தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ரோமர்
1. ஆளும் அதிகாரம் கொண்டவர்களுக்கு எவனாயினும் அடங்கியிருப்பானாக. ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை; இப்பொழுதுள்ள ஆட்சி பீடங்களைக் கடவுளே நிறுவினார்.
2. ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்பவன் கடவுளின் நிறுவனத்தையே எதிர்த்து நிற்கிறான். அவ்வாறு எதிர்த்து நிற்பவர்கள், தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள்.
3. எனெனில் நற்செயல் செய்பவன் ஆள்வோருக்கு அஞ்சவேண்டியதில்லை. தீச்செயல் செய்பவனே அஞ்சவேண்டும். அதிகாரிகளுக்கு அச்சமின்றி வாழ விரும்பினால், நன்மை செய். அவர்களிடமிருந்து உனக்குப் பாராட்டும் கிடைக்கும்.
4. ஏனெனில் அவர்கள் உனக்கு நன்மை செய்வதற்கென்றே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பணியாளர்கள். ஆனால், நீ தீமை செய்தால், அஞ்சவேண்டியது தான். அவர்கள் கையில் தண்டிக்கும் அதிகாரம் வீணாக இல்லை; தீமை செய்பவளைப் பழிவாங்கக் கடவுளால் குறிக்கப்பட்ட ஏவலர்கள் அவர்கள்; அவரது தண்டனையை அவன்மேல் வரச்செய்பவர்கள்.
5. ஆகவே அந்தத் தண்டனையை நினைத்து மட்டுமன்று, மனச்சாட்சியின் பொருட்டும் அடங்கியிருத்தல் வேண்டும்,.
6. இதற்காகவே நீங்கள் வரிகள் செலுத்துகிறீர்கள். ஏனெனில் அரசினர் தங்கள் பணியில் ஈடுபடும்போது கடவுளுக்கே தொண்டு செய்கின்றனர்.
7. ஆகையால், அவரவர்க்குத் செலுத்த வேண்டியதை அவரவர்க்குச் செலுத்துங்கள். வரிப்பணம் வாங்குவோருக்கு வரிப்பணமும், தீர்வைக் கேட்போருக்குத் தீர்வையும் செலுத்துங்கள். அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள். மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.
8. யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்புசெய்வது நீங்கள் செலுத்தவேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்,. பிறரிடத்தில் அன்பகூர்பவன் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவன் ஆகிறான்.
9. ஏனெனில், 'விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, இச்சிக்காதே 'என்னும் கட்டளைகளும் வேறு எந்தக் கட்டளையும் 'உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீது அன்பு காட்டுவாயாக' என்னும் ஒரே கட்டளையில் சுருக்கமாய் அடங்கியுள்ளன.
10. அன்பு பிறர்க்குத் தீமை செய்யாது. ஆகவே. திருச்சட்டத்தின் நிறைவு அன்பே.
11. இறுதிக்காலம் இதுவே என நீங்கள் அறிந்தவர்களாய் இப்படி நடந்து கொள்ளுங்கள்; விழித்தெழும் நேரம் ஏற்கனவே வந்து விட்டது. ஏனெனில் நாம் விசுவசிக்கத் தொடங்கிய போது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.
12. இரவு முடியப்போகிறது. பகல் அண்மையிலுள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக.
13. பகலில் ஒழுகுவதுபோல் கண்ணியமாக நடந்து கொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, காமம், ஒழுக்கக்கேடு, சண்டை, பொறாமை, இவற்றையெல்லாம் தவிர்த்து,
14. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். வலுவற்ற உங்கள் இயல்பைப் பேணுபவர்களாய், தீய இச்சைகளுக்கு இடங்கொடாதீர்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 13 of Total Chapters 16
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16
ரோமர் 13:1

×

Alert

×

tamil Letters Keypad References