தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சகரியா
1. இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது; அப்போது, உன்னிடமிருந்து பறிக்கப்பட்ட கொள்ளைப் பொருட்கள் உன் நடுவிலேயே பங்கிடப்படும்.
2. யெருசலேமுக்கு எதிராகப் போர் புரியும்படி மக்களினங்கள் அனைத்தையும் நாம் ஒன்று கூட்டப் போகிறோம்; நகரம் பிடிபடும்; வீடுகள் கொள்ளையிடப்படும்; பெண்கள் பங்கப்படுத்தப்படுவர்; நகர மாந்தருள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவர்; ஆனால் எஞ்சியிருக்கும் மக்கள் நகரை விட்டு போகமாட்டார்கள்.
3. பின்பு ஆண்டவர் வெளியே கிளம்பி வந்து போர்க் காலத்தில் போரிடுவது போல் அந்த மக்களினங்களுக்கு எதிராகப் போர்புரிவார்.
4. அந்நாளில் அவர் கால்கள் யெருசலேமுக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒலிவ மரங்களடர்ந்த மலையின் மேல் நிலைகொள்ளும்; ஒலிவ மலையானது கிழக்கு மேற்காக மிக விரிந்த பள்ளத்தாக்கினால் பிளவுபடும்; அம்மலையின் ஒரு பகுதி வடக்கிலும், மற்றப்பகுதி தெற்கிலுமாகப் பிரிந்து விலகும்.
5. அந்த மலைகளின் பள்ளத்தாக்கு ஓடுவீர்கள்; ஏனெனில் மலைகளின் பள்ளத்தாக்கு அதன் பக்கத்துப் பள்ளத்தாக்கைத் தொடும்; நீங்களோ யூதாவின் அரசனாகிய யோசியாசின் காலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது ஓடிப் போனது போல் ஓடுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வருவார்; அவரோடு பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள்.
6. அந்நாளில், குளிரோ உறைபனியோ இராது.
7. அந்த நாள் விந்தையான நாளாயிருக்கும்- அது ஆண்டவருக்குத்தான் தெரியும்; பகலுக்குப் பின் இரவே வராது; மாலை வேளையிலும் ஒளியிருக்கும்.
8. அந்நாளில் உயிருள்ள நீர் யெருசலேமிலிருந்து புறப்பட்டு ஓடும்; அதில் ஒரு பாதி கீழ்க் கடலிலும், மறு பாதி மேற்கடலிலும் போய்க் கலக்கும்; அது கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் ஓடிக் கொண்டிருக்கும்.
9. அந்நாளில், ஆண்டவர் உலக முழுவதற்கும் அரசராவார்; ஆண்டவர் ஒருவரே, அவரது திருப்பெயரும் ஒன்றே.
10. கேபா முதல் யெருசலேமுக்குத் தெற்கிலுள்ள இரெம்மோன் வரையில் உள்ள நாடு முழுவதும் சம வெளியாக்கப்படும். தன் இடத்திலேயே ஓங்கி உயர்ந்திருக்கும் யெருசலேமில் மக்கள் குடியேறுவர்; பென்யமீன் வாயில் முதல் முந்திய வாயில் இருந்த இடம் வரையில்- மூலை வாயில் வரையிலும், அனானேயல் கோபுரம் முதல் அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையில் மக்கள் குடியேறியிருப்பார்கள்.
11. அங்கே மக்கள் அமைதியாய் வாழ்வார்கள்; இனி அவர்கள் சாபனைக்கு ஆளாக மாட்டார்கள்; யெருசலேம் அச்சமின்றி இருக்கும்.
12. யெருசலேமுக்கு எதிராக எழுந்து போர் புரிந்த எல்லா மக்களினங்கள் மேலும் ஆண்டவர் அனுப்பப் போகிற கொள்ளை நோய் இதுவே: நடமாட்டமாய் இருக்கும் போதே ஒவ்வொருவனுடைய உடல் தசையும் அழுகி விழும்; அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகி விடும்; அவர்களுடைய நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகிப் போகும்.
13. அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்குள் பெரிய கலகத்தை எழுப்புவார்; ஒருவன் மற்றொருவன் கையைப் பற்றுவான்; ஒவ்வொருவனும் தன் தன் அயலானுக்கு எதிராய்க் கையுயர்த்துவான்.
14. யூதா கூட யெருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும். சுற்றியுள்ள எல்லா மக்களினங்களுடைய செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் முதலியவை குவியல் குவியலாய்ச் சேர்க்கப்படும்.
15. இந்தக் கொள்ளை நோய் போலவே அவர்களுடைய பாசறைகளில் இருக்கும் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இன்னும் மற்றெல்லா மிருகங்களுக்கும் கொள்ளை நோய் உண்டாகும்.
16. யெருசலேமுக்கு எதிராய் வந்த எல்லா மக்களினங்களிலும் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் சேனைகளின் ஆண்டவராகிய அரசரை வணங்கவும், கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் போவார்கள்.
17. உலகத்தின் இனத்தாருள் எவரேனும் சேனைகளின் ஆண்டவராகிய அரசரை வணங்க யெருலேமுக்குப் போகவில்லையானால், அவர்களுக்கு மழை பெய்யாது.
18. எகிப்து நாட்டு மக்கள் அவர் திருமுன்னிலைக்கு வழிபாடு செய்ய வரவில்லையாயின், கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை ஆண்டவர் வதைத்த அதே கொள்ளை நோயால் அவர்களையும் வதைப்பார்.
19. இதுதான் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத எகிப்துக்கும், மற்றெல்லா இனத்தாருக்கும் கிடைக்கப் போகும் தண்டனை.
20. அந்நாளில், குதிரைகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளில், 'ஆண்டவருக்கென அர்ச்சிக்கப்பட்டவை' என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் இல்லத்தில் இருக்கும் பானைகள் பீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்;
21. யெருசலேமிலும் யூதாவிலுமுள்ள பானை ஒவ்வொன்றும் சேனைகளின் ஆண்டவருக்கென அர்ச்சிக்கப் பட்டதாய் இருக்கும்; பலியிடுபவரெல்லாம் பலியிட்ட இறைச்சியைச் சமைக்க அவற்றை எடுத்துப் பயன் படுத்துவார்கள். மேலும் அந்நாளில் சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தில் வாணிகள் எவனும் இருக்கமாட்டான்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
1 இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது; அப்போது, உன்னிடமிருந்து பறிக்கப்பட்ட கொள்ளைப் பொருட்கள் உன் நடுவிலேயே பங்கிடப்படும். 2 யெருசலேமுக்கு எதிராகப் போர் புரியும்படி மக்களினங்கள் அனைத்தையும் நாம் ஒன்று கூட்டப் போகிறோம்; நகரம் பிடிபடும்; வீடுகள் கொள்ளையிடப்படும்; பெண்கள் பங்கப்படுத்தப்படுவர்; நகர மாந்தருள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவர்; ஆனால் எஞ்சியிருக்கும் மக்கள் நகரை விட்டு போகமாட்டார்கள். 3 பின்பு ஆண்டவர் வெளியே கிளம்பி வந்து போர்க் காலத்தில் போரிடுவது போல் அந்த மக்களினங்களுக்கு எதிராகப் போர்புரிவார். 4 அந்நாளில் அவர் கால்கள் யெருசலேமுக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒலிவ மரங்களடர்ந்த மலையின் மேல் நிலைகொள்ளும்; ஒலிவ மலையானது கிழக்கு மேற்காக மிக விரிந்த பள்ளத்தாக்கினால் பிளவுபடும்; அம்மலையின் ஒரு பகுதி வடக்கிலும், மற்றப்பகுதி தெற்கிலுமாகப் பிரிந்து விலகும். 5 அந்த மலைகளின் பள்ளத்தாக்கு ஓடுவீர்கள்; ஏனெனில் மலைகளின் பள்ளத்தாக்கு அதன் பக்கத்துப் பள்ளத்தாக்கைத் தொடும்; நீங்களோ யூதாவின் அரசனாகிய யோசியாசின் காலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது ஓடிப் போனது போல் ஓடுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வருவார்; அவரோடு பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள். 6 அந்நாளில், குளிரோ உறைபனியோ இராது. 7 அந்த நாள் விந்தையான நாளாயிருக்கும்- அது ஆண்டவருக்குத்தான் தெரியும்; பகலுக்குப் பின் இரவே வராது; மாலை வேளையிலும் ஒளியிருக்கும். 8 அந்நாளில் உயிருள்ள நீர் யெருசலேமிலிருந்து புறப்பட்டு ஓடும்; அதில் ஒரு பாதி கீழ்க் கடலிலும், மறு பாதி மேற்கடலிலும் போய்க் கலக்கும்; அது கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் ஓடிக் கொண்டிருக்கும். 9 அந்நாளில், ஆண்டவர் உலக முழுவதற்கும் அரசராவார்; ஆண்டவர் ஒருவரே, அவரது திருப்பெயரும் ஒன்றே. 10 கேபா முதல் யெருசலேமுக்குத் தெற்கிலுள்ள இரெம்மோன் வரையில் உள்ள நாடு முழுவதும் சம வெளியாக்கப்படும். தன் இடத்திலேயே ஓங்கி உயர்ந்திருக்கும் யெருசலேமில் மக்கள் குடியேறுவர்; பென்யமீன் வாயில் முதல் முந்திய வாயில் இருந்த இடம் வரையில்- மூலை வாயில் வரையிலும், அனானேயல் கோபுரம் முதல் அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையில் மக்கள் குடியேறியிருப்பார்கள். 11 அங்கே மக்கள் அமைதியாய் வாழ்வார்கள்; இனி அவர்கள் சாபனைக்கு ஆளாக மாட்டார்கள்; யெருசலேம் அச்சமின்றி இருக்கும். 12 யெருசலேமுக்கு எதிராக எழுந்து போர் புரிந்த எல்லா மக்களினங்கள் மேலும் ஆண்டவர் அனுப்பப் போகிற கொள்ளை நோய் இதுவே: நடமாட்டமாய் இருக்கும் போதே ஒவ்வொருவனுடைய உடல் தசையும் அழுகி விழும்; அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகி விடும்; அவர்களுடைய நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகிப் போகும். 13 அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்குள் பெரிய கலகத்தை எழுப்புவார்; ஒருவன் மற்றொருவன் கையைப் பற்றுவான்; ஒவ்வொருவனும் தன் தன் அயலானுக்கு எதிராய்க் கையுயர்த்துவான். 14 யூதா கூட யெருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும். சுற்றியுள்ள எல்லா மக்களினங்களுடைய செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் முதலியவை குவியல் குவியலாய்ச் சேர்க்கப்படும். 15 இந்தக் கொள்ளை நோய் போலவே அவர்களுடைய பாசறைகளில் இருக்கும் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இன்னும் மற்றெல்லா மிருகங்களுக்கும் கொள்ளை நோய் உண்டாகும். 16 யெருசலேமுக்கு எதிராய் வந்த எல்லா மக்களினங்களிலும் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் சேனைகளின் ஆண்டவராகிய அரசரை வணங்கவும், கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் போவார்கள். 17 உலகத்தின் இனத்தாருள் எவரேனும் சேனைகளின் ஆண்டவராகிய அரசரை வணங்க யெருலேமுக்குப் போகவில்லையானால், அவர்களுக்கு மழை பெய்யாது. 18 எகிப்து நாட்டு மக்கள் அவர் திருமுன்னிலைக்கு வழிபாடு செய்ய வரவில்லையாயின், கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை ஆண்டவர் வதைத்த அதே கொள்ளை நோயால் அவர்களையும் வதைப்பார். 19 இதுதான் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத எகிப்துக்கும், மற்றெல்லா இனத்தாருக்கும் கிடைக்கப் போகும் தண்டனை. 20 அந்நாளில், குதிரைகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளில், 'ஆண்டவருக்கென அர்ச்சிக்கப்பட்டவை' என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் இல்லத்தில் இருக்கும் பானைகள் பீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்; 21 யெருசலேமிலும் யூதாவிலுமுள்ள பானை ஒவ்வொன்றும் சேனைகளின் ஆண்டவருக்கென அர்ச்சிக்கப் பட்டதாய் இருக்கும்; பலியிடுபவரெல்லாம் பலியிட்ட இறைச்சியைச் சமைக்க அவற்றை எடுத்துப் பயன் படுத்துவார்கள். மேலும் அந்நாளில் சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தில் வாணிகள் எவனும் இருக்கமாட்டான்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References