தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவரே, என் முழு உள்ளத்துடன் உம்மைப் புகழுவேன்: உம் வியத்தகு செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
2. உன்னதமானவரே, உம்மை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: உம் பெயருக்குப் புகழ் பாடுவேன்.
3. ஏனென்றால், என் எதிரிகள் பின்னடைந்து போயினர்: உம் திருமுன்னே தடுமாறி ஒழிந்து போயினர்.
4. ஏனெனில், நீர் என் வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்க முன்வந்தீர்: நேர்மையுள்ள நீதிபதியாய் உம் அரியணையில் அமர்ந்தீர்.
5. புற இனத்தாரை அதட்டினீர், தீயோரை அழித்துவிட்டீர்: அவர்களுடைய பெயரையே அடியோடு எடுத்துவிட்டீர்.
6. எதிரிகளின் நகரங்களைத் தரைமட்டமாக்கினீர், அவர்கள் தொலைந்து போயினர், தலையெடுக்காமல் ஒழிந்தே போயினர்: அவர்களுடைய நினைவே இல்லாமற் போய்விட்டது.
7. ஆண்டவரோ என்றும் தம் அரியணையில் அமர்ந்துள்ளார்: நீதி வழங்கத் தம் அரியணையை நிறுவியுள்ளார்.
8. அவர் தாமே உலகினர்க்கெல்லாம் நீதியுடன் தீர்ப்புக் கூறுவார்: நேர்மையோடு மக்களனைவர்க்கும் நீதி வழங்குவார்.
9. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் அடைக்கலமாயிருப்பார்: இடுக்கண் நேரும் போதெல்லாம் ஏற்ற சரண் அவரே.
10. உம் பெயரை அறிந்தோர் உம்மீது நம்பிக்கை கொள்வர்: உம்மைத் தேடுவோரை நீர் கைநெகிழ்வதில்லை, ஆண்டவரே.
11. சீயோனில் உறையும் ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: மக்களினங்களிடையே அவருடைய அருஞ் செயல்களை அறிவியுங்கள்.
12. இரத்தப் பழிவாங்கும் அவர் அவர்களை நினைவில் கொண்டுள்ளார்: எளியோரின் கூக்குரலைக் கேட்க மறவார்.
13. ஆண்டவரே, என்மீது இரக்கம் வையும்: மரண வாயிலிலிருந்து என்னைக் கைதூக்கிவிடுபவரே, என் எதிரிகளின் கையில் நான் படும் துன்பத்தைப் பாரும்.
14. அப்போது சீயோன் நகர வாயில்களில் நான் உம் புகழ்ச்சிகளைச் சாற்றுவேன்: நீர் எனக்களித்த உதவியை நினைத்து அக்களிப்பேன்.
15. புறவினத்தார் தாங்கள் வெட்டிய குழியில் தாங்களே விழுந்தனர்: அவர்கள் மறைவாக வைத்த கண்ணியில் அவர்களுடைய கால்களே சிக்கிக்கொண்டன.
16. ஆண்டவர் தம்மை வெளிப்படுத்தினார், நீதி வழங்கினார்: தான் செய்த செயல்களிலேயே பாவியானவன் அகப்பட்டுக் கொண்டான்.
17. பாவிகள் கீழுலகுக்குப் போய் ஒழிவார்களாக: கடவுளை மறக்கும் புற இனத்தார் அனைவரும் அங்ஙனமே ஒழிவார்களாக.
18. ஏழைகளை இறுதி வரை மறந்து போகமாட்டார் ஆண்டவர்: எளியோர் அவர் மேல் கொண்ட நம்பிக்கை ஒரு நாளும் வீணாகாது.
19. ஆண்டவரே எழுந்தருளும், மனிதனின் கை ஒங்கவிடாதேயும்: உம் திருமுன் புற இனத்தார் எல்லாருக்கும் தீர்ப்பு வழங்கப்படட்டும்.
20. ஆண்டவரே அவர்கள் அனைவரையும் திகிலுறச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்று அவர்கள் உணரட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 150
1 ஆண்டவரே, என் முழு உள்ளத்துடன் உம்மைப் புகழுவேன்: உம் வியத்தகு செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். 2 உன்னதமானவரே, உம்மை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: உம் பெயருக்குப் புகழ் பாடுவேன். 3 ஏனென்றால், என் எதிரிகள் பின்னடைந்து போயினர்: உம் திருமுன்னே தடுமாறி ஒழிந்து போயினர். 4 ஏனெனில், நீர் என் வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்க முன்வந்தீர்: நேர்மையுள்ள நீதிபதியாய் உம் அரியணையில் அமர்ந்தீர். 5 புற இனத்தாரை அதட்டினீர், தீயோரை அழித்துவிட்டீர்: அவர்களுடைய பெயரையே அடியோடு எடுத்துவிட்டீர். 6 எதிரிகளின் நகரங்களைத் தரைமட்டமாக்கினீர், அவர்கள் தொலைந்து போயினர், தலையெடுக்காமல் ஒழிந்தே போயினர்: அவர்களுடைய நினைவே இல்லாமற் போய்விட்டது. 7 ஆண்டவரோ என்றும் தம் அரியணையில் அமர்ந்துள்ளார்: நீதி வழங்கத் தம் அரியணையை நிறுவியுள்ளார். 8 அவர் தாமே உலகினர்க்கெல்லாம் நீதியுடன் தீர்ப்புக் கூறுவார்: நேர்மையோடு மக்களனைவர்க்கும் நீதி வழங்குவார். 9 ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் அடைக்கலமாயிருப்பார்: இடுக்கண் நேரும் போதெல்லாம் ஏற்ற சரண் அவரே. 10 உம் பெயரை அறிந்தோர் உம்மீது நம்பிக்கை கொள்வர்: உம்மைத் தேடுவோரை நீர் கைநெகிழ்வதில்லை, ஆண்டவரே. 11 சீயோனில் உறையும் ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: மக்களினங்களிடையே அவருடைய அருஞ் செயல்களை அறிவியுங்கள். 12 இரத்தப் பழிவாங்கும் அவர் அவர்களை நினைவில் கொண்டுள்ளார்: எளியோரின் கூக்குரலைக் கேட்க மறவார். 13 ஆண்டவரே, என்மீது இரக்கம் வையும்: மரண வாயிலிலிருந்து என்னைக் கைதூக்கிவிடுபவரே, என் எதிரிகளின் கையில் நான் படும் துன்பத்தைப் பாரும். 14 அப்போது சீயோன் நகர வாயில்களில் நான் உம் புகழ்ச்சிகளைச் சாற்றுவேன்: நீர் எனக்களித்த உதவியை நினைத்து அக்களிப்பேன். 15 புறவினத்தார் தாங்கள் வெட்டிய குழியில் தாங்களே விழுந்தனர்: அவர்கள் மறைவாக வைத்த கண்ணியில் அவர்களுடைய கால்களே சிக்கிக்கொண்டன. 16 ஆண்டவர் தம்மை வெளிப்படுத்தினார், நீதி வழங்கினார்: தான் செய்த செயல்களிலேயே பாவியானவன் அகப்பட்டுக் கொண்டான். 17 பாவிகள் கீழுலகுக்குப் போய் ஒழிவார்களாக: கடவுளை மறக்கும் புற இனத்தார் அனைவரும் அங்ஙனமே ஒழிவார்களாக. 18 ஏழைகளை இறுதி வரை மறந்து போகமாட்டார் ஆண்டவர்: எளியோர் அவர் மேல் கொண்ட நம்பிக்கை ஒரு நாளும் வீணாகாது. 19 ஆண்டவரே எழுந்தருளும், மனிதனின் கை ஒங்கவிடாதேயும்: உம் திருமுன் புற இனத்தார் எல்லாருக்கும் தீர்ப்பு வழங்கப்படட்டும். 20 ஆண்டவரே அவர்கள் அனைவரையும் திகிலுறச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்று அவர்கள் உணரட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References