தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ரோமர்
1. பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள என் மனச் சான்று எனக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன், கிறிஸ்துவுக்குள் உண்மையேசொல்லுகிறேன், பொய்சொல்லவில்லை.
2. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும், இடைவிடாத வேதனையும் உண்டு;
3. இரத்த உறவினரான என் சகோதரர்களுக்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகவும் தயங்கேன். அவர்கள் இஸ்ராயேல் மக்கள் அல்லரா?
4. அவர்களே கடவுளின் மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், அவர்களிடையில் தான் இறைவன் தம் மாட்சிமையை விளங்கச் செய்தார், உடன்படிக்கைகளும் திருச்சட்டமும், இறை வழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டன.
5. குலத் தந்தையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள்; மனிதன் என்ற முறையில் கிறிஸ்துவும் அவர்களினின்றே தோன்றினார். இவரோ எல்லாவற்றிற்கும் மேலான கடவுள், என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
6. கடவுளின் வார்த்தை பொய்த்தது என்பது கருத்தன்று. ஏனெனில், இஸ்ராயேல் மரபில் தோன்றிய அனைவருமே இஸ்ராயேலர் அல்லர்.
7. ஆபிரகாமின் வழிவந்தவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் அல்லர்; மறை நூலில், 'உன் பெயரைத் தாங்க உன் வழிவந்தோர் ஈசாக்கின் வழியாய்த்தான் பிறப்பர்' என்று உள்ளதன்றோ?
8. அதாவது இயல்பு முறைப்படி பிறந்த பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகள் அல்லர்; வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகளே ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.
9. 'குறிப்பிட்ட காலத்தில் திரும்பவும் வருவேன்; அப்பொழுது சாராள் ஒரு மகனுக்குத் தாயாய் இருப்பாள்' என்பதே அந்த வாக்குறுதி.
10. அது மட்டுமன்று, நம் தந்தையாகிய ஈசாக்கு என்னும் ஒருவரிடமிருந்தே ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தாங்கிய போதிலும்,
11. குழந்தைகள் பிறக்குமுன்பே, நன்மையோ தீமையோ செய்யுமுன்பே,
12. ' மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ் செய்வான் ' என்று அவளுக்குச் சொல்லப்பட்டது.
13. அவ்வாறே, ' யாக்கோபின் மேல் அன்பு கூர்ந்தேன். ஏசாவை வெறுத்தேன் ' என்று எழுதியுள்ளது. தாமே விரும்பித் தேர்ந்தெடுப்பதே கடவுளுடைய திட்டத்துக்கு அடிப்படை; மனிதர் செய்யும் செயல்களின்படி அன்று, அழைக்கும் இறைவனின் செயலின்படியே அத்திட்டம் நிறைவேறுமாறு அங்ஙனம் நிகழ்ந்தது.
14. இப்படியிருக்க நாம் என்ன சொல்வது? கடவுளிடம் அநீதியுண்டோ? ஒரு காலும் இல்லை.
15. ஏனெனில் அவரே மோயீசனிடம், ' எவனுக்கு இரக்கம் காட்டவிரும்புகிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன்; எவனுக்குக் கருணைபுரிய விரும்புகிறேனோ, அவனுக்கு கருணை புரிவேன் ' என்கிறார்.
16. ஆகவே விரும்புகிறவனாலும் அன்று, உழைக்கிறவனாலும் அன்று, இரக்கம் வைக்கும் கடவுளாலேயே எதுவும் ஆகும்.
17. ஏனெனில், பார்வோனுக்கு மறைநூல் கூறுவது: ' உன் வழியாய் என் வல்லமையைக் காட்டவும், என் பெயர் மண்ணுலகெங்கும் விளங்கவுமே நான் உன்னைத் தோற்றுவித்தேன் '.
18. ஆகவே தாம் விரும்புவதுபோல் ஒருவன் மேல் இரக்கம் வைக்கிறார், இன்னோருவனை அடங்காமனத்தினன் ஆக்குகிறார்.
19. ' அப்படியானால், அவர் ஒருவன் மீது எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? அவருடைய விருப்பத்தை யார் எதிர்க்கக் கூடும்?' என்று நீ கேள்வி கேட்கலாம்.
20. அற்ப மனிதா! கடவுளுக்கு எதிர் வினா விடுக்க நீ யார்? பாத்திரம் தன்னை உருவாக்கியவனிடம், ஏன் என்னை இவ்வாறு செய்தாய் என்று சொல்லுமோ?
21. ஒரே களிமண் மொத்தையிலிருந்து மதிப்புயர்ந்த கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு அம்மண்மீது உரிமையில்லையோ?
22. கடவுளின் செயலும் இத்தகையதே. தமது சினத்தைக் காட்டவும், தமது வல்லமையைத் தெரியப்படுத்தவும் அவர் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்கள் மட்டில் கடவுள் மிக்க பொறுமையாய் இருந்தாராயின், யார் என்ன சொல்ல முடியும்?
23. அதன் மூலம் தம் மாட்சிமையையும் இரக்கத்தையும் பெறுமாறு அவர் தயாரித்திருந்த கலன்கள் மட்டில் தமது மாட்சிமையின் வளத்தைத் தெரியப்படுத்த விரும்பினார்.
24. அந்தக் கலன்கள் யூதர்களிடையிலிருந்து மட்டுமன்று, புறவினத்தாரிடையிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நம்மையே குறிக்கின்றன.
25. அவ்வாறே ஓசே எழுதிய நூலில் இறைவன்: ' என் மக்கள் அல்லாதவரை என் மக்கள் என அழைப்பேன். அன்பு செய்யப்படாதவளை அன்பு செய்யப்பட்டவள் என அழைப்பேன்.
26. " நீங்கள் என் மக்கள் அல்ல" என்று அவர்களுக்குச் சொல்லியிருந்த இடத்திலேயே, அவர்கள் உயிருள்ள கடவுளின் மக்கள் எனப்படுவர் '. என்கிறார்.
27. இஸ்ராயேலைக் குறித்து இசையாஸ் அறிக்கையிட்டது: ' இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தாலும், எஞ்சியிருப்பவர்களே மீட்கப்படுவர்.
28. இஸ்ராயேல் நாட்டில் ஆண்டவர் காலந்தாழ்த்தாமல் தமது வார்த்தையை முற்றிலும் நிறைவேற்றுவார்'.
29. மேலும் இசையாஸ் முன்னுரைத்ததுபோல்: ' வான் படைகளின் ஆண்டவர் நமக்கு வேராகிலும் விட்டு வைத்திராவிடில், சோதோமைப் போல் ஆகியிருப்போம், கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம். '
30. அப்படியானால், இதன் முடிவென்ன? புறவினத்தார் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஏற்புடையவர்கள் ஆனதோ விசுவாசத்தினாலே.
31. ஆனால், இறைவனுக்கு ஏற்புடையவர்களாக்கும் சட்டத்தை இஸ்ராயேல் மக்கள் பின்பற்ற முயன்றபோதிலும் அதன் உட்பொருளைக் கண்டடையவில்லை. ஏன்?
32. ஏனெனில், விசுவாசத்தின் மீது அன்று, செயல்களின் மீது நம்பிக்கை வைத்தனர்.
33. ' இதோ தடுக்கி விழச் செய்யும் கல்லையும் இடறலான பாறையையும் சீயோனில் வைக்கிறேன். அதிலே விசுவாசம் வைப்பவன் ஏமாற்றம் அடையான் ' என்று எழுதியுள்ளவாறு, தடுக்கி விழச் செய்யும் கல்லின் மேல் தடுக்கி விழுந்தனர்.

பதிவுகள்

மொத்தம் 16 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
1 பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள என் மனச் சான்று எனக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன், கிறிஸ்துவுக்குள் உண்மையேசொல்லுகிறேன், பொய்சொல்லவில்லை. 2 உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும், இடைவிடாத வேதனையும் உண்டு; 3 இரத்த உறவினரான என் சகோதரர்களுக்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகவும் தயங்கேன். அவர்கள் இஸ்ராயேல் மக்கள் அல்லரா? 4 அவர்களே கடவுளின் மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், அவர்களிடையில் தான் இறைவன் தம் மாட்சிமையை விளங்கச் செய்தார், உடன்படிக்கைகளும் திருச்சட்டமும், இறை வழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டன. 5 குலத் தந்தையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள்; மனிதன் என்ற முறையில் கிறிஸ்துவும் அவர்களினின்றே தோன்றினார். இவரோ எல்லாவற்றிற்கும் மேலான கடவுள், என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென். 6 கடவுளின் வார்த்தை பொய்த்தது என்பது கருத்தன்று. ஏனெனில், இஸ்ராயேல் மரபில் தோன்றிய அனைவருமே இஸ்ராயேலர் அல்லர். 7 ஆபிரகாமின் வழிவந்தவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் அல்லர்; மறை நூலில், 'உன் பெயரைத் தாங்க உன் வழிவந்தோர் ஈசாக்கின் வழியாய்த்தான் பிறப்பர்' என்று உள்ளதன்றோ? 8 அதாவது இயல்பு முறைப்படி பிறந்த பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகள் அல்லர்; வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகளே ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். 9 'குறிப்பிட்ட காலத்தில் திரும்பவும் வருவேன்; அப்பொழுது சாராள் ஒரு மகனுக்குத் தாயாய் இருப்பாள்' என்பதே அந்த வாக்குறுதி. 10 அது மட்டுமன்று, நம் தந்தையாகிய ஈசாக்கு என்னும் ஒருவரிடமிருந்தே ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தாங்கிய போதிலும், 11 குழந்தைகள் பிறக்குமுன்பே, நன்மையோ தீமையோ செய்யுமுன்பே, 12 ' மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ் செய்வான் ' என்று அவளுக்குச் சொல்லப்பட்டது. 13 அவ்வாறே, ' யாக்கோபின் மேல் அன்பு கூர்ந்தேன். ஏசாவை வெறுத்தேன் ' என்று எழுதியுள்ளது. தாமே விரும்பித் தேர்ந்தெடுப்பதே கடவுளுடைய திட்டத்துக்கு அடிப்படை; மனிதர் செய்யும் செயல்களின்படி அன்று, அழைக்கும் இறைவனின் செயலின்படியே அத்திட்டம் நிறைவேறுமாறு அங்ஙனம் நிகழ்ந்தது. 14 இப்படியிருக்க நாம் என்ன சொல்வது? கடவுளிடம் அநீதியுண்டோ? ஒரு காலும் இல்லை. 15 ஏனெனில் அவரே மோயீசனிடம், ' எவனுக்கு இரக்கம் காட்டவிரும்புகிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன்; எவனுக்குக் கருணைபுரிய விரும்புகிறேனோ, அவனுக்கு கருணை புரிவேன் ' என்கிறார். 16 ஆகவே விரும்புகிறவனாலும் அன்று, உழைக்கிறவனாலும் அன்று, இரக்கம் வைக்கும் கடவுளாலேயே எதுவும் ஆகும். 17 ஏனெனில், பார்வோனுக்கு மறைநூல் கூறுவது: ' உன் வழியாய் என் வல்லமையைக் காட்டவும், என் பெயர் மண்ணுலகெங்கும் விளங்கவுமே நான் உன்னைத் தோற்றுவித்தேன் '. 18 ஆகவே தாம் விரும்புவதுபோல் ஒருவன் மேல் இரக்கம் வைக்கிறார், இன்னோருவனை அடங்காமனத்தினன் ஆக்குகிறார். 19 ' அப்படியானால், அவர் ஒருவன் மீது எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? அவருடைய விருப்பத்தை யார் எதிர்க்கக் கூடும்?' என்று நீ கேள்வி கேட்கலாம். 20 அற்ப மனிதா! கடவுளுக்கு எதிர் வினா விடுக்க நீ யார்? பாத்திரம் தன்னை உருவாக்கியவனிடம், ஏன் என்னை இவ்வாறு செய்தாய் என்று சொல்லுமோ? 21 ஒரே களிமண் மொத்தையிலிருந்து மதிப்புயர்ந்த கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு அம்மண்மீது உரிமையில்லையோ? 22 கடவுளின் செயலும் இத்தகையதே. தமது சினத்தைக் காட்டவும், தமது வல்லமையைத் தெரியப்படுத்தவும் அவர் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்கள் மட்டில் கடவுள் மிக்க பொறுமையாய் இருந்தாராயின், யார் என்ன சொல்ல முடியும்? 23 அதன் மூலம் தம் மாட்சிமையையும் இரக்கத்தையும் பெறுமாறு அவர் தயாரித்திருந்த கலன்கள் மட்டில் தமது மாட்சிமையின் வளத்தைத் தெரியப்படுத்த விரும்பினார். 24 அந்தக் கலன்கள் யூதர்களிடையிலிருந்து மட்டுமன்று, புறவினத்தாரிடையிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நம்மையே குறிக்கின்றன. 25 அவ்வாறே ஓசே எழுதிய நூலில் இறைவன்: ' என் மக்கள் அல்லாதவரை என் மக்கள் என அழைப்பேன். அன்பு செய்யப்படாதவளை அன்பு செய்யப்பட்டவள் என அழைப்பேன். 26 " நீங்கள் என் மக்கள் அல்ல" என்று அவர்களுக்குச் சொல்லியிருந்த இடத்திலேயே, அவர்கள் உயிருள்ள கடவுளின் மக்கள் எனப்படுவர் '. என்கிறார். 27 இஸ்ராயேலைக் குறித்து இசையாஸ் அறிக்கையிட்டது: ' இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தாலும், எஞ்சியிருப்பவர்களே மீட்கப்படுவர். 28 இஸ்ராயேல் நாட்டில் ஆண்டவர் காலந்தாழ்த்தாமல் தமது வார்த்தையை முற்றிலும் நிறைவேற்றுவார்'. 29 மேலும் இசையாஸ் முன்னுரைத்ததுபோல்: ' வான் படைகளின் ஆண்டவர் நமக்கு வேராகிலும் விட்டு வைத்திராவிடில், சோதோமைப் போல் ஆகியிருப்போம், கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம். ' 30 அப்படியானால், இதன் முடிவென்ன? புறவினத்தார் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஏற்புடையவர்கள் ஆனதோ விசுவாசத்தினாலே. 31 ஆனால், இறைவனுக்கு ஏற்புடையவர்களாக்கும் சட்டத்தை இஸ்ராயேல் மக்கள் பின்பற்ற முயன்றபோதிலும் அதன் உட்பொருளைக் கண்டடையவில்லை. ஏன்? 32 ஏனெனில், விசுவாசத்தின் மீது அன்று, செயல்களின் மீது நம்பிக்கை வைத்தனர். 33 ' இதோ தடுக்கி விழச் செய்யும் கல்லையும் இடறலான பாறையையும் சீயோனில் வைக்கிறேன். அதிலே விசுவாசம் வைப்பவன் ஏமாற்றம் அடையான் ' என்று எழுதியுள்ளவாறு, தடுக்கி விழச் செய்யும் கல்லின் மேல் தடுக்கி விழுந்தனர்.
மொத்தம் 16 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
×

Alert

×

Tamil Letters Keypad References