தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. எழுகின்றார் இறைவன், சிதறுண்டு போகிறார்கள் அவர் எதிரிகள்: அவரைப் பகைத்தவர்கள் அவர் திருமுன் நிற்காமல் ஓடிப்போகிறார்கள்.
2. புகையானது சிதறுவது போல், அவர்கள் சிதறிப் போகட்டும்: அணலில் மெழுகு உருகுவது போல், தீயோர் கடவுள் திருமுன் மடிந்தொழிவர்.
3. நீதிமான்களோ மகிழ்வுறுவர், கடவுள் திருமுன் அக்களிப்பர். மகிழ்ச்சியால் இன்பம் கொள்வர்.
4. இறைவனுக்கு இன்னிசை பாடுங்கள், அவரது பெயருக்குப் புகழ் பாடுங்கள்: பாலைவெளியின் வழியாய்ப் பவனி செல்லும் அவருக்குப் பாதையை ஆயத்தப் படுத்துங்கள். ஆண்டவர் என்பது அவரது திருப்பெயர்: அவர் முன்னிலையில் அக்களிப்புறுங்கள்.
5. தம் புனித இல்லத்தில் உறையும் இறைவன் அநாதைகளுக்குத் தந்தை: விதவைகளுக்குப் பாதுகாவல்.
6. கைவிடப்பட்டவர்க்குக் கடவுள் இல்லமொன்றை ஆயத்தப்படுத்துகிறார், சிறைப் பட்டவர்களை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்: எதிர்த்து எழுபவர்களோ வறண்ட நிலத்தில் வாழ்வார்கள்.
7. இறைவா, நீர் உம் மக்களுக்கு முன் நடந்து சென்ற போது, பாலை வெளியின் வழியாய் நடந்த போது.
8. பூமி நடுங்கிற்று, வானங்கள் கடவுளைக் கண்டு பனி மழை பெய்தன: இஸ்ராயேலின் கடவுளைக் கண்டு சீனாய் அதிர்ந்தது.
9. இறைவனே, உம் உரிமையான நாட்டின் மீது நிரம்ப மழை பொழியச் செய்தீர்: சாரமற்றுப் போன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
10. உம்முடைய மந்தையான மக்கள் அதில் குடியிருந்தனர்: இறைவனே, உமது அருளால், நீர் ஏழைகளுக்கென்று அதைத் தயார் செய்தீர்.
11. ஆண்டவர் ஒரு செய்தி கூறுகிறார்: அந்த மகிழ்ச்சிச் செய்தியை உரைப்பவர் கூட்டம் பெரிதாயிற்று.
12. சேனைகளை நடத்தும் அரசர்கள் ஓடுகின்றனர், புறங்காட்டி ஓடுகின்றனர்!" வீட்டில் குடியிருப்பவர்கள் கொள்ளைப் பொருள்களைப் பிகிர்ந்துகொள்ளுகின்றனர்.
13. ஆட்டுக்கிடைகளுக்கிடையே நீங்கள் இளைப்பாறிய போது, புறாவின் சிறகுகள் வெள்ளிப் போல் மிளிர்ந்தன; அதன் இறக்கைகள் பொன் போல் மின்னின. எல்லாம் வல்லவர் அங்கு அரசர்களைச் சிதறடித்த போது,
14. சால்மோன் மலையில் உறைபனி பெய்தது.
15. பாசானின் மலைகள் மிக உயர்ந்தவை: பாசானின் மலைகள் செங்குத்தானவை.
16. செங்குத்தான மலைகளே, கடவுள் குடியிருக்கத் திருவுளம் கொண்ட மலையை நீங்கள் ஏன் பொறாமையோடு நோக்குகிறீர்கள்? அம்மலையில் அன்றோ என்றும் குடியிருக்க ஆண்டவர் திருவுளம் கொண்டார்.
17. கடவுளுடைய தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம், சீனாயிலிருந்து புறப்பட்டு ஆண்டவர் திருத்தலத்திற்கு எழுந்தருளி வந்தார்.
18. உயர்ந்த மலை மீது ஏறினீர், சிறைப்படுத்தியவர்களை அழைத்துச் சென்றீர்; மானிடரை நீர் கொடையாகப் பெற்றீர்: ஆண்டவராகிய கடவுளோடு குடியிருக்க விரும்பாதவர்களையும் நீர் பெற்றுக் கொண்டீர்.
19. ஒவ்வொரு நாளும் ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக: நம் மீட்பாராகிய கடவுள் நம் சுமைகளைத் தாங்கிக் கொள்கின்றார்.
20. நம் கடவுள் நமக்கு மீட்பருளும் கடவுள்: சாவினின்று தப்பச் செய்பவர் ஆண்டவராகிய கடவுள்.
21. தம் எதிரிகளின் தலைகளைக் கடவுள் நிச்சயமாய் நொறுக்குகிறார்: பாவ வழியில் நடப்பவர்களின் தலையை உடைத்து விடுகிறார்.
22. பாசானிலிருந்து மீட்டுக்கொள்வேன்: கடலின் ஆழத்திலிருந்து மீட்டுக் கொள்வேன்.
23. அப்போது எதிரிகளின் இரத்தத்தில் உன் காலடியைக் கழுவுவாய்: உன் நாய்களுக்கு அவர்கள் இரையாவர்" என்றார் ஆண்டவர்.
24. இறைவா, நீர் பவனியாய்ச் செல்லுவதை மக்கள் அனைவரும் காண்பர். என் கடவுளும் அரசருமானவர் திருத்தலத்திற்குப் பவனியாய்ச் செல்வதை அவர்கள் காண்பர்.
25. இதோ! பாடகர்கள் முன்நடக்கின்றனர்; யாழ் வாசிப்பவர் இறுதியில் வருகின்றனர்: நடுவில் பெண்கள் தம்புரா மீட்டுகின்றனர்.
26. விழாக் கூட்டங்களில் கடவுளை வாழ்த்துங்கள்: இஸ்ராயேல் மக்களே, நீங்கள் ஆண்டவருக்குப் பாடுங்கள்" என்கின்றனர்.
27. அதோ பெஞ்சமின் எல்லாருக்கும் இளையவன் முன் நடந்து செல்கிறான், யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றனர். சாபுலோன் தலைவர்களும், நெப்தாலின் தலைவர்களும் அங்குள்ளனர்.
28. இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்: எம் சார்பாய்ச் செயலாற்றும் இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்.
29. யெருசலேமிலுள்ள உமது ஆலயத்தை முன்னிட்டு, மன்னர்கள் உமக்குக் காணிக்கைகள் கொண்டு வருவார்களாக.
30. நாணல்களிடையே குடியிருக்கும் கொடிய விலங்கை அதட்டும்: காளைகள் கூட்டத்தையும், மக்கள் இனத்தாரின் கன்றுகளையும் அதட்டும்.
31. வெள்ளியைத் திறையாகக் கொண்டு வந்து கட்டித் தலைபணியச் செய்யும். போரிடுவதில் மகிழ்ச்சி கொள்ளும் இனத்தாரைச் சிதறடியும். எகிப்தினின்று பெருமக்கள் வருவார்களாக: எத்தியோப்பிய மக்கள் கடவுளை நோக்கித் தம் கைகளை உயர்த்துவார்களாக.
32. மாநிலத்து அரசுகளே, கடவுளை நினைத்துப் பாருங்கள்; ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: வான்வெளியில், ஆதிகால வானங்களிடையே பவனி செல்லும் ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்.
33. வான்வெளியில் ஆதிகால வானங்களிடையே அவர் பவனி செல்கிறார்: இதோ, அவர் தம் குரலை விடுக்கிறார்; வல்லமையுடன் குரல் விடுக்கிறார்.
34. கடவுள் வல்லவரென்று ஏற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இஸ்ராயேல் மீது அவர் மாண்பு விளங்குகின்றது; அவருடைய வல்லமை மேகங்களில் விளங்குகிறது.
35. தம் திருத்தலத்தினின்று புறப்படும் இறைவன், இஸ்ராயேலின் கடவுள் அச்சத்துக்குரியவர்; வல்லமை அளிப்பவர் அவரே, தம் மக்களுக்கு வல்லமை கொடுப்பவர் அவரே: கடவுள் வாழ்த்தப் பெறுவாராக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 68 / 150
1 எழுகின்றார் இறைவன், சிதறுண்டு போகிறார்கள் அவர் எதிரிகள்: அவரைப் பகைத்தவர்கள் அவர் திருமுன் நிற்காமல் ஓடிப்போகிறார்கள். 2 புகையானது சிதறுவது போல், அவர்கள் சிதறிப் போகட்டும்: அணலில் மெழுகு உருகுவது போல், தீயோர் கடவுள் திருமுன் மடிந்தொழிவர். 3 நீதிமான்களோ மகிழ்வுறுவர், கடவுள் திருமுன் அக்களிப்பர். மகிழ்ச்சியால் இன்பம் கொள்வர். 4 இறைவனுக்கு இன்னிசை பாடுங்கள், அவரது பெயருக்குப் புகழ் பாடுங்கள்: பாலைவெளியின் வழியாய்ப் பவனி செல்லும் அவருக்குப் பாதையை ஆயத்தப் படுத்துங்கள். ஆண்டவர் என்பது அவரது திருப்பெயர்: அவர் முன்னிலையில் அக்களிப்புறுங்கள். 5 தம் புனித இல்லத்தில் உறையும் இறைவன் அநாதைகளுக்குத் தந்தை: விதவைகளுக்குப் பாதுகாவல். 6 கைவிடப்பட்டவர்க்குக் கடவுள் இல்லமொன்றை ஆயத்தப்படுத்துகிறார், சிறைப் பட்டவர்களை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்: எதிர்த்து எழுபவர்களோ வறண்ட நிலத்தில் வாழ்வார்கள். 7 இறைவா, நீர் உம் மக்களுக்கு முன் நடந்து சென்ற போது, பாலை வெளியின் வழியாய் நடந்த போது. 8 பூமி நடுங்கிற்று, வானங்கள் கடவுளைக் கண்டு பனி மழை பெய்தன: இஸ்ராயேலின் கடவுளைக் கண்டு சீனாய் அதிர்ந்தது. 9 இறைவனே, உம் உரிமையான நாட்டின் மீது நிரம்ப மழை பொழியச் செய்தீர்: சாரமற்றுப் போன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 10 உம்முடைய மந்தையான மக்கள் அதில் குடியிருந்தனர்: இறைவனே, உமது அருளால், நீர் ஏழைகளுக்கென்று அதைத் தயார் செய்தீர். 11 ஆண்டவர் ஒரு செய்தி கூறுகிறார்: அந்த மகிழ்ச்சிச் செய்தியை உரைப்பவர் கூட்டம் பெரிதாயிற்று. 12 சேனைகளை நடத்தும் அரசர்கள் ஓடுகின்றனர், புறங்காட்டி ஓடுகின்றனர்!" வீட்டில் குடியிருப்பவர்கள் கொள்ளைப் பொருள்களைப் பிகிர்ந்துகொள்ளுகின்றனர். 13 ஆட்டுக்கிடைகளுக்கிடையே நீங்கள் இளைப்பாறிய போது, புறாவின் சிறகுகள் வெள்ளிப் போல் மிளிர்ந்தன; அதன் இறக்கைகள் பொன் போல் மின்னின. எல்லாம் வல்லவர் அங்கு அரசர்களைச் சிதறடித்த போது, 14 சால்மோன் மலையில் உறைபனி பெய்தது. 15 பாசானின் மலைகள் மிக உயர்ந்தவை: பாசானின் மலைகள் செங்குத்தானவை. 16 செங்குத்தான மலைகளே, கடவுள் குடியிருக்கத் திருவுளம் கொண்ட மலையை நீங்கள் ஏன் பொறாமையோடு நோக்குகிறீர்கள்? அம்மலையில் அன்றோ என்றும் குடியிருக்க ஆண்டவர் திருவுளம் கொண்டார். 17 கடவுளுடைய தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம், சீனாயிலிருந்து புறப்பட்டு ஆண்டவர் திருத்தலத்திற்கு எழுந்தருளி வந்தார். 18 உயர்ந்த மலை மீது ஏறினீர், சிறைப்படுத்தியவர்களை அழைத்துச் சென்றீர்; மானிடரை நீர் கொடையாகப் பெற்றீர்: ஆண்டவராகிய கடவுளோடு குடியிருக்க விரும்பாதவர்களையும் நீர் பெற்றுக் கொண்டீர். 19 ஒவ்வொரு நாளும் ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக: நம் மீட்பாராகிய கடவுள் நம் சுமைகளைத் தாங்கிக் கொள்கின்றார். 20 நம் கடவுள் நமக்கு மீட்பருளும் கடவுள்: சாவினின்று தப்பச் செய்பவர் ஆண்டவராகிய கடவுள். 21 தம் எதிரிகளின் தலைகளைக் கடவுள் நிச்சயமாய் நொறுக்குகிறார்: பாவ வழியில் நடப்பவர்களின் தலையை உடைத்து விடுகிறார். 22 பாசானிலிருந்து மீட்டுக்கொள்வேன்: கடலின் ஆழத்திலிருந்து மீட்டுக் கொள்வேன். 23 அப்போது எதிரிகளின் இரத்தத்தில் உன் காலடியைக் கழுவுவாய்: உன் நாய்களுக்கு அவர்கள் இரையாவர்" என்றார் ஆண்டவர். 24 இறைவா, நீர் பவனியாய்ச் செல்லுவதை மக்கள் அனைவரும் காண்பர். என் கடவுளும் அரசருமானவர் திருத்தலத்திற்குப் பவனியாய்ச் செல்வதை அவர்கள் காண்பர். 25 இதோ! பாடகர்கள் முன்நடக்கின்றனர்; யாழ் வாசிப்பவர் இறுதியில் வருகின்றனர்: நடுவில் பெண்கள் தம்புரா மீட்டுகின்றனர். 26 விழாக் கூட்டங்களில் கடவுளை வாழ்த்துங்கள்: இஸ்ராயேல் மக்களே, நீங்கள் ஆண்டவருக்குப் பாடுங்கள்" என்கின்றனர். 27 அதோ பெஞ்சமின் எல்லாருக்கும் இளையவன் முன் நடந்து செல்கிறான், யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றனர். சாபுலோன் தலைவர்களும், நெப்தாலின் தலைவர்களும் அங்குள்ளனர். 28 இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்: எம் சார்பாய்ச் செயலாற்றும் இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும். 29 யெருசலேமிலுள்ள உமது ஆலயத்தை முன்னிட்டு, மன்னர்கள் உமக்குக் காணிக்கைகள் கொண்டு வருவார்களாக. 30 நாணல்களிடையே குடியிருக்கும் கொடிய விலங்கை அதட்டும்: காளைகள் கூட்டத்தையும், மக்கள் இனத்தாரின் கன்றுகளையும் அதட்டும். 31 வெள்ளியைத் திறையாகக் கொண்டு வந்து கட்டித் தலைபணியச் செய்யும். போரிடுவதில் மகிழ்ச்சி கொள்ளும் இனத்தாரைச் சிதறடியும். எகிப்தினின்று பெருமக்கள் வருவார்களாக: எத்தியோப்பிய மக்கள் கடவுளை நோக்கித் தம் கைகளை உயர்த்துவார்களாக. 32 மாநிலத்து அரசுகளே, கடவுளை நினைத்துப் பாருங்கள்; ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: வான்வெளியில், ஆதிகால வானங்களிடையே பவனி செல்லும் ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள். 33 வான்வெளியில் ஆதிகால வானங்களிடையே அவர் பவனி செல்கிறார்: இதோ, அவர் தம் குரலை விடுக்கிறார்; வல்லமையுடன் குரல் விடுக்கிறார். 34 கடவுள் வல்லவரென்று ஏற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இஸ்ராயேல் மீது அவர் மாண்பு விளங்குகின்றது; அவருடைய வல்லமை மேகங்களில் விளங்குகிறது. 35 தம் திருத்தலத்தினின்று புறப்படும் இறைவன், இஸ்ராயேலின் கடவுள் அச்சத்துக்குரியவர்; வல்லமை அளிப்பவர் அவரே, தம் மக்களுக்கு வல்லமை கொடுப்பவர் அவரே: கடவுள் வாழ்த்தப் பெறுவாராக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 68 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References