தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
1. பின்பு நான் புதிய வானகமும் புதிய வையகமும் கண்டேன். முதலிலிருந்த வானகமும் வையகமும் மறைந்துபோயின.
2. கடலும் இல்லாமல் போயிற்று. அப்போது புதிய யெருசலேம் ஆகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். மணமகனுக்கென அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல் அது மலர்ந்தது.
3. பின் அரியணையிலிருந்து ஒரு பெருங் குரலைக் கேட்டேன். அக்குரல், "இதோ, கடவுளின் இல்லம் மனிதரிடையே உள்ளது; அவர்களோடு அவர் குடிகொள்வார். அவர்கள் அவருக்கு மக்களாயிருப்பர்; கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்.
4. அவர்களுடைய கண்ணீரனைத்தையும் துடைத்துவிடுவார்; இனிச் சாவில்லை, புலம்பலில்லை, அழுகையில்லை, நோவில்லை முன்னிருந்தவை மறைந்து போயின" என்றது.
5. அரியணை மீது வீற்றிருந்தவர், "இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்" என்றார். மேலும், "இவ்வார்த்தைகள் நம்பத்தக்கவை, உண்மையானவை என்று எழுது" என்றார்.
6. பின், என்னைப் பார்த்துச் சொன்னதாவது: "எல்லாம் முடிந்துவிட்டது. அகரமும் னகரமும் நானே- தொடக்கமும் முடிவும் நானே. தாகமாயிருக்கிறவனுக்கு வாழ்வின் ஊற்றிலிருந்து இலவசமாய் நீர் கொடுப்பேன்.
7. வெற்றிகொள்பவன் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்வான். நான் அவனுக்குக் கடவுளாய் இருப்பேன். அவன் எனக்கு மகனாய் இருப்பான்.
8. கோழைகள், விசுவாசமற்றவர்கள், அருவருப்புக்குரியவர்கள், கொலைகாரர்கள், காமுகர், சூனியம் வைப்பவர்கள், சிலை வழிபாட்டினர் முதலிய பொய்யர்கள் அனைவருக்கும் கந்தக நெருப்பு எரியும் கடலே உரிய பங்காகும். இதுவே இரண்டாவது சாவு.
9. அதன்பின் இறுதி ஏழு வாதைகளால் நிரம்பிய கலசங்களை ஏந்திய ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்தார். அவர் என்னைப் பார்த்து: "வா, செம்மறியானவர் மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டப் போகிறேன்" என்றார்.
10. தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர், உயர்ந்ததொரு பெரிய மலைக்கு என்னைக் கொண்டு சென்றார். கடவுளிடமிருந்து விண்ணினின்று யெருசலெம் நகர் இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.
11. கடவுளுடைய மாட்சிமை அதைச் சூழ்ந்திருந்தது. அது விலைமிக்க இரத்தினக்கல் போலும், பளிங்கென ஒளிவீசும் மணிக்கல் போலும் சுடர்விட்டது.
12. உயர்ந்ததொரு பெரிய மதில் அதைச் சூழ்ந்திருந்தது. அதற்குப் பன்னிரு வாயில்கள் காணப்பட்டன. அவ்வாயில்களில் பன்னிரு தூதர்கள் நின்றர்கள். இஸ்ராயேலின் பன்னிரு குலத்தாரின் பெயர்கள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
13. கிழக்கே மூன்று, வடக்கே மூன்று, தெற்கே மூன்று, மேற்கே மூன்று வாயில்கள் இருந்தன.
14. நகரின் மதில் பன்னிரு அடிக்கற்கள் மேல் கட்டப்பட்டிருந்தது. அவற்றின் மேல் செம்மறியின் பன்னிரு அப்போஸ்தலர்களின் பன்னிரு பெயர்களும் இருந்தன.
15. என்னோடு பேசியவர் நகரையும் அதன் வாயில்களையும் மதிலையும் அளக்கும்பொருட்டு ஒரு பொன் அளவுகோலைக் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.
16. அந்நகரம் சதுரமாக இருந்தது; அதன் நீளமும் அகலமும் ஒரே அளவு. அவர் கோலைக்கொண்டு நகரத்தை அளந்தார். நூற்றைம்பது காதம் இருந்தது. அதன் நீளமும் அகலமும் உயரமும் ஒரே அளவாக இருந்தன. அவர் தம் மதிலையும் அளந்தார்.
17. அதன் உயரம் நூற்றுநாற்பத்து நான்கு முழும். வானதூதர் பயன்படுத்திய அளவு மனிதரிடையே வழங்கும் அளவுகளே.
18. மதில் மணிக்கல்லால் கட்டப்பட்டிருந்தது. அந்நகரமோ பழுதற்ற கண்ணாடிபோன்ற பசும் பொன்னாலானது.
19. நகர மதில்களின் அடிக்கற்கள் எல்லாவித இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதல் அடிக்கல் மணிக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கம், நான்காவது மரகதம்,
20. ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புட்பராகம், பத்தாவது வைடூரியம், பதினொன்றாவது இந்திரநீலம். பன்னிரண்டாவது சுகந்தி.
21. பன்னிரு வாயில்களும் பன்னிரு முத்துகளால் ஆனவை. ஒவ்வொரு வாயிலும் ஒரு முத்தாலானது. நகரின் வீதி பழுதற்ற கண்ணாடிபோன்ற பசும்பொன்னாலானது.
22. அதனுள் நான் ஆலயத்தைக் காணவில்லை. கடவுளாகிய ஆண்டவரும் செம்மறியுமே அதன் ஆலயம்.
23. அந்நகருக்கு ஒளிகொடுக்க கதிரவனோ நிலவோ தேவையில்லை. கடவுளுடைய மாட்சிமை அதற்கு ஒளி வீசியது; செம்மறியே அதன் விளக்கு;
24. அதன் ஒளியில் எல்லா நாட்டு மக்களும் நடந்து செல்வர்; மண்ணக அரசர் தங்களிடம் மகிமையாய் உள்ளதெல்லாம் அதனுள் கொண்டுவருவர்.
25. அதன் வாயில்கள் நாளெல்லாம் திறந்திருக்கும்.
26. அங்கு இரவே இராது. நாடுகளில் உள்ள மகிமை பெருமையானதெல்லாம் அதனுள் கொண்டு வரப்படும்.
27. ஆனால் மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையாது. அருவருப்பானதும் பொய்யானதும் செய்பவர்கள் அங்கு நுழைவதில்லை. செம்மறியானவர் வைத்திருக்கும் வாழ்வு நூலில் எழுதப்பட்டிருப்பவர் மட்டுமே அங்குச் செல்வர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Chapters, Current Chapter 21 of Total Chapters 22
வெளிபடுத்தல் 21:25

×

Alert

×

tamil Letters Keypad References