தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உன்னதப்பாட்டு
1. தலைமகன்: என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு! உன் முகத்திரைக்குப் பின்னால் இருக்கின்ற உன்னுடைய கண்கள் வெண்புறாக்கள். உனது கருங் கூந்தல் கலாத் மலைச் சரிவில் செல்லும் வெள்ளாட்டு மந்தையை ஒத்துள்ளது.
2. மயிர்கத்தரித்த பின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறும் ஆட்டு மந்தை போன்றவை உன் பற்கள்; அவ்வாடுகள் எல்லம் இரட்டைக் குட்டி போட்டன; அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
3. உன்னுடைய இதழ்கள் செம்பட்டு நூலிழைகள், உன்னுடைய சொற்கள் இனிமையானவை; உன் முகத்திரைக்குப் பின் இருக்கும் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழத்தையொக்கும்.
4. உன் கழுத்து அரண்கள் இடப்பட்ட தாவீதின் கோபுரத்துக்கு நிகரானது. அங்கே வீரர்களின் கேடயங்களான ஆயிரம் பரிசைகள் தொங்குகின்றன
5. உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், லீலிகள் நடுவில் மேயும் இரட்டை வெளிமான் கன்றுகள்
6. வைகல் விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையதற்கும் சாம்பிராணிக் குன்றுக்கும் போய் விடுவேன்.
7. என் அன்பே, நீ அழகே உருவானவள், உன்னில் மாசு மறுவே கிடையாது.
8. லீபானிலிருந்து வா, என் மணமகளே, லீபானிலிருந்து வந்திடுவாய். அமனா மலையுச்சி, சானீர், ஏர்மோன் முதலிய மலைகளின் கொடுமுடியிலிருந்தும் சிங்கக் குகைகள், சிவிங்கி மறைவிடங்கள் ஆகியவற்றினின்றும் இறங்கிவா.
9. என் தங்காய்! என் மணமகளே! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே! உன் கண்களின் நோக்கு ஒன்றினாலும் உன் கழுத்து ஆரத்தின் ஒரு முத்தினாலும் உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே!
10. உன் காதலின்பம் எவ்வளவு இனிமை! என் தங்காய்! என் மணமகளே! உன் காதலின்பம் திராட்சை இரசத்தைக் காட்டிலும், உன் தைலங்களின் மணம் பரிமளத்தைக் காட்டிலும், எவ்வளவோ மிகுந்த சிறப்புள்ளவை.
11. என் மணமகளே! உன் இதழ்கள் தேறலைச் சிந்துகின்றன; உன் நாவின் அடியில் தேனும் பாலும் இருக்கின்றன; உன் ஆடைகள் பரப்பும் நறுமணமோ லீபானின் நறுமணம் போல் கமழ்கின்றதே.
12. பூட்டப்பட்ட தோட்டம் நீ, என் தங்காய்! என் மணமகளே! பூட்டப்பட்ட தோட்டம் நீ, முத்திரையிடப்பட்ட நீரூற்று நீ.
13. மாதுளைப் பழத்தோட்டமாய் நீ தளிர்த்தாய், அங்கே மணங்கமழ் மரஞ்செடிகொடிகள் எல்லாம் உள்ளன;
14. நளத்தம், குங்குமம், வசம்பு, லவங்கம், சாம்பிராணி மரங்கள் அனைத்தும், வெள்ளைப் போளமும் கரிய போளமும், இன்னும் எல்லாச் சிறந்த நறுமணப் பொருட்களும் உள்ளன.
15. தோட்டத்தைச் செழிப்பிக்கும் நீருற்று, உயிருள்ள நீர் சுரக்கும் கிணறு; லீபானிலிருந்து வழிந்தோடும் நீரோடைகளுமுள்ன.
16. தலைமகள்: வாடையே, எழுந்திடுக; தென்றலே, வந்திடுக; என் தோட்டத்தின் மேல் வீசிடுக; அதன் நறுமணம் எங்கும் பரவட்டும்.
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 8
1 2 3 4 5 6 7 8
1 தலைமகன்: என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு! உன் முகத்திரைக்குப் பின்னால் இருக்கின்ற உன்னுடைய கண்கள் வெண்புறாக்கள். உனது கருங் கூந்தல் கலாத் மலைச் சரிவில் செல்லும் வெள்ளாட்டு மந்தையை ஒத்துள்ளது. 2 மயிர்கத்தரித்த பின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறும் ஆட்டு மந்தை போன்றவை உன் பற்கள்; அவ்வாடுகள் எல்லம் இரட்டைக் குட்டி போட்டன; அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை. 3 உன்னுடைய இதழ்கள் செம்பட்டு நூலிழைகள், உன்னுடைய சொற்கள் இனிமையானவை; உன் முகத்திரைக்குப் பின் இருக்கும் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழத்தையொக்கும். 4 உன் கழுத்து அரண்கள் இடப்பட்ட தாவீதின் கோபுரத்துக்கு நிகரானது. அங்கே வீரர்களின் கேடயங்களான ஆயிரம் பரிசைகள் தொங்குகின்றன 5 உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், லீலிகள் நடுவில் மேயும் இரட்டை வெளிமான் கன்றுகள் 6 வைகல் விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையதற்கும் சாம்பிராணிக் குன்றுக்கும் போய் விடுவேன். 7 என் அன்பே, நீ அழகே உருவானவள், உன்னில் மாசு மறுவே கிடையாது. 8 லீபானிலிருந்து வா, என் மணமகளே, லீபானிலிருந்து வந்திடுவாய். அமனா மலையுச்சி, சானீர், ஏர்மோன் முதலிய மலைகளின் கொடுமுடியிலிருந்தும் சிங்கக் குகைகள், சிவிங்கி மறைவிடங்கள் ஆகியவற்றினின்றும் இறங்கிவா. 9 என் தங்காய்! என் மணமகளே! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே! உன் கண்களின் நோக்கு ஒன்றினாலும் உன் கழுத்து ஆரத்தின் ஒரு முத்தினாலும் உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே! 10 உன் காதலின்பம் எவ்வளவு இனிமை! என் தங்காய்! என் மணமகளே! உன் காதலின்பம் திராட்சை இரசத்தைக் காட்டிலும், உன் தைலங்களின் மணம் பரிமளத்தைக் காட்டிலும், எவ்வளவோ மிகுந்த சிறப்புள்ளவை. 11 என் மணமகளே! உன் இதழ்கள் தேறலைச் சிந்துகின்றன; உன் நாவின் அடியில் தேனும் பாலும் இருக்கின்றன; உன் ஆடைகள் பரப்பும் நறுமணமோ லீபானின் நறுமணம் போல் கமழ்கின்றதே. 12 பூட்டப்பட்ட தோட்டம் நீ, என் தங்காய்! என் மணமகளே! பூட்டப்பட்ட தோட்டம் நீ, முத்திரையிடப்பட்ட நீரூற்று நீ. 13 மாதுளைப் பழத்தோட்டமாய் நீ தளிர்த்தாய், அங்கே மணங்கமழ் மரஞ்செடிகொடிகள் எல்லாம் உள்ளன; 14 நளத்தம், குங்குமம், வசம்பு, லவங்கம், சாம்பிராணி மரங்கள் அனைத்தும், வெள்ளைப் போளமும் கரிய போளமும், இன்னும் எல்லாச் சிறந்த நறுமணப் பொருட்களும் உள்ளன. 15 தோட்டத்தைச் செழிப்பிக்கும் நீருற்று, உயிருள்ள நீர் சுரக்கும் கிணறு; லீபானிலிருந்து வழிந்தோடும் நீரோடைகளுமுள்ன. 16 தலைமகள்: வாடையே, எழுந்திடுக; தென்றலே, வந்திடுக; என் தோட்டத்தின் மேல் வீசிடுக; அதன் நறுமணம் எங்கும் பரவட்டும்.
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 8
1 2 3 4 5 6 7 8
×

Alert

×

Tamil Letters Keypad References