நான் உங்களுக்குக் கற்பித்துவந்துள்ள நெறியை விட்டு விலகுவீர்களென்றும், நீங்கள் ஆண்டவருடைய முன்னிலையில் பொல்லாததைச் செய்து உங்கள் கைச் செயலினாலே ஆண்டவருக்குக் கோபம் வருவிக்கும்போது, கடைசி நாட்களில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடுமென்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று சொன்னார். 30 ஆகையால், இஸ்ராயேல் சபையார் எல்லாரும் கேட்க மோயீசன் இந்தச் சங்கீதத்தின் வாக்கியங்களை முடிவு வரையிலும் சொல்லத் தொடங்கினார்.
1 பின்னும் மோயீசன் போய், இஸ்ராயேலர் எல்லாருக்கும் பின்வருவனவற்றை யெல்லாம் சொன்னார். .::. 2 அவர் அவர்களை நோக்கி: இன்று எனக்கு வயது நூற்றிருபது. இனி என்னால் போகவர இயலாது. சிறப்பாக, இந்த யோர்தானை நீ கடந்து போவதில்லை என்று ஆண்டவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். .::. 3 உன் கடவுளாகிய ஆண்டவரே உன் முன்பாக நடந்துபோவார். அவரே உனக்கு முன்நின்று அந்த இனத்தவரையெல்லாம் அழித்கொழிக்க, நீ அவர்கள் நாட்டை உரிமையாக்கிக்கொள்வாய். ஆண்டவர் சொன்னபடியே, இங்கே இருக்கிற யோசுவா உன் முன்பாக நடப்பான். .::. 4 ஆண்டவரோ ஏற்கெனவே அமோறையரின் அரசர்களான செகோன், ஓக் என்பவர்களுக்கும் அவர்களின் நாட்டிற்கும் தாம் செய்ததுபோல் இவர்களுக்கும் செய்து, இவர்களையும் அழிப்பார். .::. 5 ஆகையால், ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளித்த பின், நான் உங்களுக்கு விதித்த கட்டளையின்படியே நீங்கள் அவர்களுக்குச் செய்யக்கடவீர்கள். .::. 6 துணிவு கொண்டு மனத்தைரியமாய் இருங்கள். அவர்களைப் பார்த்து அஞ்சவும் திகைக்கவும் வேண்டாம். ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை நடத்துபவர். அவர் உன்னை விட்டு நீங்கப்போவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை என்றார். .::. 7 பிறகு மோயீசன் யோசுவாவை அழைத்து, இஸ்ராயேலர் எல்லாரும் பார்க்க அவனை நோக்கி: நீ வலிமை கொண்டு மனத்திடனாய் இரு. இவர்களுக்குக் கொடுப்போம் என்று ஆண்டவர் இவர்களுடைய மூதாதையருக்கு ஆணையிட்ட நாட்டிற்கு, நீ இந்த மக்களை அழைத்துக்கொண்டு போய்த் திருவுளச் சீட்டுப்போட்டு அதை அவர்களுக்குள்ளே பங்கிடுவாய். .::. 8 உங்களை நடத்துபவராகிய ஆண்டவர் உன்னோடு இருப்பாரல்லது, அவர் உன்னை விட்டு நீங்கவும் உன்னைக் கைநழுவ விடவும் மாட்டாராகையால், நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றார். .::. 9 பிறகு மோயீசன் இந்த நீதிச் சட்டத்தை எழுதி, அதை ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டகத்தைச் சுமக்கிற லேவி புதல்வரான குருக்களுக்கும் இஸ்ராயேலரிலுள்ள பெரியோர்கள் எல்லாருக்கும் ஒப்புவித்து, .::. 10 அவர்களை நோக்கி: ஒவ்வொரு ஏழாம் ஆண்டிற்குப் பின்வரும் மன்னிப்பு ஆண்டில் கூடாரத் திருவிழாவிலே, .::. 11 உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்டிருக்கும் இடத்தில் இஸ்ராயேலர் எல்லாரும் கூடி ஆண்டவருடைய முன்னிலைக்கு வரும்போது, நீ அவர்கள் கேட்க, அவர்களுக்கு முன்பாக இந்த நீதிச் சட்டத்தை வாசிக்கக்கடவாய். .::. 12 ஆடவர்களும் பெண்களும் பிள்ளைகளும் உன் வாயில்களில் இருக்கும் அந்நியர்களுமாகிய மக்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடிக் கேட்டுக் கற்றுக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, இந்த நீதிச் சட்ட வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு அவற்றின்படி நடக்கத்தக்கதாகவும், .::. 13 அவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக் கொள்ளபோகிற நாட்டில் வாழ்ந்திருக்கும் நாளெல்லாம் அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சத்தக்கதாகவும் (மக்களைக் கூட்டி அதை வாசிக்கக் கடவாய் என்றார்.) .::. 14 பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ உன் மரணநாள் அடுத்துள்ளது. நாம் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி அவனை அழைத்துக் கொண்டு நீங்கள் இருவரும் ஆசாரக் கூடாரத்திலே வந்து நில்லுங்கள் என்றார். அப்படியே மோயீசனும் யோசுவாவும் போய் ஆசாரக் கூடாரத்தில் நின்றார்கள். .::. 15 ஆண்டவர் கூடார நுழைவிடத்தில் தங்கிய மேகத்தூணில் தரிசனமானார். .::. 16 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ நீ உன் மூதாதையரோடு (மரணத்) துயில்கொள்ளப் போகிறாய். இந்த மக்கள் போய்த் தங்கள் குடியேறும்படி புகவிருக்கிற நாட்டில் அவர்கள் அந்நிய தேவர்களைக் கள்ள வழியிலே பின்பற்றி, அங்கே அவர்கள் நம்மை விட்டுவிட்டு அவர்களோடு நாம் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவார்கள். .::. 17 ஆகையால், அந்நாளில் நமது கோபம் அவர்கள்மேல் மூண்டு, நாம் அவர்களைக் கைவிட்டு நம்முடைய முகத்தை அவர்களுக்கு மறைப்போமாதலால், அவர்கள் அழிந்து போவார்கள். பல தீங்குகளும் இன்னல்களும் அவர்களைத் தொடரும். அந்நாளிலே அவர்கள்: கடவுள் எங்களோடு இராததனாலன்றோ இத்தனைத் தீங்குகள் எங்களைப் பீடித்தன என்பார்கள். .::. 18 அவர்கள் அந்நிய தேவர்களைப் பின்பற்றிக் கட்டிக்கொண்ட எல்லா அக்கிரமங்களின் பொருட்டு, நாம் அந்நாளிலே நமது முகத்தை ஒளித்து மறைப்போம். .::. 19 இப்பொழுது நீங்கள் பின்வரும் சங்கீதத்தை எழுதிக்கொண்டு, அதை இஸ்ராயேல் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். அவர்கள் அதை மனப்பாடமாய்க் கற்றுக்கொண்டு தங்கள் வாயால் பாடட்டும், இந்தச் சங்கீதமே இஸ்ராயேல் மக்களுக்குள் நமக்குச் சாட்சியாமாய் இருக்கக்கடவது. .::. 20 உள்ளபடி அவர்கள் மூதாதையருக்கு நாம் ஆணையிட்டுக் கொடுத்த பாலும் தேனும் பொழியும் நாட்டிலே அவர்களைப் புகச் செய்த பிற்பாடு, அவர்கள் உண்டு குடித்து நிறைவு கொண்டு கொழுத்துப் போயிருக்கும்போது, அவர்கள் அந்நியதேவர்களிடமாய்த் திரும்பி அவர்களைத் தொழுது, நம்மை நிந்தித்து, நமது உடன்படிக்கையை வீணாக்குவார்கள். .::. 21 ஆதலால், பல தீமைகளும் இன்னல்களும் அவர்களைத் தொடர்ந்து வதைத்த பிற்பாடு, அவர்களுடைய சந்ததியாரின் வாயில் மறந்து போகாதிருக்கும் இந்தச் சங்கீதமே அவர்களுக்குச் சாட்சி மொழியாய் இருக்கும். ஏனென்றால், நாம் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் அவர்களை உட்படுத்துவதற்குமுன், இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கிற எண்ணங்கள் இன்னதென்றும், அவர்கள் செய்யப் போகிறது இன்னதென்றும் நமக்கு நன்றாய்த் தெரியும் என்றருளினார். .::. 22 ஆகையால் மோயீசன் சங்கீதத்தை எழுதி இஸ்ராயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார். .::. 23 பிறகு ஆண்டவர் நூனின் புதல்வனாகிய யோசுவாவை நோக்கி: நீ வீரம் கொண்டு மனத்துணிவுடன் இரு. ஏனென்றால் நீதான் இஸ்ராயேல் மக்களுக்கு நாம் கொடுப்போம் என்று சொல்லிய நாட்டிற்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவாய்; நாம் உன்னுடன் இருப்போம் என்றார். .::. 24 மோயீசனோ இந்தத் திருச்சட்டத்தின் வாக்கியங்களை ஒரு நூலில் எழுதி முடித்தபின்பு, .::. 25 ஆண்டவருடைய உடன்படிக்கையின் பெட்டகத்தைச் சுமக்கிற லேவியர்களை நோக்கி: .::. 26 நீங்கள் இந்த நீதி நூலை வாங்கிக் கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய பெட்டகத்தின் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அங்கே உனக்கு எதிரான சாட்சியாய் இருக்கும். .::. 27 ஏனென்றால், நான் உன் பிடிவாத குணத்தையும் உன் வணங்காக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன். இன்று நான் உயிரோடிருந்து உங்களோடு அலைந்து திரியும்போது நீங்கள் ஆண்டவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தீர்களே; நான் இறந்த பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம் செய்வீர்கள்! .::. 28 உங்கள் கோத்திரங்களின்படியே எல்லாப் பெரியோர்களையும் அறிஞர்களையும் கூட்டிவாருங்கள், நான் அவர்கள் கேட்க இவ்வாக்கியங்களை எடுத்துரைத்து, அவர்களுக்கு விரோதமாய் விண்ணையும் மண்ணையும் சாட்சியாய் வைப்பேன். .::. 29 ஏனென்றால், என் இறப்பிற்குப் பிற்பாடு நீங்கள் விரைவில் அக்கிரமமாய் நடப்பீர்களென்றும், நான் உங்களுக்குக் கற்பித்துவந்துள்ள நெறியை விட்டு விலகுவீர்களென்றும், நீங்கள் ஆண்டவருடைய முன்னிலையில் பொல்லாததைச் செய்து உங்கள் கைச் செயலினாலே ஆண்டவருக்குக் கோபம் வருவிக்கும்போது, கடைசி நாட்களில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடுமென்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று சொன்னார். .::. 30 ஆகையால், இஸ்ராயேல் சபையார் எல்லாரும் கேட்க மோயீசன் இந்தச் சங்கீதத்தின் வாக்கியங்களை முடிவு வரையிலும் சொல்லத் தொடங்கினார்.
  • உபாகமம் அதிகாரம் 1  
  • உபாகமம் அதிகாரம் 2  
  • உபாகமம் அதிகாரம் 3  
  • உபாகமம் அதிகாரம் 4  
  • உபாகமம் அதிகாரம் 5  
  • உபாகமம் அதிகாரம் 6  
  • உபாகமம் அதிகாரம் 7  
  • உபாகமம் அதிகாரம் 8  
  • உபாகமம் அதிகாரம் 9  
  • உபாகமம் அதிகாரம் 10  
  • உபாகமம் அதிகாரம் 11  
  • உபாகமம் அதிகாரம் 12  
  • உபாகமம் அதிகாரம் 13  
  • உபாகமம் அதிகாரம் 14  
  • உபாகமம் அதிகாரம் 15  
  • உபாகமம் அதிகாரம் 16  
  • உபாகமம் அதிகாரம் 17  
  • உபாகமம் அதிகாரம் 18  
  • உபாகமம் அதிகாரம் 19  
  • உபாகமம் அதிகாரம் 20  
  • உபாகமம் அதிகாரம் 21  
  • உபாகமம் அதிகாரம் 22  
  • உபாகமம் அதிகாரம் 23  
  • உபாகமம் அதிகாரம் 24  
  • உபாகமம் அதிகாரம் 25  
  • உபாகமம் அதிகாரம் 26  
  • உபாகமம் அதிகாரம் 27  
  • உபாகமம் அதிகாரம் 28  
  • உபாகமம் அதிகாரம் 29  
  • உபாகமம் அதிகாரம் 30  
  • உபாகமம் அதிகாரம் 31  
  • உபாகமம் அதிகாரம் 32  
  • உபாகமம் அதிகாரம் 33  
  • உபாகமம் அதிகாரம் 34  
×

Alert

×

Tamil Letters Keypad References