தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
1. பின்பு ஐந்தாம் வானதூதர் எக்காளத்தை ஊதினார். அப்போது வானத்திலிருந்து மண்ணில் விழுந்த ஒரு விண்மீனைக் கண்டேன். பாதாளக் குழியின் திறவுகோல் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் பாதாளக் குழியைத் திறந்தார்.
2. குழியிலிருந்து பெருஞ் சூளையைப்போல் புகை எழுப்ப, கதிரவனும் வான்வெளியும் அப்புகையால் இருளடைந்தன.
3. புகையினின்று வெட்டுக்கிளிகள் கிளம்பி மண்ணின்மீது படையெடுத்து வந்தன. தரையிலூரும் தேள்களுக்குள்ள கொடுமை அவற்றிற்கு அளிக்கப்பட்டது.
4. மண்மீதுள்ள புல்லுக்கோ, பசும்பூண்டுக்கோ, மரங்களுக்கோ தீங்கிழைக்காமல், கடவுளின் முத்திரை நெற்றியில் இல்லாதவர்களை மட்டும் தாக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
5. ஆனால் அவர்களைக் கொல்லக் கூடாது; ஐந்து மாத அளவு வேதனைக்குள்ளாக்க வேண்டும் என்பது அவற்றிற்குக் கொடுத்த கட்டளை. அந்த வேதனையோ தேள் கொட்டும்போது ஏற்படும் வேதனைபோல் இருந்தது.
6. அந்நாட்களில் மனிதர் சாவைத் தேடுவர்; ஆனால் சாவதற்கு வழி இராது. அவர்கள் செத்துவிட விரும்புவர்; ஆனால் சாவும் கிட்டவராது.
7. அந்த வெட்டுக்கிளிகள் போருக்குத் தயாரான குதிரைகளைப்போல் காணப்பட்டன. அவற்றின் தலைகளில் பொன் முடிகள் இருந்ததுபோல் தென்பட்டது. அவற்றின் முகங்கள் மனிதரின் முகங்களை ஒத்திருந்தன.
8. அவற்றின் பிடரிமயிர் பெண்களின் கூந்தலையும், அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களையும் ஒத்திருந்தன.
9. மார்பில் இருப்புக் கவசங்கள் அணிந்திருந்ததுபோல் தோன்றிற்று. அவற்றின் சிறகுகளின் இரைச்சல் போர் முனைக்கு விரையும் பெரியதொரு தேர்ப்படையின் இரைச்சல் போன்றிருந்தது.
10. தேள்களைப் போல் அவை வால்களும் கொடுக்குகளும் கொண்டிருந்தன. ஐந்து மாத அளவு மனிதருக்குத் தீங்கு செய்யும் வல்லமை அவற்றின் வாலிலிருந்தது.
11. பாதாளக் குழியின் தூதனே அவற்றின் அரசன். அவன் பெயர் எபிரேய மொழியில் 'அப்த்தோன்', கிரேக்க மொழியில் 'அப்பொல்லியோன்.'
12. இவ்வாறு முதலாவது பெருந்துன்பம் கடந்துவிட்டது. இதோ, இன்னும் இரண்டு பெருந்துன்பங்கள் வரப்போகின்றன.
13. பின்னர் ஆறாம் வானதூதர் எக்காளத்தை ஊதினார். கடவுள் முன் உள்ள பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்து குரலொலி ஒன்று கேட்டேன்.
14. அக்குரல், எக்காளம் வைத்திருந்த ஆறாம் வான தூதரிடம், 'யூப்ரட்டீஸ் என்னும் பேராற்றினருகே கட்டுண்டிருந்த தூதர் நால்வரையும் அவிழ்த்துவிடு" என்றது.
15. அவர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள். மனிதருள் மூன்றிலொரு பாகத்தை அழித்துவிடும்படி, இவ்வாண்டு, இம்மாதம், இந்நாள், இந்நேரம் வருமளவும் அவர்கள் குறித்து வைக்கப்பட்டிருந்தனர்.
16. குதிரைப் படையின் தொகையைச் சொல்லக் கேட்டேன்;
17. அது இருபது கோடி. குதிரைகளையும் குதிரைமேல் ஏறியிருந்தவர்களையும் நான் காட்சியில் கண்டது இவ்வாறு: அவர்கள் நெருப்பு, நீல, கந்தக நிற மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகள் போன்றிருந்தன. நெருப்பும் புகையும் கந்தகமும் அவற்றின் வாயினின்று வெளிவந்தன.
18. அவற்றின் வாயிலிருந்து வெளிவரும் நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய மூன்று வாதைகளால் மனிதருள் மூன்றிலொரு பாகம் கொல்லப்பட்டது.
19. ஏனெனில், குதிரைகளின் கொடுமை அவற்றின் வாய்களிலும், வால்களிலும் உள்ளது. அவற்றின் வால்கள் பாம்புகள் போலிருந்தன.
20. அவற்றிற்குள்ள தலைகளைக் கொண்டு அவை தீங்கு செய்யும். அந்த வாதைகளால் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள், தங்கள் செயல்களை விட்டுவிட்டு மனந்திரும்பவில்லை. பொன், வெள்ளி, செம்பு, கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்டு, பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும், பேய்களையும் வணங்குவதை விட்டுவிடவில்லை.
21. தாங்கள் செய்துவந்த கொலைகள், சூனியங்கள், விபசாரம், களவுகள் இவற்றை விட்டு மனந்திரும்பவில்லை.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Chapters, Current Chapter 9 of Total Chapters 22
வெளிபடுத்தல் 9:19

×

Alert

×

tamil Letters Keypad References