தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
1. பின், ஆலயத்தினின்று உரத்த குரல் ஒன்றைக் கேட்டேன்: "நீங்கள் போய், கடவுளின் கோபம் நிறைந்த ஏழு கலசங்களையும் மண்ணுலகின்மீது ஊற்றுங்கள்" என்று அக்குரல் ஏழு வானதூதர்களிடமும் கூறியது.
2. முதல் வானதூதர் போய், தம் கலசத்தை மண்ணுலகின்மீது ஊற்றவே, கொடிய விலங்கின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள், அதன் சிலையைத் தொழுதவர்கள் உடம்பெல்லாம் மிகக் கொடிய புண் உண்டாயிற்று.
3. இரண்டாவது வானதூதர் தம் கலசத்தைக் கடலில் ஊற்றவே, அது பிணத்தின் இரத்தம் போல் மாறியது. கடலில் வாழும் உயிர்கள் அனைத்தும் மடிந்தன.
4. மூன்றாவது வானதூதர் தம் கலசத்தை ஆறுகள்மீதும், நீரூற்றுக்கள்மீதும் ஊற்றவே, அவையும் இரத்தமாயின.
5. நீர்த்திரளைப் பார்வையிடும் வானதூதர் இவ்வாறு சொல்லக் கேட்டேன்: "இருக்கிறவரும் இருந்தவருமான புனிதரே! இங்ஙனம் தீர்ப்பிடும் நீர் நீதியுள்ளவர்.
6. ஏனெனில், பரிசுத்தருடைய இரத்தத்தையும், இறைவாக்கினருடைய இரத்தத்தையும் மக்கள் சிந்தியதால், நீர் அவர்களுக்கு இரத்தத்தையே குடிக்கக் கொடுத்தீர். இது அவர்களுக்குத் தகுந்த தண்டனையே."
7. பீடத்தினின்று எழுந்த குரலும், "ஆம், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, உம் தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவையே" என்றது.
8. நான்காவது வானதூதர் தம் கலசத்தைக் கதிரவன் மீது ஊற்றவே, அது மனிதரை நெருப்பாய் எரிக்கும் வன்மை பெற்றது.
9. கடும் வெப்பத்தால் மனிதர் எரிக்கப்பட்டவர்களாய், இவ்வாதைகளின் மீது வன்மை கொண்டிருந்த கடவுளின் பெயரை அவர்கள் தூஷித்தார்களேயொழிய, மனந்திரும்பி அவரை மகிமைப்படுத்த விரும்பவில்லை.
10. ஐந்தாவது வானதூதர் தமது கலசத்தை விலங்கின் அரியணை மீது ஊற்றவே, அதன் அரசை இருள் கவ்வியது. பட்டபாட்டைத் தாங்க முடியாமல் மக்கள் தங்கள் நாவைக் கடித்துக்கொண்டனர்.
11. தங்கள் பாடுகளையும், புண்களையும் முன்னிட்டு, விண்ணகக் கடவுளைத் தூஷித்தார்களேயொழிய, தங்கள் செயல்களை விட்டுவிட்டு மனந்திரும்பவில்லை.
12. ஆறாவது வானதூதர் தமது கலசத்தைப் பெரிய யூப்ரடீஸ் ஆற்றில் ஊற்றவே, தண்ணீர் வற்றிப்போக, கீழ்த்திசை மன்னர்களுக்கு வழியுண்டாயிற்று.
13. பறவைநாகத்தின் வாயினின்றும் விலங்கின் வாயினின்றும் போலித் தீர்க்கதரிசிகளின் வாயினின்றும் தவளை வடிவில் மூன்று அசுத்த ஆவிகள் வெளிவரக் கண்டேன்.
14. அவை அருங்குறிகளைப் புரியும் பேய்களின் ஆவிகள். எல்லாம் வல்ல கடவுளின் பெருநாளிலே போர் செய்யுமாறு உலகனைத்திலுமுள்ள அரசர்களை ஒன்றுசேர்க்க அவை செல்லுகின்றன. இதோ நான் திருடனைப்போல் வருகின்றேன்.
15. ஆடையின்றி எல்லார் முன்னிலும் வெட்கி நிற்க நேராதவாறு ஆடைகளைக் களையாமல் விழித்திருப்பவன் பேறுபெற்றவன்.
16. எபிரேய மொழியில் அர்மகெதோன் எனப்படும் இடத்தில் அரசர்களை அவை ஒன்று சேர்த்தன.
17. ஏழாவது வானதூதர் தம் கலசத்தை வான் வெளியில் ஊற்றவே, ஆலயத்தின் அரியணையினின்று. 'முடிந்துவிட்டது' என்றொரு பெருங்குரல் ஒலித்தது.
18. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் உண்டாயின. பெரியதொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. மனிதன் மண்ணில் தோன்றிய நாள்முதல், இதுவரை இத்தகைய நிலநடுக்கம் உண்டானதேயில்லை. அது அவ்வளவு கொடியதாய் இருந்தது.
19. அந்தப் பெருநகரம் மூன்று பாகங்களாகப் பிரிந்து போயிற்று; மாநிலத்தின் நகரங்கள் இடிந்து விழுந்தன. பாபிலோன் மாநகரையும் பழிவாங்கக் கடவுள் மறக்கவில்லை;
20. தம் கடுங்கோபம் என்னும் மதுக் கிண்ணத்தைக் குடிக்கச் செய்தார். எல்லாம் மறைந்து போயின. மலைகளும் இருந்த இடம் தெரியாமல் போயின.
21. அம்மிக் கல் போலக் கல்மழை விண்ணின்று மக்கள் மீது பெய்தது. கல்மழையால் ஏற்பட்ட இவ்வாதை மிகக் கொடியதாய் இருந்ததால், மக்கள் கடவுளைத் தூஷித்தனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Chapters, Current Chapter 16 of Total Chapters 22
வெளிபடுத்தல் 16:2

×

Alert

×

tamil Letters Keypad References