தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 கொரிந்தியர்

2 கொரிந்தியர் அதிகாரம் 2

1 மறுபடியும் வந்து உங்களுக்கு வருத்தம் விளைவிக்கக்கூடாது என்று நான் முடிவு செய்துகொண்டேன். 2 நானே உங்களை வருத்தப்படுத்தினால், யார் எனக்கு மகிழ்வூட்ட முடியும்? என்னால் வருத்தத்திற்கு உள்ளான நீங்களா மகிழ்வூட்ட முடியும்? 3 இதைத்தான் நான் ஏற்கெனவே எழுதினேன். நான் வரும் போது எனக்கு மகிழ்ச்சி தரவேண்டிய உங்களாலே எனக்கு வருத்தம் ஏற்படக்கூடாதென்று அப்படி எழுதினேன். எனது மகிழ்ச்சியை உங்கள் அனைவருடைய மகிழ்ச்சியாகவே கொள்வீர்கள் என்று உங்கள்மேல் நம்பிக்கை கொண்டுள்ளேன். 4 மிகுந்த வேதனையோடும், உடைந்த உள்ளத்தோடும், கலங்கிய கண்களோடும் இதை எழுதினேன். இப்படி எழுதியது உங்களுக்கு வருத்தம் தருவதற்கன்று. உங்கள்மேல நான் வைத்திருக்கும் பேரன்பை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்கே. 5 ஒருவன் வருத்தம் வருவித்தான் என்றால், எனக்கு வருவிக்கவில்லை. ஒரளவில் உங்கள் அனைவருக்குமே வருத்தம் வருவித்தான் என்பது மிகையாகாது. 6 உங்களுள் பெரும்பாலோர் அவனுக்கு விதித்த தண்டனையே போதும்; 7 ஆதலால் அவன் மிகுதியான வருத்தத்தில் மூழ்கிவிடாதபடி, நீங்கள் அவனை இப்பொழுது மன்னித்து அவனுக்கு ஊக்கம் அளிப்பதுதான் நல்லது. 8 அவன்மீது அன்பு காட்டி முடிவு செய்யுங்கள்; இதுவே என் வேண்டுகோள். 9 நீங்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கீழ்ப்படிபவர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன். 10 நீங்கள் ஒருவனை மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன்; ஏனெனில், நான் மன்னிக்கவேண்டியது ஏதாவது இருந்தால், அதைக் கிறிஸ்துவின் முன்னிலையில் உங்களுக்காக ஏற்கெனவே மன்னித்துவிட்டேன். 11 இவ்வாறு, சாத்தான் நம்மை வஞ்சிக்க விடமாட்டோம்; அவனுடைய நயவஞ்சகங்களை நாம் அறியாதவர்கள் அல்ல. 12 நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும்படி துரோவா ஊருக்கு வந்தபோது, ஆண்டவருக்குத் தொண்டாற்ற எனக்கு நல்ல வாய்ப்பு இருந்தும், 13 என் தம்பி தீத்துவைக் காணாததால், என் உள்ளம் அமைதியின்றித் தவித்தது; உடனே அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டேன். 14 கிறிஸ்துவுக்குள் வாழும் எங்களை எப்போதும் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்குபெறச் செய்து, தம்மைப்பற்றிய அறிவு, எங்கள் வழியாக நறுமணமென எங்கும் பரவச்செய்யும் கடவுளுக்கு நன்றி. 15 ஆம், நாங்கள் மீட்புப் பெறுவோரிடையிலும், அழிவுறுவோரிடையிலும், கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாய் இருக்கிறோம். 16 சிலருக்கு அது சாவு விளைவிக்கும் நச்சுப் புகையாகும்; வேறு சிலருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகும். இத்தகைய பணிக்கு ஏற்றவன் யார்? 17 கடவுளின் சொல்லை விலைகூறித் திரிபவர் பலரைப்போல் நாங்கள் செய்யாமல், கள்ளமற்ற உள்ளத்தோடு கடவுளால் ஏவப்பட்டு, கிறிஸ்துவுக்குள், கடவுளின் முன்னிலையில் பேசுகிறோம்.
1. மறுபடியும் வந்து உங்களுக்கு வருத்தம் விளைவிக்கக்கூடாது என்று நான் முடிவு செய்துகொண்டேன். 2. நானே உங்களை வருத்தப்படுத்தினால், யார் எனக்கு மகிழ்வூட்ட முடியும்? என்னால் வருத்தத்திற்கு உள்ளான நீங்களா மகிழ்வூட்ட முடியும்? 3. இதைத்தான் நான் ஏற்கெனவே எழுதினேன். நான் வரும் போது எனக்கு மகிழ்ச்சி தரவேண்டிய உங்களாலே எனக்கு வருத்தம் ஏற்படக்கூடாதென்று அப்படி எழுதினேன். எனது மகிழ்ச்சியை உங்கள் அனைவருடைய மகிழ்ச்சியாகவே கொள்வீர்கள் என்று உங்கள்மேல் நம்பிக்கை கொண்டுள்ளேன். 4. மிகுந்த வேதனையோடும், உடைந்த உள்ளத்தோடும், கலங்கிய கண்களோடும் இதை எழுதினேன். இப்படி எழுதியது உங்களுக்கு வருத்தம் தருவதற்கன்று. உங்கள்மேல நான் வைத்திருக்கும் பேரன்பை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்கே. 5. ஒருவன் வருத்தம் வருவித்தான் என்றால், எனக்கு வருவிக்கவில்லை. ஒரளவில் உங்கள் அனைவருக்குமே வருத்தம் வருவித்தான் என்பது மிகையாகாது. 6. உங்களுள் பெரும்பாலோர் அவனுக்கு விதித்த தண்டனையே போதும்; 7. ஆதலால் அவன் மிகுதியான வருத்தத்தில் மூழ்கிவிடாதபடி, நீங்கள் அவனை இப்பொழுது மன்னித்து அவனுக்கு ஊக்கம் அளிப்பதுதான் நல்லது. 8. அவன்மீது அன்பு காட்டி முடிவு செய்யுங்கள்; இதுவே என் வேண்டுகோள். 9. நீங்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கீழ்ப்படிபவர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன். 10. நீங்கள் ஒருவனை மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன்; ஏனெனில், நான் மன்னிக்கவேண்டியது ஏதாவது இருந்தால், அதைக் கிறிஸ்துவின் முன்னிலையில் உங்களுக்காக ஏற்கெனவே மன்னித்துவிட்டேன். 11. இவ்வாறு, சாத்தான் நம்மை வஞ்சிக்க விடமாட்டோம்; அவனுடைய நயவஞ்சகங்களை நாம் அறியாதவர்கள் அல்ல. 12. நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும்படி துரோவா ஊருக்கு வந்தபோது, ஆண்டவருக்குத் தொண்டாற்ற எனக்கு நல்ல வாய்ப்பு இருந்தும், 13. என் தம்பி தீத்துவைக் காணாததால், என் உள்ளம் அமைதியின்றித் தவித்தது; உடனே அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டேன். 14. கிறிஸ்துவுக்குள் வாழும் எங்களை எப்போதும் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்குபெறச் செய்து, தம்மைப்பற்றிய அறிவு, எங்கள் வழியாக நறுமணமென எங்கும் பரவச்செய்யும் கடவுளுக்கு நன்றி. 15. ஆம், நாங்கள் மீட்புப் பெறுவோரிடையிலும், அழிவுறுவோரிடையிலும், கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாய் இருக்கிறோம். 16. சிலருக்கு அது சாவு விளைவிக்கும் நச்சுப் புகையாகும்; வேறு சிலருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகும். இத்தகைய பணிக்கு ஏற்றவன் யார்? 17. கடவுளின் சொல்லை விலைகூறித் திரிபவர் பலரைப்போல் நாங்கள் செய்யாமல், கள்ளமற்ற உள்ளத்தோடு கடவுளால் ஏவப்பட்டு, கிறிஸ்துவுக்குள், கடவுளின் முன்னிலையில் பேசுகிறோம்.
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 1  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 2  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 3  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 4  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 5  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 6  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 7  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 8  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 9  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 10  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 11  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 12  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 13  
×

Alert

×

Tamil Letters Keypad References