TOV
16. பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
ERVTA
16. அவன் சாராளிடம், “நான் உன் சகோதரன், ஆபிரகாமிடம் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுத்தேன். நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவே அவ்வாறு செய்தேன். நான் செய்தது சரியென்று எல்லோருக்கும் தெரியவேண்டும்” என்றான்.
IRVTA
16. பின்பு சாராளை நோக்கி: “உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லோருக்கும் முன்பாகவும், மற்ற அனைவருக்கும் முன்பாகவும், இது உன் முகத்தின் முக்காட்டுக்காக” என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
ECTA
16. மேலும் சாராவை நோக்கி, "இதோ உன் சகோதரருக்கு ஆயிரம் வெள்ளிக்காக கொடுத்துள்ளேன். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும். அனைவர் பார்வையிலும் உன் பழி நீங்கிவிட்டது" என்றான்.
RCTA
16. பிறகு சாறாளை நோக்கி: இதோ, உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக் காசு கொடுத்தேன். அந்தப் பணத்திலே கண்களை மறைக்கும் ஒரு முக்காடு வாங்கி, நீ எங்கே போனாலும், யார் அருகில் வந்தாலும், உன்முகம் எவருக்கும் தோன்றா வண்ணம் அதைப் போட்டுக் கொள். நீ ஒரு முறை சிக்கிக் கொண்டாய் என்பதை மறக்க வேண்டாம் என்றான்.
OCVTA
16. அவன் சாராளைப் பார்த்து, “உன் சகோதரனுக்கு ஆயிரம் சேக்கல் [*அதாவது, சுமார் 25 பவுண்டுகள் அல்லது 12 கிலோகிராம்] வெள்ளிக்காசைக் கொடுக்கிறேன். உனக்கு விரோதமான குற்றத்திற்கு ஈடாக இங்கு உன்னுடன் நிற்கிறவர்களுக்கு முன்பாக நான் இவற்றைக் கொடுக்கிறேன். நீ குற்றமற்றவள் என்று முழுவதுமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறாய்” என்றான்.