TOV
24. பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.
ERVTA
24. ஆலயத்தில் உள்ள ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாயில் காவலர்கள், ஆலயப் பணியாளர்கள், மற்றும் தேவனுடைய ஆலயத்தில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் ஆகியவர்களை வரிசெலுத்த வைப்பது சட்ட விரோதமானது (சட்டத்திற்குப் புறம்பானது) என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. அரசனைக் கௌரவப்படுத்தும் பொருட்டு பணம் தரத் தேவையில்லை. எந்த விதமான திறையும் செலுத்த வேண்டியதில்லை.
IRVTA
24. பின்னும் ஆசாரியர்களும், லேவியர்களும், பாடகர்களும், வாசல் காவலாளர்களும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் எந்தவொரு வரியையும் சுமத்தக்கூடாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
ECTA
24. மேலும், நான் அறிவிப்பது; குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று.
RCTA
24. மேலும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், ஆலய ஊழியர் ஆகிய இக்கடவுளின் ஆலயத் திருப்பணியாளர் அனைவர் மீதும் நீங்கள் எவ்விதத் திறையாவது வரியாவது தீர்வையாவது சுமத்த உங்களுக்கு அதிகாரமில்லை என்றும் உங்களுக்கு அறிவிக்கிறோம்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN