தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. இறைவனே புற இனத்தார் உமது சொந்த நாட்டின் மீது படையெடுத்தார்கள்; உமது திருக்கோயிலை தீட்டுப்படுத்தினார்கள்: யெருசலேமைத் தரை மட்டமாக்கினார்கள்.
2. உம் அடியார்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கு இரையாக்கினார்கள்: உம் புனிதர்களின் உடல்களை விலங்குகளுக்கு உணவாகத் தந்தார்கள்.
3. அவர்களுடைய இரத்தத்தை யெருசலேமைச் சுற்றித் தண்ணீர் போல் இறைத்தார்கள்: அவர்களை அடக்கம் செய்வதற்குக் கூட யாருமில்லை.
4. எங்கள் அயலாரின் நிந்தனைக்கு நாங்கள் ஆளானோம்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்திற்கும் நகைப்புக்கும் உள்ளானோம்.
5. ஆண்டவரே, இன்னும் எவ்வளவு காலத்திற்கு? என்றென்றும் சினம் கொள்வீரோ? உமது எரிச்சல் நெருப்புப் போல் எரிந்து கொண்டிருக்குமோ?
6. உம்மை அறியாத புற இனத்தார் மேல் உமது சினம் விழச் செய்யும்: உம்மை வழிபடாத அரசுகள் மேல் உம் கோபத்தைக் காட்டும்.
7. ஏனெனில், அவர்கள் யாக்கோபின் இனத்தாரை அழித்தொழித்தனர்: அவர்கள் குடியிருந்த நாட்டைப் பாழாக்கினர்.
8. முன்னோர்கள் செய்த குற்றங்களை எங்கள் மேல் சுமத்தாதேயும்; உமது இரக்கம் எங்களுக்கு விரைவாகவே கிடைப்பதாக: ஏனெனில், நாங்கள் துயரத்துக்குள்ளானோம்.
9. எங்கள் மீட்பரான இறைவா, உம் திருப்பெயரின் மகிமைக்காக எங்களுக்குத் துணை செய்யும்: உம் பெயரின் பொருட்டு எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்கு விடுதலையளித்தருளும்.
10. எங்கே அவர்கள் கடவுள்?" என்று புற இனத்தார் ஏன் சொல்லவேண்டும்? உம் ஊழியர்களின் இரத்தம் சிந்தியதற்காக அவர்களை நீர் பழிவாங்கும்: அதை அவர்கள் உணர வேண்டும்; நாங்கள் அதைக் காண வேண்டும்.
11. சிறைப்பட்டவர்களின் பெருமூச்சு உம் காதில் விழுவதாக: சாவுக்குக் குறிக்கப்பட்டவர்களை உமது கரத்தின் வல்லமைக்கேற்ப விடுவித்தருளும்.
12. ஆண்டவரே, எங்கள் அயலார் உமக்குச் செய்த நிந்தனைக்காக, ஏழு மடங்கு தண்டனை அவர்கள்மேல் விழச் செய்யும்.
13. நாங்களோ உம் மக்கள், உமது மேய்ச்சலின் ஆடுகள்; என்றென்றும் உம்மைப் போற்றிப் புகழ்வோம்: தலைமுறை தலைமுறையாக உமது புகழை எடுத்துரைப்போம்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 79 / 150
1 இறைவனே புற இனத்தார் உமது சொந்த நாட்டின் மீது படையெடுத்தார்கள்; உமது திருக்கோயிலை தீட்டுப்படுத்தினார்கள்: யெருசலேமைத் தரை மட்டமாக்கினார்கள். 2 உம் அடியார்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கு இரையாக்கினார்கள்: உம் புனிதர்களின் உடல்களை விலங்குகளுக்கு உணவாகத் தந்தார்கள். 3 அவர்களுடைய இரத்தத்தை யெருசலேமைச் சுற்றித் தண்ணீர் போல் இறைத்தார்கள்: அவர்களை அடக்கம் செய்வதற்குக் கூட யாருமில்லை. 4 எங்கள் அயலாரின் நிந்தனைக்கு நாங்கள் ஆளானோம்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்திற்கும் நகைப்புக்கும் உள்ளானோம். 5 ஆண்டவரே, இன்னும் எவ்வளவு காலத்திற்கு? என்றென்றும் சினம் கொள்வீரோ? உமது எரிச்சல் நெருப்புப் போல் எரிந்து கொண்டிருக்குமோ? 6 உம்மை அறியாத புற இனத்தார் மேல் உமது சினம் விழச் செய்யும்: உம்மை வழிபடாத அரசுகள் மேல் உம் கோபத்தைக் காட்டும். 7 ஏனெனில், அவர்கள் யாக்கோபின் இனத்தாரை அழித்தொழித்தனர்: அவர்கள் குடியிருந்த நாட்டைப் பாழாக்கினர். 8 முன்னோர்கள் செய்த குற்றங்களை எங்கள் மேல் சுமத்தாதேயும்; உமது இரக்கம் எங்களுக்கு விரைவாகவே கிடைப்பதாக: ஏனெனில், நாங்கள் துயரத்துக்குள்ளானோம். 9 எங்கள் மீட்பரான இறைவா, உம் திருப்பெயரின் மகிமைக்காக எங்களுக்குத் துணை செய்யும்: உம் பெயரின் பொருட்டு எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்கு விடுதலையளித்தருளும். 10 எங்கே அவர்கள் கடவுள்?" என்று புற இனத்தார் ஏன் சொல்லவேண்டும்? உம் ஊழியர்களின் இரத்தம் சிந்தியதற்காக அவர்களை நீர் பழிவாங்கும்: அதை அவர்கள் உணர வேண்டும்; நாங்கள் அதைக் காண வேண்டும். 11 சிறைப்பட்டவர்களின் பெருமூச்சு உம் காதில் விழுவதாக: சாவுக்குக் குறிக்கப்பட்டவர்களை உமது கரத்தின் வல்லமைக்கேற்ப விடுவித்தருளும். 12 ஆண்டவரே, எங்கள் அயலார் உமக்குச் செய்த நிந்தனைக்காக, ஏழு மடங்கு தண்டனை அவர்கள்மேல் விழச் செய்யும். 13 நாங்களோ உம் மக்கள், உமது மேய்ச்சலின் ஆடுகள்; என்றென்றும் உம்மைப் போற்றிப் புகழ்வோம்: தலைமுறை தலைமுறையாக உமது புகழை எடுத்துரைப்போம்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 79 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References