தகவல்கள்
இந்த வலைதளம் வணிகம் சாராத, புனித விவிலியம் வேதத்தை சார்ந்த வேதாகம வலைத்தளம் (An Online Bible Website).
இந்த வலைத்தளம் இந்திய மொழியின் வேதாகம புத்தகங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், இந்த வேதவுரையின் எழுத்துக்கள் மூலம் தெய்வீக அல்லது ஆன்மீக உண்மையை மேலானா விதத்தில் புரிந்துகொள்வதற்காக இந்திய மொழியின் வேதாகமத்திற்கு இணை வேதாகம மொழிகளாகிய எபிரேயம் மற்றூம் கிரேக்க மொழி மூல வார்த்தைகளோடு படிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த வலைதளம் வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய மொழிகள்: தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, பெங்காலி, ஒடிசா மற்றும் அஸ்சாமி. ஆங்கில வேதாகம பதிப்புகள் அதிக கவனம் செலுத்தபடவில்லை. இந்த வலைத்தளம் தற்போது பயன்பாட்டு சுதந்திரம் தந்துள்ள பதிப்புகளை மாத்திரம் வெளியிட்டுள்ளது.
இந்த வலைதளத்தின் முக்கிய குறிக்கோள் விவிலிய வேதத்தின் மூல மொழியை அதன் இந்திய மொழி அர்த்தங்களுடன் இணைத்து வெளியிடுவதாகும்,அதாவது எபிரேயம் மற்றும் கிரேக்கம் வேதாகமப் பதிப்புகளின் மூல அர்த்தத்துடன் இந்திய மொழி வேதாகமத்தை படிக்கத்தக்கதாக இந்த வளைதளம் உருவாக்கப்பட்டு வருகின்றது.