தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சகரியா
1. அந்நாளில், பாவத்தையும் கறையையும் போக்கித் தூய்மையாக்கும் ஊற்றொன்று தாவீதின் வீட்டாருக்கெனவும், யெருசலேம் மக்களுக்கெனவும் புறப்படும்.
2. அந்நாளில், சிலைகளின் பெயர்களை நாட்டிலிருந்து அழித்து அப்புறப்படுத்துவோம்; அதன் பின் அவற்றை யாரும் நினைக்கமாட்டார்கள்; மேலும் போலித் தீர்க்கதரிசிகளையும் அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து ஓட்டிவிடுவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
3. எவனாவது மறுபடி தீர்க்கதரிசியாகத் தோன்றுவானாகில், அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர், 'நீ ஆண்டவர் பெயரால் பொய்கள் பேசுகிறபடியால், நீ உயிர் வாழ்தல் கூடாது' என்று அவனிடம் சொல்லுவார்கள்; அவன் தீர்க்கதரிசனம் சொல்லும் போதே அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர் அவனைக் குத்திக் கொன்று போடுவார்கள்.
4. அந்நாளில் தீர்க்கதரிசிகளுள் ஒவ்வொருவனும் தீர்க்கதரிசனம் சொல்லும் போது தான் சொல்லும் காட்சியைக் குறித்துத் தானே வெட்கப்படுவான்; பொய் சொல்வதற்காக மயிராலான மேலாடையைப் போர்த்துக் கொண்டு வரமாட்டான்;
5. ஆனால், 'நான் ஒரு தீர்க்கதரிசி அல்லேன்; நிலத்தை உழுகிற உழவன் தான்; என் இளமை முதலே நான் நிலத்தை உழுது பயிர்செய்து வாழ்ந்து வருகிறேன்' என்று சொல்லுவான்.
6. உன் உடலில் இந்தக் காயங்கள் உண்டானதெப்படி?' என்று அவனைக் கேட்டால்,' என் நண்பர்களின் வீட்டில் நான் பட்ட காயங்கள் இவை' என்று அவன் சொல்வான்."
7. வாளே, எழுந்திரு; என் மேய்ப்பனுக்கும், என் நெருங்கிய நண்பனுக்கும் எதிராக நீ கிளம்பி வா, என்கிறார் சேனைகளின் ஆண்டவர். மேய்ப்பனை வெட்டுவோம், ஆடுகள் சிதறிப்போம், நம் கையைச் சிறியவை மேல் திருப்புவோம்.
8. நாடெங்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெட்டுண்டு மாண்டு போவார்கள், மூன்றில் ஒரு பங்கு மக்களே எஞ்சியிருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
9. இந்த மூன்றிலொரு பங்கையும் நெருப்பிலிட்டு வெள்ளியைச் சுத்தம் செய்வது போலச் சுத்தம் செய்வோம், பொன்னைப் புடமிடுவது போல் அவர்களைப் புடமிடுவோம்; அவர்கள் நம் பெயரைக் கூவியழைப்பார்கள், நாமும் அவர்களுக்குச் செவிசாய்ப்போம்; 'இவர்கள் எம் மக்கள்' என்போம் நாம், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 14 Chapters, Current Chapter 13 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
சகரியா 13:8

×

Alert

×

tamil Letters Keypad References