தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, நீர் பழிவாங்கும் இறைவன்: பழி வாங்கும் இறைவனே, உம் மாட்சி விளங்கச் செய்யும்.
2. உலகின் நீதிபதியே எழுந்தருளும்: செருக்குற்றோர்களுக்கு உரிய தண்டனையை விதித்திடுவீர்.
3. ஆண்டவரே, தீயோர் எதுவரையில் பெருமிதம் கொள்வர்? கொடியவர் எதுவரையில் செருக்கித் திரிவர்?
4. எதுவரையில் அவர்கள் ஆணவத்துடன் பேசி வாயாடுவர்? அக்கிரமம் செய்வோர் எதுவரையில் பெருமையடித்துக் கொள்வர் ?
5. ஆண்டவரே, உம் மக்களை அவர்கள் நசுக்குகின்றனர். உம் உரிமைப் பொருளான அவர்களை ஒடுக்குகின்றனர்.
6. விதவையையும் வழிப்போக்கனையும் கொல்லுகின்றனர்: திக்கற்றவர்களைச் சாகடிக்கின்றனர்.
7. ஆண்டவர் இதைப் பார்ப்பதில்லை: யாக்கோபின் இறைவன் இதைக் கவனிப்பதில்லை" என்று சொல்லிக் கொள்கின்றனர்.
8. மக்களிடையே அறிவிலிகளாயிப்பவர்களே, இதை உணர்ந்துகொள்ளுங்கள்: அறிவீனர்களே, உங்களுக்கு என்று ஞானம் பிறக்கும்?
9. செவியைக் கொடுத்தவர் கேளாமலிருப்பாரோ? கண்ணை உருவாக்கினவர் பாராமலிருப்பாரோ?
10. எல்லா நாட்டினருக்கும் அறிவூட்டுபவர் தண்டியாமலிருப்பாரோ? மக்களுக்கு அறிவு தருபவர் வாளாவிருப்பாரோ?
11. மனிதரின் எண்ணங்களை ஆண்டவர் அறிவார்: அவை வீண் எண்ணங்கள் என்று அவருக்குத் தெரியும்.
12. ஆண்டவரே, உம்மால் அறிவு புகட்டப்பெறுபவன் பேறு பெற்றவன்: உமது சட்டத்தைக் கொண்டு நீர் யாருக்குக் கற்பிக்கின்றீரோ அவன் பேறுபெற்றவன்.
13. அப்போது அவன் துன்ப நாளிலும் உம்மிடமிருந்து இளைப்பாற்றி அடைவான். தீயவனுக்கோ இறுதியாய்க் குழி வெட்டப்படும்.
14. ஆண்டவர் தம் மக்களைப் புறக்கணிப்பதில்லை: தம் உரிமைப் பொருளானவர்களைக் கைவிடுவதில்லை.
15. நீதிமான்கள் நீதித் தீர்ப்பையே பெறுவர்: நேரிய மனத்தோர் யாவரும் அதையே பின்பற்றுவர்.
16. எனக்குத் தீமை செய்வோரை எதிர்ப்பது யார்? என் சார்பாய் எழுந்து பேசுவது யார்? தீமை செய்வோரை எதிர்த்து என் சார்பாகப் பேசுவது யார்?
17. ஆண்டவர் எனக்குத் துணை செய்திராவிடில், விரைவாகவே என் ஆன்மா கீழுலகம் சென்றிருக்கும்.
18. இதோ, என் நடை தள்ளாடுகிறது" என்று நான் நினைக்கையில், ஆண்டவரே, உம் அருள் என்னைத் தாங்குகிறது.
19. என் இதயத்தில் கவலைகள் மிகும் வேளையில், உமது ஆறுதல் என் ஆன்மாவை இன்பத்தில் ஆழ்த்துகிறது.
20. அநீதத் தீர்ப்பளிப்பவர்கள் உம்மோடு தொடர்பு கொள்வரோ? சட்டம் என்ற பெயரால் தொல்லை கொடுப்பவரோடு உமக்கு ஏது தொடர்பு?
21. நீதிமான்களின் உயிருக்கு அவர்கள் உலை வைக்கின்றனர்: மாசற்றவனின் இரத்தத்தைச் சிந்துகின்றனர்.
22. ஆனால் ஆண்டவர் எனக்கு அசையாத அரண்: என் இறைவன் எனக்கு அடைக்கலப் பாறை.
23. அவர்கள் செய்த தீமை அவர்கள் மேலேயே விழச் செய்வார்; அவர்களுடைய வஞ்சகத்தின் பொருட்டு அவர்களையே அழித்து விடுவார்: ஆண்டவராகிய நம் இறைவன் அவர்களை ஒழித்து விடுவார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 94 of Total Chapters 150
சங்கீதம் 94:132

×

Alert

×

tamil Letters Keypad References