TOV
13. அதற்கு அவன்: பிள்ளைகள் இளம்பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகள் ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.
ERVTA
13. ஆனால் யாக்கோபோ, “எனது குழந்தைகள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும். எனது மந்தைகளைப்பற்றியும், அவற்றின் இளம் கன்றுகளைப்பற்றியும் நான் கவனமாக இருக்க வேண்டும். நான் அவற்றை ஒரு நாளில் அதிக தூரம் நடக்க வைத்தால் எல்லா விலங்குகளும் மரித்துப்போகும்.
IRVTA
13. அதற்கு யாக்கோபு: “பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும்.
ECTA
13. அதற்கு யாக்கோபு, "பச்சிளங்குழந்தைகளும் பால் கொடுக்கும் ஆடு, மாடுகளும் என்னிடம் உள்ளன என்று என் தலைவராகிய உமக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக் கொண்டு வந்தால், என் மந்தையெல்லாம் செத்துப் போகும்.
RCTA
13. தலைவ, சிறு குழந்தைகளும், சினை ஆடுகளும் பசுக்களும் என்னுடன் இருப்பதை நீர் அறிவீர். அவற்றை நான் அதிகமாய் வருத்தி ஓட்டுவேனாயின், மந்தையெல்லாம் ஒரே நாளில் மாய்ந்துபோமன்றோ?
OCVTA
13. அதற்கு யாக்கோபு ஏசாவிடம், “எனது பிள்ளைகளோ சிறு குழந்தைகள், அதோடு பால் கொடுக்கும் ஆடுகளையும், பசுக்களையும் நான் கவனிக்க வேண்டும் என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக்கொண்டு போனால் எல்லா மிருகங்களும் இறந்துவிடும்.