தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 34

கடவுளின் கருணையைப் புகழ்தல்
(தாவீதுக்கு உரியது; அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். 3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். 5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். 7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். * 1 பேது 2: 3. 9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. 11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? [* 1 பேது 3:10- 12 ] 13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! * 34 தலைப்பு: 1 சாமு ;. 14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. * 34 தலைப்பு: 1 சாமு ;. 15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. * 34 தலைப்பு: 1 சாமு ;. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. [* யோவா 19:36.. ] 21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.
1. {கடவுளின் கருணையைப் புகழ்தல்(தாவீதுக்கு உரியது; அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)} ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2. நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். 3. என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4. துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். 5. அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். 7. ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8. ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். [* 1 பேது 2:3. ] 9. ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. 11. வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12. வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? [* 1 பேது 3:10-12. ] 13. அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! [* 34 தலைப்பு: 1 சாமு ;. ] 14. தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. [* 34 தலைப்பு: 1 சாமு ;. ] 15. ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. [* 34 தலைப்பு: 1 சாமு ;. ] 16. ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17. நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19. நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20. அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. [* யோவா 19:36.. ] 21. தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். 22. ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References