1. தேவ சபையிலே இறைவன் எழுந்துள்ளார்: தேவர்கள் இடையில் நின்று விசாரணை நடத்துகிறார்.
2. எது வரை நீங்கள் அநியாயத் தீர்ப்பு வழங்குவீர்கள்? எது வரை நீங்கள் தீயவர்களுக்குச் சாதகமாகப் பேசுவீர்கள்?
3. சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நியாயத் தீர்ப்பு கூறுங்கள்: தாழ்வுற்றவனுக்கும் ஏழைக்கும் நீதி வழங்குங்கள்.
4. துன்புற்றவனையும் எளியவனையும் விடுவியுங்கள்: தீயவர் கையினின்று அவனுக்கு விடுதலை அளியுங்கள்' என்கிறார்.
5. அறிவின்றி, உணர்வின்றி அவர்கள் இருட்டில் நடக்கிறார்கள்: அதன் விளைவாக பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைவுறுகின்றன.
6. நீங்கள் தேவர்கள்: அனைவரும் உன்னதரின் மக்கள்.
7. எனினும் மனிதரைப் போல் இறப்பீர்கள்' என்று நான் கூறினேன்: எனினும் பிற தலைவர்களுக்குள் ஒருவனைப் போல் வீழ்ந்து அழிவீர்கள்.
8. இறைவா, எழுந்தருளும், உலகுக்கு நீதி வழங்கும்: ஏனெனில், உலக நாடுகளனைத்தின் மீதும் உரிமையுள்ளவர் நீரே.