தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
2. ஆண்டவரைப் பாடுங்கள், அவர் பெயரை வாழ்த்துங்கள்: அவர் தரும் மீட்பை நாடோறும் அறிவியுங்கள்.
3. புற இனத்தாரிடையே அவரது மாட்சிமையை எடுத்துச் சொல்லுங்கள்: மக்கள் அனைவரிடையிலும் அவர்தம் வியத்தகு செயல்களைக் கூறுங்கள்.
4. ஏனெனில், மாண்பு மிக்கவர் ஆண்டவர், மிகு புகழ்ச்சிக்குரியவர்: தெய்வங்கள் அனைத்தையும் விட அச்சத்துக்குரியவர்.
5. ஏனெனில், புற இனத்தார் தெய்வங்களெல்லாம் வெறுமையே: ஆண்டவரோ வானங்களைப் படைத்தவர்.
6. மகத்துவமும் மேன்மையும் அவர்முன் செல்லும்: வல்லமையும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன.
7. மக்கள் இளத்தோரே, ஆண்டவருக்குச் செலுத்துங்கள்: மகிமையும் வல்லமையும் ஆண்டவருக்குச் செலுத்துங்கள்.
8. அவரது பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: பலிப்பொருளை ஏந்தி அவர்தம் ஆலய முற்றங்களில் செல்லுங்கள்.
9. திருவுடை அணிந்து ஆண்டவரை வணங்குங்கள்: மாநிலமே நீ அவர் முன் நடுங்குவாயாக.
10. மாநிலத்தோரே, நீங்கள் புறவினத்தாரிடையே அறிவியுங்கள்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகை அவர் நிலை நிறுத்தியுள்ளார். அது அசைவுறாது: மக்களை அவர் நேர்மையுடன் ஆள்கின்றார்.
11. வானங்கள் மகிழட்டும், பூவுலகம் களிகூரட்டும்: கடலும் அதில் வாழ்வனவும் ஆரவாரம் செய்யட்டும்.
12. வயல் வெளியும் அதில் உள்ள அனைத்தும் ஆர்ப்பரிக்கட்டும்: காட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் அப்போது ஆண்டவர் முன் மகிழ்ச்சியுறும்.
13. ஏனெனில், அவர் வருகின்றார்: பூவுலகை ஆட்சி செய்ய வருகின்றார், பூவுலகை அவர் நீதியுடன் ஆட்சி செய்வார்: மக்களை அவர் தம் சொல்லுறுதியால் ஆள்வார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 96 / 150
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 2 ஆண்டவரைப் பாடுங்கள், அவர் பெயரை வாழ்த்துங்கள்: அவர் தரும் மீட்பை நாடோறும் அறிவியுங்கள். 3 புற இனத்தாரிடையே அவரது மாட்சிமையை எடுத்துச் சொல்லுங்கள்: மக்கள் அனைவரிடையிலும் அவர்தம் வியத்தகு செயல்களைக் கூறுங்கள். 4 ஏனெனில், மாண்பு மிக்கவர் ஆண்டவர், மிகு புகழ்ச்சிக்குரியவர்: தெய்வங்கள் அனைத்தையும் விட அச்சத்துக்குரியவர். 5 ஏனெனில், புற இனத்தார் தெய்வங்களெல்லாம் வெறுமையே: ஆண்டவரோ வானங்களைப் படைத்தவர். 6 மகத்துவமும் மேன்மையும் அவர்முன் செல்லும்: வல்லமையும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன. 7 மக்கள் இளத்தோரே, ஆண்டவருக்குச் செலுத்துங்கள்: மகிமையும் வல்லமையும் ஆண்டவருக்குச் செலுத்துங்கள். 8 அவரது பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: பலிப்பொருளை ஏந்தி அவர்தம் ஆலய முற்றங்களில் செல்லுங்கள். 9 திருவுடை அணிந்து ஆண்டவரை வணங்குங்கள்: மாநிலமே நீ அவர் முன் நடுங்குவாயாக. 10 மாநிலத்தோரே, நீங்கள் புறவினத்தாரிடையே அறிவியுங்கள்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகை அவர் நிலை நிறுத்தியுள்ளார். அது அசைவுறாது: மக்களை அவர் நேர்மையுடன் ஆள்கின்றார். 11 வானங்கள் மகிழட்டும், பூவுலகம் களிகூரட்டும்: கடலும் அதில் வாழ்வனவும் ஆரவாரம் செய்யட்டும். 12 வயல் வெளியும் அதில் உள்ள அனைத்தும் ஆர்ப்பரிக்கட்டும்: காட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் அப்போது ஆண்டவர் முன் மகிழ்ச்சியுறும். 13 ஏனெனில், அவர் வருகின்றார்: பூவுலகை ஆட்சி செய்ய வருகின்றார், பூவுலகை அவர் நீதியுடன் ஆட்சி செய்வார்: மக்களை அவர் தம் சொல்லுறுதியால் ஆள்வார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 96 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References