தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவரே, எம் ஆண்டவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு வியப்புக்குரியது! நீர் உம் மகிமையை வானங்களுக்கு மேலாக விளங்கச் செய்தீர்.
2. உம் எதிரிகள் பின்னடையுமாறு, சிறுவர்களின் வாயும் உம்மை புகழ்ந்தேத்தச் செய்தீர்: எதிரியையும் பகைவனையும் ஒடுக்கவே இங்ஙனம் செய்தீர்.
3. உம்முடைய வானங்களை உம் படைப்புகளை, நீர் அமைத்த நிலவை, விண்மீன்களைக் காணும் போது,
4. மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்க அவன் யார்? அவனைப்பற்றி அக்கறை கொள்ள அவன் யார் என்று சொல்லத் தோன்றுகிறது!
5. வானதூதரை விட அவனைச் சிறிது தாழ்ந்தவனாகப் படைத்தீர்: மாண்பையும் பெருமையையும் அவனுக்கு முடியாகச் சூட்டினீர்.
6. உம் படைப்புகள் அனைத்தின்மீதும் அவனுக்கு அதிகாரம் தந்தீர்: அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
7. ஆடுமாடுகள், வயல் வெளியில் உலவும் விலங்குகள் அனைத்தும், அவனுக்குப் பணியச் செய்தீர்;
8. வானத்துப் பறவைகள், கடலில் வாழும் மீன்கள், அதில் நீந்தும் அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9. ஆண்டவரே, எம் ஆண்டவரே, உலகெங்கும் உமது பெயர் எவ்வளவு வியப்புக்குரியது!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 150
1 ஆண்டவரே, எம் ஆண்டவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு வியப்புக்குரியது! நீர் உம் மகிமையை வானங்களுக்கு மேலாக விளங்கச் செய்தீர். 2 உம் எதிரிகள் பின்னடையுமாறு, சிறுவர்களின் வாயும் உம்மை புகழ்ந்தேத்தச் செய்தீர்: எதிரியையும் பகைவனையும் ஒடுக்கவே இங்ஙனம் செய்தீர். 3 உம்முடைய வானங்களை உம் படைப்புகளை, நீர் அமைத்த நிலவை, விண்மீன்களைக் காணும் போது, 4 மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்க அவன் யார்? அவனைப்பற்றி அக்கறை கொள்ள அவன் யார் என்று சொல்லத் தோன்றுகிறது! 5 வானதூதரை விட அவனைச் சிறிது தாழ்ந்தவனாகப் படைத்தீர்: மாண்பையும் பெருமையையும் அவனுக்கு முடியாகச் சூட்டினீர். 6 உம் படைப்புகள் அனைத்தின்மீதும் அவனுக்கு அதிகாரம் தந்தீர்: அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர். 7 ஆடுமாடுகள், வயல் வெளியில் உலவும் விலங்குகள் அனைத்தும், அவனுக்குப் பணியச் செய்தீர்; 8 வானத்துப் பறவைகள், கடலில் வாழும் மீன்கள், அதில் நீந்தும் அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர். 9 ஆண்டவரே, எம் ஆண்டவரே, உலகெங்கும் உமது பெயர் எவ்வளவு வியப்புக்குரியது!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References