தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உன்னதப்பாட்டு
1. சாரோனில் பூத்த மலர் நான், பள்ளத்தாக்குகளில் தோன்றிய லீலிமலர்.
2. முட்களின் நடுவில் முளைத்த லீலியைப் போலவே இளங் கன்னியர் நடுவில் விளங்குகிறாள் என் அன்புடையாள்.
3. காட்டு மரங்களிடை ஓங்கி நிற்கும் கிச்சிலி மரம் போல இளங்காளையர் நடுவில் விளங்குகிறார் என் காதலரே! மிகுந்த இன்பத்துடன் அவர் நிழலில் அமர்ந்தேன், அவரது பழம் என் நாவுக்கு இனிப்பாய் இருந்தது.
4. திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள் என்னைக் கூட்டிச் சென்றார்; அன்பு என்னும் கொடியை என் மேல் பறக்க விட்டார்.
5. திராட்சை அடைகள் தந்தென்னை உறுதிப்படுத்துங்கள், கிச்சிலிப் பழங்களால் என்னை ஊக்குவியுங்கள், காதல் நோய் மிகுதியால் சோர்ந்து போனேன்.
6. அவரது இடக்கையால் என் தலையை அணைத்துக் கொண்டு, வலக்கையால் அவர் என்னைத் தழுவிடுவார்.
7. யெருசலேமின் மங்கையரே, அன்புடையாளை எழுப்பாதீர், தானே விழிக்கும் வரை தட்டி எழுப்பாதீர். வெளிமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை!
8. இரண்டாம் கவிதை: தலைமகள்: என் காதலர் குரல் கேட்கிறது! மலைகள் மேல் தாவிக்கொண்டு குன்றுகளைக் குதித்துத் தாண்டி அதோ, அவர் வந்துவிட்டார்.
9. என் காதலர் வெளிமானுக்கும் கலைமானுக்கும் ஒப்பானவர். இதோ, எங்கள் மதிற்புறத்தே அவர்தான் வந்து நின்றுகொண்டு பலகணி வழியாய்ப் பார்க்கின்றார், பலகணிக் கம்பிகள்வழி நோக்குகிறார்.
10. இதோ, என் காதலர் என்னை நோக்கி, உரையாடி என்னிடம் சொல்லுகிறார்: "எழுந்திரு, என் அன்பே! என் அழகுருவே! எழுந்து வா.
11. இதோ, குளிர் காலம் கடந்து விட்டது, மழையும் பெய்து ஓய்ந்து விட்டது,
12. தரையில் மலர்கள் தோன்றுகின்றன, பாடி மகிழும் காலம் வந்துவிட்டது; காட்டுப் புறாவின் கூவுதலும், நம் நாட்டில் எங்கும் கேட்கின்றது.
13. அத்தி மரம் புதிதாய்க் காய்க்கிறது, திராட்சைக் கொடிகள் மலர்கின்றன; எங்கும் நறுமணம் வீசுகிறது. எழுந்திரு, என் அன்பே! என் அழகுருவே! எழுந்து வா.
14. பாறைப் பிளவுகளிலும் கன்மலை வெடிப்புகளிலும், தங்கியிருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு உன் முகத்தை, உயர்த்திடு உன் குரலை. உன் குரல் இனிமை, உன் முகம் அழகே!"
15. நரிகளை, சிறிய நரிகளை எமக்காகப் பிடியுங்கள். திராட்சைத் தோட்டங்களை அவை பாழாக்குகின்றன, நம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.
16. என் காதலர் எனக்குரியர், நான் அவருக்குரியவள்; அவர் தம் மந்தையை லீலிகள் நடுவில் (மேய்க்கிறார்.)
17. வைகல் விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள், என் காதலரே திரும்பி வருக! பிளந்த மலைகளில் உள்ள வெளிமானுக்கும் இளங்கலைமானுக்கும் ஒப்பாய்த் தோன்றுக!
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 8
1 2 3 4 5 6 7 8
1 சாரோனில் பூத்த மலர் நான், பள்ளத்தாக்குகளில் தோன்றிய லீலிமலர். 2 முட்களின் நடுவில் முளைத்த லீலியைப் போலவே இளங் கன்னியர் நடுவில் விளங்குகிறாள் என் அன்புடையாள். 3 காட்டு மரங்களிடை ஓங்கி நிற்கும் கிச்சிலி மரம் போல இளங்காளையர் நடுவில் விளங்குகிறார் என் காதலரே! மிகுந்த இன்பத்துடன் அவர் நிழலில் அமர்ந்தேன், அவரது பழம் என் நாவுக்கு இனிப்பாய் இருந்தது. 4 திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள் என்னைக் கூட்டிச் சென்றார்; அன்பு என்னும் கொடியை என் மேல் பறக்க விட்டார். 5 திராட்சை அடைகள் தந்தென்னை உறுதிப்படுத்துங்கள், கிச்சிலிப் பழங்களால் என்னை ஊக்குவியுங்கள், காதல் நோய் மிகுதியால் சோர்ந்து போனேன். 6 அவரது இடக்கையால் என் தலையை அணைத்துக் கொண்டு, வலக்கையால் அவர் என்னைத் தழுவிடுவார். 7 யெருசலேமின் மங்கையரே, அன்புடையாளை எழுப்பாதீர், தானே விழிக்கும் வரை தட்டி எழுப்பாதீர். வெளிமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! 8 இரண்டாம் கவிதை: தலைமகள்: என் காதலர் குரல் கேட்கிறது! மலைகள் மேல் தாவிக்கொண்டு குன்றுகளைக் குதித்துத் தாண்டி அதோ, அவர் வந்துவிட்டார். 9 என் காதலர் வெளிமானுக்கும் கலைமானுக்கும் ஒப்பானவர். இதோ, எங்கள் மதிற்புறத்தே அவர்தான் வந்து நின்றுகொண்டு பலகணி வழியாய்ப் பார்க்கின்றார், பலகணிக் கம்பிகள்வழி நோக்குகிறார். 10 இதோ, என் காதலர் என்னை நோக்கி, உரையாடி என்னிடம் சொல்லுகிறார்: "எழுந்திரு, என் அன்பே! என் அழகுருவே! எழுந்து வா. 11 இதோ, குளிர் காலம் கடந்து விட்டது, மழையும் பெய்து ஓய்ந்து விட்டது, 12 தரையில் மலர்கள் தோன்றுகின்றன, பாடி மகிழும் காலம் வந்துவிட்டது; காட்டுப் புறாவின் கூவுதலும், நம் நாட்டில் எங்கும் கேட்கின்றது. 13 அத்தி மரம் புதிதாய்க் காய்க்கிறது, திராட்சைக் கொடிகள் மலர்கின்றன; எங்கும் நறுமணம் வீசுகிறது. எழுந்திரு, என் அன்பே! என் அழகுருவே! எழுந்து வா. 14 பாறைப் பிளவுகளிலும் கன்மலை வெடிப்புகளிலும், தங்கியிருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு உன் முகத்தை, உயர்த்திடு உன் குரலை. உன் குரல் இனிமை, உன் முகம் அழகே!" 15 நரிகளை, சிறிய நரிகளை எமக்காகப் பிடியுங்கள். திராட்சைத் தோட்டங்களை அவை பாழாக்குகின்றன, நம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன. 16 என் காதலர் எனக்குரியர், நான் அவருக்குரியவள்; அவர் தம் மந்தையை லீலிகள் நடுவில் (மேய்க்கிறார்.) 17 வைகல் விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள், என் காதலரே திரும்பி வருக! பிளந்த மலைகளில் உள்ள வெளிமானுக்கும் இளங்கலைமானுக்கும் ஒப்பாய்த் தோன்றுக!
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 8
1 2 3 4 5 6 7 8
×

Alert

×

Tamil Letters Keypad References