தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மகத்துவத்தை அவர் ஆடையாய் உடுத்தியுள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சைப் போல் அணிந்து கொண்டிருக்கிறார்; பூவுலகை அவர் நிலைப்படுத்தினார், அது அசைவுறாது.
2. ஆதியினின்றே உமது அரியணை நிலையாய் உள்ளது. ஆதியினின்றே நீரும் உள்ளீர்.
3. ஆண்டவரே, வெள்ளம் எழும்புகிறது, வெள்ளம் இரைச்சலுடன் எழும்புகிறது; பேரிரைச்சலுடன் எழும்புகிறது.
4. பெரு வெள்ளத்தின் இரைச்சலை விட ஆண்டவர் வலிமை கொண்டவர் கடலின் அலைகளை விட வலிமை உள்ளவர்: உன்னதத்தில் வலிமை பூண்டவர்.
5. உம்முடைய நியமங்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை: ஆண்டவரே, புனிதமே உமது இல்லத்திற்கு ஏற்றது, எந்நாளும் ஏற்றதே.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 93 / 150
1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மகத்துவத்தை அவர் ஆடையாய் உடுத்தியுள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சைப் போல் அணிந்து கொண்டிருக்கிறார்; பூவுலகை அவர் நிலைப்படுத்தினார், அது அசைவுறாது. 2 ஆதியினின்றே உமது அரியணை நிலையாய் உள்ளது. ஆதியினின்றே நீரும் உள்ளீர். 3 ஆண்டவரே, வெள்ளம் எழும்புகிறது, வெள்ளம் இரைச்சலுடன் எழும்புகிறது; பேரிரைச்சலுடன் எழும்புகிறது. 4 பெரு வெள்ளத்தின் இரைச்சலை விட ஆண்டவர் வலிமை கொண்டவர் கடலின் அலைகளை விட வலிமை உள்ளவர்: உன்னதத்தில் வலிமை பூண்டவர். 5 உம்முடைய நியமங்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை: ஆண்டவரே, புனிதமே உமது இல்லத்திற்கு ஏற்றது, எந்நாளும் ஏற்றதே.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 93 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References