தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எசேக்கியேல்

எசேக்கியேல் அதிகாரம் 19

ஓர் இரங்கற்பா 1 “நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி, 2 சொல்: சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய்! இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள். 3 அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று. 4 வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்; அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர். 5 தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்; எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள். 6 அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று. 7 அது கோட்டைகளைத் தாக்கி, நகர்களைச் சூறையாடிற்று; அதன் கர்ச்சிக்கும் ஒலி கேட்டபோதெல்லாம் நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன. 8 அண்டை நாடுகளிலிருந்து வேற்றினத்தார் அதற்கெதிராக எப்பக்கமும் எழுந்தனர்; தங்கள் வலையை அதன்மீது வீச, அது அவர்கள் குழியில் விழுந்தது. 9 அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர். 10 திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்; மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது. 11 அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன; அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது. 12 ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது; அதன் கனி உதிர்ந்து போயிற்று; தண்டு உலர்ந்து தீக்கிரையாயிற்று. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13.. 13 இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13.. 14 அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்; இதனை இரங்கற்பாவவெனக் கொள்க. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13..
ஓர் இரங்கற்பா 1 “நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி, .::. 2 சொல்: சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய்! இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள். .::. 3 அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று. .::. 4 வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்; அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர். .::. 5 தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்; எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள். .::. 6 அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று; அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று. .::. 7 அது கோட்டைகளைத் தாக்கி, நகர்களைச் சூறையாடிற்று; அதன் கர்ச்சிக்கும் ஒலி கேட்டபோதெல்லாம் நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன. .::. 8 அண்டை நாடுகளிலிருந்து வேற்றினத்தார் அதற்கெதிராக எப்பக்கமும் எழுந்தனர்; தங்கள் வலையை அதன்மீது வீச, அது அவர்கள் குழியில் விழுந்தது. .::. 9 அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர். .::. 10 திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்; மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது. .::. 11 அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன; அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது. .::. 12 ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது; அதன் கனி உதிர்ந்து போயிற்று; தண்டு உலர்ந்து தீக்கிரையாயிற்று. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13.. .::. 13 இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13.. .::. 14 அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்; இதனை இரங்கற்பாவவெனக் கொள்க. * 2 அர 24:15-20; 2 குறி 36:10-13..
  • எசேக்கியேல் அதிகாரம் 1  
  • எசேக்கியேல் அதிகாரம் 2  
  • எசேக்கியேல் அதிகாரம் 3  
  • எசேக்கியேல் அதிகாரம் 4  
  • எசேக்கியேல் அதிகாரம் 5  
  • எசேக்கியேல் அதிகாரம் 6  
  • எசேக்கியேல் அதிகாரம் 7  
  • எசேக்கியேல் அதிகாரம் 8  
  • எசேக்கியேல் அதிகாரம் 9  
  • எசேக்கியேல் அதிகாரம் 10  
  • எசேக்கியேல் அதிகாரம் 11  
  • எசேக்கியேல் அதிகாரம் 12  
  • எசேக்கியேல் அதிகாரம் 13  
  • எசேக்கியேல் அதிகாரம் 14  
  • எசேக்கியேல் அதிகாரம் 15  
  • எசேக்கியேல் அதிகாரம் 16  
  • எசேக்கியேல் அதிகாரம் 17  
  • எசேக்கியேல் அதிகாரம் 18  
  • எசேக்கியேல் அதிகாரம் 19  
  • எசேக்கியேல் அதிகாரம் 20  
  • எசேக்கியேல் அதிகாரம் 21  
  • எசேக்கியேல் அதிகாரம் 22  
  • எசேக்கியேல் அதிகாரம் 23  
  • எசேக்கியேல் அதிகாரம் 24  
  • எசேக்கியேல் அதிகாரம் 25  
  • எசேக்கியேல் அதிகாரம் 26  
  • எசேக்கியேல் அதிகாரம் 27  
  • எசேக்கியேல் அதிகாரம் 28  
  • எசேக்கியேல் அதிகாரம் 29  
  • எசேக்கியேல் அதிகாரம் 30  
  • எசேக்கியேல் அதிகாரம் 31  
  • எசேக்கியேல் அதிகாரம் 32  
  • எசேக்கியேல் அதிகாரம் 33  
  • எசேக்கியேல் அதிகாரம் 34  
  • எசேக்கியேல் அதிகாரம் 35  
  • எசேக்கியேல் அதிகாரம் 36  
  • எசேக்கியேல் அதிகாரம் 37  
  • எசேக்கியேல் அதிகாரம் 38  
  • எசேக்கியேல் அதிகாரம் 39  
  • எசேக்கியேல் அதிகாரம் 40  
  • எசேக்கியேல் அதிகாரம் 41  
  • எசேக்கியேல் அதிகாரம் 42  
  • எசேக்கியேல் அதிகாரம் 43  
  • எசேக்கியேல் அதிகாரம் 44  
  • எசேக்கியேல் அதிகாரம் 45  
  • எசேக்கியேல் அதிகாரம் 46  
  • எசேக்கியேல் அதிகாரம் 47  
  • எசேக்கியேல் அதிகாரம் 48  
×

Alert

×

Tamil Letters Keypad References