தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. இறைவா, என்னை மீட்டருளும்: ஏனெனில், வெள்ளம் என் கழுத்து மட்டும் பெருக்கெடுத்துள்ளது.
2. ஆழ்ந்த சேற்றில் அமிழ்ந்திக் கிடக்கிறேன்: கால் ஊன்ற இடமேயில்லை, ஆழ்ந்த வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன்: வெள்ளம் என்னை மூழ்கடிக்கின்றது.
3. கூவிக் கூவி களைத்து விட்டேன்; என்தொண்டையும் வறண்டு போயிற்று: என் இறைவன் துணையை எதிர்த்துப் பார்த்து என் கண்களும் பூத்துப்போயின.
4. காரணமின்றி என்னைப் பகைப்பவர்கள் என் தலையின் முடியை விட அதிகமாயுள்ளனர்; அநியாயமாய் என்னை எதிர்ப்பவர்கள் என்னை விட வலிமை கொண்டுள்ளனர். நான் எடுத்துக் கொள்ளாததைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கின்றனர்.
5. இறைவா, நீர் என் அறிவீனத்தை அறிவீர்: என் பாவங்கள் உமக்கு மறைவாயில்லை.
6. ஆண்டவரே, வான்படைகளின் ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை வைப்பவர்கள் என்னால் ஏமாற்றம் அடைய விடாதேயும். இஸ்ராயேலின் இறைவனே, உம்மைத் தேடுவோர் என்னால் வெட்கமுற விடாதேயும்.
7. ஏனெனில், உம் பொருட்டே நான் நிந்தனையை ஏற்றேன்: உம் பொருட்டே வெட்கத்தால் என் முகம் கவிந்து போயிற்று.
8. என் உறவினர்க்கும் நான் அந்நியனானேன்: என் சகோதரருக்கும் நான் வேற்று மனிதனானேன்.
9. உமது இல்லத்தின் மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்து விட்டது: உம்மை நிந்திப்பவர்களின் நிந்தனைகள் என் மேல் விழலாயின.
10. நோன்பிருந்து என் ஆன்மாவை ஒறுத்தேன்: ஆனால், அதுவும் நிந்தனைக்குரியதாயிற்று.
11. சாக்குத்துணியை என் ஆடையாய் உடுத்தினேன்: ஆனால், அவர்கள் ஏளனத்துக்குள்ளானேன்.
12. நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர். மது உண்பவர்கள் என்னைத் தூற்றுகின்றனர்.
13. ஆனால், ஆண்டவரே, உம்மை நோக்கியே உள்ளது என் மன்றாட்டு: இறைவா, உமக்கு உகந்த நேரத்தில் உம்மை நோக்கி வேண்டுகிறேன். மிகுதியான உம் நன்மைத் தனத்திற்கு ஏற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்: உறுதியான உமது அருட்துணைக்கேற்ப எனக்குச் செவிசாய்த்தருளும்.
14. சேற்றில் நான் அமிழ்ந்திப் போகாதபடி என்னை விடுவித்தருளும்; என்னைப் பகைப்பவர்களிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: ஆழ்ந்த வெள்ளத்தினின்று என்னைக் காத்தருளும்.
15. பெருவெள்ளம் என்னை மூழ்கடிக்கவோ, ஆழ்கடல் என்னை விழுங்கிடவோ விடாதேயும்: பாழ்கிணறு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்.
16. உமது அருள் கனிவு மிக்கதாதலின், ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என்னைக் கண்ணோக்கும்.
17. உம் ஊழியனிடமிருந்து உமது முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்: துன்புறுகிறேனாதலின், இறைவா, விரைவில் என் மன்றாட்டைக் கேட்டருளும்.
18. என்னிடம் அணுகி வந்து என்னை மீட்டருளும்: உம் எதிரிகளின் பொருட்டு எனக்கு விடுதலை அளித்தருளும்.
19. எனக்குற்ற நிந்தனையை நீர் அறிவீர், நான் அடைந்த அவமானத்தையும் ஏமாற்றத்தையும் நீர் அறிவீர்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரும் உம் எதிரிலேயே உள்ளனர்.
20. எனக்குற்ற நிந்தைனையால் என் உள்ளம் உடைந்தது, தளர்வுறலானேன்; எனக்கு இரக்கம் காட்டுபவருண்டோ எனப் பார்த்தேன்: ஒருவருமில்லை. ஆறுதலளிப்பார் உண்டோ எனப் பார்த்தேன்; ஒருவரையும் காணவில்லை.
21. கசந்த பிச்சை எனக்கு உணவாகக் கொடுத்தனர்: என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தனர்.
22. அவர்களுடைய பந்தி அவர்களுக்கு வைத்த கண்ணி போலாவதாக: நண்பர்களுக்கு விரித்த வலை போலாவதாக.
23. பார்வையில்லாதவாறு அவர்கள் கண்கள் இருளடைந்து போகட்டும்: அவர்களுடைய இடுப்புகள் என்றும் தள்ளாடிப் போகட்டும்.
24. உமது கோபாக்கினை அவர்கள் மேல் விழச் செய்யும்: உமது சினத்தின் கணலில் அவர்கள் பிடிபடுவார்களாக.
25. அவர்கள் குடியிருப்புப் பாழ்பட்டுப் போவதாக: அவர்கள் கூடாரங்களில் தங்க எவரும் இல்லாமல் போகட்டும்.
26. ஏனெனில், நீர் வதைத்தவனை அவர்கள் துன்புறுத்துகிறார்கள்; நீர் காயப்படுத்தினவனுடைய வேதனையை அதிகரிக்கிறார்கள்.
27. குற்றத்தின் மேல் குற்றத்தை அவர்கள் மேல் சுமத்தும்: குற்றமற்றவர்களென அவர்கள் தீர்ப்படைய விடாதேயும்.
28. வாழ்வோரின் நூலிலிருந்து அவர்கள் பெயர் எடுபடட்டும்: நீதிமான்களோடு அவர்களுடைய பெயர் எழுதப்பட விடாதேயும்.
29. நானோவெனில் சிறுமையுற்றவனும் துயர் மிக்கவனும் ஆனேன்: இறைவா, உமது அருட்துணை என்னைக் காப்பதாக.
30. புகழ் இசைத்து இறைவனின் பெயரைப் புகழ்வேன்; நன்றி உணர்வோடு அவர் புகழ் சாற்றுவேன்.
31. எருதுப் பலியை விட அது இறைவனுக்கு உகந்ததாகும். கொம்பும் குளம்பும் உள்ள காளையை விட உகந்ததாகும்.
32. எளியோரே, இதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். இறைவனைத் தேடுவோரே, உங்கள் உள்ளம் புத்துயிர் பெறுவதாக.
33. ஏனெனில், ஏழைகளின் குரலை ஆண்டவர் கேட்டருளுகின்றார். சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.
34. வானமும் வையமும் அவரைப் புகழ்வனவாக: கடல்களும் கடல்களில் வாழும் அனைத்துமே அவரைப் புறக்கணிப்பதில்லை.
35. ஏனெனில், கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார் யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அவர்கள் அங்குக் குடியிருப்பர், அதை உரிமையாக்கிக் கொள்வர்.
36. அவருடைய ஊழியர்கள் வழி வந்தோர் அதை உரிமைப்படுத்திக் கொள்வர்; அவர் மீது அன்பு கொள்பவர் அதில் வாழ்வார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 69 / 150
1 இறைவா, என்னை மீட்டருளும்: ஏனெனில், வெள்ளம் என் கழுத்து மட்டும் பெருக்கெடுத்துள்ளது. 2 ஆழ்ந்த சேற்றில் அமிழ்ந்திக் கிடக்கிறேன்: கால் ஊன்ற இடமேயில்லை, ஆழ்ந்த வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன்: வெள்ளம் என்னை மூழ்கடிக்கின்றது. 3 கூவிக் கூவி களைத்து விட்டேன்; என்தொண்டையும் வறண்டு போயிற்று: என் இறைவன் துணையை எதிர்த்துப் பார்த்து என் கண்களும் பூத்துப்போயின. 4 காரணமின்றி என்னைப் பகைப்பவர்கள் என் தலையின் முடியை விட அதிகமாயுள்ளனர்; அநியாயமாய் என்னை எதிர்ப்பவர்கள் என்னை விட வலிமை கொண்டுள்ளனர். நான் எடுத்துக் கொள்ளாததைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கின்றனர். 5 இறைவா, நீர் என் அறிவீனத்தை அறிவீர்: என் பாவங்கள் உமக்கு மறைவாயில்லை. 6 ஆண்டவரே, வான்படைகளின் ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை வைப்பவர்கள் என்னால் ஏமாற்றம் அடைய விடாதேயும். இஸ்ராயேலின் இறைவனே, உம்மைத் தேடுவோர் என்னால் வெட்கமுற விடாதேயும். 7 ஏனெனில், உம் பொருட்டே நான் நிந்தனையை ஏற்றேன்: உம் பொருட்டே வெட்கத்தால் என் முகம் கவிந்து போயிற்று. 8 என் உறவினர்க்கும் நான் அந்நியனானேன்: என் சகோதரருக்கும் நான் வேற்று மனிதனானேன். 9 உமது இல்லத்தின் மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்து விட்டது: உம்மை நிந்திப்பவர்களின் நிந்தனைகள் என் மேல் விழலாயின. 10 நோன்பிருந்து என் ஆன்மாவை ஒறுத்தேன்: ஆனால், அதுவும் நிந்தனைக்குரியதாயிற்று. 11 சாக்குத்துணியை என் ஆடையாய் உடுத்தினேன்: ஆனால், அவர்கள் ஏளனத்துக்குள்ளானேன். 12 நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர். மது உண்பவர்கள் என்னைத் தூற்றுகின்றனர். 13 ஆனால், ஆண்டவரே, உம்மை நோக்கியே உள்ளது என் மன்றாட்டு: இறைவா, உமக்கு உகந்த நேரத்தில் உம்மை நோக்கி வேண்டுகிறேன். மிகுதியான உம் நன்மைத் தனத்திற்கு ஏற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்: உறுதியான உமது அருட்துணைக்கேற்ப எனக்குச் செவிசாய்த்தருளும். 14 சேற்றில் நான் அமிழ்ந்திப் போகாதபடி என்னை விடுவித்தருளும்; என்னைப் பகைப்பவர்களிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: ஆழ்ந்த வெள்ளத்தினின்று என்னைக் காத்தருளும். 15 பெருவெள்ளம் என்னை மூழ்கடிக்கவோ, ஆழ்கடல் என்னை விழுங்கிடவோ விடாதேயும்: பாழ்கிணறு என்னை மூடிக்கொள்ள விடாதேயும். 16 உமது அருள் கனிவு மிக்கதாதலின், ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என்னைக் கண்ணோக்கும். 17 உம் ஊழியனிடமிருந்து உமது முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்: துன்புறுகிறேனாதலின், இறைவா, விரைவில் என் மன்றாட்டைக் கேட்டருளும். 18 என்னிடம் அணுகி வந்து என்னை மீட்டருளும்: உம் எதிரிகளின் பொருட்டு எனக்கு விடுதலை அளித்தருளும். 19 எனக்குற்ற நிந்தனையை நீர் அறிவீர், நான் அடைந்த அவமானத்தையும் ஏமாற்றத்தையும் நீர் அறிவீர்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரும் உம் எதிரிலேயே உள்ளனர். 20 எனக்குற்ற நிந்தைனையால் என் உள்ளம் உடைந்தது, தளர்வுறலானேன்; எனக்கு இரக்கம் காட்டுபவருண்டோ எனப் பார்த்தேன்: ஒருவருமில்லை. ஆறுதலளிப்பார் உண்டோ எனப் பார்த்தேன்; ஒருவரையும் காணவில்லை. 21 கசந்த பிச்சை எனக்கு உணவாகக் கொடுத்தனர்: என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தனர். 22 அவர்களுடைய பந்தி அவர்களுக்கு வைத்த கண்ணி போலாவதாக: நண்பர்களுக்கு விரித்த வலை போலாவதாக. 23 பார்வையில்லாதவாறு அவர்கள் கண்கள் இருளடைந்து போகட்டும்: அவர்களுடைய இடுப்புகள் என்றும் தள்ளாடிப் போகட்டும். 24 உமது கோபாக்கினை அவர்கள் மேல் விழச் செய்யும்: உமது சினத்தின் கணலில் அவர்கள் பிடிபடுவார்களாக. 25 அவர்கள் குடியிருப்புப் பாழ்பட்டுப் போவதாக: அவர்கள் கூடாரங்களில் தங்க எவரும் இல்லாமல் போகட்டும். 26 ஏனெனில், நீர் வதைத்தவனை அவர்கள் துன்புறுத்துகிறார்கள்; நீர் காயப்படுத்தினவனுடைய வேதனையை அதிகரிக்கிறார்கள். 27 குற்றத்தின் மேல் குற்றத்தை அவர்கள் மேல் சுமத்தும்: குற்றமற்றவர்களென அவர்கள் தீர்ப்படைய விடாதேயும். 28 வாழ்வோரின் நூலிலிருந்து அவர்கள் பெயர் எடுபடட்டும்: நீதிமான்களோடு அவர்களுடைய பெயர் எழுதப்பட விடாதேயும். 29 நானோவெனில் சிறுமையுற்றவனும் துயர் மிக்கவனும் ஆனேன்: இறைவா, உமது அருட்துணை என்னைக் காப்பதாக. 30 புகழ் இசைத்து இறைவனின் பெயரைப் புகழ்வேன்; நன்றி உணர்வோடு அவர் புகழ் சாற்றுவேன். 31 எருதுப் பலியை விட அது இறைவனுக்கு உகந்ததாகும். கொம்பும் குளம்பும் உள்ள காளையை விட உகந்ததாகும். 32 எளியோரே, இதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். இறைவனைத் தேடுவோரே, உங்கள் உள்ளம் புத்துயிர் பெறுவதாக. 33 ஏனெனில், ஏழைகளின் குரலை ஆண்டவர் கேட்டருளுகின்றார். சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. 34 வானமும் வையமும் அவரைப் புகழ்வனவாக: கடல்களும் கடல்களில் வாழும் அனைத்துமே அவரைப் புறக்கணிப்பதில்லை. 35 ஏனெனில், கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார் யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அவர்கள் அங்குக் குடியிருப்பர், அதை உரிமையாக்கிக் கொள்வர். 36 அவருடைய ஊழியர்கள் வழி வந்தோர் அதை உரிமைப்படுத்திக் கொள்வர்; அவர் மீது அன்பு கொள்பவர் அதில் வாழ்வார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 69 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References