தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ரோமர்
1. அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகும்படி பாவத்தில் நிலைத்திருப்போம் என்போமா? ஒருகாலும் இல்லை.
2. பாவத்திற்கு இறந்துவிட்ட நாம் எவ்வாறு இன்னும் அதிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியும்?
3. கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம் என்பதை அறியீர்களா?
4. ஆகவே, இறந்தோரிடமிருந்து கிறிஸ்து பரம தந்தையின் மாட்சிமையால் எழுதப்பட்டதுபோல நாமும் புத்துயிர் பெற்றவர்களாய் வாழும்படி ஞானஸ்நானத்தின் வழியாய் அவரோடு இறந்து புடைக்கப்பட்டோம்.
5. ஏனெனில், அவருடைய மரணத்தின் சாயலைத் தாங்கி, அவரோடு பொருத்தி இணைக்கப்பட்டால், உயிர்த்தெழுதலின் சாயலையும் தாங்கி, அவரோடு இணைக்கப்படுவோம்.
6. நாம் இனிப் பாவத்துக்கு அடிமையாய் இராதபடி பாவத்துக்கு உட்பட்ட உடல் அழிந்து போகுமாறு நம்முடைய பழைய இயல்பு அவரோடு சிலுவையில் அறையுண்டது என்பது நமக்குத் தெரியும்.
7. செத்தவன் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டான் அன்றோ?
8. கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நம் விசுவாசம்;
9. இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்லர் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
10. அவர் சாவுக்குள்ளானார்; அந்தச் சாவு பாவத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வாழ்க்கையை ஒரே முறையில் எக்காலத்திற்கும் ஒழித்துவிட்ட சாவு அவர் வாழ்கிறார்; அந்த வாழ்வு கடவுளுக்காக வாழும் வாழ்வு
11. அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் செத்தவர்கள்; கிறிஸ்து இயேசுவுக்குள் கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என எண்ணிக்கொள்ளுங்கள்.
12. ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம், சாவுக்குரிய உங்கள் உடலில் ஆட்சி செலுத்தாதிருப்பதாக.
13. நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீமைசெய்யும் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்படைக்காதீர்கள்; மாறாக, இறந்தோர்களிடமிருந்து உயிர்த்து வாழ்கிறவர்களாய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகள் இருக்கட்டும்.
14. பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்துதல் ஆகாது; நீங்கள் சட்டத்தின் அதிகாரத்தில் இல்லை; இறையருளின் அதிகாரத்திலே இருக்கிறீர்கள்.
15. ஆகவே, என்ன சொல்வோம்? சட்டத்தின் அதிகாரத்தில் இல்லாமல், இறையருளின் அதிகாரத்தில் இருப்பதால் நாம் பாவம் செய்யலாம் என்போமா? ஒருகாலும் இல்லை.
16. எவனுக்குக் கீழ்ப்படிந்து அடிமைகளாக உங்களைக் கையளிக்கிறீர்களோ, அவனுக்கு நீங்கள் அடிமை என்பது உங்களுக்குத் தெரியாதா ? சாவுக்கு உட்படுத்தும் பாவத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகள். இறைவனுக்கு ஏற்புடையவராக்கும் கீழ்ப்படிதலுக்கு உட்பட்டால், நீங்கள் அதற்கு அடிமைகள்.
17. ஆனால், முன்னே பாவத்தின் அடிமைகளாய் இருந்த நீங்கள் உங்களிடம் கையளிக்கப்பட்ட படிப்பினையின் ஒழுங்குக்கு முழு மனத்துடன் கீழ்ப்படிந்தீர்கள்; இதற்காகக் கடவுளுக்கு நன்றி.
18. பாவத்தினின்று நீங்கள் விடுதலை பெற்று, இறைவனுக்கு ஏற்புடைய நிலைக்கு உங்களை அடிமைகள் ஆக்கிக் கொண்டீர்கள்.
19. நீங்கள் வலுவற்ற மனிதத் தன்மையுள்ளவர்கள் என்பதை மனத்திற்கொண்டு, மனிதர் பேசும் முறையில் பேசுகிறேன்; அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை முன்பு நீங்கள் அடிமைகள் ஆக்கியிருந்தீர்கள்; அதுபோல இப்பொழுது பரிசுத்தத்தில் மலரும் ஏற்புடைய வாழ்வுக்கு உங்கள் உறுப்புகளை உட்படுத்திக்கொள்ளுங்கள்.
20. நீங்கள் பாவத்தின் அடிமைகளாய் இருந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமைகள் ஆகாதிருந்தீர்கள்.
21. இப்பொழுது உங்களை நாணச் செய்யும் செயல்களையே நீங்கள் அப்போது செய்துவந்தீர்கள்; அவற்றால் நீங்கள் கண்ட பலன் யாது? அவற்றின் முடிவு சாவே
22. ஆனால், 'இப்பொழுது பாவத்தினின்று விடுதலைபெற்றுக் கடவுளின் அடிமைகள் ஆனீர்கள்; இதனால் உங்களுக்குக் கிடைத்துள்ள பலன் நீங்கள் பரிசுத்தர்கள் ஆவதே; அதன் முடிவு முடிவில்லா வாழ்வு.
23. ஏனெனில், பாவம் கொடுக்கும் கூலி சாவு, கடவுள் அளிக்கும் அருட்கொடையோ நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் முடிவில்லா வாழ்வு
மொத்தம் 16 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16
1 அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகும்படி பாவத்தில் நிலைத்திருப்போம் என்போமா? ஒருகாலும் இல்லை. 2 பாவத்திற்கு இறந்துவிட்ட நாம் எவ்வாறு இன்னும் அதிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியும்? 3 கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம் என்பதை அறியீர்களா? 4 ஆகவே, இறந்தோரிடமிருந்து கிறிஸ்து பரம தந்தையின் மாட்சிமையால் எழுதப்பட்டதுபோல நாமும் புத்துயிர் பெற்றவர்களாய் வாழும்படி ஞானஸ்நானத்தின் வழியாய் அவரோடு இறந்து புடைக்கப்பட்டோம். 5 ஏனெனில், அவருடைய மரணத்தின் சாயலைத் தாங்கி, அவரோடு பொருத்தி இணைக்கப்பட்டால், உயிர்த்தெழுதலின் சாயலையும் தாங்கி, அவரோடு இணைக்கப்படுவோம். 6 நாம் இனிப் பாவத்துக்கு அடிமையாய் இராதபடி பாவத்துக்கு உட்பட்ட உடல் அழிந்து போகுமாறு நம்முடைய பழைய இயல்பு அவரோடு சிலுவையில் அறையுண்டது என்பது நமக்குத் தெரியும். 7 செத்தவன் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டான் அன்றோ? 8 கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நம் விசுவாசம்; 9 இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார். இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்லர் என்று நாம் அறிந்திருக்கிறோம். 10 அவர் சாவுக்குள்ளானார்; அந்தச் சாவு பாவத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வாழ்க்கையை ஒரே முறையில் எக்காலத்திற்கும் ஒழித்துவிட்ட சாவு அவர் வாழ்கிறார்; அந்த வாழ்வு கடவுளுக்காக வாழும் வாழ்வு 11 அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் செத்தவர்கள்; கிறிஸ்து இயேசுவுக்குள் கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என எண்ணிக்கொள்ளுங்கள். 12 ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம், சாவுக்குரிய உங்கள் உடலில் ஆட்சி செலுத்தாதிருப்பதாக. 13 நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீமைசெய்யும் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்படைக்காதீர்கள்; மாறாக, இறந்தோர்களிடமிருந்து உயிர்த்து வாழ்கிறவர்களாய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகள் இருக்கட்டும். 14 பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்துதல் ஆகாது; நீங்கள் சட்டத்தின் அதிகாரத்தில் இல்லை; இறையருளின் அதிகாரத்திலே இருக்கிறீர்கள். 15 ஆகவே, என்ன சொல்வோம்? சட்டத்தின் அதிகாரத்தில் இல்லாமல், இறையருளின் அதிகாரத்தில் இருப்பதால் நாம் பாவம் செய்யலாம் என்போமா? ஒருகாலும் இல்லை. 16 எவனுக்குக் கீழ்ப்படிந்து அடிமைகளாக உங்களைக் கையளிக்கிறீர்களோ, அவனுக்கு நீங்கள் அடிமை என்பது உங்களுக்குத் தெரியாதா ? சாவுக்கு உட்படுத்தும் பாவத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகள். இறைவனுக்கு ஏற்புடையவராக்கும் கீழ்ப்படிதலுக்கு உட்பட்டால், நீங்கள் அதற்கு அடிமைகள். 17 ஆனால், முன்னே பாவத்தின் அடிமைகளாய் இருந்த நீங்கள் உங்களிடம் கையளிக்கப்பட்ட படிப்பினையின் ஒழுங்குக்கு முழு மனத்துடன் கீழ்ப்படிந்தீர்கள்; இதற்காகக் கடவுளுக்கு நன்றி. 18 பாவத்தினின்று நீங்கள் விடுதலை பெற்று, இறைவனுக்கு ஏற்புடைய நிலைக்கு உங்களை அடிமைகள் ஆக்கிக் கொண்டீர்கள். 19 நீங்கள் வலுவற்ற மனிதத் தன்மையுள்ளவர்கள் என்பதை மனத்திற்கொண்டு, மனிதர் பேசும் முறையில் பேசுகிறேன்; அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை முன்பு நீங்கள் அடிமைகள் ஆக்கியிருந்தீர்கள்; அதுபோல இப்பொழுது பரிசுத்தத்தில் மலரும் ஏற்புடைய வாழ்வுக்கு உங்கள் உறுப்புகளை உட்படுத்திக்கொள்ளுங்கள். 20 நீங்கள் பாவத்தின் அடிமைகளாய் இருந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமைகள் ஆகாதிருந்தீர்கள். 21 இப்பொழுது உங்களை நாணச் செய்யும் செயல்களையே நீங்கள் அப்போது செய்துவந்தீர்கள்; அவற்றால் நீங்கள் கண்ட பலன் யாது? அவற்றின் முடிவு சாவே 22 ஆனால், 'இப்பொழுது பாவத்தினின்று விடுதலைபெற்றுக் கடவுளின் அடிமைகள் ஆனீர்கள்; இதனால் உங்களுக்குக் கிடைத்துள்ள பலன் நீங்கள் பரிசுத்தர்கள் ஆவதே; அதன் முடிவு முடிவில்லா வாழ்வு. 23 ஏனெனில், பாவம் கொடுக்கும் கூலி சாவு, கடவுள் அளிக்கும் அருட்கொடையோ நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் முடிவில்லா வாழ்வு
மொத்தம் 16 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16
×

Alert

×

Tamil Letters Keypad References