தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 நாளாகமம்
1. பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.
2. பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள்.
3. சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரருக்கு மிகவும் பயப்பட்டு,
4. தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
5. சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
6. அப்படியே சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும் கூடச் செத்துப்போனார்கள்.
7. ஜனங்கள் முறிந்தோடினதையும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது தங்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள்.
8. வெட்டுண்டவர்களின் வஸ்திரங்களை உரிந்துகொள்ளப் பெலிஸ்தர் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவன் குமாரரையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக்கண்டு,
9. அவன் வஸ்திரங்களை உரிந்து, அவன் தலையையும், அவன் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களுக்கும் ஜனங்களுக்கும் அதைப் பிரசித்தப்படுத்தும்படி பெலிஸ்தருடைய தேசத்திலே சுற்றிலும் செய்தி அனுப்பி,
10. அவன் ஆயுதங்களைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே வைத்து, அவன் தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.
11. பெலிஸ்தர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையுங்கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் யாவரும் கேட்டபோது,
12. பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
13. அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.
14. அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Chapters, Current Chapter 10 of Total Chapters 29
1 நாளாகமம் 10:2

×

Alert

×

tamil Letters Keypad References