TOV
29. அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.
ERVTA
29. பிறகு அவன் அந்த அறையை விட்டு வெளியே ஓடினான். தன் சகோதரன் பென்யமீனைத் தான் மிகவும் விரும்புவதை அவனுக்கு உணர்த்தப் பெரிதும் விரும்பினான். அவனுக்கு அழவேண்டும்போல இருந்தது. ஆனால் தான் அழுவதைத் தன் சகோதரர்கள் பார்த்துவிடக் கூடாதே என்று அஞ்சினான். இதனால்தன் அறைக்குச் சென்று அழுதான்.
IRVTA
29. அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற மகனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, “நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்யக்கடவர்” என்றான்.
ECTA
29. யோசேப்பு கண்களை உயர்த்தி, தம் சகோதரனும், தம் தாயின் மகனுமான பென்யமினைப் பார்த்து, "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய சகோதரன் இவன்தானோ?" என்று கேட்டபின், "மகனே, கடவுள் உனக்கு அருள்புரிவாராக!" என்றார்.
RCTA
29. சூசை கண்களை ஏறெடுத்துத் தம் உடன்பிறந்த சகோதரனாகிய பெஞ்சமினைப் பார்த்து நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய தம்பி இவன்தானோ என்று கேட்டபின்: தம்பி, கடவுள் உனக்கு அருள் புரிவாராக என்றார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN