தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. என் இறைவனாம் ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரிடமிருந்தும் எனக்கு மீட்பும் விடுதலையும் அளித்தருளும்.
2. எவனும் சிங்கத்தைப் போல என் உயிரைப் பறித்துக் கொள்ள விடாதேயும்: விடுவிப்பவன் எவனுமின்றி என்னை இழுத்துக் கொண்டு போக விடாதேயும்.
3. என் இறைவனாகிய ஆண்டவரே, இப்படி நான் செய்திருந்தால்: அதாவது, என் கைகளால் அநீதி செய்திருந்தால்,
4. காரணமின்றி எனக்குத் தீங்கிழைத்தவனையே காப்பாற்றிவரும் நான், என் நண்பனுக்குத் தீமை செய்திருந்தேனென்றால்,
5. பகைவன் என்னைத் துரத்திப் பிடித்து என் உயிரை நசுக்கி விடுவானாக: என் பெயரைக் கொடுத்துப் பாழ்படுத்துவனாக.
6. ஆண்டவரே, சினங்கொண்டு நீர் எழும்புவீராக: என்னைத் துன்புறுத்துவோர் சினத்தை எதிர்த்து எழும்புவீராக. என் சார்பாக நீதியை நிலைநாட்ட எழும்புவீராக: அந்த நீதியை வழங்கியவர் நீரேயன்றோ!
7. மக்களினத்தார் உம்மைச் சூழ்ந்துகொள்வார்களாக: அவர்களனைவர் மீதும் உன்னதங்களில் நீர் வீற்றிருப்பீராக.
8. மக்களுக்கு நீதிபதியாயிருப்பவர் ஆண்டவரே: உமது நீதிக்கேற்ப ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும்; எனது மாசின்மைக்கேற்ப எனக்கு நீதி வழங்கும்.
9. தீயவர்களுடைய தீய மனம் ஒழிவதாக: உள்ளத்தையும் உள்ளுறுப்புகளையும் ஆய்ந்தறிபவரே, நீதியுள்ள இறைவனே, நல்லவனை நீர் நிலைநிறுத்தும்.
10. கடவுளே எனக்குக் கேடயம்: நேரிய மனத்தோரைக் காப்பவர் அவரே.
11. நேர்மையுள்ள நீதிபதியாய் உள்ளார் கடவுள்: நாள்தோறும் சினங்கொள்ளும் இறைவன் அவர்.
12. பாவிகள் மனந்திரும்பாவிட்டால் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி எய்யத் தொடங்குவார்.
13. சாவுக்குரிய ஆயுதங்களை அவர்களுக்கு ஆயத்தம் செய்வார்: தம் அம்புகளை அனல் கக்கச் செய்வார்.
14. பாவியானவன் தீமையைக் கருத்தரிக்கிறான்: தீவினையைக் கருவாய்க் கொண்டிருக்கிறான், வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறான்.
15. குழியைப் பறிக்கிறான், அதை ஆழமாக்குகிறான்: தான் பறித்த குழியில் தானே விழுகிறான்.
16. அவன் செய்த தீமை அவன் தலைமேலேயே வந்து விழும்: அவன் செய்த கொடுமை அவன் மேலேயே படும்.
17. நானோவெனில் ஆண்டவருடைய நீதியை நினைத்து அவரைப் புகழ்வேன்: உன்னதரான ஆண்டவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 150
1 என் இறைவனாம் ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரிடமிருந்தும் எனக்கு மீட்பும் விடுதலையும் அளித்தருளும். 2 எவனும் சிங்கத்தைப் போல என் உயிரைப் பறித்துக் கொள்ள விடாதேயும்: விடுவிப்பவன் எவனுமின்றி என்னை இழுத்துக் கொண்டு போக விடாதேயும். 3 என் இறைவனாகிய ஆண்டவரே, இப்படி நான் செய்திருந்தால்: அதாவது, என் கைகளால் அநீதி செய்திருந்தால், 4 காரணமின்றி எனக்குத் தீங்கிழைத்தவனையே காப்பாற்றிவரும் நான், என் நண்பனுக்குத் தீமை செய்திருந்தேனென்றால், 5 பகைவன் என்னைத் துரத்திப் பிடித்து என் உயிரை நசுக்கி விடுவானாக: என் பெயரைக் கொடுத்துப் பாழ்படுத்துவனாக. 6 ஆண்டவரே, சினங்கொண்டு நீர் எழும்புவீராக: என்னைத் துன்புறுத்துவோர் சினத்தை எதிர்த்து எழும்புவீராக. என் சார்பாக நீதியை நிலைநாட்ட எழும்புவீராக: அந்த நீதியை வழங்கியவர் நீரேயன்றோ! 7 மக்களினத்தார் உம்மைச் சூழ்ந்துகொள்வார்களாக: அவர்களனைவர் மீதும் உன்னதங்களில் நீர் வீற்றிருப்பீராக. 8 மக்களுக்கு நீதிபதியாயிருப்பவர் ஆண்டவரே: உமது நீதிக்கேற்ப ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும்; எனது மாசின்மைக்கேற்ப எனக்கு நீதி வழங்கும். 9 தீயவர்களுடைய தீய மனம் ஒழிவதாக: உள்ளத்தையும் உள்ளுறுப்புகளையும் ஆய்ந்தறிபவரே, நீதியுள்ள இறைவனே, நல்லவனை நீர் நிலைநிறுத்தும். 10 கடவுளே எனக்குக் கேடயம்: நேரிய மனத்தோரைக் காப்பவர் அவரே. 11 நேர்மையுள்ள நீதிபதியாய் உள்ளார் கடவுள்: நாள்தோறும் சினங்கொள்ளும் இறைவன் அவர். 12 பாவிகள் மனந்திரும்பாவிட்டால் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி எய்யத் தொடங்குவார். 13 சாவுக்குரிய ஆயுதங்களை அவர்களுக்கு ஆயத்தம் செய்வார்: தம் அம்புகளை அனல் கக்கச் செய்வார். 14 பாவியானவன் தீமையைக் கருத்தரிக்கிறான்: தீவினையைக் கருவாய்க் கொண்டிருக்கிறான், வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறான். 15 குழியைப் பறிக்கிறான், அதை ஆழமாக்குகிறான்: தான் பறித்த குழியில் தானே விழுகிறான். 16 அவன் செய்த தீமை அவன் தலைமேலேயே வந்து விழும்: அவன் செய்த கொடுமை அவன் மேலேயே படும். 17 நானோவெனில் ஆண்டவருடைய நீதியை நினைத்து அவரைப் புகழ்வேன்: உன்னதரான ஆண்டவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References