தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
செப்பனியா
1. கலகஞ்செய்து தீட்டுப்பட்டவளும், கொடிய நகரமுமாகிய சீயோன் மகளுக்கு ஐயோ கேடு!
2. நாம் சொல்வதை அவள் கேட்பதுமில்லை, நமது திருத்தத்தை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர் மேல் அவள் நம்பிக்கை வைக்கிறதில்லை, தன் கடவுளை அண்டி வருகிறதுமில்லை.
3. அந்நகரில் இருக்கும் அதன் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்களைப் போல்வர்; அதன் நீதிபதிகள், மாலை வேளையில் அலைந்து திரிந்து கிடைக்கும் இரையைக் காலை வரை வைக்காத ஓநாய்கள் போல்வர்.
4. அதன் தீர்க்கதரிசிகள் தற்பெருமை பேசுகிறவர்கள், பிரமாணிக்கமற்ற மனிதர்கள்; அதன் அர்ச்சகர்கள் புனிதமானதைப் பங்கப்படுத்துகின்றனர், திருச்சட்டத்தை மீறி நடக்கின்றார்கள்.
5. அதன் நடுவில் குடிகொண்டிருக்கும் ஆண்டவர் நேர்மையுள்ளவர், அவர் தீங்கு ஏதும் செய்கிறதில்லை; காலை தோறும் அவர் தம் நீதியை வெளிப்படுத்துகிறார், வைகறை தோறும் அது தவறாமல் வெளிப்படும்; ஆனால் நேர்மையற்றவனுக்கு வெட்கமே கிடையாது.
6. புறவினத்தாரை நாம் நாசம் செய்தோம், அவர்களுடைய காவல் கோட்டைகளைத் தகர்த்தோம்; அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினோம், அவற்றில் நடந்து செல்பவன் எவனுமில்லை; எவனும் இராதபடி, யாரும் வாழாதபடி அவர்களுடைய நகரங்கள் பாழ்வெளியாயின.
7. 'இனிக் கண்டிப்பாய் நமக்கு நீ அஞ்சி நடப்பாய், நமது திருத்தத்தை ஏற்றுக்கொள்வாய்; நாம் அனுப்பிய தண்டனைகளையெல்லாம் நீ மறக்கமாட்டாய்' என்றெல்லாம் நாம் எண்ணியிருந்தோம்; அதற்கு மாறாக, அவர்கள் தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
8. ஆதலால், நாம் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு; ஏனெனில் என் தீர்மானம்: மக்களினங்களையும், அரசுகளையும் ஒன்று சேர்த்து நம் ஆத்திரத்தையும், நம் கோபத்தீயின் கொடுமை முழுவதையும் அவர்கள் மேல் கொட்டித் தீர்த்து விடல் ஆகும். ஏனெனில் நம் வைராக்கியமுள்ள கோபத்தீயினால் உலகெல்லாம் அழிந்து போகும்" என்கிறார் ஆண்டவர்.
9. ஆம், அக்காலத்தில் நாம் மக்களினங்களுக்குத் தூய்மையான உதடுகளை அருளுவோம்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் திருப்பெயரைத் தொழுது கொண்டு, தோளோடு தோள் கொடுத்துப் பணிபுரிவர்.
10. எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து நம்முடைய அடியார்கள் காணிக்கையுடன் வருவார்கள்; நம் குடிகளுள் சிதறுண்டவர்களின் மக்கள் நமக்குக் காணிக்கைகள் கொண்டு வருவர்.
11. நமக்கு எதிராய் நீ எழுந்து செய்த செயல்களை முன்னிட்டு அந்நாளில் நீ அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில் அப்பொழுது உன் நடுவிலிருந்து இறுமாப்பாய்க் களிகூர்ந்திருப்பவர்களை அகற்றிடுவோம்; இனி ஒருபோதும் நம் பரிசுத்த மலையின் மீது பெருமை காட்டிக் கொள்ள மாட்டாய்.
12. ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களை உன் நடுவில் நாம் விட்டு வைப்போம்; இஸ்ராயேலில் எஞ்சினோர் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வர்;
13. அவர்கள் தீமை செய்யமாட்டார்கள், பொய் சொல்லவே மாட்டார்கள்; வஞ்சக நாவென்பது அவர்கள் வாயில் இராது; அச்சுறுத்துவார் யாருமின்றி அவர்கள் மந்தை போல மேய்ந்து இளைப்பாறுவார்கள்."
14. சீயோன் மகளே, மகிழ்ச்சியால் ஆர்ப்பரி, இஸ்ராயேலே, ஆரவாரம் செய்; யெருசலேம் மகளே, உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
15. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ராயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; நீ இனித் தீமைக்கு அஞ்சமாட்டாய்.
16. அந்நாளில் யெருசலேமை நோக்கி, "சீயோனே, அஞ்ச வேண்டா; உன் கைகள் சோர்ந்து தளராதிருக்கட்டும்!
17. உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் மாவீரர், வெற்றி தருபவர்; உன் மட்டில் அவர் மகிழ்ச்சியால் அக்களிப்பார், தம் அன்பினால் உன்னைப் புதுப்பிப்பார்; திருவிழா நாளில் செய்வதுபோல், உன்னைக் குறித்து உரக்கப் பாடித் துள்ளுவார்" என்பார்கள்.
18. உன்னிடமிருந்து தீமையை அகற்றிவிட்டோம், அதற்காக நீ இனி நிந்தையுறமாட்டாய்.
19. இதோ, உன்னைக் கொடுமையாய் நடத்தியவர்களை அந்நாளில் நாம் தொலைத்திடுவோம்; நொண்டிகளைக் காப்போம், சிதறுண்டவர்களை ஒன்றுசேர்ப்போம்; அவமானத்தை அடைந்த அவர்கள் உலகெங்கும் பேரும் புகழும் பெறச் செய்வோம்.
20. அக்காலத்தில் உங்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வருவோம், அப்பொழுது உங்களை நாம் ஒன்று கூட்டுவோம்; ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணரும் போது, உலகத்தின் மக்களினங்கள் நடுவிலெல்லாம் பேரும் புகழும் உங்களுக்குக் கிடைக்கச் செய்வோம்" என்கிறார் ஆண்டவர்.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 3
1 2 3
1 கலகஞ்செய்து தீட்டுப்பட்டவளும், கொடிய நகரமுமாகிய சீயோன் மகளுக்கு ஐயோ கேடு! 2 நாம் சொல்வதை அவள் கேட்பதுமில்லை, நமது திருத்தத்தை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர் மேல் அவள் நம்பிக்கை வைக்கிறதில்லை, தன் கடவுளை அண்டி வருகிறதுமில்லை. 3 அந்நகரில் இருக்கும் அதன் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்களைப் போல்வர்; அதன் நீதிபதிகள், மாலை வேளையில் அலைந்து திரிந்து கிடைக்கும் இரையைக் காலை வரை வைக்காத ஓநாய்கள் போல்வர். 4 அதன் தீர்க்கதரிசிகள் தற்பெருமை பேசுகிறவர்கள், பிரமாணிக்கமற்ற மனிதர்கள்; அதன் அர்ச்சகர்கள் புனிதமானதைப் பங்கப்படுத்துகின்றனர், திருச்சட்டத்தை மீறி நடக்கின்றார்கள். 5 அதன் நடுவில் குடிகொண்டிருக்கும் ஆண்டவர் நேர்மையுள்ளவர், அவர் தீங்கு ஏதும் செய்கிறதில்லை; காலை தோறும் அவர் தம் நீதியை வெளிப்படுத்துகிறார், வைகறை தோறும் அது தவறாமல் வெளிப்படும்; ஆனால் நேர்மையற்றவனுக்கு வெட்கமே கிடையாது. 6 புறவினத்தாரை நாம் நாசம் செய்தோம், அவர்களுடைய காவல் கோட்டைகளைத் தகர்த்தோம்; அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினோம், அவற்றில் நடந்து செல்பவன் எவனுமில்லை; எவனும் இராதபடி, யாரும் வாழாதபடி அவர்களுடைய நகரங்கள் பாழ்வெளியாயின. 7 'இனிக் கண்டிப்பாய் நமக்கு நீ அஞ்சி நடப்பாய், நமது திருத்தத்தை ஏற்றுக்கொள்வாய்; நாம் அனுப்பிய தண்டனைகளையெல்லாம் நீ மறக்கமாட்டாய்' என்றெல்லாம் நாம் எண்ணியிருந்தோம்; அதற்கு மாறாக, அவர்கள் தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர். 8 ஆதலால், நாம் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு; ஏனெனில் என் தீர்மானம்: மக்களினங்களையும், அரசுகளையும் ஒன்று சேர்த்து நம் ஆத்திரத்தையும், நம் கோபத்தீயின் கொடுமை முழுவதையும் அவர்கள் மேல் கொட்டித் தீர்த்து விடல் ஆகும். ஏனெனில் நம் வைராக்கியமுள்ள கோபத்தீயினால் உலகெல்லாம் அழிந்து போகும்" என்கிறார் ஆண்டவர். 9 ஆம், அக்காலத்தில் நாம் மக்களினங்களுக்குத் தூய்மையான உதடுகளை அருளுவோம்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் திருப்பெயரைத் தொழுது கொண்டு, தோளோடு தோள் கொடுத்துப் பணிபுரிவர். 10 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து நம்முடைய அடியார்கள் காணிக்கையுடன் வருவார்கள்; நம் குடிகளுள் சிதறுண்டவர்களின் மக்கள் நமக்குக் காணிக்கைகள் கொண்டு வருவர். 11 நமக்கு எதிராய் நீ எழுந்து செய்த செயல்களை முன்னிட்டு அந்நாளில் நீ அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில் அப்பொழுது உன் நடுவிலிருந்து இறுமாப்பாய்க் களிகூர்ந்திருப்பவர்களை அகற்றிடுவோம்; இனி ஒருபோதும் நம் பரிசுத்த மலையின் மீது பெருமை காட்டிக் கொள்ள மாட்டாய். 12 ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களை உன் நடுவில் நாம் விட்டு வைப்போம்; இஸ்ராயேலில் எஞ்சினோர் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வர்; 13 அவர்கள் தீமை செய்யமாட்டார்கள், பொய் சொல்லவே மாட்டார்கள்; வஞ்சக நாவென்பது அவர்கள் வாயில் இராது; அச்சுறுத்துவார் யாருமின்றி அவர்கள் மந்தை போல மேய்ந்து இளைப்பாறுவார்கள்." 14 சீயோன் மகளே, மகிழ்ச்சியால் ஆர்ப்பரி, இஸ்ராயேலே, ஆரவாரம் செய்; யெருசலேம் மகளே, உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. 15 ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ராயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; நீ இனித் தீமைக்கு அஞ்சமாட்டாய். 16 அந்நாளில் யெருசலேமை நோக்கி, "சீயோனே, அஞ்ச வேண்டா; உன் கைகள் சோர்ந்து தளராதிருக்கட்டும்! 17 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் மாவீரர், வெற்றி தருபவர்; உன் மட்டில் அவர் மகிழ்ச்சியால் அக்களிப்பார், தம் அன்பினால் உன்னைப் புதுப்பிப்பார்; திருவிழா நாளில் செய்வதுபோல், உன்னைக் குறித்து உரக்கப் பாடித் துள்ளுவார்" என்பார்கள். 18 உன்னிடமிருந்து தீமையை அகற்றிவிட்டோம், அதற்காக நீ இனி நிந்தையுறமாட்டாய். 19 இதோ, உன்னைக் கொடுமையாய் நடத்தியவர்களை அந்நாளில் நாம் தொலைத்திடுவோம்; நொண்டிகளைக் காப்போம், சிதறுண்டவர்களை ஒன்றுசேர்ப்போம்; அவமானத்தை அடைந்த அவர்கள் உலகெங்கும் பேரும் புகழும் பெறச் செய்வோம். 20 அக்காலத்தில் உங்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வருவோம், அப்பொழுது உங்களை நாம் ஒன்று கூட்டுவோம்; ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணரும் போது, உலகத்தின் மக்களினங்கள் நடுவிலெல்லாம் பேரும் புகழும் உங்களுக்குக் கிடைக்கச் செய்வோம்" என்கிறார் ஆண்டவர்.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 3
1 2 3
×

Alert

×

Tamil Letters Keypad References