TOV
15. இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.
ERVTA
15. “இஸ்ரவேலே, நீ ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறாய். ஆனால் யூதாவை அக்குற்றத்துக்கு ஆளாக்காதே. கில்காலுக்குப் போகாதே. பெத்தாவேனுக்கும் போகாதே. ஆணையிடுவதற்குக் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தாதே. ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு...’ என்று ஆணையிடாதே.
IRVTA
15. இஸ்ரவேலே, நீ என்னைவிட்டுப் போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்திற்கு உட்படாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும், யெகோவாவுடைய ஜீவன்மேல் என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.
ECTA
15. இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்; கில்காலுக்குள் நுழையாதீர்கள்; பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்; "ஆண்டவர்மேல் ஆணை" என்று ஆணையிடாதீர்கள்.
RCTA
15. இஸ்ராயேலே, நீ விபசாரியாய்ப் போனாலும் யூதாவாகிலும் குற்றமற்றவளாய் இருக்கட்டும்; கல்கலாவுக்குப் போகாதீர்கள், பெத்தாவென் என்னுமிடத்திற்கும் செல்ல வேண்டா; "ஆண்டவர் மேல் ஆணை" என்று நீங்கள் ஆணையிடவும் வேண்டா.
OCVTA
15. “இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும். “நீ கில்காலுக்குப் போகவேண்டாம்; பெத்தாவேனுக்கும் போகவேண்டாம். ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம்.