தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
1. இதற்குப்பின் பெரும் வல்லமையுள்ள இன்னொரு வானதூதர் விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். மண்ணுலகு அவரது மாட்சியால் மிகுந்த ஒளி பெற்றது.
2. அவர் உரத்த குரலில் கூறினதாவது; 'வீழ்ந்தது, வீழ்ந்தது, பாபிலோன் மாநகர், அது பேய்களின் உறைவிடமாயிற்று, அசுத்த ஆவியெல்லாம் நடமாடும் கூடமாயிற்று, அசுத்தமும் அருவருப்பும் மிக்க பறவைகள் எல்லாம் வாழும் கூடம் ஆதுவே.
3. அவ்வேசி காமவெறி என்னும் தன் மதுவை நாடுகள் எல்லாம் குடிக்கச் செய்தாள். மண்ணக அரசர்கள் அவளோடு விபசாரம் செய்தனர். அவளது செல்வச் செருக்கினால் மண்ணக வணிகர்கள் செல்வம் திரட்டினர்.'
4. பின்னர் விண்ணினின்று இன்னொரு குரலைக் கேட்டேன். அது சொன்னதாவது "என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும், அவளுக்கு நேரும் வாதைகளில் அகப்படாதிருக்கவும், அவளைவிட்டுப் போய்விடுங்கள்.
5. அவளுடைய பாவங்கள் வானளாவக் குவிந்துவிட்டன; அவளுடைய அநீதச் செயல்களைக் கடவுள் நினைவில் வைத்துள்ளார்.
6. அவள் கொடுத்ததற்கேற்றபடி திருப்பிக் கொடுங்கள்; அவள் செயல்களுக்கேற்றவாறு இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்; அவள் கலந்து கொடுத்த கிண்ணத்தில் இரு மடங்காகக் கலந்து கொடுங்கள்.
7. அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச் செருக்குடன் வாழ்ந்த அளவுக்கு வேதனையும் துயரமும் அவளுக்குக் கொடுத்துவிடுங்கள். 'நான் அரசியாக வீற்றிருக்கிறேன், நான் கைம்பெண் அல்லேன், ஒருநாளும் துயருறேன்' என்று தன் இதயத்தில் கூறினாளன்றோ?
8. ஆகவே, சாவு, துயரம், பஞ்சம் ஆகிய வாதைகளெல்லாம் ஒரே நாளில் அவள்மீது வந்து விழும்; நெருப்பு அவளை எரித்துவிடும்: ஏனெனில் அவளுக்குத் தீர்ப்பிடும் ஆண்டவராகிய கடவுள் வல்லமை மிக்கவர்.'
9. அவளோடு விபசாரம் செய்து செல்வச் செருக்கோடு வாழ்ந்த மண்ணக அரசர்கள் அவள் எரியும்போது எழும் புகையைப் பார்த்துப் பார்த்து
10. அவளுடைய வேதனைகளுக்கு அஞ்சி, தொலைவிலே நின்று, 'ஐயோ! ஐயோ! வல்லமை மிக்க நகரே! பாபிலோன் மாநகரே ஒரு மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்து விட்டதே" என்று அழுது புலம்புவார்கள்.
11. மண்ணக வணிகர்களும் அவளுக்காக அழுது புலம்புவார்கள். ஏனெனில் அவர்களுடைய சரக்குகளை வாங்குவோர் யாரும் இல்லை.
12. பொன், வெள்ளி, இரத்தினங்கள், முத்துக்கள், மெல்லிய துணி, இரத்தாம்பரம், பட்டாடை, செந்நிற ஆடை, வாசனைக் கட்டைகள், தந்தப் பொருட்கள், விலையுயர்ந்த மரம், வெண்கலம், இரும்பு, சலவைக் கல் இவற்றாலான பொருட்கள்,
13. இலவங்கம், ஓமம், தூபவர்க்கம், பரிமளத்தைலம், சாம்பிராணி, திராட்சை இரசம், எண்ணெய், மெதுமாவு, கோதுமை, ஆடுகள், மாடுகள், குதிரைகள், தேர்கள், அடிமைகள், மனித உயிர்கள் இவையெல்லாம் வாங்க யாருமில்லை.
14. "நீ இச்சித்த கனிகள் எட்டாமல் போயின. உன் பகட்டும் மினுக்கும் எல்லாம் ஒழிந்தன. இனி யாரும் அவற்றைக் காணப்போவதில்லை" என்பார்கள்.
15. இச்சரக்குகளைக்கொண்டு, அவளோடு வாணிபம்செய்து, செல்வம் திரட்டியவர்கள் அவளுடைய வேதனைகளுக்கு அஞ்சி, தொலைவிலே நின்று:
16. "ஐயோ, ஐயோ, மாநகரே! மெல்லிய துணியும் இரத்தாம்பரமும் செந்நிற ஆடையும் அணிந்து, பொன் இரத்தினம் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவளே,
17. ஒரு மணி நேரத்தில் உன் செல்வமெல்லாம் அழிந்து போய்விட்டதே" என்று அழுது புலம்புவார்கள். கப்பல் தலைவர்கள், கடல் பயணஞ் செய்வோர், கப்பலோட்டிகள், கடல் வணிகர்கள் அனைவருமே தொலைவில் நின்று,
18. அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்துப் பார்த்து, "இம் மாநகர்க்கு நிகரான ஒரு நகருண்டோ?" என்று கத்தினார்கள்.
19. புழுதியை வாரித் தலைமேல் போட்டுக்கொண்டு, "ஐயோ, ஐயோ, கடலின் கப்பல் செலுத்திய அனைவரையும் தன் செல்வ வளத்தால் செல்வமிக்கவராக்கிய இம் மாநகர் ஒரு மணி நேரத்தில் பாழாகிவிட்டதே" என்று அழுது புலம்பினர்.
20. 'வானகமே, இறைமக்களே, அப்போஸ்தலர்களே, இறைவாக்கினரே, அவளைப் பார்த்து அகமகிழுங்கள்; உங்கள் சார்பாகக் கடவுள் அவளைப் பழிவாங்கிவிட்டார்."
21. வலிமை மிக்க வானதூதர் ஒருவர் எந்திரக் கல்போன்றதொரு பெரிய கல்லை எடுத்து, கடலில் எறிந்து சொன்னதவாது: "பாபிலோன் மாநகர் இவ்வாறே வீசி எறியப்படும்; இருந்த இடம் தெரியாமல் அது மறைந்து விடும்.
22. யாழ் மீட்டுபவர், பாடகர், குழல் வாசிப்பவர், எக்காளம் ஊதுவோர் இவர்களின் ஓசை இனி உன்னிடம் ஒருபோதும் எழாது. எத்தொழில் துறையிலும் உள்ள தொழிலாளிகள் இனியொருபோதும் உன்னகத்தே காணப்படமாட்டார்கள் எந்திரக் கல் அரைக்கும் ஓசை இனி ஒருபோதும் உன்னகத்தே கேட்காது.
23. விளக்கொளி உன்னிடம் இனி ஒருபோதும் ஒளிராது; மணவிழாவின் மங்கல ஒலி இனி ஒருபோதும் உன்னிடம் எழாது. உன் வணிகர்கள் மண்ணகத்தில் தனிச்சிறப்புற்று விளங்கினர். உன் மந்திர மாயத்தால் எல்லா நாடுகளும் ஏமாந்தன.
24. இறைவாக்கினரின் இரத்தமும், இறைமக்களின் இரத்தமும், மண்ணுலகில் கொல்லப்பட்ட அனைவரின் இரத்தமுமே அவளிடம் காணப்பட்டது."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Chapters, Current Chapter 18 of Total Chapters 22
வெளிபடுத்தல் 18:11

×

Alert

×

tamil Letters Keypad References