தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 கொரிந்தியர்

2 கொரிந்தியர் அதிகாரம் 11

1 என் பேதைமையை நீங்கள் ஒரளவு பொறுத்துக்கொள்வீர்களா? ஆம், சற்றுப் பொறுத்துக்கொள்ளுங்கள். 2 நான் உங்கள் மீதுகொண்டுள்ள அன்பார்வம் கடவுள்கொண்டிருக்கும் அன்பார்வமே. ஏனெனில், கிறிஸ்து என்னும் ஒரே மணவாளற்கு உங்களை மண ஒப்பந்தத்தில் பிணைத்துள்ளேன்; அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியென நிறுத்த வேண்டுமென்பதே என் விருப்பம். 3 ஆனால், ஏவாள், எவ்வாறு பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டாளோ அவ்வாறே நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் இருக்கவேண்டிய ஒருமனப் பற்றுதலை இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன். 4 ஏனெனில், எவனாவது வந்து நாங்கள் அறிவிக்காத வேறொரு இயேசுவை அறிவிக்கும்போது அல்லது நீங்கள் பெற்றிருக்கும் ஆவியானவரைத் தவிர வேறோர் ஆவியைப் பெற்றுக்கொள்ளச் செய்யும்போது அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்திக்கு ஒவ்வாத வேறொரு நற்செய்தியைக் கொணரும்போது, அவனை எளிதில் பொறுத்துக் கொள்ளுகிறீர்களே; 5 ஆயினும் இந்தப் ' பேர்போன ' அப்போஸ்தலர்களைவிட நான் எதிலும் தாழ்ந்தவனல்லேன் என்றே எண்ணுகிறேன். 6 எனக்குப் பேச்சு வன்மை இல்லை, மெய்தான்; ஆயினும் அறிவு இல்லாமற் போகவில்லை. இதை நாங்கள் எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குக் காட்டியிருக்கிறோம். 7 கைம்மாறு கருதாமல் உங்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவித்து, உங்களை உயர்த்துவதற்காக நான் என்னையே தாழ்த்திக்கொண்டேனே, இப்படிச் செய்தது குற்றமா? 8 உங்களிடையே பணிபுரிந்தபோது, என் செலவுக்கு வேண்டியதை மற்றச் சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக இவ்வாறு அவர்களிடமிருந்து பொருளைக் கவர்ந்தேன் . 9 நான் உங்களோடு இருக்கையில் எனக்குக் குறையிருந்தபோதிலும், நான் யாருக்கும் சுமையாய் இருக்கவில்லை; எனக்கிருந்த குறையை மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் நீக்கினார்கள்; எதிலும் உங்களுக்குச் சுமையாய் இராமல் பார்த்துக்கொண்டேன். இனியும் பார்த்துக்கொள்வேன். 10 என்னுள் இருக்கும் கிறிஸ்துவின் உண்மையே சாட்சியாகச் சொல்லுகிறேன்; எனக்குரிய இப்பெருமையை அக்காய நாட்டுப் பகுதிகளிலிருந்து யாரும் எடுக்க முடியாது. 11 நான் இப்படியெல்லாம் செய்வானேன்? உங்கள்மேல் எனக்கு அன்பு இல்லை என்பதாலோ? கடவுளுக்குத் தெரியும் நான் உங்கள்மேல் வைத்துள்ள அன்பு. 12 தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்ளும் அப்போஸ்தலப் பணியில் எங்களுக்கு நிகராய்த் தென்படச் சிலர் வாய்ப்புத் தேடுகிறார்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்து செய்து வருவேன். 13 இத்தைகையோர் போலி அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக நடிக்கிறவர்கள். 14 இதில் ஒரு வியப்புமில்லை; சாத்தான் கூட ஒளியின் தூதனாக நடிக்கிறான். 15 ஆகையால் அவனுடைய பணியாளர் நீதியின் பணியாளராக நடிப்பது பெரிதா? அவர்களுடைய முடிவு அவர்களின் செயல்களுக்கேற்றதாகவே இருக்கும். 16 மறுபடியும் சொல்லுகிறேன்; எவனும் என்னை அறிவிலி என எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள். நானும் அறிவிலியைப் போலச் சற்றுப் பொருமையடித்துக் கொள்ளுகிறேன். 17 நான் இப்பொழுது ஆண்டவரின் ஏவுதலின்படி பேசவில்லை; அறிவிலியைப்போல் துணிவோடு பெருமையடித்துக் கொள்ளப்போகிறேன். 18 உலகச் சிறப்புகளைச் சொல்லிக்காட்டி, பலர் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே பெருமையடித்துக் கொள்கிறேன். 19 அறிவு நிறைந்திருக்கும் நீங்கள் அந்த அறிவிலிகளைத் தாராளமாய்ப் பொறுத்துக் கொள்கிறீர்கள். 20 உங்களை யாராவது அடிமைபோல் நடத்தினால், அல்லது சுரண்டினால், அல்லது ஏமாற்றிப் பிழைத்தால், அல்லது உங்களிடம் இறுமாப்புக் காட்டினால், அல்லது உங்களைக் கன்னத்திலே அறைந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள். 21 இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே; இது எனக்கு வெட்கந்தான். எனினும் அவர்கள் எதிலே பெருமை பாராட்டத் துணிகிறார்களோ, அதிலே நானும் துணியக்கூடும் அறிவிலியைப் போலவே இன்னும் பேசுகிறேன் 22 அவர்கள் எபிரேயரோ? நானும் எபிரேயன்தான். அவர்கள் இஸ்ராயேலரோ? நானும் இஸ்ராயேலன் தான். அவர்கள் ஆபிராகாமின் வழிவந்தவர்களோ? நானும் ஆபிரகாமின் வழிவந்தவன் தான். 23 அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களோ? அறிவிழந்தவனாகவே பேசுகிறேன் நான் அவர்களுக்குமேல் கிறிஸ்துவின் பணியாளன். அவர்களைவிட மிகுதியாய் உழைத்தேன். அவர்களைவிட மிகுதியாய்ச் சிறையில் துன்புற்றேன். அவர்களைவிட மிக்க கொடுமையாகச் சாட்டையால் அடிபட்டேன். 24 பலமுறை மரண வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதரிடமிருந்து ஒன்று குறைய நாற்பது கசையடிகள் வாங்கினேன். 25 மும் முறை தடியால் அடிபட்டேன். ஒரு முறை என்னைக் கல்லால் எறிந்தார்கள். மும்முறை கப்பற் சிதைவில் சிக்குண்டேன். ஓர் இரவும் பகலும் நடுக்கடலில் அல்லலுற்றேன். 26 நான் செய்த பயணங்கள் மிகப் பல:அவற்றில் ஆறுகளாலும் கள்ளர்களாலும் இடர்கள், சொந்த இனத்தாரும் வேற்றினத்தாரும் இழைத்த இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள். கடலிலும் இடர்கள், போலிச் சகோதரர்களால் இடர்கள். இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். 27 அயராது உழைத்துக் களைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பன்முறை பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; போதிய ஆடையின்றியிருந்தேன்; 28 இவைபோல் வேறு பல இடர்கள் நேர்ந்தன. இவையேயன்றி, எல்லாச் சபைகளையும் பற்றிய கவலை வேறு எனக்கு அன்றாடச் சுமையாய் உள்ளது. 29 யாராவது மன வலிமையற்றிருந்தால், நானும் அவனைப் போல் ஆவதில்லையோ? எவனாவது இடறல் உற்றால், என் உள்ளம் கொதிப்பதில்லையோ? 30 நான் பெருமை பாராட்டுவதாய் இருந்தால் என் வலுவின்மையைக் காட்டுவதனைத்தையும் குறித்தே பெருமை பாராட்டுவேன். நான் சொல்லுவது பொய்யன்று. 31 இதை ஆண்டவராகிய இயேசுவின் தந்தையும் கடவுளுமானவர் அறிவார்; அவர் என்றென்றும் போற்றி! 32 நான் தமஸ்கு நகரத்திலே இருந்தபொழுது, அதேத்தா அரசன் கீழ் இருந்த ஆளுநன் என்னைச் சிறைப்பிடிக்க விரும்பித் தமஸ்கு நகரவாயில்களில் காவல் வைத்தான். 33 நானோ நகர மதிலிலிருந்த பலகணி வழியாய்க் கூடையில் வைத்து இறக்கப்பட்டு, அவன் கைக்குத் தப்பினேன்.
1 என் பேதைமையை நீங்கள் ஒரளவு பொறுத்துக்கொள்வீர்களா? ஆம், சற்றுப் பொறுத்துக்கொள்ளுங்கள். .::. 2 நான் உங்கள் மீதுகொண்டுள்ள அன்பார்வம் கடவுள்கொண்டிருக்கும் அன்பார்வமே. ஏனெனில், கிறிஸ்து என்னும் ஒரே மணவாளற்கு உங்களை மண ஒப்பந்தத்தில் பிணைத்துள்ளேன்; அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியென நிறுத்த வேண்டுமென்பதே என் விருப்பம். .::. 3 ஆனால், ஏவாள், எவ்வாறு பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டாளோ அவ்வாறே நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் இருக்கவேண்டிய ஒருமனப் பற்றுதலை இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன். .::. 4 ஏனெனில், எவனாவது வந்து நாங்கள் அறிவிக்காத வேறொரு இயேசுவை அறிவிக்கும்போது அல்லது நீங்கள் பெற்றிருக்கும் ஆவியானவரைத் தவிர வேறோர் ஆவியைப் பெற்றுக்கொள்ளச் செய்யும்போது அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்திக்கு ஒவ்வாத வேறொரு நற்செய்தியைக் கொணரும்போது, அவனை எளிதில் பொறுத்துக் கொள்ளுகிறீர்களே; .::. 5 ஆயினும் இந்தப் ' பேர்போன ' அப்போஸ்தலர்களைவிட நான் எதிலும் தாழ்ந்தவனல்லேன் என்றே எண்ணுகிறேன். .::. 6 எனக்குப் பேச்சு வன்மை இல்லை, மெய்தான்; ஆயினும் அறிவு இல்லாமற் போகவில்லை. இதை நாங்கள் எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குக் காட்டியிருக்கிறோம். .::. 7 கைம்மாறு கருதாமல் உங்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவித்து, உங்களை உயர்த்துவதற்காக நான் என்னையே தாழ்த்திக்கொண்டேனே, இப்படிச் செய்தது குற்றமா? .::. 8 உங்களிடையே பணிபுரிந்தபோது, என் செலவுக்கு வேண்டியதை மற்றச் சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக இவ்வாறு அவர்களிடமிருந்து பொருளைக் கவர்ந்தேன் . .::. 9 நான் உங்களோடு இருக்கையில் எனக்குக் குறையிருந்தபோதிலும், நான் யாருக்கும் சுமையாய் இருக்கவில்லை; எனக்கிருந்த குறையை மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் நீக்கினார்கள்; எதிலும் உங்களுக்குச் சுமையாய் இராமல் பார்த்துக்கொண்டேன். இனியும் பார்த்துக்கொள்வேன். .::. 10 என்னுள் இருக்கும் கிறிஸ்துவின் உண்மையே சாட்சியாகச் சொல்லுகிறேன்; எனக்குரிய இப்பெருமையை அக்காய நாட்டுப் பகுதிகளிலிருந்து யாரும் எடுக்க முடியாது. .::. 11 நான் இப்படியெல்லாம் செய்வானேன்? உங்கள்மேல் எனக்கு அன்பு இல்லை என்பதாலோ? கடவுளுக்குத் தெரியும் நான் உங்கள்மேல் வைத்துள்ள அன்பு. .::. 12 தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்ளும் அப்போஸ்தலப் பணியில் எங்களுக்கு நிகராய்த் தென்படச் சிலர் வாய்ப்புத் தேடுகிறார்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்து செய்து வருவேன். .::. 13 இத்தைகையோர் போலி அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக நடிக்கிறவர்கள். .::. 14 இதில் ஒரு வியப்புமில்லை; சாத்தான் கூட ஒளியின் தூதனாக நடிக்கிறான். .::. 15 ஆகையால் அவனுடைய பணியாளர் நீதியின் பணியாளராக நடிப்பது பெரிதா? அவர்களுடைய முடிவு அவர்களின் செயல்களுக்கேற்றதாகவே இருக்கும். .::. 16 மறுபடியும் சொல்லுகிறேன்; எவனும் என்னை அறிவிலி என எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள். நானும் அறிவிலியைப் போலச் சற்றுப் பொருமையடித்துக் கொள்ளுகிறேன். .::. 17 நான் இப்பொழுது ஆண்டவரின் ஏவுதலின்படி பேசவில்லை; அறிவிலியைப்போல் துணிவோடு பெருமையடித்துக் கொள்ளப்போகிறேன். .::. 18 உலகச் சிறப்புகளைச் சொல்லிக்காட்டி, பலர் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே பெருமையடித்துக் கொள்கிறேன். .::. 19 அறிவு நிறைந்திருக்கும் நீங்கள் அந்த அறிவிலிகளைத் தாராளமாய்ப் பொறுத்துக் கொள்கிறீர்கள். .::. 20 உங்களை யாராவது அடிமைபோல் நடத்தினால், அல்லது சுரண்டினால், அல்லது ஏமாற்றிப் பிழைத்தால், அல்லது உங்களிடம் இறுமாப்புக் காட்டினால், அல்லது உங்களைக் கன்னத்திலே அறைந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள். .::. 21 இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே; இது எனக்கு வெட்கந்தான். எனினும் அவர்கள் எதிலே பெருமை பாராட்டத் துணிகிறார்களோ, அதிலே நானும் துணியக்கூடும் அறிவிலியைப் போலவே இன்னும் பேசுகிறேன் .::. 22 அவர்கள் எபிரேயரோ? நானும் எபிரேயன்தான். அவர்கள் இஸ்ராயேலரோ? நானும் இஸ்ராயேலன் தான். அவர்கள் ஆபிராகாமின் வழிவந்தவர்களோ? நானும் ஆபிரகாமின் வழிவந்தவன் தான். .::. 23 அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களோ? அறிவிழந்தவனாகவே பேசுகிறேன் நான் அவர்களுக்குமேல் கிறிஸ்துவின் பணியாளன். அவர்களைவிட மிகுதியாய் உழைத்தேன். அவர்களைவிட மிகுதியாய்ச் சிறையில் துன்புற்றேன். அவர்களைவிட மிக்க கொடுமையாகச் சாட்டையால் அடிபட்டேன். .::. 24 பலமுறை மரண வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதரிடமிருந்து ஒன்று குறைய நாற்பது கசையடிகள் வாங்கினேன். .::. 25 மும் முறை தடியால் அடிபட்டேன். ஒரு முறை என்னைக் கல்லால் எறிந்தார்கள். மும்முறை கப்பற் சிதைவில் சிக்குண்டேன். ஓர் இரவும் பகலும் நடுக்கடலில் அல்லலுற்றேன். .::. 26 நான் செய்த பயணங்கள் மிகப் பல:அவற்றில் ஆறுகளாலும் கள்ளர்களாலும் இடர்கள், சொந்த இனத்தாரும் வேற்றினத்தாரும் இழைத்த இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள். கடலிலும் இடர்கள், போலிச் சகோதரர்களால் இடர்கள். இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். .::. 27 அயராது உழைத்துக் களைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பன்முறை பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; போதிய ஆடையின்றியிருந்தேன்; .::. 28 இவைபோல் வேறு பல இடர்கள் நேர்ந்தன. இவையேயன்றி, எல்லாச் சபைகளையும் பற்றிய கவலை வேறு எனக்கு அன்றாடச் சுமையாய் உள்ளது. .::. 29 யாராவது மன வலிமையற்றிருந்தால், நானும் அவனைப் போல் ஆவதில்லையோ? எவனாவது இடறல் உற்றால், என் உள்ளம் கொதிப்பதில்லையோ? .::. 30 நான் பெருமை பாராட்டுவதாய் இருந்தால் என் வலுவின்மையைக் காட்டுவதனைத்தையும் குறித்தே பெருமை பாராட்டுவேன். நான் சொல்லுவது பொய்யன்று. .::. 31 இதை ஆண்டவராகிய இயேசுவின் தந்தையும் கடவுளுமானவர் அறிவார்; அவர் என்றென்றும் போற்றி! .::. 32 நான் தமஸ்கு நகரத்திலே இருந்தபொழுது, அதேத்தா அரசன் கீழ் இருந்த ஆளுநன் என்னைச் சிறைப்பிடிக்க விரும்பித் தமஸ்கு நகரவாயில்களில் காவல் வைத்தான். .::. 33 நானோ நகர மதிலிலிருந்த பலகணி வழியாய்க் கூடையில் வைத்து இறக்கப்பட்டு, அவன் கைக்குத் தப்பினேன்.
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 1  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 2  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 3  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 4  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 5  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 6  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 7  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 8  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 9  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 10  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 11  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 12  
  • 2 கொரிந்தியர் அதிகாரம் 13  
×

Alert

×

Tamil Letters Keypad References